என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கட்டுமான பணி"
செய்யாறு:
செய்யாறு அடுத்த தேத்துரை பகுதியில் தனியார் கனிமவள நிறுவனம் தொடங்கப்பட்டு உள்ளது. இதன் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது.
இந்த நிறுவனத்தின் கட்டுமான பணிக்காக ஒடிசா மாநிலத்தை சேர்ந்த 12 பேர் வேலை செய்து வந்தன். இந்த நிலையில் நேற்று கட்டுமான பணிக்கு கம்பிகளை எடுத்து செல்லும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ருசியா மகன் நிராக்கர் (22), காஞ்சிபுரம் அச்சுவாத் மகன் டோலா மணி (23) ஆகியோர் கம்பிகளை எடுத்து சென்றனர்.
அப்போது எதிர்பாராத விதமாக மின்சார ஒயரில் கம்பி உரசியதில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர்.
இவர்களது அலறல் சத்தம் கேட்டு சக தொழிலாளர்கள் 2 பேரையும் மீட்டு உத்திரமேரூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நிராக்கர் பரிதாபமாக இறந்தார். டோலாமணி சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து சப்-இன்ஸ்பெக்டர் ராஜ் ஜெயக்குமார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
நாடாளுமன்ற மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, மத்திய சுற்றுச்சூழல் துறை இணை மந்திரி மகேஷ் சர்மா ஒரு கேள்விக்கு எழுத்து மூலம் பதில் அளித்தார். அதில் அவர் கூறியதாவது:-
மேற்கு தொடர்ச்சி மலை 1,500 கி.மீ. நீளம் கொண்டது. அதில், 56 ஆயிரத்து 825 சதுர கி.மீ. பரப்பளவு பகுதி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த மண்டலம், கோவா, குஜராத், கர்நாடகா, கேரளா, மராட்டியம், தமிழ்நாடு ஆகிய 6 மாநிலங்களில் அமைந்துள்ளது.
பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுப்படி, 4-வது முறையாக இதுதொடர்பான வரைவு அறிக்கையை வெளியிட்டுள்ளோம். சுற்றுச்சூழல் பாதுகாப்பு மண்டல பரப்பை 50 ஆயிரம் சதுர கி.மீட்டராக குறைக்கும் திட்டம், மத்திய அரசுக்கு இல்லை.
இந்த மண்டல பகுதியில் வசிக்கும் உள்ளூர் மக்களை வேறு இடங்களுக்கு அப்புறப்படுத்தும் திட்டமும் இல்லை. அங்கு விவசாயம் மற்றும் தோட்டத்தொழில் தங்குதடையின்றி நடைபெறும்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு மண்டல பகுதியில், 5 வகையான புதிய மற்றும் விரிவாக்க திட்டங்களுக்கு தடை விதிக்குமாறு தமிழ்நாடு உள்பட 6 மாநிலங்களுக்கு உத்தரவிட்டு உள்ளோம்.
சுரங்க திட்டம், குவாரி, மணல் குவாரி, அனல் மின் திட்டம், 20 ஆயிரம் சதுர மீட்டருக்கு மேற்பட்ட கட்டுமான திட்டங்கள் ஆகியவற்றை அனுமதிக்க வேண்டாம் என்று கூறியுள்ளோம்.
இவ்வாறு மகேஷ் சர்மா கூறியுள்ளார்.
இந்தியாவின் வடகிழக்கில் உள்ள சிக்கிம் மாநில எல்லையில், இந்தியா-சீனா-பூடான் நாடுகள் சந்திக்கும் பகுதியில் டோக்லாம் எனப்படும் பீடபூமி பகுதி உள்ளது. பூடானுக்கு சொந்தமான அந்த பகுதியை சீனா உரிமை கோரி வருவதுடன், கடந்த ஆண்டு அங்கு சாலை அமைக்கும் பணிகளையும் மேற்கொண்டது.
இந்த சாலையால் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் எனக்கருதப்படுவதால், அந்த பணிகளை இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தினர். இதைத்தொடர்ந்து சர்ச்சைக்குரிய அந்த பகுதியில் சீனா தனது படைகளை குவித்தது. இதற்கு பதிலடியாக இந்தியாவும் அங்கு படைகளை அனுப்பி வைத்தது. இதனால் சிக்கிம் எல்லையில் போர் பதற்றம் நிலவியது.
