என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "இரட்டை இலை வழக்கு"
இரட்டை இலை சின்னத்தைப் பெறுவதற்காக தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாக டி.டி.வி.தினகரன், அவரது நண்பர் மல்லிகார்ஜுனா உள்ளிட்டோர் மீது டெல்லி குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட டி.டி.வி. தினகரன், பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
அதன்பின்னர் ஹவாலா புரோக்கர் சுகேஷ் சந்திரசேகர் மற்றும் டிடிவி.தினகரன் ஆகியோர் பேசிய ஆடியோவை டெல்லி குற்றவியல் போலீசார் நீதிமன்றத்தில் ஒப்படைத்து அதுகுறித்து விரிவான விசாரணை நடத்தும்படி கோரிக்கை வைத்தனர். இதற்காக டிடிவி.தினகரனின் குரலை எடுத்து பரிசோதனை செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர். இதற்கு டி.டி.வி.தினகரன் ஒத்துழைப்பு தர மறுத்துவிட்டார்.
இந்த ஆடியோக்கள் ஜோடிக்கப்பட்டவை என்று கூறிய டிடிவி தினகரன், தன் மீதான வழக்கு விசாரணைக்கு நீதிமன்றம் தடை விதிக்க வேண்டும் என மனு தாக்கல் செய்தார். இதையடுத்து குரல் பரிசோதனை தொடர்பான விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால், குரல் பரிசோதனை வழக்கு விசாரணையை ஒத்திவைக்கும்படி டிடிவி தினகரன் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். இதனை ஏற்ற நீதிபதிகள், வழக்கின் விசாரணையை செப்டம்பர் 30-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். #TTVDhinakaran
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையிலான ஒருங்கிணைந்த அ.தி.மு.க.வுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கீடு செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இந்த தீர்ப்புக்கு எதிராக டி.டி.வி.தினகரன் தரப்பில் சுப்ரீம்கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், இரட்டை இலை சின்னம் ஒதுக்கியதற்கு தடை விதிக்க மறுத்து விட்டனர்.
இந்தநிலையில் இந்த உத்தரவை சீராய்வு செய்யக்கோரியும், இந்த வழக்கை மீண்டும் விசாரிக்கவும் வி.கே.சசிகலா தரப்பில் நேற்று அவருடைய வக்கீல் ராஜா செந்தூர்பாண்டியன் சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனு தாக்கல் செய்தார்.
கடந்த 2017-ம் ஆண்டு மார்ச் 23-ந் தேதி தேர்தல் கமிஷன் இரட்டை இலை சின்னத்தை முடக்கி உத்தரவு பிறப்பித்தபோது, பெரும்பான்மை என்னிடம் (சசிகலாவிடம்) இருந்தது. ஆனால் தேர்தல் கமிஷன் பெரும்பான்மையை கருத்தில் கொள்ளாமல் சின்னத்தை முடக்கியது. முற்றிலும் பாரபட்சமாக நடந்து கொண்டது.
இதனைத்தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் இணைந்து கட்சியின் விதிமுறைகளை சட்டவிரோதமாக மாற்றினார்கள். ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் என 2 பதவிகளை உருவாக்கினார்கள். தேர்தல் கமிஷன் இதனையும் ஒரு தலைபட்சமாக ஏற்றுக்கொண்டது. எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் தேர்தல் கமிஷனில் போலி ஆவணங்களை தாக்கல் செய்தனர். இதுகுறித்த எங்கள் புகார்களை தேர்தல் கமிஷன் கருத்தில் கொள்ளவில்லை. டெல்லி ஐகோர்ட்டும் மேற்கண்ட அம்சங்களை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளாமல் அவர்களுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியது.
கட்சியின் பொதுச்செயலாளர் பதவியை மாற்றுவதற்கு அடிப்படை அதிகாரம் யாருக்கும் கிடையாது. இந்த அம்சத்தையும் தேர்தல் கமிஷனும், டெல்லி ஐகோர்ட்டும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளவில்லை. சுப்ரீம் கோர்ட்டிலும் இந்த விஷயங்கள் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில் பரிசீலனைக்கு எடுக்கவில்லை.
எனவே, இரட்டை இலை தொடர்பான டெல்லி ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொண்டு சுப்ரீம்கோர்ட்டு இது தொடர்பாக பிறப்பித்த உத்தரவை மறுசீராய்வு செய்ய வேண்டும்.
இவ்வாறு இந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. #SupremeCourt #DoubleLeafSymbol #Sasikala
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. இரண்டாக பிரிந்தது. இரண்டாக பிரிந்த அ.தி.மு.க.வில் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பு ஒன்று சேர்ந்தது. சசிகலா- டி.டி.வி. தினகரன் அணி தனியாக செயல்படுகிறது.
இந்த இரண்டு தரப்பும் இரட்டை இலை சின்னத்திற்கு உரிமை கொண்டாடியது. இதை தொடர்ந்து 2017-ம் ஆண்டு மார்ச் மாதம் தேர்தல் கமிஷன் அந்த சின்னத்தை முடக்கியது.
பல்வேறு விசாரணைக்கு பிறகு 2017-ம் ஆண்டு நவம்பர் 23-ந்தேதி இரட்டை இலை சின்னம் அ.தி.மு.க.வின் எடப்பாடி பழனிசாமி- ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு சொந்தம் என்று தேர்தல் கமிஷன் அறிவித்தது.
