என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கம்யூனிஸ்ட் சாலை மறியல்"
திருச்சி:
பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் இன்று காங்கிரஸ் கட்சி சார்பில் முழுஅடைப்பு போராட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் காங்கிரஸ் கட் சியின் போராட்டத்திற்கு தி.மு.க. மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகள் ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டன.
இந்த நிலையில் திருச்சியில் இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ராஜா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் இந்தி ரஜித் ஆகியோர் தலைமையில், இந்திய கம்யூனிஸ்டு கட்சி யின் மாநகர் மாவட்ட செயலாளர் திராவிடமணி, சி.பி.ஐ. எம்.எல். மாவட்ட செயலாளர் தேசிகன், ஸ்ரீதர், சுரேஷ் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் திருச்சி மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதற்காக திரண்டு சென்றனர்.
திருச்சி மரக்கடை அருகே செல்லும் போது அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அனைவரையும் தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசாருக்கும், கம்யூனிஸ்டு கட்சியினருக்கும் இடையே தள்ளு முள்ளு, வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையடுத்து அங்கு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் மறியலை கைவிட மறுத்து விட்டனர். இதைத் தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட 20 பெண்கள் உள்பட 200 பேரை கைது செய்தனர். இதில் சிலரை போலீசார் குண்டுகட்டாக தூக்கி சென்று போலீஸ் வேனில் ஏற்றினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து மணப்பாறை, வையம்பட்டி, துவரங் குறிச்சி ஆகிய பகுதிகளில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டன. மணப்பாறை டவுன் பகுதியில் 90 சதவீத கடைகள் அடைக்கப்பட்டன.
தமிழர் தேசிய முன்னணி மாவட்ட அமைப்பாளர் உலக நாதன் மோட்டார் சைக்கிளை ரிக்ஷாவில் ஏற்றி, அதற்கு மாலை அணிவித்து கோவில்பட்டி சாலையில் உள்ள காமராஜர் சிலையில் இருந்து மணப்பாறை பஸ் நிலையம் வரை ஊர்வலமாக சென்றார். அப்போது பெட் ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கோஷமிட்டார். அசம்பாவிதங்களை தவிர்க்க மணப்பாறை டி.எஸ்.பி. ஆசைத்தம்பி தலைமையில் போலீசார் பாது காப்பு பணியில் ஈடுபட்டனர்.
திருச்சி திருவெறும்பூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் நட ராஜன் தலைமையில் ஆட் டோவை கயிற்றால் கட்டி இழுத்து, பேரணியாக சென்று திருவெறும்பூர் பஸ் நிலையம் அருகே சாலை மறியல் செய்தனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனே திருவெறும்பூர் போலீசார் சாலை மறியல் செய்த 100-க்கும் மேற்பட்டவர்களை கைது செய்தனர்.
இதேபோல் கொள்ளிடத் தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒன்றிய செயலாளர் ஜெயசீலன் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதைப்போல் புத்தாநத்தத்தில் இந்திய கம்யூனிஸ்ட் ஒன்றிய செயலாளர் மன்சூர் தலைமையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் அந்தந்த பகுதி போலீசார் கைது செய்தனர். இதில் மொத்தம் 175 பேர் கைது செய்யப்பட்டனர்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மணப்பாறையில் இந்திய கம்யூனிஸ்டு நகர செயலாளர் உசேன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வட்ட செயலாளர் ராஜகோபால் ஆகியோர் தலைமையில் இரு கம்யூனிஸ்டு கட்சியினர் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கோவில்பட்டி சாலையில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டனர். அவர்கள் பஸ் நிலையத்தை சுற்றி ரெயில் நிலையம் நோக்கி திரண்டு வந்தனர். அப்போது அவர்களை மணப்பாறை துணை போலீஸ் சூப்பிரண்டு ஆசைத் தம்பி தலைமையிலான போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். #BharathBandh #PetrolDieselPriceHike
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்