search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆயுதப்படை போலீசார்"

    கோர்ட்டில் ஆஜராகாத ஆயுதப்படை போலீசார் 2 பேருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து ராமநாதபுரம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகப்பகுதியில் உள்ள மக்கள் கண்காணிப்பகத்தின் மாவட்ட பொறுப்பாளர் கந்தசாமி. இவர் மனித உரிமைகள் கழகம் என்ற பெயரில் உரிமை மீறல் வழக்குகளை நடத்தி வந்ததாக கேணிக்கரை இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் புகாரின் பேரில், கடந்த 24.2.2015 தேதி வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    இந்நிலையில் மனித உரிமைகள் கழகம் என்ற பெயரில் நிறுவனம் எதுவும் நடத்தவில்லை என்றும் மக்கள் கண்காணிப்பகம் என்ற தொண்டு நிறுவனத்தின் மாவட்ட பொறுப்பாளராக மட்டுமே இருந்து வருவதாகவும் கந்தசாமி ராமநாதபுரம் 2-வது குற்றவியல் நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

    மேலும் சிறுநீரக கல்லடைப்பு நோயால் அவதிப்படுவதால், தனக்கு மருத்துவ சிகிச்சை அளிக்குமாறு கந்தசாமி, ராமநாதபுரம் 2-வது குற்றவியல் நடுவர் மன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். வழக்கினை விசாரித்த ராமநாதபுரம் 2-வது குற்றவியல் நடுவர் ராதாகிருஷ்ணன், கந்தசாமியை மருத்துவச் சிகிச்சைக்கு அனுப்பி வைக்குமாறு உத்தரவிட்டார்.

    ஆனால் போலீசார் நீதிமன்ற உத்தரவை மீறி கந்தசாமியை சிறையில் அடைத்தனர். இது தொடர்பாக குற்றவியல் நடுவரிடம் கந்தசாமி புகார் செய்தார். இது தொடர்பான வழக்கில் விசாரணைக்கு கேணிக்கரை இன்ஸ்பெக்டர் விவேகானந்தன், எஸ்.ஐ. கணேசலிங்க பாண்டியன், ஆயுதப்படை போலீசார் ரங்கராஜ், மதன்ராஜ் ஆகிய 4 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு குற்றவியல் நடுவர் உத்தரவிட்டார்.

    இதையடுத்து இன்ஸ்பெக்டர் விவேகானந்தனும், எஸ்.ஐ. கணேசலிங்க பாண்டியனும் நீதிமன்றத்தில் ஆஜராயினர். ஆயுதப்படை போலீசார் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. எனவே இருவர் மீதும் பிடிவாரண்ட் பிறப்பித்து ராமநாதபுரம் 2-வது குற்றவியல் நடுவர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.

    ×