என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஐரோப்பிய யூனியன்"
- உக்ரைன் படைகள் முன்னேறுவதைத் தடுக்க ரஷியா தனது ராணுவத்தைக் குவித்து வருகிறது.
- ஐரோப்பாவின் மிகப்பெரிய ஜபோரிஜியா (Zaporizhzhia Nuclear Power Plant) அணுமின் நிலையம் உக்ரைனில் உள்ளது
ஐரோப்பிய யூனியன் மற்றும் அமெரிக்கா அங்கம் வகிக்கும் நேட்டோ கூட்டமைப்பில் இணைய முயன்ற உக்ரைன் நாட்டின் மீது ரஷியா தொடுத்த போர் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. ராணுவ பலம் கொண்ட ரஷியாவின் தாக்குதலைச் சமாளிக்க மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆயுத மற்றும் பொருளாதார உதவிகள் செய்து வருகின்றன. எனினும் இந்த போரில் ரஷியாவின் கைகள் ஓங்கி இருக்கிறது.
உக்ரைன் தலைநகர் கீவ் வரை ரஷிய படைகள் தாக்குதல்களை முன்னெடுத்தன.மேற்குலகின் பொருளாதாரத் தடைகளை மீறி இந்த போரில் ரஷியா அதிதீவிரமாக ஈடுபட்டுள்ளது. மறுபுறம் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி நேட்டோவில் அங்கமாவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக நீடித்து வரும் போரில் முதல் முறையாக உக்ரைன் படைகள் ரஷியாவுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியுள்ளன. ரஷியாவின் கூர்க்ஸ் பிராந்தியத்தில் உக்ரைன் படைகள் சரமாரி தாக்குதல் நடத்தி வருகின்றன. இதனால் அங்கு அவசர நிலை அறிவிக்கப்பட்டு, பாதுகாப்பு நடவடிக்கையாகப் பொதுமக்கள் 76 ஆயிரம் பேர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு உள்ளனர். அதேசமயம் கூர்க்ஸ் பிராந்தியத்தில் உக்ரைன் படைகள் முன்னேறுவதைத் தடுக்க ரஷியா தனது ராணுவத்தைக் குவித்து வருகிறது.
ரஷியாவுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்துவது குறித்து உக்ரைன் முதலில் மவுனம் காத்து வந்த நிலையில் தற்போது அதிபர் ஜெலன்ஸ்கி வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளார். மேலும் ரஷியாவுக்கு எதிரான போரில் இது மிகப்பெரிய வெற்றி என்றும் தெரிவித்திருந்தார். ஆனால் உக்ரைனின் இந்த நடவடிக்கை மேலும் பதற்றத்தை அதிகரிக்கும் என ரஷிய அதிபர் புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதற்கிடையில் உக்ரைனில் ரஷிய ராணுவ வீரர்கள் கைப்பற்றி இருந்த ஐரோப்பாவின் மிகப்பெரிய ஜபோரிஜியா (Zaporizhzhia Nuclear Power Plant) அணுமின் நிலையத்தை அழிக்க திட்டமிட்டு, ரஷிய வீரர்கள் அதற்கு தீ வைத்தனர். இதனால் கரும்புகை எழுந்து அணுவீச்சு தாக்கும் அபாயம் ஏற்பட்டது. இந்த சம்பவத்திற்கு உக்ரைன்தான் ரஷியாவும், ரஷியாதான் காரணம் என்று உக்ரைனும் மாறி மாறி குற்றம் சாட்டி வருகின்றன.
Enerhodar. We have recorded from Nikopol that the Russian occupiers have started a fire on the territory of the Zaporizhzhia Nuclear Power Plant.Currently, radiation levels are within norm. However, as long as the Russian terrorists maintain control over the nuclear plant, the… pic.twitter.com/TQUi3BJg4J
— Volodymyr Zelenskyy / Володимир Зеленський (@ZelenskyyUa) August 11, 2024
- ரஷியா கடந்த 2022-ம் ஆண்டு படையெடுத்தபோது உக்ரைன் விண்ணப்பம் செய்தது.
- பேச்சுவார்த்தை தொடங்கிய போதும், முடிவடைய ஆண்டுகள் பல எடுத்துக் கொள்ளலாம் எனக் கூறப்படுகிறது.
