search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐஎஸ் பயங்கரவாதி"

    ஈராக்கில் ராணுவத்தின் அதிரடி தாக்குதலில் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவரான சுலைமான் அகமது முகைதின் என்பவரை ராணுவவீரர்கள் சுட்டுக்கொன்றனர். #Iraq
    பாக்தாத்:

    சிரியாவை புகலிடமாக கொண்ட ஐ.எஸ். பயங்கரவாதிகள் அண்டை நாடான ஈராக்கிலும் காலூன்றி, அந்நாட்டின் பல்வேறு நகரங்களை தங்கள் வசமாக்கினர். இதையடுத்து, அமெரிக்க கூட்டுப்படைகளின் உதவியோடு ஈராக் ராணுவம் ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிரான போரை முன்னெடுத்தது. இதில் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் பெரும் பின்னடைவை சந்தித்தது.

    கடந்த 2017-ம் ஆண்டு ஐ.எஸ். பயங்கரவாதிகள் முற்றிலும் தோற்கடிக்கப்பட்டு விட்டதாக ஈராக் அரசு அறிவித்தது. எனினும் குறுகிய காலத்திலேயே ஐ.எஸ். பயங்கரவாதிகள் அங்கு மீண்டும் காலூன்ற தொடங்கிவிட்டனர். நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள பாலைவன பகுதியான அன்பர் மாகாணத்தில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் ஆதிக்கம் மிகுந்து காணப்படுகிறது. அவர்களை ஒடுக்க ஈராக் ராணுவம் தொடர்ந்து போராடி வருகிறது.

    இந்த நிலையில், அன்பர் மாகாணத்தின் தலைநகர் ரமாடியில் உள்ள அல்-ரசாசா என்ற இடத்தில் ராணுவவீரர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கி இருந்த ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவரான சுலைமான் அகமது முகைதின் என்பவரை ராணுவவீரர்கள் சுட்டுக்கொன்றனர்.

    இந்த தகவலை உறுதிப்படுத்திய ஈராக் ராணுவம், சுலைமான் அகமது முகைதின் கடந்த காலங்களில் அன்பர் மாகாணத்தில் எண்ணற்ற உயிர்களை பலிகொண்ட பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களுக்கு மூளையாக செயல்பட்டவர் என தெரிவித்தது. எனினும் இந்த சம்பவம் குறித்து ஐ.எஸ். பயங்கர வாத இயக்கம் உடனடியாக எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. 
    அமெரிக்காவின் அலபாமா பகுதியில் இருந்து சென்று ஐஎஸ் பயங்கரவாதிகளுடன் இணைந்த பெண் மீண்டும் நாடு திரும்ப முடியாது என டிரம்ப் தெரிவித்துள்ளார். #Trump #ISISMillitants
    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் அலபாமா பகுதியைச் சேர்ந்த ஹோடா முத்தானா(24) ,  சிரியாவில் உள்ள ஐஎஸ் பயங்கரவாதிகளுடன் இணைய விரும்பினார்.  இதற்காக துருக்கியில் உள்ள பல்கலைக்கழக நிகழ்ச்சிக்கு செல்வதாக கூறி வீட்டை விட்டு வெளியேறி சிரியா சென்றார். பின்னர் இறுதிக்கட்ட தாக்குதலின்போது கைது செய்யப்பட்டார். இதேபோல் மேலும் சில நாடுகளைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.



    இதுதொடர்பாக சமீபத்தில் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், சிரியாவில் பிடிபட்ட ஐஎஸ் இயக்கத்தினரை நாடு திரும்ப அனுமதித்து அவர்கள் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும் என லண்டன் மற்றும் மற்ற ஐரோப்பிய நாடுகளை கேட்டுக்கொண்டார். அப்படி செய்யாவிட்டால், அமெரிக்கா தலைமையிலான குர்திஷ் படையினர் அவர்களை விடுவிக்க வேண்டியிருக்கும் என்றும் கூறியிருந்தார்.

    ஆனால் தற்போது அமெரிக்காவைச் சேர்ந்த பெண் ஹோடா முத்தானா  நாடு திரும்பக் கூடாது என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். அவரை அமெரிக்காவிற்குள் அனுமதிக்க கூடாது என வெளியுறவுத்துறை மந்திரி  மைக் பாம்பியோவிற்கு தகவல் அனுப்பப்பட்டதாகவும் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

    அந்த பெண்ணின் அமெரிக்க குடியுரிமை ரத்து செய்யப்பட்டதாகவும், மீண்டும் அமெரிக்காவிற்கு திரும்ப இயலாது எனவும் மைக் பாம்பியோ ஏற்கெனவே கூறியிருந்தார். ஆனால், அவரிடம் அமெரிக்க குடியுரிமை இருப்பதாக அவரது வழக்கறிஞர்  ஹசான் ஷிப்ளி கூறியுள்ளார்.

