search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ்"

    • 4-வது சுற்றில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை விக்டோரியோ அசரென்கா தகுதி சுற்று வீராங்கனையிடம் அதிர்ச்சிகரமாக தோற்றார்.
    • உக்ரைனை சேர்ந்த டயானா யாஸ்ட்ரெம்ஸ்கா 7-6 (8-6), 6-4 என்ற நேர் செட் கணக்கில் அசரென்காவை வீழ்த்தி கால்இறுதிக்கு தகுதி பெற்றார்.

    மெல்போர்ன்:

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது.

    இன்று காலை நடந்த 4-வது சுற்றில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையும், 18-வது வரிசையில் உள்ள வருமான விக்டோரியோ அசரென்கா (பெலாரஸ்) தகுதி சுற்று வீராங்கனையிடம் அதிர்ச்சிகரமாக தோற்றார்.

    உக்ரைனை சேர்ந்த டயானா யாஸ்ட்ரெம்ஸ்கா 7-6 (8-6), 6-4 என்ற நேர் செட் கணக்கில் அசரென்காவை வீழ்த்தி கால்இறுதிக்கு தகுதி பெற்றார். அவர் கால்இறுதியில் லிண்டா நோஸ்கோவை (செக்குடியரசு) சந்திக்கிறார்.

    19-வது வரிசையில் உள்ள எலினா சுவிட்டோலினாவுக்கு எதிராக லிண்டா 3-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தார். அப்போது சுவிட்டோலினா காயத்தால் விலகினார். இதனால் லின்டா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

    • ஆஸ்திரேலிய ஓபன் டென்னிசின் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடி அரையிறுதிக்கு முன்னேறியது.
    • காலிறுதியில் ஆடவிருந்த ஜெலேனா ஒஸ்டாபென்கோ-டேவிட் வேகா ஹெர்னாண்டஸ் ஜோடி வாக் ஓவர் கொடுத்து வெளியேறியது.

    மெல்போர்ன்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது.

    இந்தத் தொடரில் இந்தியா சார்பில் கலப்பு இரட்டை பிரிவில் முன்னணி வீராங்கனை சானியா மிர்சாவும், ரோகன் போபண்ணாவும் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

    2-வது சுற்று ஆட்டத்தில் அரியெல் பெஹர்(உருகுவே)-மகோட்டோ நினொமியா(ஜப்பான்) ஜோடியுடன் மோதிய சானியா-ரோகன் போபண்ணா ஜோடி 6-4, 7-6 (11-9) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தது.

    இந்நிலையில், காலிறுதியில் விளையாட இருந்த ஜெலேனா ஒஸ்டாபென்கோ-டேவிட் வேகா ஹெர்னாண்டஸ் ஜோடி வாக் ஓவர் கொடுத்து வெளியேறியதால் சானியா மிர்சா, ரோகன் போபண்ணா ஜோடி அரையிறுதிக்குள் நுழைந்தது.

    • இந்திய ஜோடி 6-4, 7-6 (9) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றது.
    • சானியா மற்றும் போபண்ணா ஜோடி காலிறுதிச் சுற்றில் லாட்வியன் -ஸ்பானிஷ் ஜோடியை எதிர் கொள்கிறது.

    ஆஸ்திரேலிய ஓபன் கலப்பு இரட்டையர் பிரிவின் இரண்டாவது சுற்றில் இந்திய ஜோடி 6-4, 7-6 (9) என்ற செட் கணக்கில் உருகுவேயின் ஏரியல் பெஹர் மற்றும் ஜப்பானின் மகோடோ நினோமியா ஜோடியை வீழ்த்தியது.

    சானியா மற்றும் போபண்ணா ஜோடி நாளை நடைபெறவுள்ள காலிறுதிச் சுற்றில் லாட்வியன் -ஸ்பானிஷ் ஜோடியான ஜெலினா ஓஸ்டாபென்கோ மற்றும் டேவிட் வேகா ஹெர்னாண்டஸ் ஜோடியை எதிர்கொள்கிறது.

    • விலகலுக்கான காரணத்தையும் அவர் அறிவிக்கவில்லை.
    • நவோமி ஒசாகாவுக்குப் பதிலாக டயானா யஸ்த்ரேம்ஸ்கா பிரதானச் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளார்.

    மெல்பர்ன்:

    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியிலிருந்து ஜப்பான் வீராங்கனை நவோமி ஓசாகா விலகியுள்ளார். ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி வரும் 16-ம்தேதி தொடங்கி 29-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

    இந்தப் போட்டியில் 2 முறை சாம்பியன் பட்டம் வென்ற வீராங்கனை நவோமி ஒசாகா பங்கேற்கவிருந்தார். ஆனால் திடீரென போட்டியிலிருந்து விலகிக் கொள்வதாக அவர் அறிவித்துள்ளார். விலகலுக்கான காரணத்தையும் அவர் அறிவிக்கவில்லை.