ரஷியா தனது அண்டை நாடான உக்ரைனின் பெரும் பகுதியை பிடித்துக் கொள்ள நினைக்கிறது. கடந்த சில வருடங்களுக்கு முன் கிரிமியாவை தன்னுடன் இணைத்துக் கொண்டது. தற்போது உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
ரஷியாவின் படையெடுப்பில் இருந்து தப்பித்துக் கொள்ள உக்ரைன், தங்களை ஐரோப்பிய யூனியனுடன் சேர்த்துக் கொள்ள கோரிக்கை விடுத்தது. இந்த கோரிக்கை கிடப்பில் போடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் தற்போது உக்ரைனை ஐரோப்பிய யூனியனில் சேர்ப்பதற்கான பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளது. அனால இந்த பேச்சுவார்த்தை முழுமையாக முடிவடைய ஒரு வருடத்திற்கு மேல் எடுத்துக் கொள்ளம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது தொடர்பாக உக்ரைன் பிரதமர் டெனிஸ் ஷ்மையால் "இது வரலாற்று தினம். ஐரோப்பிய யூனியனில் எங்கள் நாட்டின் கூட்டணி "புதிய அத்தியாயம்" எனத் தெரிவித்துள்ளார்.
பெல்ஜியம் (சுழற்சி முறையில் ஐரோப்பிய யூனியனின் தலைவர் பதவியை ஒரு நாடு ஏற்கும்) வெளியுறவுத்துறை மந்திரி ஹட்ஜா லஹ்பிப் "இது எங்கள் அனைவருக்கும் ஒரு வரலாற்று தருணம். மேலும் எங்கள் உறவில் ஒரு மைல்கல்" எனத் தெரிவித்துள்ளார்.
உக்ரைனை தவிர்த்து மால்டோ நாடும் ஐரோப்பிய யூனியனில் இணைய விண்ணப்பித்துள்ளது. துருக்கி இணைவதற்கான பேச்சு வார்த்தை இரண்டு தசாப்தத்திற்கு மேலாக முடிவில்லாம் நீண்டது.
ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்கு இடையில் சரக்கு போக்குவரத்து தங்கு தடையின்றி நடைபெறும். வரிவிதிப்பு, எனர்ஜி, சுற்றுச்சூழல், நீதித்துறை உரிமை, பாதுகாப்பு போன்றவற்றில் ஐரோப்பிய யூனியனின் 35 கொள்கைகளுக்கு ஏற்ப அதில் உள்ள நாடுகள் தங்களுடைய சட்டங்களை கொண்டு வர வேண்டும்.
- உர்சுலா வொன் டென் லெயன் மீண்டும் தலைவராக தேர்ந்தெடுக்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.
- இத்தாலி பிரதமர் மெலோனியின் ஈசிஆர் உர்சுலாவிற்கு ஆதரவு கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐரோப்பிய பாராளுமன்ற தேர்தல் இந்த மாதத்தின் தொடக்கத்தில் நடைபெற்றது. இந்த நிலையில் ஐரோப்பிய யூனியனின் முக்கியமான பதவிக்கு தலைவர்களை தேர்ந்தெடுப்பதற்கான பேச்சுவார்த்தை ஐரோப்பிய தலைவர்களிடம் நடைபெற்று வருகிறது.
தற்போது ஐரோப்பிய யூனியனின் தலைவராக இருக்கும் உர்சுலா வொன் டென் லெயன் மீண்டும் தலைவராக தேர்ந்தெடுக்க வாய்ப்பு உள்ளது. ஆனால் பெல்ஜியம் நாட்டின் தலைநகர் புருசெல்ஸில் நடைபெற்ற முதல்நாள் கூட்டத்தில் அதற்கான ஒப்பந்தம் எட்டப்படவில்லை. இதற்கான பேச்சுவார்த்தை ஒன்றிரண்டு வாரங்கள் எடுத்துக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மாத தொடக்கத்தில் நடைபெற்ற ஐரோப்பிய யூனியன் தேர்தலில் உர்சுலாவின் ஐரோப்பியன் மக்கள் கட்சி தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றுள்ளது. ஐரோப்பிய யூனியனில் உள்ள நாடுகளில் வலதுசாரி கட்சிகள் ஆதிக்கம் செலுத்தியுள்ளன. ஜெர்மனியின் ஏஃப்டி, இத்தாலியின் ஃஎப்டிஎல், பிரான்சின் ஆர்என் கட்சிகள் செயல்பாடுகள் தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்துள்ளன.