    ‘ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தவர்களை நாடு திரும்ப அனுமதிக்கும்படி  டிரம்ப் கேட்டுக் கொண்டார். தற்போது அமெரிக்கா என வரும்போது முரண்பாடான கருத்தை வெளியிட்டுள்ளார். மேலும் முத்தானாவிடம் முறையான அமெரிக்க பாஸ்போர்ட் மற்றும் அமெரிக்க குடியுரிமைக்கான ஆவணம் உள்ளது’ என்றும் ஹசான் ஷிப்ளி தெரிவித்துள்ளார்.  #Trump #ISISMillitants

    ஈராக்கில் ராணுவ வீரர்கள் நடத்திய அதிரடி தாக்குதலில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் 5 பேர் பலியானார்கள்.
    பாக்தாத்:

    ஈராக்கில் ஆதிக்கம் செலுத்தி வந்த ஐ.எஸ். பயங்கரவாதிகள் முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டதாக கடந்த 2017-ம் ஆண்டு இறுதியில் அப்போதைய பிரதமர் ஹைதர் அல்-அபாடி அறிவித்தார். ஆனால் சமீபகாலமாக அங்கு ஐ.எஸ். அமைப்பு மீண்டும் தலைதூக்க தொடங்கி உள்ளது. அவர்களை ஒடுக்க ஈராக் ராணுவ வீரர்கள் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் மொசூல் நகரில் உள்ள குகைகளில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் ராணுவ வீரர்கள் அந்த பகுதியை சுற்றிவளைத்து அதிரடி தாக்குதல் நடத்தினர். இதில் 5 பயங்கரவாதிகள் பலியாகினர். மேலும் பயங்கரவாதிகளின் 8 குகைகள் நிர்மூலமாக்கப்பட்டன. 
    லிபியாவில் ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதல்களில் ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்த 12 பேர் கொல்லப்பட்டனர். #LibyanArmy #ISMilitants
    திரிபோலி:

    லிபியாவின் தென்கிழக்கு பகுதியில் எகிப்து நாட்டின் எல்லையையொட்டி அமைந்துள்ள குப்ரா மாவட்டத்தில் டெசர்பு என்கிற நகர் உள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை இந்த நகரில் உள்ள போலீஸ் நிலையம் மற்றும் அரசு கட்டிடங்களை குறிவைத்து ஐ.எஸ். பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.

    துப்பாக்கிகளால் சுட்டும், வெடிகுண்டுகளை வீசியும் நடத்திய தாக்குதலில் அப்பாவி மக்கள் 8 பேர் உயிர் இழந்தனர். 15 பேர் படுகாயம் அடைந்தனர். மேலும் 10-க்கும் மேற்பட்டோரை பயங்கரவாதிகள் பிணைக்கைதிகளாக பிடித்து சென்றனர். பயங்கரவாதிகளின் இந்த அட்டூழியத்தை ஐ.நா. சபை கடுமையாக கண்டித்தது.

    இதற்கிடையே டெசர்பு நகரில் இருந்து ஐ.எஸ். பயங்கரவாதிகளை விரட்டி அடிக்க ராணுவம் உத்தரவு பிறப்பித்தது. அதன் பேரில் நேற்று முன்தினம் ராணுவவீரர்கள் மற்றும் குழுவாக இணைந்து டெசர்பு போலீசார் நகரில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் நிலைகளை குறிவைத்து அதிரடி தாக்குதலை நடத்தினர். இதில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் 12 பேர் கொன்று குவிக்கப்பட்டனர். மேலும் ஆயுதங்கள் நிரப்பப்பட்ட பயங்கரவாதிகளின் வாகனங்கள் அழிக்கப்பட்டன. பயங்கரவாதிகள் பதுங்கி இருந்த இடங்களில் இருந்து துப்பாக்கி, வெடிகுண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. #LibyanArmy #ISMilitants
    அச்சுறுத்தல் காரணமாக கோவை, திருப்பூர் மாவட்டத்தில் இந்து இயக்க தலைவர்கள் 49 பேருக்கு துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. #ArjunSampath
    கோவை:

    இந்து முன்னணி செய்தி தொடர்பாளர் சசிகுமார் கடந்த 2016-ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக சாய்பாபா காலனியை சேர்ந்த முபாரக், சதாம் உசேன், சுபேர், அபுதாகீர் ஆகிய 4 பேரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர்.

