என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கட்டாய திருமணம்"
பேரையூர்:
மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள சிந்துப்பட்டி போலீஸ் சரகத்திற்குட்பட்ட தேவன் பட்டியைச் சேர்ந்த 17 வயது பெண் கப்பலூரில் உள்ள மில்லில் வேலை பார்த்து வந்தார்.
அங்கு உசிலம்பட்டி அருகே உள்ள பொட்டல்பட்டியைச் சேர்ந்த தனுஷ்கோடி மகன் சின்னசாமி (வயது 34) என்பவரும் வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் சின்னசாமிக்கும், கட்டதேவன் பட்டியைச் சேர்ந்த 17 வயது பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது. அவர்கள் திடீரென மாயமாகி விட்டனர்.
இது குறித்த புகாரின் பேரில் சிந்துப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் மாயமான இளம்பெண், திருமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் வந்து ஒரு புகார் கொடுத்தார்.
அதில், சின்னச்சாமி கோவைக்கு அழைத்துச் சென்று மருதமலையில் திருமணம் செய்து கொண்டார். பின்னர் உறவு வைத்ததாகவும், அதன் பின்னர் மீண்டும் திருமங்கலம் அழைத்து வந்து விட்டுச் சென்றதாகவும் குறிப்பிட்டு இருந்தார்.
இதுகுறித்து திருமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பானுமதி விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தின் கீழ் சின்ன சாமியை கைது செய்தார்.
மதுரை:
மதுரை மாவட்டத்தில் குழந்தை திருமணத்தை தடுக்க கலெக்டர் அறிவுறுத்தலின் பேரில் அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் விழிப்புணர்வு பிரசாரமும் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் திருப்பரங்குன்றத்தில் உள்ள திருமண மண்டபத்தில் 17 வயது மைனர் பெண்ணுக்கு கட்டாய திருமணம் செய்து வைக்கப்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட குழந்தைகள் நல அதிகாரி ராஜேஸ்வரி சம்பவ இடத்திற்கு சென்று மைனர் பெண்ணை மீட்டார். தொடர்ந்து அவர் திருப்பரங்குன்றம் போலீசில் புகார் செய்தார்.
இதனடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மைனர் பெண்ணை திருமணம் செய்த கார்த்திக், அவரது தாயார் புஷ்பலதா, உறவினர் நவநீதகிருஷ்ணன், மைனர் பெண்ணின் பெற்றோர் முத்து புதியவன்-சுப்பு லட்சுமி, திருமண மண்டப உரிமையாளர் உத்திரபாண்டி ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
பீகார் மாநிலம் பிடாபூர் மாவட்டம் வைசாலி பகுதியை சேர்ந்தவர் சரண்.
என்ஜினீயரான இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த பிரியங்கா குமாரிக்கும் இடையே காதல் ஏற்பட்டது. கடந்த 1 வருடமாக காதலித்து வந்தனர்.
இருவருக்கும் திருமணம் பேசி முடிக்கப்பட்டது. ஆனால் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரியங்கா குமாரியை திருமணம் செய்ய சரண் மறுத்து விட்டார்.
இதனால் ஆத்திரம் அடைந்த பிரியங்காவின் குடும்பத்தினர் கட்டாயப்படுத்தி திருமணம் செய்வதற்காக சரணை கடத்தினர். சரணும், அவரது நண்பர் சவுரவ்சும் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டு இருந்தனர். அப்போது பிரியங்காவின் உறவினர் துப்பாக்கி முனையில் அவரை காரில் கடத்தி சென்றனர். 12 முதல் 15 பேர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டனர்.
சரண் கடத்தப்பட்ட சம்பவம் குறித்து அவரது தாயார் வீனா தேவி போலீசில் புகார் செய்தார்.
போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி சரணை மீட்டனர். கடத்தல் தொடர்பாக பிரியங்கா தந்தை அரவிந்த்ராய் உள்பட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்