என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "அரசு போக்குவரத்து துறை"
- மீதமுள்ள பேருந்துகளும், இந்த ஆண்டு இறுதிக்குள் புதுப்பிக்கப்பட்டு தடத்தில் இயக்க விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
- பேருந்துகளின் பராமரிப்பதில் தனி கவனம் செலுத்தியதின் காரணமாக 2022-23 மற்றும் 2023-24 ஆண்டுகளில் முறையே 0.002 மற்றும் 0.001 ஆக குறைந்துள்ளது.
சென்னை:
அரசு போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு அரசு, சாலை மார்க்கமான பொதுப் போக்குவரத்தை, எட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் 20,260 பேருந்துகள் மூலம் 10,125 வழித்தடங்களில் இயக்கி வருகிறது. தினசரி 18,728 பேருந்துகளும், வார இறுதி நாட்களில் பொது மக்களின் தேவையின் அடிப்படையில் அதிகப்படியான சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டு, நாளொன்றுக்கு 1.76 கோடி பயணிகள் பயன்பெறுகின்றனர்.
இதில் விடியல் பயணம் திட்டத்தின் மூலம் மகளிர் நலனுக்காக பயணக் கட்டணமில்லாமல் இயக்கப்படும் 7,179 பேருந்துகளின் மூலம் 51.47 லட்சம் மகளிர் தினசரி பயணிக்கின்றனர்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகள் தடத்தில் பழுதடைதல் எண்ணிக்கை கடந்த காலங்களில் அதிகபட்சமாக 10,000 கிலோமீட்டருக்கு 0.10 என்ற அளவில் இருந்த எண்ணிக்கை கடந்த மூன்று ஆண்டுகளில் பேருந்துகளின் பராமரிப்பதில் தனி கவனம் செலுத்தியதின் காரணமாக 2022-23 மற்றும் 2023-24 ஆண்டுகளில் முறையே 0.002 மற்றும் 0.001 ஆக குறைந்துள்ளது.
ஊடகங்கள் மூலம் அரசின் கவனத்திற்கு வரும் பழுதுகள் உட்பட, அனைத்து பழுதுகளும் முழுமையாக களையப்படவேண்டும் என்ற நோக்கத்தில், தமிழ்நாடு அரசு 48 மணி நேரத்திற்குள் அனைத்து பேருந்துகளையும் ஆய்வுக்கு உட்படுத்தி சரி செய்யவேண்டும் என 26.4.2024 தேதியில் உத்தரவிடப்பட்டதனை தொடர்ந்து தற்போது அனைத்து பஸ்களையும் ஆய்வு செய்து போர்க்கால அடிப்படையில் பழுதுகள் சரி செய்யப்பட்டு வருகிறது.
சென்னையில் 1000 மின்சார பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டு, முதற்கட்டமாக 500 மின்சார பஸ்கள் விரைவில் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அடிச்சட்டம் நல்ல நிலையில் உள்ள பஸ்களின் கூண்டினை புதுப்பிக்க 2022-23 ல் 1000 பஸ்களும் 2023-24 ல் 500 பஸ்களும் என நடவடிக்கை எடுக்கப்பட்டு, இதுவரையில் 839 பேருந்துகள் புதுப்பிக்கப்பட்டு தடத்தில் இயக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள பேருந்துகளும், இந்த ஆண்டு இறுதிக்குள் புதுப்பிக்கப்பட்டு தடத்தில் இயக்க விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மேலும், அனைத்து போக்குவரத்துக் கழகங்களிலும் சாலை பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு பயிற்சி அளிப்பதில் தனிக்கவனம் செலுத்தியதன் காரணமாக 2022-23-ம் ஆண்டை ஒப்பிடுகையில், 2023-24 ல் 29 உயிரிழப்புகள் குறைந்து உள்ளது.
பொது மக்களுக்கு தட பழுதுகள் மற்றும் விபத்து இல்லாத பேருந்து இயக்கத்தை இலக்காக கொண்டு, அதன் அடிப்படையில் தமிழ்நாடு அரசின் போக்குவரத்துத்துறை செயல்பட்டு வருகிறது என்று தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- 19 ஆண்டுகளாக இந்த சாலை ஒருமுறை கூட சீரமைக்கப்படவில்லை.
- தினசரி பழுதாகும் பஸ்களால் அரசு போக்குவரத்து துறையின் பணமும் வீணாகி தான் வருகிறது.
கன்னியாகுமரி :
குமரி மாவட்டத்தில் உள்ள கோதையாறு மலை கிராமங்களுக்கு செல்லும் சாலையானது சீறோ பாயின்ட்-கோதையாறு சாலை இந்த சாலையில் சுமார் 20-க்கும் மேற்பட்ட மலை கிராமங்களும், 1000-க்கும் மேற்பட்ட குடும்பங்களும் உள்ளன. இவர்களது பயன்பாட்டிற்காக தினசரி 7 அரசு பஸ்களும் இந்த சாலை வழியாக தான் இயக்கப்பட்டு வருகின்றன.
19 ஆண்டுகளாக இந்த சாலை ஒருமுறை கூட சீரமைக்கப்படவில்லை. எங்கு பார்த்த்தாலும் குண்டும், குழியுமாக சேதம் அடைந்து காணப்படுகிறது. இது மிகவும் வளைவான சாலைகள் ஆகும். இந்த சாலை வழியாக இருசக்கர வாகனத்தில் செல்பவர்களுக்கு உடல்நிலை பாதிப்பு வரும். அந்த அளவுக்கு இந்த சாலை சேதமாகி உள்ளது.
