search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஈரோடு மார்க்கெட்"

    ஈரோடு நேதாஜி மார்க்கெட்டிற்கு தக்காளி வரத்து குறைவால் ஒரு கிலோ தக்காளி ரூ. 50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    ஈரோடு:

    ஈரோடு ஆர்.கே.வி. ரோட்டில் நேதாஜி தினசரி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட்டில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து காய்கறிகளை வியாபாரிகள் கொள்முதல் செய்து மொத்தமாகவும், சில்லரையாகவும் விற்பனை செய்து வருகின்றனர்.

    இதில் ஈரோடு மார்க்கெட்டிற்கு கடந்த ஒரு மாதமாக போதிய தக்காளி வரத்து இல்லாததால் அதன் விலை உயர தொடங்கியது. இந்நிலையில் இன்று காலை ஈரோடு மார்க்கெட்டிற்கு வரத்தான தர்மபுரி, ஆந்திரா தக்காளிகள் 14 கிலோ கொண்டபெட்டி ரூ.550 முதல் ரூ.700 வரை விற்பனை செய்யப்பட்டன.

    இதன் காரணமாக சில்லரை விலையில் கடந்த சிலநாட்களாக கிலோ ரூ.40-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த முதல் தரமான தக்காளிகள் தற்போது கிலோ ரூ. 50க்கு விற்பனை செய்யப்படுகிறது. தக்காளி விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் பெண்களும், ஓட்டல் கடைக்காரர்களும் பெரும் அதிருப்திக்குள்ளாகி உள்ளனர்.

    இது குறித்து நேதாஜி மார்க்கெட்டில் தக்காளி விற்பனை செய்யும் மொத்த வியாபாரி ஒருவர் கூறுகையில், “ஈரோடு மார்க்கெட்டிற்கு தக்காளி வரத்து, ஈரோடு மாவட்டம் தாளவாடி, கிருஷ்ணகிரி, ஓசூர், ஆந்திரா, கர்நாடகா போன்ற பகுதிகளில்இருந்து வரத்தாகும். ஆனால் தற்போது தர்மபுரி, ஆந்திரா தக்காளிகள் மட்டுமே குறைந்தளவில் வரத்தாவதால் 14 கிலோ தக்காளி பெட்டி ரூ.550 முதல் ரூ.700 வரையும்,சில்லரை விலையில் கிலோ ரூ. 45 முதல் ரூ. 50 வரைக்கும் விற்பனை செய்யப்படுகின்றன. ஜூன் மாதம் இறுதியில் தக்காளி விலை குறைய வாய்ப்புள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×