search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உலக மகளிர் குத்துச்சண்டை"

    • 48 கிலோ எடைப்பிரிவின் இறுதிப்போட்டியில், அரியானாவை சேர்ந்த நிது கங்காஸ் தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.
    • இந்திய வீராங்கனைகள் லவ்லினா, நிகாத் ஜரீன் வெற்றி பெற்று சாதனை படைப்பார்களா என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

    டெல்லியில் பெண்களுக்கான 13வது உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி நடந்து வருகிறது. இதில் 50 கிலோ உடல் எடைப்பிரிவில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் நடப்பு உலக சாம்பியனான இந்திய வீராங்கனை நிகாத் ஜரீன், 2 முறை ஆசிய சாம்பியனான நுயென் திம் தாமுடன் (வியட்நாம்) மோதுகிறார்.

    இதேபோல் 75 கிலோ எடைப்பிரிவின் இறுதிப்போட்டியில் ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கம் வென்றவரான இந்திய வீராங்கனை லவ்லினா, கேட்லின் பார்கெரை (ஆஸ்திரேலியா) சந்திக்கிறார்.

    இதனிடையே நேற்று நடந்த 48 கிலோ எடைப்பிரிவின் இறுதிப்போட்டியில், அரியானாவை சேர்ந்த 22 வயதான நிது கங்காஸ் 5-0 என்ற கணக்கில் லட்சைகான் அடலாண்செட்செக்கை(மங்கோலியா) தோற்கடித்து தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். இதன் மூலம் உலக குத்துச்சண்டையில் சாம்பியன் பட்டம் வென்ற 6-வது இந்தியர் என்ற பெருமையை நிது கங்காஸ் பெற்றார்.

    அதே போல் 81 கிலோ எடைப்பிரிவின் இறுதிப்போட்டியில் அரியானாவை சேர்ந்த 30 வயது வீராங்கனை சவீட்டி பூரா, 4-3 என்ற கனக்கில் வாங் லினாவை(சீனா) சாய்த்து சாம்பியன் பட்டத்தை தனதாக்கினார். இதன் மூலம் உலக குத்துச்சண்டையில் தங்கம் வென்ற 7-வது இந்தியர் என்ற சிறப்பை பெற்றார்.

    இதனைத் தொடர்ந்து இன்று நடைபெறும் போட்டிகளில் இந்திய வீராங்கனைகள் லவ்லினா, நிகாத் ஜரீன் வெற்றி பெற்று சாதனை படைப்பார்களா என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

    • சவீட்டி பூரா, நீத்து காங்காஸ் மோதும் இறுதிப்போட்டி இன்று மாலை 6 மணிக்கு நடக்கிறது.
    • மேலும் இரண்டு இந்திய வீராங்கனைகள் மோதும் இறுதிப்போட்டி நாளை நடக்கிறது.

    புதுடெல்லி:

    உலக மகளிர் குத்துச்சண்டை போட்டி டெல்லியில் நடைபெற்று வருகின்றன.

    இதன் இறுதிப் போட்டிக்கு நிகாத் ஜரீன் (50 கிலோ பிரிவு), நீத்து காங்காஸ் (48 கிலோ பிரிவு), லவ்லினா (75 கிலோ பிரிவு), சவீட்டி பூரா (81 கிலோ பிரிவு) ஆகிய 4 இந்திய வீராங்கனைகள் தகுதி பெற்று இருந்தார்கள்.

    இறுதிப்போட்டி இன்றும், நாளையும் நடக்கிறது. இதில் 4 வீராங்கனைகளும் வென்று, இந்தியாவுக்கு 4 தங்கம் கிடைக்குமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    சவீட்டி பூரா மோதும் இறுதிப்போட்டி இன்று மாலை 6 மணிக்கு நடக்கிறது. இதே போல் நீத்து காங்காஸ் மோதும் இறுதிப் போட்டியும் இன்று நடக்கிறது. இருவரும் இறுதி ஆட்டத்தில் வென்று தங்கம் பதக்கம் பெறுவார்களா? என்று எதிர்பார்ப்பு இருக்கிறது.

    மேலும் இரண்டு இந்திய வீராங்கனைகள் மோதும் இறுதிப்போட்டி நாளை நடக்கிறது.