இதை எதிர்த்து தினகரன் தரப்பு டெல்லி ஐகோர்ட்டை அணுகியது. இந்த வழக்கில் கடந்த 2 வாரத்துக்கு முன்பு தீர்ப்பு வழங்கப்பட்டது.
இதை எதிர்த்து தினகரன் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், தீபக் குப்தா, சஞ்சீவ் கண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு இரட்டை இலை சின்னம் வழங்கியதற்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
மேலும் குக்கர் சின்னத்தை தனக்கு ஒதுக்க கோரி டிடிவி தினகரன் தாக்கல் செய்த மனுவுக்கு, தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. #SC #TwoLeaves #TTVDhinakaran
பெங்களூரு:
கர்நாடக மாநில அம்மா மக்கள் முன்னேற்ற கழக செயலாளரும், செய்தி தொடர்பாளருமான புகழேந்தி இன்று நிருபரிடம் கூறியதாவது:-
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் ஆகியோர் உள்ள அ.தி.மு.க.வுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கீடு செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டதை எதிர்த்து சசிகலா மற்றும் தினகரன் தரப்பில் டெல்லி ஐகோர்ட்டில் மேல்முறையீட்டு மனு விசாரணை முடிந்து தீர்ப்பு வர உள்ளது.
இந்த இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கை 4 வாரங்களுக்குள் முடிக்க வேண்டும் என்று டெல்லி ஐகோர்ட்டுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது. எனவே 4 வாரங்களுக்குள் தீர்ப்பு வரவேண்டும். தீர்ப்பு வந்தாலும் இரட்டை இலை சின்னம் அவர்களுக்கு கிடைக்குமா என்பது சந்தேகம்தான்.
எங்களுக்கு சின்னமே இல்லை என்று கேலி செய்தவர்களுக்கு சின்னம் கிடைக்குமா என்பதே கேள்விக்குறியாகி விட்டது. இப்போது இரட்டை இலை அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது.
இரட்டை இலை சின்னம் எங்களுக்கு தான் கிடைக்கும். அப்படி கிடைக்கவில்லை என்றால் குக்கர் சின்னத்தை மீண்டும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு கொடுக்க வேண்டிய கட்டாயம் தேர்தல் ஆணையத்துக்கு ஏற்படும்.
எந்த காலத்திலும் அ.தி.மு.க.வுடன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் இணையாது.
இவ்வாறு அவர் கூறினார். #pugalenthi #admkleaf #edappadipalanisamy
ஜெயலலிதா மறைவுக்கு பின் அ.தி.மு.க.வில் பிளவு ஏற்பட்டதால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் போது இரட்டை இலை சின்னத்தை தேர்தல் கமிஷன் முடக்கியது.
இரட்டை இலை சின்னத்தை தங்களது அணிக்கு ஒதுக்க கோரி டி.டி.வி. தினகரன் தேர்தல் கமிஷனில் மனுகொடுத்தார். மேலும் சின்னம் பெறுவதற்காக தேர்தல் கமிஷன் அலுவலர்களுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக தினகரன் மீது டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.
இந்தநிலையில் தினகரன் இன்றே டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் ஆஜரானார். இதைத்தொடர்ந்து குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது தொடர்பான ஆவணத்தில் கையெழுத்திட்டு நகலை பெற்றுக்கொண்டார்.
இதையடுத்து வழக்கு விசாரணை வருகிற 17-ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. #TwoLeaves #TTVDhinakaran
தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் ஒருங்கிணைந்த அ.தி.மு.க.வுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கீடு செய்து தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது. இதை எதிர்த்து சசிகலா, டி.டி.வி.தினகரன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை டெல்லி ஐகோர்ட்டில் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கில் சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆகியோர் தரப்பில் வாதங்கள் ஏற்கனவே முடிவடைந்தன. எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பிலும் வாதம் நிறைவடைந்தது.
இந்நிலையில் நேற்று இந்த வழக்கு மீண்டும் டெல்லி ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. சசிகலா, டி.டி.வி.தினகரன் தரப்பில் மூத்த வக்கீல் அபிஷேக் மனு சிங்வி, ராஜா செந்தூர்பாண்டி, அ.தி.மு.க. தரப்பில் மூத்த வக்கீல் விஸ்வநாதன், பாபு முருகவேல் ஆகியோர் ஆஜராகி இருந்தனர். அமைச்சர் சி.வி.சண்முகம் பார்வையாளர் பகுதியில் ஆஜராகி இருந்தார். இரு நீதிபதிகளில் ஒருவர் வராததால் விசாரணை 21-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. #TwoLeaves #DelhiHighCourt
இரட்டை இலை சின்னத்தை பெற தலைமை தேர்தல் கமிஷனுக்கு ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டி.டி.வி. தினகரன் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கை டெல்லி பாட்டியாலா சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இதில் பல்வேறு மாநிலங்களில் குற்ற வழக்குகள் உள்ளதால் ஹவாலா புரோக்கர் சுகேஷ் சந்திரசேகர் மட்டும் தற்போது வரை ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த வழக்கு ஏற்கனவே பாட்டியாலா சிறப்பு நீதிமன்ற நீதிபதி அரவிந்த் குமார் அமர்வு விசாரித்து வந்தது.
இந்தநிலையில் தினகரன் மீது தொடரப்பட்ட வழக்கு தற்போது அரவிந்த் குமார் அமர்வில் இருந்து சிறப்பு நீதிபதி பரத்வாஜ் அமர்வுக்கு மாற்றப்படுகிறது.
இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை அக்டோபர் 1-ந்தேதிக்கு தள்ளிவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #TwoLeaves
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்