    இந்த சம்பவத்தையடுத்து அச்சுறுத்தல் உள்ள இந்து இயக்க தலைவர்களுக்கு 24 மணிநேர துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணி, மாநில செயலாளர்கள் கிஷோர்குமார், தாமு வெங்கடேசன் உள்பட 12 பேருக்கு துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. இதுதவிர அவரது வீடுகளுக்கும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    இதேபோல் கோவை மாவட்டத்தில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் மற்றும் இந்து இயக்க தலைவர்கள் மூகாம்பிகை மணி, குணா, சதீஷ், சுரேஷ், இளங்கோ, குளத்துபாளையம் சிவலிங்கம், ரத்தினபுரி சிவலிங்கம் உள்பட 37 பேருக்கு துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு போடப்பட் டுள்ளது.

    இதுதவிர முக்கிய பிரமுகர்கள் ஒருசிலர் வீடுகளுக்கும் 24 மணிநேர போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தற்போது இவர்களுக்கு பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
    முஸ்லிம் மதத்தை பற்றி தவறாக கூறியதால் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் உள்பட சில பிரமுகர்களை கொல்ல சதி திட்டம் தீட்டினோம் என்று ஐ.எஸ். பயங்கரவாதி போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். #ArjunSampath
    கோவை:

    இந்து இயக்க தலைவர்களை கொலை செய்யும் சதிதிட்டத்துடன் சென்னையில் இருந்து ரெயிலில் கோவைக்கு 5 பேர் வருவதாக உளவுத்துறையினர் கண்டுபிடித்து தகவல் கொடுத்தனர். அதன்பேரில் கோவை போலீசார் நேற்று கோவை ரெயில் நிலையத்தில் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

    அப்போது சென்னையில் இருந்து கோவை வந்த கும்பலை போலீசார் மடக்கிப் பிடித்தனர். விசாரணையில் அவர்கள் சென்னை வியாசர்பாடியை சேர்ந்த ஜாபர்சாதிக் அலி, திண்டிவனம் இஸ்மாயில், பல்லாவரம் சம்சுதீன், ஓட்டேரி சலாவுதீன் மற்றும் இவர்களை அழைத்து செல்ல வந்த கோவையை சேர்ந்த ஆசிக் என்பது தெரியவந்தது.

    இவர்கள் இந்து மக்கள் கட்சி(தமிழகம்) நிறுவன தலைவர் அர்ஜூன் சம்பத், சக்திசேனா நிறுவனர் அன்பு மாரி உள்ளிட்ட இந்து இயக்க பிரமுகர்களை கொலை செய்யும் சதி திட்டத்துடன் வந்தது தெரியவந்தது. இதையடுத்து 5 பேரையும் கைது செய்தனர்.


    கைதான இஸ்மாயில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்பில் ரகசிய உறுப்பினராக உள்ளார். இவர் ஐ.எஸ்.ஐ.எஸ். பற்றிய தகவல்களை பேஸ்புக்கில் பதிவு செய்து வந்துள்ளார்.

    இவரது இருசக்கர வாகனத்தின் முன்புறம் ‘இஸ்லாமிக் ஸ்டேட் ஆப் இந்தியா அன்ட் ஜம்மு காஷ்மீர்’ என்ற ஸ்டிக்கரை ஒட்டி உள்ளார். இவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

    எனக்கு பேஸ்புக் மூலமாக கோவையை சேர்ந்த ஆசிக் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அறிமுகமானார். இதேபோல சம்சுதீன், ஜாபர் சாதிக் அலி, சலாவுதீன் ஆகியோருடன் ஒருமித்த கருத்தின் அடிப்படையில் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. நாங்கள் அனைவருமே ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் மீது ஈடுபாட்டோடு இருந்ததால் நண்பர்களானோம்.

    எங்களது மதத்துக்கு எதிராக பேசுபவர்களையும், சமூக வலைதளங்களில் பதிவுகள் செய்பவர்களையும் கண்காணித்து வந்தோம். இதில் அர்ஜூன் சம்பத், அன்புமாரி ஆகியோர் வெறுப்பேற்றும் வகையில் பேசியும், பேஸ்புக்கில் பதிவு செய்து வருவதாக ஆசிக் கூறினார்.

    அவர்கள் இருவரையும் கொல்வது என முடிவு செய்தோம். அர்ஜூன் சம்பத் அடிக்கடி டி.வி.க்களில் பேசி வருவதால் அவரை தெரியும். அன்புமாரியின் புகைப்படத்தை ஆசிக் எங்களுக்கு அனுப்பினார். இருவரையும் கொலை செய்ய ஆசிக்கை சென்னைக்கு வரச் சொன்னோம்.

