search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கல் சிலை"

    சேலம் மாவட்டம் செம்மாண்ட பட்டியில் சாக்கடை வசதிக்காக ஜே.சி.பி எந்திரம் மூலம் குழிதோண்டும் போது, 100 ஆண்டுகள் பழமையான கல்லால் செதுக்கப்பட்ட 4 அடி பெருமாள் சிலை கண்டு எடுக்கப்பட்டது.
    சேலம்:

    சேலம் மாவட்டம், காடையாம் பட்டியை அடுத்த செம்மாண்ட பட்டியில் இரு தினங்களாக சாலை விரிவாக்க பணி மற்றும் சாக்கடை வசதிக்காக குழிதோண்டும் பணி நடந்து வருகிறது.

    இந்நிலையில் சாக்கடை வசதிக்காக ஜே.சி.பி எந்திரம் மூலம் குழிதோண்டும் போது, 100 ஆண்டுகள் பழமையான கல்லால் செதுக்கப்பட்ட 4 அடி பெருமாள் சிலை கண்டு எடுக்கப்பட்டது. இதையடுத்து அப்பகுதி மக்கள் அந்த கல் சிலைக்கு மஞ்சள் மற்றும் பாலால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து வழிபட்டு வருகின்றனர்.

    மேலும் இங்கு சிலைகள் இருப்பதாகவும் அதையும் கண்டு எடுக்க வேண்டும் என சாமியாடியபடி கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

    ×