என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "உண்ணாவிரத போராட்டம்"
சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் சாமி தரிசனம் செய்யலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு கடந்த செப்டம்பர் மாதம் 28-ந்தேதி உத்தரவிட்டது.
இதைத்தொடர்ந்து சபரிமலை கோவிலில் கடந்த 2-ந்தேதி கோழிக்கோட்டை சேர்ந்த பிந்து, மலப்புரத்தை சேர்ந்த கனகதுர்கா ஆகிய 2 இளம்பெண்கள் போலீஸ் பாதுகாப்புடன் சென்று சாமி தரிசனம் செய்தனர். அதன் பிறகு இலங்கையை சேர்ந்த சசிகலா என்ற இளம்பெண்ணும் சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்தார்.
இதன் பிறகும் சபரிமலை செல்லும் இளம்பெண்களை ஐயப்ப பக்தர்கள் போராட்டம் நடத்தி திருப்பி அனுப்பும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று அதிகாலையில் கண்ணூரை சேர்ந்த ரேஷ்மா, ஷனிலா ஆகிய 2 இளம்பெண்கள் சபரிமலைக்கு சென்றபோது ஐயப்ப பக்தர்களால் தடுத்து நிறுத்தப்பட்டனர். இவர்கள் 2 பேரும் ஆண்கள் போல கருப்பு வேட்டி, கருப்பு சட்டை அணிந்து இருமுடி கட்டுடன் மாலை அணிந்து சென்றனர். அவர்களுடன் 4 ஆண் பக்தர்களும் சென்றனர்.
நீலிமலை வரை அவர்கள் சென்ற நிலையில் அங்கு வைத்து ஆந்திராவை சேர்ந்த சில பக்தர்களும், தமிழகத்தை சேர்ந்த பக்தர்களும் இந்த இளம்பெண்களை அடையாளம் கண்டு கொண்டதால் அது அவர்களுக்கு எதிரான போராட்டமாக மாறியது.
போலீசார் அங்கு சென்று ரேஷ்மா, ஷனிலா ஆகிய 2 பேரையும் பாதுகாப்பாக மீட்டு சபரிமலையில் இருந்து கீழே அழைத்து வந்தனர். தற்போது அந்த பெண்கள் 2 பேரும் ரகசிய இடத்தில் போலீசாரின் கட்டுப்பாட்டில் உள்ளனர். அதே சமயம் அந்த 2 பெண் பக்தர்களும் தாங்கள் சபரிமலைக்கு செல்வதில் தொடர்ந்து உறுதியாக உள்ளனர். அவர்கள் 2 பேரும் தங்களை சபரிமலை சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கக்கோரி காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கி உள்ளனர்.
இதுபற்றி அவர்கள் கூறும்போது, நாங்கள் சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்ய வேண்டும் என்று 100 நாட்களுக்கு மேலாக விரதம் இருந்து வருகிறோம். சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வந்த உடனேயே எங்களது விரதத்தை தொடங்கிவிட்டோம். விரதம் இருப்பவர்கள் சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்யாமல் மாலையை கழற்றக்கூடாது. எனவே நாங்கள் சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்யும் வரை மாலையை கழற்றமாட்டோம். சபரிமலை செல்லாமல் எங்கள் ஊருக்கு திரும்பிச் செல்லமாட்டோம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
பெண் பக்தர்களின் உண்ணாவிரத போராட்டம் காரணமாக மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. #Sabarimalatemple
சென்னை:
மத்திய மாநில அரசுகளால் வணிகர்கள் புறக்கணிக்கப்படுவதை கண்டித்து தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் வருகிற 23-ந்தேதி வள்ளுவர் கோட்டம் முன்பு மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடைபெற உள்ளது.
