search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஈரோடு மகளிர் போலீஸ் நிலையம்"

    பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு ஈரோடு மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள ஊஞ்சலூர் கொளத்துப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி (வயது 23). திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நவகோம்பு பகுதியை சேர்ந்தவர் அபிநயா (22).

    இருவரும் திருப்பூரில் உள்ள ஒரு பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்கள். இதையடுத்து இவர்கள் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் காதலாக மாறி காதலித்து வந்தனர்.

    இவர்களின் காதல் இருவரின் வீட்டுக்கு தெரியவந்தது. இவர்கள் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. இதையடுத்து பெண்ணின் வீட்டில் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

    இந்த நிலையில் காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேறினர். அவர்கள் தந்தை பெரியார் திடாவிடர் கழக மாவட்ட செயலாளர் குமரகுருபரன் முன்னிலையில் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டனர்.

    இதையடுத்து காதல் ஜோடி ஈரோடு மகளிர் போலீஸ் நிலையத்தில் இன்று பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர். இது குறித்து அவர்களின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வரவழைக்கப்பட்டனர். அவர்களிடம் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. 

    பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு ஈரோடு மகளிர் போலீஸ் நிலையத்தில் மனு அளித்தனர்.

    ஈரோடு:

    புதுக்கோட்டை மாவட்டம் பரமக்குடி தாலுகா, வடக்கு தெருவை சேர்ந்தவர் ஆனந்தவல்லி (வயது 20). இவர் ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட்டில் உள்ள ஒரு தொழிற்சாலையில் கடந்த 4 வருடமாக பணிபுரிந்து வந்தார்.

    அதே தொழிற்சாலையில் ஈரோடு மாவட்டம் கொடுமுடி தாலுகா தலயநல்லூர் பகுதியை சேர்ந்த அஜித்குமார் (22) என்பவரும் பணிபுரிந்து வந்தார்.

    இருவரும் ஒரே நிறுவனத்தில் பணி புரிந்ததால் அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டு காதல் மலர்ந்தது. இருவரும் வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெண்ணின் வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

    எனிலும் காதலில் உறுதியாக இருந்த ஜோடிகள் கடந்த 16-ந் தேதி வீட்டை விட்டு வெளியேறி சிவகிரியில் உள்ள வேலாயுதம் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.

    இன்று ஆனந்தவல்லி தனது காதல் கணவர் அஜித்குமாருடன் ஈரோடு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு வந்தார். அவர்கள் பாதுகாப்பு கேட்டு மனு அளித்தனர். 

    ×