    ஆனால் ஆசிக் எங்களை கோவை வரச் சொன்னார். கொலைக்கான ஏற்பாடுகளை செய்து தருவதாகவும், இத்திட்டத்துக்கு உக்கடத்தை சேர்ந்த ஆட்டோ பைசல், குனிய முத்தூரை சேர்ந்த அன்வர் ஆகியோர் அனைத்து உதவிகளும் செய்வதாகவும் கூறினார்.

    சம்பவத்தன்று நாங்கள் ரெயிலில் கோவை வந்தோம். ஆனால் எங்களை அழைத்து செல்ல ஆசிக் ரெயில் நிலையத்துக்கு குறித்த நேரத்துக்கு வரவில்லை. செல்போனில் தொடர்பு கொண்ட போது கொஞ்சம் நேரமாகிவிட்டது, நீங்கள் நால்வரும் நேராக வீட்டுக்கு வாருங்கள் என ஆசிக் கூறினார்.

    நாங்கள் ரெயில் நிலையத்தில் இருந்து பின்வாசல் வழியாக ஆசிக் வீடுநோக்கி நடந்து சென்றபோது, எதிரே மோட்டார் சைக்கிளில் ஆசிக் வந்துவிட்டார். அப்போது போலீசார் எங்களை பிடித்து விட்டனர்.

    இவ்வாறு அவர் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

    கைதானவர்கள் பயன்படுத்திய 6 செல்போன்கள், ஆசிக்கின் மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் ஆசிக் மறைத்து வைத்திருந்த கொலை முயற்சிக்கு தேவையான 5 அரிவாள்களை பறிமுதல் செய்தனர்.

    பின்னர் 5 பேர் மீதும் உபா சட்டம் (யு.ஏ.பி.ஏ.- சட்ட விரோத நடவடிக்கை தடுப்பு சட்டம்), மதகலவரத்தை தூண்டும் வகையில் குற்றச்செயல்களில் ஈடுபடுவது, அரசுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்படுவது, கூட்டுசதி, சட்டவிரோதமாக கூடுதல் உள்ளிட்ட 7 பிரிவு களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து 5 பேரையும் நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தி கோவை ஜெயிலில் அடைத்தனர்.

    இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள உக்கடத்தை சேர்ந்த பைசல், குனியமுத்தூரை சேர்ந்த அன்வர் ஆகியோரை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. போலீசார் அவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    கைதான 5 பேரும் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்துள்ளனர். இது தொடர்பாக 5 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க தேசிய புலனாய்வு பிரிவு (என்.ஐ.ஏ.) போலீசார் திட்டமிட்டுள்ளனர். ஏற்கனவே கோவையில் இந்து முன்னணி பிரமுகர் சசிக்குமார் கொலை வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தி வரும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இந்த 5 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்கும்போது கூடுதல் தகவல்கள் வெளியாகும் என கூறப்படுகிறது. #ArjunSampath
    ஐ.எஸ்.பயங்கரவாதிகளுக்கு உதவிய குற்றத்துக்காக அமெரிக்க விமானப்படை அதிகாரிக்கு 25 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.

    வாஷிங்டன்:

    அமெரிக்க விமான படையின் வான்வழி போக்கு வரத்து கட்டுப்பாட்டு அதிகாரியாக பணிபுரிந்தவர் இகாய்கா எரிக் காங் (35).

    இவர் ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் முகாமிட்டிருந்த போது அங்கு பணிபுரிந்தார். அப்போது ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு பல்வேறு வழிகளில் உதவி செய்தார்.

    அதன் பிறகும் அவர் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பில் இருந்தார். அதை அமெரிக்காவின் ‘எப்.பி.ஐ.’ உளவு நிறுவனம் கண்டுபிடித்தது.

    கடந்த ஆண்டில் ஒகுவில் உள்ள ஸ்கோ பீல்டு ராணுவ அலுவலகத்தில் கைது செய்யப்பட்டனார். அவர் மீது ஹவாய் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

    வழக்கை விசாரித்த கோர்ட்டு இவரை குற்றவாளி என அறிவித்து 25 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.

    ஆப்கானிஸ்தானில் 150-க்கும் மேற்பட்ட ஐ.எஸ். பயங்கரவாதிகள், ஆப்கானிஸ்தான் படைகளிடம் சரண் அடைந்தனர். #Afghanistan
    மஷார் இ ஷெரீப்:

    ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு படைகளுக்கும், தலீபான்களுக்கும் இடையே நடந்து வரும் உள்நாட்டுப்போரை பயன்படுத்தி ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பினர் அங்கு கால் பதித்து ஆதிக்கம் செலுத்தத் தொடங்கினர். ஆனால் அவர்களுக்கும் தலீபான்களுக்கும் இடையே மோதல்கள் நடந்து வந்தன.