பல வருடங்களாக பழங்குடியின மக்களும், அரசியல் கட்சியை சார்ந்தவர்களும் பல கட்ட போராட்டங்களை நடத்தி வந்தாலும் சாலைகள் குளங்களை போலவே தற்போதும் காட்சி அளித்து வருகிறது.
இந்த சாலையில் ஒருமுறை சென்றால் இரு முறை பஸ் பழுதாவதும், அதனுடன் பஸ் ஓட்டும் டிரைவர்களுக்கு உடல் நல பிரச்சினைகளும் தான் வருகிறது. இதனால் பொறுமை இழந்த அரசு பஸ் டிரைவர்கள் சாலையை செப்பனிட்ட பின்பு தான் பஸ்களை இயக்குவோம் என திடீரென போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
இந்த செய்தி மாவட்ட கலெக்டருக்கு சென்ற பிறகு மாவட்ட கலெக்டரும், போக்குவரத்துதுறை அதிகாரிகளும் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து மீண்டும் மறுநாளில் இருந்து பஸ்களும் இயக்கப்பட்டு வருகின்றன.
ஒரு நாள் இந்த சாலை வழியாக பஸ்கள் சென்றால் திரும்பி வரும்போது தினசரி பழுதாகி நடுவழியில் தான் நிற்கிறது. அதன்பிறகு டிரைவர் பணிமனைக்கு தகவல் கொடுத்து அங்கிந்து மெக்கானிக் வந்து சரி செய்த பிறகுதான் பஸ்கள் செல்ல முடியும். இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகளின் படிப்பும் வீணாகி வருகிறது. அதுபோல தினசரி பழுதாகும் பஸ்களால் அரசு போக்குவரத்து துறையின் பணமும் வீணாகி தான் வருகிறது.
பேச்சிப்பாறையில் இருந்து கோதையாறு செல்லும் சாலையில் 10-க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளது. கோதையாறுக்கு செல்லும் பகுதியில் இயற்கையான அருவி பாய்ந்து செல்கிறது. இதை கண்டு கழித்து குளிப்பதற்கு பல சுற்றுலா பயணிகள் வருகை தருகிறார்கள். இயற்கை சூழியல் பூங்கா எனக்கூறி இங்கு வரும் சுற்றுலா பயணிகளிடம் கட்டணமும் வனத்துறையினர் வசூலித்த பின்பு தான் சுற்றுலா பயணிகளையும் வன பகுதிக்குள் அனுமதிக்கின்றனர். இருந்தும் சாலைகள் சரியாக இல்லை.
சுமார் 19 வருடங்களுக்கு முன்பாக சீரமைக்கப்பட்டதும், ஆபத்தான வளைவுகளும்குளம் போன்ற குண்டும், குழியும் கொண்ட இந்த சாலை 10 வருடங்களாக எந்த சீரமைப்புகளும் இல்லாமல் இப்படியே காட்சி அளிக்கிறது. இதனால் அந்த பகுதியில் வாழும் பொதுமக்களும், தோட்ட தொழிலாளர்கள், மின்சார வாரியம் மற்றும் வனத்துறை ஊழியர்கள், அரசு பஸ் டிரைவர்களும், இந்த சாலையை தான் பயன்படுத்தி மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.
எனவே இது குறித்து உரிய நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மலைவாழ் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- தொழில்நுட்ப பணியாளர்கள் காலை 8 மணிக்கும், நிர்வாகப் பணியாளர்கள் காலை 10 மணிக்கும் பணிக்கு வரும் போது வருகை பதிவு செய்ய வேண்டும்.
- மாலை பணிமுடிந்து செல்லும்போதும் பயோமெட்ரிக் கருவி மூலம் பதிவு செய்துவிட்டு செல்லவேண்டும்.
சென்னை:
தமிழக அரசு போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அரசு போக்குவரத்து கழக பணிமனையில் பணிபுரியும் தொழில்நுட்ப பணியாளர்கள், நிர்வாகப் பணியாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களின் வருகை பதிவு பயோமெட்ரிக் கருவி மூலம் பயன்பாட்டிற்கு செயல்படுத்தப்படுகிறது.
தொழில்நுட்ப பணியாளர்கள் காலை 8 மணிக்கும், நிர்வாகப் பணியாளர்கள் காலை 10 மணிக்கும் பணிக்கு வரும் போது வருகை பதிவு செய்ய வேண்டும். மாலை பணிமுடிந்து செல்லும்போதும் பயோமெட்ரிக் கருவி மூலம் பதிவு செய்துவிட்டு செல்லவேண்டும்.
ஓட்டுனர், நடத்துநர், பேருந்து தடத்தில் செல்வதற்கு பணிமனை வாயிலிருந்து புறப்படும் பொழுது சோதனை முறையில் பயோமெட்ரிக் சிஸ்டம் மூலம் வருகை பதிவு செய்ய வேண்டும். பேஸ்புக் அடிப்படையில் பயோமெட்ரிக் சிஸ்டம் வருகைப் பதிவு முறை மேம்படுத்தப்படும். போக்குவரத்துத் துறையில் புதிதாக பணியாளர்கள் பணிமனையில் சேர்ந்தாலும் அவர்களுடைய பெயரையும் உடனடியாக பயோமெட்ரிக் முறை வருகை பதிவில் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்