இதுபற்றி ஆலோசிக்க தென் சென்னை கிழக்கு மாவட்ட தொகுதி கூட்டம் பல்லாவரத்தில் மாவட்டத் தலைவர் என்.டி.மோகன் தலைமையில் நடந்தது. மாவட்டச் செயலாளர் தேசிகன், பொருளாளர் சின்னவன் வரவேற்றனர். இதில் மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில் நிறைவேற்றப் பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
வருகிற 23-ந்தேதி வள்ளூவர் கோட்டத்தில் பேரமைப்பு நடத்தும் உண்ணாவிரத போராட்டத்தில் தென் சென்னை கிழக்கு மாவட்டத்தில் இருந்து 1000-த்துக்கும் அதிகமான வியாபாரிகள் கலந்து கொள்வார்கள்.
பல்லாவரத்தில் மேம்பாலம் பணிகள் நடப்பதால் போக்குவரத்தை திருப்பி விட்டு உள்ளதால் பொது மக்களும், வியாபாரிகளும், வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர்.
அனகாபுத்தூர் பம்மல் பகுதியில் இருந்து தாம்பரம் நோக்கி செல்ல 2 கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டி உள்ளது. எனவே பல்லாவரம் சிக்னலை திறந்து மார்க்கெட் ரோடு இந்திரா காந்தி ரோட்டை இருவழி பாதையாக்கி போலீசாரை சிக்னலில் நிறுத்தினால் போக்குவரத்தை ஒழுங்காக சீர்படுத்த முடியும். மேற் கண்ட தீர்மானங்கள் நிறைவேறின.
தொகுதி கூட்டத்தில் மாநில பொருளாளர் ஏ.எம். சதக்கத்துல்லா மண்டல தலைவர் ஜோதி லிங்கம், ராஜ்குமார், வி.பி.மணி, ஆனந்த் குமார், ஆர்.ஜெயபாண்டியன், குமார், சுந்தரபாண்டியன், மீனாட்சி சுந்தரம், கோமஸ், கோவில்துரை, கே.கே.பாண்டி, மாவட்ட நிர்வாகிகள் ஜெயபாண்டியன், ஆறு முகம், செல்வம், சிவா, தங்கராசு, துரை, செந்தில் குமார், பி.டி.சேகர், கணேச பாண்டியன், வெற்றி, காளிதாஸ், முனியாண்டி, கர்ணன், கந்தன்சாவடி, வில்சன், சுப்பிரமணி, பல்லாவரம் ஜோசப் பிரதீப் மற்றும் 13 தொகுதி சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே லோக்பால், லோக் ஆயுக்தாவை அமைக்க வலியுறுத்தி தொடர்ந்து போராடி வருகிறார். லோக்பால், லோக் ஆயுக்தாவை அமைக்காவிட்டால் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடத்துவேன் என்று காந்தி நினைவு நாளான ஜனவரி 30-ந் தேதி அவர் அறிவித்தார்.
மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததால் காந்தி ஜெயந்தி தினமான அக்டோபர் 2-ந் தேதி மராட்டிய மாநிலம் ரலேகான் சித்தியில் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொள்ள உள்ளதாக அன்னா ஹசாரே அறிவித்து இருந்தார். இதனால் மத்திய மற்றும் மாநில அரசுகளின் பிரதிநிதியாக மராட்டிய மந்திரி கிரிஷ் மகாஜன், அன்னா ஹசாரேவை சந்தித்து அரசு எடுத்து வரும் நடவடிக்கை குறித்து விளக்கினார்.