    குறிப்பாக ஆப்கானிஸ்தானின் வடக்கு மாகாணமான ஜோஸ்ஜான் மாகாணத்தில் இரு தரப்பினருக்கும் இடையே கடும் சண்டை நடந்து வந்தது. இன்னொரு பக்கம் ஆப்கானிஸ்தான் மற்றும் அமெரிக்க படைகளிடம் இருந்தும் ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு அழுத்தம் வந்தது. இந்த நிலையில் அங்கு 150-க்கும் மேற்பட்ட ஐ.எஸ். பயங்கரவாதிகள், ஆப்கானிஸ்தான் படைகளிடம் சரண் அடைந்தனர்.

    இதுபற்றி வட பகுதி ராணுவ தளபதி முகமது ஹனிப் ரெஸாயீ கூறும்போது, “கடந்த காலத்திலும் இப்படி ஐ.எஸ். பயங்கரவாதிகள் சரண் அடைந்தது உண்டு. ஆனால் இந்த முறை அதன் தலைவர்களில் ஒருவரும், துணைத்தலைவரும் 150-க்கும் மேற்பட்டோருடன் சரண் அடைந்து இருப்பது குறிப்பிடத்தக்கது” என்றார்.

    இதன்மூலம் வட பகுதியில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் ஆதிக்கம் முடிவுக்கு வருவதாகவும் அவர் கூறினார்.  #Afghanistan  #tamilnews
    சிரியா நாட்டின் தலைநகர் டமாஸ்கஸ் அருகேயுள்ள கடைசி பதுங்குமிடத்தில் இருந்து ஐ.எஸ். பயங்கரவாதிகள் இன்று வெளியேற்றப்பட்டனர். #IslamicStatefighters #leavingDamascus
    டமாஸ்கஸ்:

    சிரியா நாட்டின் கிழக்கே ஐ.எஸ். பயங்கரவாதிகளின் பிடியில் இருந்த சில பகுதிகளை கைப்பற்ற அந்நாட்டின் அரசுப் படைகள் உச்சகட்ட தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன. அவர்களுக்கு துணையாக அமெரிக்கா மற்றும் ரஷியா நாட்டின் போர் விமானங்களும் வான்வழி தாக்குதலை நடத்துகின்றது.

    யூப்ரட்டஸ் ஆற்றுப்பகுதியில் டெய்ர்-அல்-ஸோர் மாகாணத்தில் உள்ள முக்கிய நகரமான அல்-மயாடின் நகரை ஐ.எஸ். பயங்கரவாதிகள் பிடியில் இருந்து அரசுப் படைகள் கடந்த ஆண்டு மீட்டன. இங்கிருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள அல்-ஓமர் பெட்ரோல் வயலை அமரிக்க படைகள் துணையுடன் சிரியா ராணுவம் கைப்பற்றியது.

    சிரியாவின் மிகப்பெரிய அல்-ஓமர் பெட்ரோல் வயலை அரசுப் படைகள் கைப்பற்றியுள்ளது ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிரான உச்சகட்டப் போரின் முக்கிய திருப்புமுனையாக கருதப்பட்டது.


    இந்நிலையில், தலைநகர் டமாஸ்கஸ் அருகேயுள்ள கடைசி பதுங்குமிடத்தில் இருந்து ஐ.எஸ். பயங்கரவாதிகள் இன்று வெளியேற்றப்பட்டதாக இங்குள்ள மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

    முன்னதாக, மேற்கு சிரியாவில் துருக்கி, ஈராக், ஜோர்டான் நாடுகளை ஒட்டியுள்ள எல்லைப்பகுதிகளில் முகாமிட்டிருந்த ஐ.எஸ். பயங்கரவாதிகள் முற்றிலுமாக வெளியேற்றப்பட்ட நிலையில், பாலஸ்தீனம் நாட்டின் எல்லையை ஒட்டியுள்ள யார்மோர்க் அகதிகள் முகாம் பகுதியில் பதுங்கி இருந்த ஐ.எஸ். பயங்கரவாதிகளும் அவர்களின் குடும்பத்தாரும் ஒரு பேருந்து மூலம் அங்கிருந்து வெளியேற்றப்பட்டதாகவும், அவர்கள் சிரியாவின் கிழக்கு பகுதியில் உள்ள பாடியா நகரை நோக்கி சென்றதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. #IslamicStatefighters  #leavingDamascus 
    ×