என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "இயக்குனர் ரஞ்சித்"
கோவை:
கோவையில் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
கருத்து சுதந்திரம் என்ற பெயரில் யார், யாரை வேண்டுமானாலும், என்ன வேண்டு மானாலும் பேசலாம் என்ற நிலை உள்ளது.
அம்பேத்கார் உருவ படம் முன்பாக இளைஞர்கள் சில சமுதாய பெண்களை கொச்சை படுத்தி பேசியது அச்சமுதாயத்தினை கொதிப்படைய செய்துள்ளது.
திரைப்பட இயக்குநர் ரஞ்சித் தேச தந்தை காந்தி இல்லை எனவும், அம்பேத்கர் என்றும் பேசுகிறார். கலவரத்தை தூண்டும் வகையில் சினிமா இயக்குநர் ரஞ்சித் சினிமா பாணியில் பேசுகிறார். அரசாங்கம் வேடிக்கை பார்க்காமல் அவரை கைது செய்ய வேண்டும். இல்லையேல் மிகப்பெரிய அளவில் கலவரம் உருவாகி சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும்.
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, தி.மு.க. கூட்டணியில் தொடர்கிறது.
மேகதாது அணை விவகாரத்தில் மாநில கட்சிகள் தேசிய கட்சிகளை உடன் வைத்து போராடுவது சங்கடமான விஷயம். காங்கிரஸ் மற்றும் பா.ஜனதாவுக்கு கர்நாடகா அரசியல் தான் முக்கியம்.
மேகதாது பிரச்சினையில் தமிழக முதல்-அமைச்சர் கர்நாடகாவுடன் பேச்சுவார்த்தை நடத்த கூடாது. அவர் கர்நாடக பிரதிநிதிகள் யாரையும் சந்திக்க கூடாது. நீதிமன்றம் மூலமாக மட்டுமே தீர்வு காண வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். #eswaran #DirectorRanjith