இத்தாலி பிரதமர் மெலோனியின் ஈசிஆர் உர்சுலாவிற்கு ஆதரவு கொடுக்கும் என முன்னதாகவே செய்திகள் வெளியானது.
போர்ச்சுக்கலின் ஆண்டனியோ கோஸ்டா ஐரோப்பிய கவுன்சில் தலைவர் பதவியை எதிர்பார்த்துள்ளார்.
மால்டாவின் ராபர்ட்டா மெட்சோலா ஐரோப்பிய பாராளுமன்றத்தின் தலைவர் பதவியை எதிர்பார்த்துள்ளார்.
எஸ்டோனியாவின் கஜா கலலாஸ் வெளியறவுததுறை மற்றும் பாதுகாப்பு கொள்கையின் உயர் பிரதிநிதி பதவியை எதிர்பார்த்துள்ளார்.
- ரஷியா மற்றும் பெலாரஸ் எல்லையில் போலந்து அமைந்துள்ளது.
- மேற்கத்திய நாடுகளின் ஆயுதங்கள் உக்ரைனுக்கு கொண்டு செல்வதற்கான முக்கிய மையமாக திகழ்கிறது.
இரண்டு ஆண்டுகளை தாண்டி உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது. அவ்வப்போது உக்ரைன் மீது ரஷியா ஏவும் ஏவுகணைகள் எல்லையில் உள்ள போலந்து நாட்டின் வான் எல்லைக்குள் செல்வது உண்டு. இதற்கு போலந்து கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
மேலும், எல்லைப் பகுதியில் பாதுகாப்பை வலுப்படுத்தியுள்ளது. ஒருவேளை போலந்து நாட்டின் மீது ரஷியா போர் தொடுத்தால் நேட்டோ அமைப்பில் உள்ள அனைத்து நாடுகளும் ஒன்றாக இணைந்து ரஷியாவுக்கு எதிராக நிற்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். ஆனால், இதற்கான அவசியம் இதுவரை ஏற்படவில்லை.
உக்ரைனுக்கு எதிரான போரில் மேற்கத்திய நாடுகள் தலையிட வேண்டாம் என ரஷியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இந்த நிலையில் போலந்து பாராளுமன்றத்தில் அந்நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரி ரடேக் சிர்கோர்ஸ்கி பேசினார். அப்போது ரஷியா நேட்டோ மீது தாக்குதல் நடத்தினால், அது அவர்களுக்கு தோல்வியில்தான் முடிவடையும். இருந்தபோதிலும் நேட்டோ தனது பாதுகாப்பை இன்னும் அதிரிக்க வேண்டும்.
ஐரோப்பிய யூனியன் திட்டங்களை அமைக்கும் நாடுகளின் குழுவில் மீண்டும் போலந்து இணைய விரும்புகிறது எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், போலந்தின் வளர்ச்சியும் பாதுகாப்பும் அட்லாண்டிக் கடல்கடந்த ஒத்துழைப்பு மற்றும் ஐரோப்பிய ஒருங்கிணைப்பு ஆகிய இரண்டின் அடிப்படையிலும் இருக்க வேண்டும். போலந்து உலகளாவிய சவால்களுக்கு பொறுப்பேற்க தயாராக உள்ளது. ஜெர்மனி உடனான நட்பு முக்கியமானது என்றார்.
நேட்டோ அமைப்பில் உள்ள போலந்து ரஷியா, பெலாரஸ் எல்லைகளை பகிர்ந்துள்ளது. மேலும், உக்ரைன் எல்லையையும் பகிர்ந்துள்ளது. மேற்கத்திய நாடுகளில் ஆயுதங்கள் உக்ரைனுக்கு செல்ல முக்கிய புள்ளியமாக அமைந்துள்ளது.
- உக்ரைன் மீது கடுமையான தாக்குதலை நடத்தியது.