இந்த இழுபறி சுமார் 73 நாட்கள் நீடித்தநிலையில், இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தி அங்கு பதற்றத்தை முடிவுக்கு கொண்டு வந்தன. பின்னர் இரு நாடுகளும் தங்கள் படைகளை கடந்த ஆகஸ்டு 28-ந் தேதி வாபஸ் பெற்றன. இதனால் அங்கு அமைதி சூழல் ஏற்பட்டது.
இந்த கட்டுமானப்பணிகளை சீனா மீண்டும் தொடங்கி இருப்பதாக தற்போது தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. டோக்லாமில் இருந்து சீனாவின் யாதுங் ராணுவ தளத்துக்கு 12 கி.மீ. தொலைவில் இந்த சாலை அமைக்கப்படுவதாகவும், இந்த பணிகள் கடந்த மார்ச் 23-ந் தேதி மீண்டும் தொடங்கியதாகவும் கூறப்படுகிறது.
இதற்காக 10 கட்டுமான வாகனங்கள், 30 கனரக வாகனங்கள் அங்கே பணியில் ஈடுபட்டு உள்ளன. இந்த பணியாளர்கள் மற்றும் ராணுவ வீரர்களுக்காக 90 கூடாரங்களும், 5 தற்காலிக கொட்டகைகளும் அமைக்கப்பட்டு உள்ளன. இந்திய செயற்கைக்கோள்களின் பார்வையில் இருந்து கட்டுமான பணிகளை மறைப்பதற்காக இந்த கொட்டகைகள் அமைக்கப்பட்டதாக தெரிகிறது.
இந்த சாலை மட்டுமின்றி டோக்லாம் அருகே மிகப்பெரிய ராணுவ குடியிருப்பு ஒன்றையும் சீனா கட்டுவதாக கடந்த ஜனவரி மாதம் தகவல்கள் வெளியாகி இருந்தன. இதன் மூலம் டோக்லாம் தொடர்பாக மற்றொரு மோதலுக்கு சீனா தயாராகி வருவதாகவும் அந்த செய்திகள் கூறியிருந்தன.
சீனாவின் சாலை கட்டுமானப்பணிகள் குறித்து சமீபத்தில் தகவல் வெளியிட்ட அமெரிக்க பெண் எம்.பி. ஆன் வாக்னர், இந்த விவகாரத்தில் இந்தியாவோ, பூடானோ எந்த எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை எனக்கூறினார். தென் சீனக்கடல் பகுதி முழுவதையும் உரிமை கொண்டாடுவது போல, இமயமலை பகுதியையும் சீனா உரிமை கொண்டாடுவதாக அவர் குறிப்பிட்டார்.
ஆனால் இந்த தகவல்களை மத்திய அரசு மறுத்துள்ளது. டோக்லாமில் சீனா கட்டுமானப்பணிகளை மீண்டும் தொடங்கியிருப்பதாக வெளியான தகவல்களை குறைகூறிய வெளியுறவு இணை மந்திரி வி.கே.சிங், அங்கு எந்த பணிகளும் நடைபெறவில்லை என்றும், கடந்த ஆகஸ்டு 28-ந் தேதி ஏற்படுத்தப்பட்ட நிலைமை தொடர்ந்து பராமரிக்கப்பட்டு வருவதாகவும் மாநிலங்களவையில் அளித்த பதிலில் கூறினார். #China #Doklam #tamilnews
தமிழக முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா கடந்த 2014-ம் ஆண்டு சட்டசபையில் விதி எண் 110-ன் கீழ் கரூரில் அரசு மருத்துவக்கல்லூரி அமைக்கப்படும் என்று அறிவித்தார். அதன்படி கரூர் காந்தி கிராமம் பகுதியில் ரூ.268 கோடி மதிப்பில் அரசு மருத்துவக்கல்லூரியின் கட்டுமான பணிகள் தற்போது நடந்து வருகிறது. இந்த பணிகளை பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் மாவட்ட கலெக்டர் அன்பழகனுடன் சென்று நேற்று ஆய்வு செய்தனர். அப்போது மருத்துவக்கல்லூரி கட்டிட வரைபடத்தை பார்வையிட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உரிய ஆலோசனைகள் வழங்கினர். தற்போது கட்டிடத்திற்கு அஸ்திவாரம் போடப்பட்டு கம்பிகள் கட்டும் பணிகள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