    நவோமி விலகல் தொடர்பான அறிவிப்பை ஆஸ்திரேலிய ஓபன் போட்டிக்குழு அதிகாரப்பூர்வமாக நேற்று தெரிவித்துள்ளது. நவோமி ஒசாகாவுக்குப் பதிலாக டயானா யஸ்த்ரேம்ஸ்கா பிரதானச் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளார் என்றும் ஆஸ்திரேலிய ஓபன் போட்டிக் குழு அறிவிப்புச் செய்துள்ளது.

    ஆஸ்திரேலிய ஓபனில் சாம்பியன் பட்டம் வென்ற ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா நம்பர் ஒன் இடத்திற்கு முன்னேறியுள்ளார். #USOpen
    ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் இந்த ஆண்டின் முதல் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் நடைபெற்றது. பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் ஜப்பானைச் சேர்ந்த நவோமி ஒசாகா - செக் குடியரசின் பெட்ரா கிவிட்டோவா பலப்பரீட்டை நடத்தினர்.



    இதில் நவோமி ஒசாகா சாம்பியன் பட்டம் வென்றார். இதன்மூலம் 3 இடங்கள் முன்னேறி முதல் இடத்தை பிடித்துள்ளார். ஜப்பான் வீராங்கனை ஒருவர் டென்னிஸ் தரவரிசையில் இடம் பிடிப்பது இதுவே முதல்முறையாகும்.

    பெட்ரா கிவிட்டோவா 4 இடங்கள் முன்னேறி 2-வது இடத்தை பிடித்துள்ளார். முதல் இடத்தில் இருந்த சிமோனா ஹாலெப் இரண்டு இடங்கள் சரிந்து 3-வது இடத்திற்கு பின்தங்கியுள்ளார்.
    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிசின் இறுதிப்போட்டியில் ரபேல் நடாலை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார் ஜோகோவிச். #AUSOpen #NovakDjokovic #RafaelNadal
    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிசில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இதில் செர்பியாவின் நம்பர் ஒன் வீரரான நோவக் ஜோகோவிச்சும், ஸ்பெயின் வீரரான 2ம் நிலை வீரரான ரபேல் நடாலும் மோதினர்.



    ஜோகோவிச் ஆட்டத்திற்கு நடாலினால் ஈடுகொடுக்க முடியவில்லை. இதனால் ஜோகோவிச் 6-3, 6-2, 6-3 என நேர்செட் கணக்கில் எளிதாக வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார். ஆஸ்திரேலிய ஓபனில் ஜோகோவிச் ஏழாவது முறையாக பட்டம்  வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. #AUSOpen #NovakDjokovic #RafaelNadal
    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் கிவிடோவாவை வீழ்த்தி ஜப்பானின் ஒசாகா பட்டம் வென்றார். #AusOpen2019 #NaomiOsaka
    மெல்போர்ன்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் திருவிழா மெல்போர்ன் நகரில் நடந்து வருகிறது. 

    இதில் இன்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் செக் குடியரசு நாட்டை சேர்ந்த பெட்ரா கிவிடோவாவை ஜப்பான் நாட்டை சேர்ந்த நவோமி ஒசாகாவை எதிர்கொண்டார்.

    ஆட்டம் தொடங்கியதும் இருவரும் பொறுப்பாக ஆடினர். முதல் செட்டை கைப்பற்ற இருவரும் கடுமையாக போராடினர். இறுதியில், முதல் செட்டை 7-6 (2) என்ற கணக்கில் தன்வசப்படுத்தினார் ஒசாகா.

    இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, 2வது செட்டை கிவிடோவா 5-7 என்ற கணக்கில் கைப்பற்றினார்.

    வெற்றியை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டை ஒசாகா 6-4 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தினார். ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் பட்டம் வென்ற முதல் ஜப்பானிய வீரர் என்ற பெருமையும் பெற்றார். இந்த போட்டி சுமார் 2 மணி நேரம் 27 நிமிடங்கள் நீடித்தது. #AusOpen2019 #NaomiOsaka
    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸில் ஜோகோவிச் லூகாஸ் பவுலியை நேர்செட் கணக்கில் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். #AUSOpen
    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிசில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டத்தில் நம்பர் ஒன் வீரரான நோவக் ஜோகோவிச் பிரான்சின் லூகாஸ் பவுலியை எதிர்கொண்டார். நம்பர் ஒன் வீரரான ஜோகோவிச் ஆட்டத்திற்கு 28-ம் நிலை வீரரான லூகாஸ் பவுலியால் ஈடுகொடுக்க முடியவில்லை.



    இதனால் ஜோகோவிச் 6-0, 6-2, 6-2 என நேர்செட் கணக்கில் எளிதாக வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் ஜோகோவிச் 2-ம் நிலை வீரரான நடாலை எதிர்கொள்கிறார்.
    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிசில் சிட்ஸிபஸை நேர்செட் கணக்கில் எளிதில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் ரபோல் நடால். #AUSOpen
    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. ஆண்களுக்கான முதல் அரையிறுதி போட்டி இன்று நடைபெற்றது. இதில் 2-ம் நிலை வீரரான ரபேல் நடால், பெடரரை தோற்கடித்த இளம் வீரரான கிரீஸின் சிட்ஸிபஸ்-ஐ எதிர்கொண்டார்.

