என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » உயிரோடு எழுந்தார்
நீங்கள் தேடியது "உயிரோடு எழுந்தார்"
ஒட்டன்சத்திரம் அருகே இறந்ததாக டாக்டர் கூறியவருக்கு மீண்டும் உயிர் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஒட்டன்சத்திரம்:
ஒட்டன்சத்திரம் அருகில் உள்ள விருப்பாச்சி சாமியார்புதூரை சேர்ந்தவர் தங்கவேலு (வயது46). தேங்காய் பறிக்கும் தொழில் செய்து வருகிறார்.
இவர் தென்னை மரத்தில் ஏறி தேங்காய் பறித்துக் கொண்டிருந்தபோது விஷ வண்டு கடித்தது. உடனே மயங்கி விழுந்த அவரை அருகில் இருந்தவர்கள் ஒட்டன்சத்திரம் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் தங்கவேலு இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இனையடுத்து சோகத்துடன் அவரை வீட்டிற்கு கொண்டு வந்தனர். குளிர்சாதன பெட்டியில் வைத்து மாலைகள் அணிவித்தனர். அப்போது திடீரென தங்கவேலு விழித்து பார்த்தார். தூங்கி எழுந்தவர் போல தனக்கு என்ன ஆயிற்று என கேட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து மீண்டும் அவரை ஒட்டன்சத்திரம் தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அவரது உடல்நிலையில் ஏற்பட்ட மாற்றம் குறித்து டாக்டர்கள் சோதனை செய்தனர்.
தொடர்ந்து ஆஸ்பத்திரியிலேயே அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

×

X