இதையடுத்து நேற்று தொடங்க இருந்த தன்னுடைய காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை அன்னா ஹசாரே ஒத்திவைத்தார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், ‘இனியும் மத்திய அரசு தாமதம் செய்தால் காந்தி நினைவு நாளான ஜனவரி 30-ந் தேதி தேசிய அளவில் போராட்டம் நடத்துவேன்’ என்றார். #AnnaHazare #HungerStrike
நாமக்கல்:
அகில இந்திய அஞ்சல் ஊழியர் கூட்டு குழு சார்பில், நாமக்கல் தலைமை அஞ்சலக ஊழியர்கள் பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கோட்ட செயலாளர்கள் அன்பழகன், சுரேஷ், ஈஸ்வரன் தலைமை வகித்தனர். போராட்டத்தில் கிராம அஞ்சல் ஊழியர்களுக்கு ஜி.டி.எஸ் கமிட்டியின் பரிந்துரைகளை அமல் படுத்த வேண்டும். தற்போதைய வழங்கப்பட்ட நிலுவை தொகைக்கான கணக்கீட்டுமுறை மாற்றப்பட வேண்டும். பணிக்கொடையை உயர்த்தி வழங்க வேண்டும். ஜி.டி.எஸ் குரூப் காப்பீட்டு தொகையை உயர்த்த வேண்டும். ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி திட்டத்தை அமல்படுத்த வேண்டும் . 12, 24, 36 ஆண்டுகள் பணி முடித்த ஊழியர்களுக்கு கூடுதல் ஊதிய உயர்வுகள், பணப்பலன்கள் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டன. இந்த உண்ணாவிரத போராட்டத்தில் கிளைச் செயலாளர்கள் ராமச்சந்திரன், சம்பத்குமார், சுப்ரமணியம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். # tamilnews
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் வி.செந்தில் பாலாஜி போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பின்பு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலும், டி.டி. வி.தினகரன் தலைமையிலும் கட்சி இரண்டாக பிரிந்தது.
அப்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை மாற்றக்கோரி செந்தில்பாலாஜி உள்ளிட்ட 18 டி.டி.வி. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் கவர்னரிடம் மனு கொடுத்தனர். இதையடுத்து சபாநாயகர் தனபால் அந்த 18 எம்.எல்.ஏ.க் களையும் தகுதி நீக்கம் செய்தார். இதுதொடர்பான வழக்கு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இன்னும் சில நாட்களில் தீர்ப்பும் வழங்கப்பட உள்ளது.
இதற்கிடையே எம்.எல்.ஏ. ஆன உடன் (பதவி பறிப்புக்கு முன்பு) அரவக்குறிச்சி தொகுதி மக்களின் கோரிக்கைகளை செந்தில்பாலாஜி சட்டமன்றத்தில் முன் வைத்தார். ஆனால் இதுநாள்வரை அந்த கோரிக்கைகள் எதையும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு நிறை வேற்றவில்லை என கூறப்படுகிறது.
இதையடுத்து சட்டமன்றத்தில் வைத்த கோரிக்கைகளை நிறைவேற்றாத மாநில அரசை கண்டித்தும், கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற வலியுறுத்தியும் இன்று (செவ்வாய்க்கிழமை) அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட க. பரமத்தி ஊராட்சி ஒன்றிய அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மற்றும் பொதுமக்கள் சார்பில் க.பரமத்தி கடை வீதியில் செந்தில் பாலாஜி தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற இருந்தது.
உண்ணாவிரதத்திற்கு அனுமதி கேட்டு மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்ததையடுத்து, க.பரமத்தி, அரவக்குறிச்சி, வேலாயுதம்பாளையம் ஆகிய 3 இடங்களில் உண்ணாவிரத போராட்டம் நடத்த கோர்ட்டு அனுமதி வழங்கியது. ஆனால் காவல் துறையினர் அனுமதி வழங்கவில்லை.
இந்தநிலையில் கோர்ட்டு அனுமதியுடன் க.பரமத்தியில் இன்று போராட்டம் நடத்துவதற்கான பந்தல் அமைக்கும் பணி நேற்று தொடங்கியது. அப்போது அங்கு வந்த போலீசார் பணிகள் செய்யக்கூடாது என்று ஆட்சேபம் தெரிவித்து தடுத்தனர்.
இதையறிந்த செந்தில் பாலாஜி, தனது ஆதரவாளர்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போலீசாரிடம் விபரத்தை கேட்டார். இதில் கரூர் ஏ.டி.எஸ்.பி. பாஸ்கரன், க.பரமத்தி இன்ஸ்பெக்டர் குணசேகரன் ஆகியோருக்கும் செந்தில் பாலாஜிக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
போலீசார் கூறும்போது, கோர்ட்டு உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. வழக்கு முடிவுக்கு வந்த பிறகு அனுமதி அளிக்கப்படும் என்றனர். அப்போது எந்தவித உத்தரவாக இருந்தாலும் எழுத்துபூர்வமாக கொடுங்கள் என்று செந்தில் பாலாஜி கூறினார். அதனை ஏற்று ரூரல் டி.எஸ்.பி. முத்தமிழ்செல்வன் அளித்த கடிதத்தை இன்ஸ்பெக்டர் குணசேகரன், செந்தில் பாலாஜியிடம் அளித்தார்.
