என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » ஆசிரியை படுகாயம்
நீங்கள் தேடியது "ஆசிரியை படுகாயம்"
குளச்சல் அருகே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த ஆசிரியையை கற்பழிக்க முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும் படுகாயமடைந்த ஆசிரியை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
குளச்சல்:
குளச்சல் அருகே உள்ள பத்தறை பகுதியைச் சேர்ந்த 31 வயது பெண் குளச்சலில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றுகிறார். இவருக்கு திருமணமாகி விட்டது.
இவர் தினந்தோறும் மாலையில் பள்ளி முடிந்ததும் பஸ்சில் வெள்ளியாகுளம் என்ற இடத்துக்கு வருவார். அங்குள்ள பஸ் நிறுத்தத்தில் இறங்கி தனது வீட்டுக்கு நடந்து செல்வார்.
இதேபோல நேற்று மாலை வெள்ளியாகுளம் பஸ் நிறுத்தத்தில் இறங்கி வீடு நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தார். அந்த சாலை ஒரு புறம் வாய்க்காலும், மறுபுறம் தோட்டங்களும் உள்ள இடமாகும். ஆள் நடமாட்டம் மிகவும் குறைவாகவே இருக்கும்.
அந்த வழியாக ஆசிரியை சென்று கொண்டிருந்தபோது புதர் மறையில் மறைந்திருந்த வாலிபர் ஒருவர் திடீரென ஆசிரியை முன்பு வந்து நின்றார். அந்த வாலிபர் ஆசிரியை மீது பாய்ந்து அவரை கீழே தள்ளி பலாத்காரம் செய்ய முயன்றார். வாலிபரிடம் இருந்து தப்பிக்க ஆசிரியை கடுமையாக போராடினார். அப்போது வாலிபர் ஆசிரியையின் முகத்தில் பலமாக கடித்தார். இதில் அவரது முகத்தில் இருந்து ரத்தம் கொட்டியது.
ஆசிரியை காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என சத்தம் போட்டு அலறினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அந்த பகுதியினர் அங்கு ஓடி வந்தனர். பொதுமக்கள் திரண்டு வருவதை பார்த்து வாலிபர், ஆசிரியையை விடுவித்துவிட்டு தப்பி ஓடினார். ஆனால் பொதுமக்கள் வாலிபரை துரத்திச் சென்று மடக்கிபிடித்தனர். அவருக்கு தர்ம அடி கொடுத்து அவரை குளச்சல் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
வாலிபரிடம் போலீசார் விசாரித்தபோது அவர் வெள்ளியாகுளத்தைச் சேர்ந்த சிவா (19) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.
சிவா மீது கற்பழிப்பு முயற்சி, வழிமறித்தல், தாக்குதல், பெண்ணை கையை பிடித்து இழுத்தல், ஆயுதங்களால் தாக்குதல், பெண் வன்கொடுமை ஆகிய 6 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கைதான சிவா இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார்.
பலாத்கார முயற்சியில் காயம் அடைந்த ஆசிரியை ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

×

X