    நடாலின் அதிரடிக்கு சிட்ஸிபஸ்ஸால் ஈடுகொடுக்க முடியவில்லை. முதல் செட்டை 6-2 எனவும், 2-வது செட்டை 6-4 எனவும், 3-வது செட்டை 6-0 எனவும் கைப்பற்றி 3-0 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் பேட்டிக்கு முன்னேறினார் நடால். இந்த ஆட்டத்தில் நடால் ஒரு கேம்ஸை கூட இழக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



    நடால் இறுதிப் போட்டியில் ஜோகோவிச் அல்லது பவுலி ஆகியோரில் ஒருவரை எதிர்கொள்ள இருக்கிறார்.
    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். #AUSOpen
    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. இன்று பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன. முதலில் நடைபெற்ற ஆட்டத்தில் பெட்ரா கிவிட்டோவா வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

    2-வது அரையிறுதி ஆட்டத்தில் 4-ம் நிலை வீராங்கனையான நவோமி ஒசாகா (ஜப்பான்)- 7-ம் நிலை வீராங்கனையான கரோலினா பிளிஸ்கோவா (செக்குடியரசு) மோதினார்கள்.



    முதல் செட்டை ஒசாகா 6-2 என எளிதில் கைப்பற்றினார். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் 2-வது செட்டை பிளிஸ்கோவா 6-4 என  அதிரடியாக கைப்பற்றினார்.

    வெற்றியை தீர்மானிக்கும் 3-வது செட்டில் ஒசாகா கை ஓங்கியது. அவர் 3-வது செட்டை 6-4 எனக் கைப்பற்றி பிளிஸ்கோவாவை 2-1 என வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

    இந்திய நேரப்படி நாளை மதியம் 2 மணிக்கு நடைபெறும் இறுதிப் போட்டியில் நவோமி ஒசாகா - பெட்ரா கிவிட்டோவா பலப்பரீட்சை நடத்துகிறார்கள்.
    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிசில் கெய் நிஷிகோரி ஆட்டத்தின் இடையே காயத்தால் வெளியேறியதால் ஜோகோவிச் எளிதாக அரையிறுதிக்கு முன்னேறினார். #AUSOpen
    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. தற்போது காலிறுதி ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இன்று நடைபெற்ற ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டம் ஒன்றில் முதல் நிலை வீரரான நோவக் ஜோகோவிச் - 8-ம் நிலை வீரரான கெய் நிஷிகோரி பலப்பரீட்சை நடத்தினார்கள்.

    முதல் செட்டை எந்தவித சிரமமின்றி ஜோகோவிச் 6-1 எனக்கைப்பற்றினார். 2-வது செட்டில் ஜோகோவிச் 4-1 என முன்னிலையில் இருக்கும்போது நிஷிகோரி காயத்தால் விலகினார். இதனால் ஜோகோவிச் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.



    மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் மிலோஸ் ரயோனிக் - லூகாஸ் பவுலி மோதினார்கள். இதில் இரண்டு பேரும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்காமல் விளையாடினார்கள். ‘டை பிரேக்கர்’ வரை சென்ற முதல் செட்டை லூகாஸ் பவுலி 7(7)-6(4) எனக் கைப்பற்றினார். 2-வது செட்டை 6-3 எனக் கைப்பற்றினார்.

    ஆனால் ‘டை பிரேக்கர்’ வரை சென்ற 3-வது செட்டை ரயோனிக் கைப்பற்றினார். 4-வது செட்டை பவுலி 6-4 எனக்கைப்பற்றி வெற்றி பெற்றார்.
    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிசில் 2-ம் நிலை வீரரான ரபேல் நடால் அமெரிக்க வீரரை எளிதில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். #AUSOpen
    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. இன்று ஆண்களுக்கான காலிறுதி ஆட்டங்கள் நடைபெற்றது. ஒரு ஆட்டத்தில் 2-ம் நிலை வீரரான ரபேல் நடால் தரநிலை பெறாத அமெரிக்காவின் பிரான்சிஸ் தியோபோ-வை எதிர்கொண்டார்.

    இதில் நடால் 6-3, 6-4, 6-2 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார். நடால் அரையிறுதியில் சிட்ஸிபஸ்-ஐ எதிர்கொள்கிறார்.



    பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதியில் 8-ம் நிலை வீராங்கனையான செக்குடியரசைச் சேர்ந்த பெட்ரா கிவிட்டோவா, 15-ம் நிலை வீராங்கனையான ஆஸ்திரேலியாவின் ஆஷ்லேக் பேர்ட்டியை எதிர்கொண்டார். இதில் கிவிட்டோவா 6-1, 6-4 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

    மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் டி கொலின்ஸ் வெற்றி பெற்றார்.
    ×