இது தொடர்பாக செந்தில் பாலாஜி நிருபர்களிடம் கூறும் போது, தமிழக அரசும், காவல்துறையும் தங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி எங்கள் போராட்டத்தை அடக்க நினைக்கின்றனர். கோர்ட்டு உத்தரவினை அவமதித்த அதிகாரிகள் மீது அவமதிப்பு வழக்கு தொடுக்கப்படும். மீண்டும் கோர்ட்டு உத்தரவு பெற்று அதே இடத்தில் போராட்டம் நடத்தப்படும்.
டி.டி.வி.தினகரன் செல்லும் இடமெல்லாம் மக்கள் கூட்டம் அலை மோதுவதால் ஆளும் அ.தி.மு.க.வினர் எங்கள் கட்சியின் பொதுக்கூட்டம், போராட்டத்திற்கு தடை விதிக்கிறார்கள். மத்திய பா.ஜ.க.வின் எடுபிடியாக இருந்து கொண்டு அவர்களின் உத்தரவினை எடப்பாடி அரசு நிறைவேற்றுகிறது.
விரைவில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க் களின் தீர்ப்பு வரும் போது தமிழகத்தில் பழனிசாமி அரசு இருக்காது என்றார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. #senthilbalaji
இந்த உண்ணாவிரதத்தில் ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் மு.சுப்பிரமணியன், அ.மாயவன், க.மீனாட்சிசுந்தரம், இரா.தாஸ், செ.முத்துசாமி, வெங்கடேசன், அன்பரசு, தாமோதரன், சுரேஷ், செய்தி தொடர்பாளர் கு.தியாகராஜன் மற்றும் மோசஸ் உள்பட பலர் கலந்துகொண்டுள்ளனர்.
இந்நிலையில், போராட்டம் நடத்தும் ஜாக்டோ ஜியோ அமைப்பினரை தி.மு.க செயல் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று சந்தித்து, அவர்களின் கோரிக்கைகள் குறித்து அரசிடம் பேசுவதாக கூறினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மு.க.ஸ்டாலின், ஜாக்டோ-ஜியோ அமைப்பினரின் கோரிக்கையை அரசு பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். மேலும், ஜாக்டோ ஜியோ அமைப்பின் கோரிக்கை குறித்து சட்டப்பேரவையில் பேச உள்ளதாகவும் கூறினார்.
எம்.எல்.ஏ.க்களுக்கு மாமூல் கொடுத்து ஆட்சியை தக்க வைப்பதில் அ.தி.மு.க. அரசு தீவிரமாக உள்ளது என்றும் அவர் குற்றம்சாட்டினார். #JactoGeoProtest #StalinMeetsJactoGeo
காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையிலான விவசாய அமைப்புகள் வருகிற 12-ந் தேதி திருவாரூரில் உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளன. இந்த போராட்டத்துக்கு மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
இது குறித்து கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
காவிரி டெல்டாவை பாதுகாக்க மேற்கொள்ளப்படும் அனைத்து சட்டப்பூர்வமான இயக்கங்களையும், போராட்டங்களையும் மக்கள் நீதி மய்யம் ஆதரிக்கும். உண்ணாவிரத போராட்டத்தில் எனக்கு தனிப்பட்ட முறையில் ஒப்புதல் இல்லை என்றாலும், உங்கள் (பி.ஆர்.பாண்டியன்) அமைப்பின் சார்பில் எடுக்கும் முயற்சிகளுக்கு வாழ்த்து சொல்வது எனது கடமை.
ஜூன் 12-ந் தேதி தாங்கள் (பி.ஆர்.பாண்டியன்) மேற்கொண்டுள்ள நிகழ்வில், வேறு பணிகள் காரணமாக என்னால் நேரில் பங்கேற்க இயலாது. எனினும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்