- உக்ரைன் ஆரம்பத்தில் இருந்தே பதிலடி கொடுக்க துவங்கியது.
உக்ரைன் மீது ரஷியா போரை துவங்கி இரண்டு ஆண்டுகள் நிறைவுற்றது. ரஷியாவின் சிறப்பு ராணுவ நடவடிக்கை என துவங்கி, பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் கொடுமையான போராக இது மாறி இருக்கிறது. ரஷியா மற்றும் உக்ரைன் இடையிலான போர் காரணமாக அங்குள்ள மக்கள் கடுமையான பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
ரஷிய - உக்ரைன் போர் தற்போதைக்கு முடிவுக்கு வருமா என்பது கேள்விக்குறியாக உள்ள நிலையில், ரஷியா மீது ஐரோப்பிய யூனியன் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இவை ரஷியாவுக்கு புதிய தலைவலியாக மாறியுள்ளன. அந்த வகையில், ரஷியா - உக்ரைன் போர் குறித்து நீங்கள் அறிந்து கொள்ள வேண்டியவை குறித்து தொடர்ந்து பார்ப்போம்..
பிப்ரவரி 24, 2022-ம் ஆண்டு அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவை தொடர்ந்து ரஷிய படைகள் உக்ரைன் மீது கடுமையான தாக்குதலை நடத்தியது. ஆரம்பக் கட்டத்தில் கீவ், கார்கீவ் மற்றும் ஒடீசா என முக்கிய நகரங்களை குறிவைத்து ரஷிய தாக்குதலை தீவிரப்படுத்தியது.
ரஷிய தாக்குதலை எதிர்கொண்ட உக்ரைன், ஆரம்பத்தில் இருந்தே பதிலடி கொடுக்க துவங்கியது. போர் துவங்கிய சில வாரங்களில் கடுமையான தாக்குதல்கள் நடத்தப்பட்டன. ரஷியா தொடர்ந்து வெடிகுண்டுகளை வீசியும், வான்வழி தாக்குதல்களையும் நடத்தியது. இதில் பெரும் பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகள் ஏற்பட்டன.
தற்போது ரஷியா உக்ரைன் போர் இரண்டு ஆண்டுகளை தொடர்ந்து நீடிக்கும் நிலையில், அமெரிக்கா ரஷியா மீது இதுவரை இல்லாத அளவுக்கு அதிகளவு கட்டுப்பாடுகளை விதித்து இருக்கிறது. போர் துவங்கியதில் இருந்து ஒரே நாளில் ரஷியாவுக்கு எதிராக அமெரிக்க அதிக கட்டுப்பாடுகளை விதித்து இருப்பது இதுவே முதல் முறை ஆகும்.
புதிய கட்டுப்பாடுகள் ரஷிய ராணுவம் மற்றும் அவர்களின் போர் முயற்சிகளை முடிந்தவரையில் குறைக்க செய்யும் வகையில் உள்ளது. அமெரிக்கா தவிர ஐரோப்பிய யூனியன் சார்பில் ரஷியாவுக்கு எதிராக 13-வது முறையாக புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. இவை ரஷியாவை மேலும் தனிமைப்படுத்தும் வைகயில் அமைந்துள்ளன.
ஐரோப்பிய யூனியனின் கட்டுப்பாடுகளுக்கு எதிராக, ரஷியா சார்பில் ஐரோப்பிய யூனியன் அதிகாரிகளுக்கு எதிராக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
"ரஷியாவின் போர் நடவடிக்கைகளை குறைக்கும் வகையிலும், சண்டையிடுவதை மேலும் கடுமையாக்கும் வகையிலும் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன," என்று அமெரிக்க அதிகாரியான வேலி அடிமோ தெரிவித்துள்ளார்.
ரஷியாவில் செயல்பட்டு வரும் 500 நிறுவனங்களுக்கு எதிராக அமெரிக்காவின் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலானவை ரஷியாவின் ராணுவ துறையை சேர்ந்தவை ஆகும்.