கரூர் அரசு மருத்துவக் கல்லூரி கட்டுமான பணிகுறித்து பாராளுமன்ற துணை சபாநாயகர் மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஆகியோர் கூறியதாவது:-
கரூரில் 800 படுக்கைகள் கொண்ட 150 மாணவ- மாணவிகள் பயிலக்கூடிய மருத்துவக்கல்லூரி கட்டுவதற்காக கடந்த மார்ச் மாதம் 1-ந் தேதி அன்று பணிகள் தொடங்கப்பட்டு விரைந்து நடைபெற்று வருகிறது. இப்பணிகள் அடுத்த ஆண்டு (2019) மார்ச் மாதத்திற்குள் முடித்திட ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
ரூ.60 கோடியே 23 லட்சம் மதிப்பில் 3 லட்சத்து 20 ஆயிரம் சதுரஅடி பரப்பில் வகுப்பறை கட்டிடங்களும், ரூ.145 கோடியே 94 லட்சம் மதிப்பில் மருத்துவமனை கட்டிடங்களும், ரூ.61 கோடியே 83 லட்சம் மதிப்பில் மாணவ- மாணவிகள் தங்கும் விடுதிகளும் என ரூ.268 கோடி மதிப்பில் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த மருத்துவக்கல்லூரி நகரின் மையப்பகுதியான காந்திகிராமத்தில் 17.45 ஏக்கர் நிலப்பரப்பில் நடைபெற்று வருகிறது. இக்கட்டுமான பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு அடுத்த ஆண்டு மாணவர் சேர்க்கை நடைபெறும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இந்த ஆய்வின் போது கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ. கீதா, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் ரோஸிவெண்ணிலா, மருத்துவ கட்டிடங்கள் செயற்பொறியாளர் மாதய்யன், உதவி செயற்பொறியாளர்கள் தவமணி, சிவக்குமார், மஹாவிஷ்ணு மற்றும் அ.தி.மு.க. மாவட்ட அவை தலைவர் ஏ.ஆர்.காளியப்பன், மாவட்ட துணை செயலாளர் பி.சிவசாமி, நகர செயலாளர் நெடுஞ்செழியன், மாவட்ட இளைஞரணி செயலாளர் வி.சி.கே.ஜெயராஜ், நகர ஜெயலலிதா பேரவை செயலாளர் வி.செல்வராஜ், முன்னாள் மாவட்ட மாணவரணி செயலாளர் என்.தாணேஷ், தொழிற்சங்க செயலாளர் பொரணி கணேசன், கரூர் நகர வங்கி தலைவர் ரேணுகா மோகன்ராஜ் உள்பட பலர் உடன் இருந்தனர்.
முன்னதாக கரூர் நகராட்சி வார்டு எண் 39 மற்றும் 48-க்கு உட்பட்ட தாந்தோன்றிமலை உள்ளிட்ட பகுதிகளில் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் பொதுமக்களிடம் கோரிக்கை மனு பெறும் முகாமில் கலந்து கொண்டனர். அப்போது அந்த பகுதி மக்கள் அடிப்படை வசதிகள் மற்றும் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை நேரடியாக கொடுத்து முறையிட்டனர். இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமை தாங்கினார்.
நிகழ்ச்சியில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேசுகையில், தாந்தோன்றிமலை உள்ளிட்ட பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும். 39-வது வார்டில் குடிநீர், சாலை, கழிவுநீர் வடிகால் உள்ளிட்ட அத்தியாவசிய பணிகள் ரூ.2 கோடியில் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார். இந்த முகாமில் நகராட்சி ஆணையர் அசோக்குமார், வருவாய் கோட்டாட்சியர் சரவணமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்