என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » எம்ஜிஆர் சிலை
நீங்கள் தேடியது "எம்ஜிஆர் சிலை"
எம்.ஜி.ஆரின் 102-வது பிறந்தநாளை முன்னிட்டு வருகிற 17-ந்தேதி அவருடைய திருவுருவச்சிலைக்கு டி.டி.வி.தினகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். #MGRBirthday #TTVDhinakaran
சென்னை:
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
எம்.ஜி.ஆரின் 102-வது பிறந்தநாளை முன்னிட்டு வருகிற 17-ந்தேதி காலை 10 மணியளவில் திருவாரூர்- மயிலாடுதுறை சாலையில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர். திருவுருவச்சிலைக்கு துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.
கழக அமைப்பு ரீதியான 70 மாவட்டங்களிலும் மற்றும் புதுச்சேரி மாநிலத்திலும் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா பொதுக்கூட்டங்கள் நடைபெறும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #MGRBirthday #TTVDhinakaran

ஆரணி அருகே எம்.ஜி.ஆர். சிலை உடைப்பை கண்டித்து அ.தி.மு.க.வினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபப்பு ஏற்பட்டது.
ஆரணி:
ஆரணி அடுத்த பெரணமல்லூர் குருக்காத்தூர் கிராமத்திற்குள் நுழையும் இடத்தில் எம்.ஜி.ஆர். சிலை நிறுவப்பட்டுள்ளது. நேற்று இரவு மர்ம நபர்கள் எம்.ஜி.ஆர். சிலையின் கை பகுதியை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.
இன்று காலையில் சிலை உடைக்கப்பட்டதை கண்டு பொதுமக்கள் திடுக்கிட்டனர். இதுபற்றி தகவலறிந்த அ.தி.மு.க.வினர் ஏராளமானோர் அங்கு குவிந்தனர்.
அவர்கள் சிலையை உடைத்தவர்களை கண்டுபிடித்து உடனே கைது செய்ய வலியுறுத்தி வாழைப்பந்தல் செல்லும் மெயின் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மறியலில் ஈடுபட்ட அ.தி.மு.க.வினர்
பெரணமல்லூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சிலையை உடைத்தவர்கள் கைது செய்யப்படுவார்கள் என உறுதி அளித்தனர். இதனையடுத்து, அ.தி.மு.க.வினர் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. #ADMK
×

X