search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கருணாநிதிக்கு உடல் நலக்குறைவு"

    கருணாநிதிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ள அதிர்ச்சியில் ஓய்வு பெற்ற ஆசிரியர் மற்றும் தி.மு.க. பிரமுகர் மாரடைப்பால் இறந்தனர். #KarunanidhiHealth
    கந்தர்வக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அருகே உள்ள கல்லுக்காரன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கணேசன் (வயது 80). நாதஸ்வர கலைஞரான இவர், தி.மு.க. கிளைச்செயலாளராகவும் இருந்து வந்தார்.

    இந்த நிலையில் தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அதிர்ச்சி அடைந்த கணேசன் மிகுந்த மனவேதனையில் இருந்து வந்தார்.

    நேற்று முன்தினம் இரவு, டி.வி.யில் கருணாநிதி உடல்நிலை பற்றி ஒளிபரப்பான செய்திகளை பார்த்து கொண்டு இருந்த கணேசனுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உடனே அவரது உறவினர்கள் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    மற்றொரு சம்பவம்...

    இதே போல் பெரம்பலூர் மாவட்டம், லாடபுரம் கிராமம் 7-வது வார்டை சேர்ந்தவர் நல்லுசாமி (60). ஓய்வுபெற்ற ஆசிரியரான இவர் தி.மு.க. தொண்டரும் ஆவார்.

    இவரும் நேற்று முன்தினம் இரவு கருணாநிதிக்கு உடல் நலக்குறைவு பற்றிய செய்தியை டி.வி.யில் பார்த்து கொண்டிருந்தபோது, திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார். மரணமடைந்த 2 பேரின் உடலுக்கும் தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.  #KarunanidhiHealth



    கருணாநிதி உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சென்னையில் தி.மு.க. தொண்டர் தற்கொலை செய்து கொண்டார். அதிர்ச்சியில் மேலும் 3 பேர் இறந்தனர். #KarunanidhiHealth
    திருவொற்றியூர்:

    சென்னை எண்ணூர் அன்னை சிவகாமி நகரை சேர்ந்தவர் ராஜு (வயது 63). எண்ணூர் அனல் மின் நிலையத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தி.மு.க. தீவிர தொண்டரான இவர், திருவொற்றியூர் வட்ட செயலாளராக 3 முறை பதவி வகித்தவர். எண்ணூர் அனல் மின் நிலையத்தில் தொழிலாளர் முன்னேற்ற சங்க செயலாளராகவும் இருந்தார்.

    தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் ராஜு மனம் உடைந்தார். இதனால் அவர், கடந்த 2 நாட்களாக சரியாக சாப்பிடாமல் இருந்தார்.

    இந்நிலையில் நேற்று காலை வீட்டில் யாரும் இல்லாதநேரத்தில் ராஜு வீட்டில் தூக்குப்போட்டுக்கொண்டார். வெளியே சென்று இருந்த அவருடைய மனைவி வீட்டுக்கு வந்தபோது, தனது கணவர் தூக்கில் தொங்குவதை கண்டு அலறினார். பின்னர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், ராஜு ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுபற்றி எண்ணூர் போலீசார் விசாரித்தனர். முதல்கட்ட விசாரணையில், கருணாநிதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் மனம் உடைந்த ராஜு, தூக்குப்போட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது.

    நாமக்கல் மாவட்டம், ஒடுவன்குறிச்சியை சேர்ந்தவர் சிவசண்முகம் (64). தி.மு.க. தொண்டர். கருணாநிதிக்கு உடல்நிலை சரியில்லை என்ற தகவலால் சிவசண்முகம் அதிர்ச்சி அடைந்தார். இதனால் சோகத்துடன் காணப்பட்ட அவர் மயங்கி விழுந்தார்.

    இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் டாக்டரை வரவழைத்து பரிசோதித்தனர். அவரை பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே சிவசண்முகம் இறந்து விட்டதாக தெரிவித்தார்.

    திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பகுதியை சேர்ந்தவர் சபரிகிரிநாதன் (54). நீண்ட காலமாக தி.மு.க. தொண்டராக இருந்து வந்த சபரிகிரிநாதன், பாப்பான்குளம் 5-வது வார்டு துணை செயலாளராக பொறுப்பு வகித்தார். கருணாநிதிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது என்ற தகவலை அறிந்த அவர் அதிர்ச்சியில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

    கோவை மாவட்டம் குள்ளக்காபாளையத்தை சேர்ந்தவர் அம்சகுமார் (65). குள்ளக்காபாளையம் ஊராட்சியின் 4-வது வார்டு தி.மு.க. அவைத்தலைவராக இருந்தார். கருணாநிதிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அதிர்ச்சி அடைந்த அவர் வேதனையில் கடந்த 2 நாட்களாக சரிவர சாப்பிடாமலும், வீட்டை விட்டு வெளியே செல்லாமல் முடங்கி கிடந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார்.  #KarunanidhiHealth
    ×