இந்த போர் காரணமாக உக்ரைனின் பொருளாதாரம் வரலாறு காணாத வகையில் வீழ்ச்சி அடைந்துள்ளது. முதல் ஆண்டிலேயே அந்நாட்டின் பொருளாதாரம் 30 முதல் 35 சதவீதம் வரை சரிந்துள்ளது. உக்ரைன் மட்டுமின்றி அதனை சுற்றியுள்ள நாடுகளிலும் பொருளாதாரம் பாதிப்படைய செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
- ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால் பாதுகாப்பு பணியில் ஈடுபட முடிவு.
- ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல் தடுத்து முறியடிக்கப்படும். பதிலடி கொடுக்கப்படாது.
மத்திய கிழக்குப் பகுதியில் உள்ள செங்கடல் உலக வணிக பயணத்திற்கு முக்கியமானதாக இருந்து வருகிறது. சர்வதேச கடல் போக்குவரத்திற்கு முக்கியமானதாக கருதப்படும் செங்கடலில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இதுவரை இல்லாத அளவிற்கு தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
ஹமாஸ் அமைப்பினரை குறிவைத்து காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இதுபோன்ற தாக்குதலை நடத்தி வருகிறது.
இந்த தாக்குதலை முறியடிக்க அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஒன்றாக இணைந்து செங்கடலில் ரோந்து போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. இருந்த போதிலும் கடந்த வாரம் ஏடன் வளைகுடாவில் அமெரிக்காவின் போர்க்கப்பலை தாக்க முயன்றனர். இங்கிலாந்து கப்பல் மீதும் தாக்குதல் நடத்தினர். இதற்கு அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து இணைந்து ராணுவ நடவடிக்கை மேற்கொண்டது.
இந்த நிலையில் ஐரோப்பிய யூனியன் செங்கடலில் கடற்படை நடவடிக்கைகளை மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளது. ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல் காரணமாக உலகளாவிய அளவில் பொருட்களின் விலை உயர்வு அபாயம் ஏற்பட்டுள்ளதால் இந்த நடவடிக்கையை மேற்கொள்ள இருக்கிறது.
பிப்ரவரி 17-ந்தேதிக்குள் இந்த திட்டம் மேற்கொள்ளப்படும் என ஐரோப்பிய யூனியனின் வெளியுறவுத்துறை கொள்கை தலைவர் ஜோசப் பொர்ரேல் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய நாடுகளில் உளள ஏழு நாடகள் கப்பல்கள் மற்றும் விமானங்களை வழங்க தயாராக உள்ளன. பெல்ஜியம் ஏற்கனவே போர்க்கப்பல்களை அனுப்ப முடிவு செய்துள்ளது. ஜெர்மனியும் போர்க்கப்பல்களை அனுப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாதுகாப்பு பணியில் ஈடுபடும் நிலையில் ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ளமாட்டோம் என ஐரோப்பிய யூனியன் தெரிவித்துள்ளது.
ஐரோப்பிய யூனியனில் இருந்து விலக பிரிட்டன் பாராளுமன்றம் எடுத்த முடிவு தொடர்பாக கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்றபொது வாக்கெடுப்பில் விலகும் தீர்மானத்தை ஆதரித்து அதிகம் பேர் வாக்களித்தனர்.
வெளியேற்றத்துக்கு பின்னர் ஐரோப்பிய யூனியனில் உள்ள நாடுகளுக்கும் பிரிட்டனுக்கும் இடையினான எதிர்கால நிதி பரிமாற்றம், பாதுகாப்பு, விசா மற்றும் குடியேற்றக் கொள்கை உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. மேலும், இனி செயல்பாட்டுக்கு வரும் பிரிட்டன் அரசின் கொள்கை முடிவுகள் தொடர்பாகவும் தனியாக ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், 585 பக்கங்களை கொண்ட பிரெக்சிட் உடன்படிக்கையை ஐரோப்பிய யூனியனும் பிரிட்டன் அரசும் இன்று கூட்டாக வெளியிட்டுள்ளன.
லண்டன் பாராளுமன்றமும் ஐரோப்பிய யூனியன் நாடுகளை சேர்ந்த தலைவர்களும் ஒப்புதல் அளித்த பின்னர் இந்த உடன்படிக்கையில் உள்ள அம்சங்கள் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. #EUBrexitdeal #Brexitdeal
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்