search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கடைமடை தடுப்பணை"

    முத்துப்பேட்டை ஒன்றியம் கடைமடை பகுதியில் உள்ள தடுப்பணைகளில் தண்ணீர் செல்வதை பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் பிரபாகர் ஆய்வு செய்தார்.
    முத்துப்பேட்டை:

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட கடைமடை பகுதியான தம்பிக்கோட்டை, கீழக்காடு, தொப்பதானவெளி, பகுதியில் உள்ள பாமணியாற்று தடுப்பணை மற்றும் ஜாம்புவானோடை கோரையாற்று தடுப்பணை ஆகியவற்றில் தண்ணீர் செல்வதை பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் பிரபாகர் ஆய்வு செய்தார்.

    மேலும் விவசாயிகள், அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார். இதில் சேமித்து வைக்கப்பட்டுள்ள தண்ணீர் கடலில் வீணாகாமல் இருக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும் ஆலோசனை வழங்கினார்.

    மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது. முன்னதாக ஆறு, வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகளை கணிப்பாய்வு செய்ய இம்மாவட்டத்திற்கு இரண்டு அதிகாரிகள் நியமிக்கபட்டு அவர்களுடன் மாவட்ட கலெக்டர் இணைந்து ஆறு, வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    தற்போது மாவட்டத்தின் கடைமடை பகுதிக்கு பாசனத்திற்காக திறந்துவிடப்பட்ட தண்ணீர் சென்றுள்ளது. ஆறு, வாய்க்கால்களில் கரையோரங்களில் கசிவு ஏற்படாத வகையில் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. விவசாயிகளின் தேவைக்கு ஏற்ப பாசன நீரை பகிர்ந்து அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் சக்திமணி, தலைமை பொறியாளர் (கீழ் காவிரி வட்டம்) ரவிச்சந்திரன், வெண்ணாறு வடிநில கோட்டம் செயற்பொறியாளர் திருவேட்டைசெல்வன், உதவி செயற்பொறியாளர் சங்கர், இளம் பொறியாளர் கினிகண்ணன், திருத்துறைப்பூண்டி தாசில்தார் மகேஷ்வரன் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.
    ×