    • இந்தப் போட்டியில் தங்கம் வெல்பவர்களுக்கு தலா ரூ.82 லட்சம், வெள்ளிக்கு தலா ரூ.41 லட்சம், வெண்கலத்துக்கு ரூ.20 லட்சம் ரொக்கப் பரிசாக வழங்கப்பட உள்ளது.
    • வருகிற 26-ந்தேதி வரை நடைபெறும் இந்தப் போட்டியில் 65 நாடுகளை சேர்ந்த 324 வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.

    புதுடெல்லி:

    பெண்களுக்கான உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி டெல்லியில் இன்று தொடங்குகிறது. வருகிற 26-ந்தேதி வரை நடைபெறும் இந்தப் போட்டியில் 65 நாடுகளை சேர்ந்த 324 வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.

    ஒலிம்பிக் போட்டியில் பதக்கங்களை வென்றவர்கள் பங்கேற்பதால் இந்த போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருக்கும். இந்தியாவில் 3-வது முறையாக மகளிர் உலக குத்துச்சண்டை போட்டி நடத்தப்படுகிறது.

    இந்தப் போட்டியில் தங்கம் வெல்பவர்களுக்கு தலா ரூ.82 லட்சம், வெள்ளிக்கு தலா ரூ.41 லட்சம், வெண்கலத்துக்கு ரூ.20 லட்சம் ரொக்கப் பரிசாக வழங்கப்பட உள்ளது.

    அறுவை சிகிச்சை காரணமாக மேரிகோம் இந்தப் போட்டியில் பங்கேற்கவில்லை. நீது கங்காஸ் (48 கிலோ), நிகாத் ஜரீன் (50 கிலோ), சாக்ஷி சவுத்ரி (52), பிரீத்தி (54), மனீஷா மவுன் (57), ஜாஸ்மின் லம்போரியா (60), சாஷி சோப்ரா (63), மஞ்சு பம்போரியா (66), சனமாசா சானு (70), லவ்லினா (75), சவீதி பூரா (81), நுபுர் ஷியோரன் (81 கிலோவுக்கு மேற்பட்ட பிரிவு) ஆகிய இந்திய வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள்.

    கடந்த முறை இந்தியா 1 தங்கம் உள்பட 3 பதக்கம் பெற்று இருந்தது. இந்தப் போட்டியின் தொடக்க விழா நேற்று நடந்தது.

    உலக மகளிர் குத்துச்சண்டை அரை இறுதி போட்டியில் மேரிகோம், சாஹல், லோவிலினா, சிம்ரன்ஜித் கவூர், ஆகியோர் தகுதி பெற்ற நிலையில் இந்தியாவுக்கு 4 பதக்கம் உறுதியாகி உள்ளது. #MaryKom #WorldBoxing
    புதுடெல்லி:

    10-வது உலக மகளிர் குத்துச்சண்டை போட்டி டெல்லியில் நடைபெற்று வருகிறது.

    இதன் அரை இறுதி போட்டிக்கு இந்திய வீராங்கனைகளான மேரிகோம் (48 கிலோ பிரிவு), சோனியா சாஹல் (57 கிலோ பிரிவு) லோவிலினா போர்கோஹன் (69 கிலோ பிரிவு), சிம்ரன்ஜித் கவூர் (64 கிலோ பிரிவு) ஆகிய 4 பேர் தகுதி பெற்றனர். இதன்மூலம் இந்தியாவுக்கு 4 பதக்கம் உறுதியானது.

    பிங்கிராணி, மனிஷா, பாக்யபதி, சீமா புனியா ஆகிய 4 இந்திய வீராங்கனைகளும் கால்இறுதியில் தோற்றனர்.

    35 வயதான மேரிகோம் உலக சாம்பியன் ஷிப் போட்டியில் ஏற்கனவே 5 தங்கமும், ஒரு வெள்ளியும் பெற்று இருந்தார்.

    தற்போது மேலும் ஒரு பதக்கத்தால் அவரது பதக்க எண்ணிக்கை 7 ஆக உயர்ந்தது. இது புதிய சாதனையாகும். இதற்கு முன்பு அயர்லாந்து வீராங்கனை கேட்டி டெய்லர் உலக சாம்பியன் ஷிப் போட்டியில் 6 பதக்கம் வென்றதே சாதனையாக இருந்தது. #MaryKom #LovlinaBorgohain #SimranjitKaur #SoniaChahal  #WorldBoxing
    ×