search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காஞ்சி வீரன்ஸ்"

    தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் இன்று நடைபெற்று வரும் போட்டியில் திருச்சி வாரியர்ஸ் அணி வெற்றி பெற 137 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது காஞ்சி வீரன்ஸ் அணி. #TNPL2018 # RTWvVKV
    தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 27 - வது லீக் ஆட்டம் திருநெல்வேலியில் நடைபெற்று வருகிறது. இதில் திருச்சி வாரியர்ஸ் அணியும், காஞ்சி வீரன்ஸ் அணியும் மோதின.

    டாஸ் வென்ற காஞ்சி வீரன்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.  இதையடுத்து, அந்த அணியின் சித்தார்த், பாபா அபராஜித் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.

    ஆனால், திருச்சி வாரியர்ஸ் அணி சிறப்பாக பந்து வீசினர். இதனால் காஞ்சி வீரன்ஸ் அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது.

    காஞ்சி வீரன்ஸ் அணியில் பிரான்சிஸ் ரோகின்ஸ் மட்டும் அதிரடியாக ஆடி 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    விஷால் 25 ரன்னிலும், சித்தார்த் மற்றும் மோகித் ஹரிஹரன் ஆகியோர் தலா 17 ரன்களும் எடுத்தனர். இறுதியில், காஞ்சி வீரன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 136 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.

    திருச்சி வாரியர்ஸ் அணி சார்பில் கண்ணன் விக்னேஷ், சோனு யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    இதையடுத்து, 137 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திருச்சி வாரியர்ஸ் அணி விளையாடி வருகிறது. #TNPL2018 # RTWvVKV 
    டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் காஞ்சி வீரன்சை வீழ்த்தியது மகிழ்ச்சி அளிப்பதாக சேப்பாக் சூப்பர் கில்லீஸ் வீரர் சிவக்குமார் கூறியுள்ளார். #PattaiyaKelappu #CSG #TNPL2018
    திண்டுக்கல்:

    டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் காஞ்சி வீரன்சை வீழ்த்தி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி முதல் வெற்றியை பெற்றது.

    திண்டுக்கல்லை அடுத்த நத்தம் என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடந்த 22-வது ‘லீக்’ ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சேப்பாக்க சூப்பர் கில்லீஸ் அணி முதலில் ‘பேட்டிங்’ செய்தது. அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 180 ரன் குவித்தது.

    தொடக்க வீரர் கார்த்திக் 44 பந்தில் 76 ரன்னும் (11 பவுண்டரி, 2 சிக்சர்), முருகன் அஸ்வின் 17 பந்தில் 34 ரன்னும் (4 சிக்சர்), கேப்டன் கோபிநாத் 22 பந்தில் 31 ரன்னும் (3 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர். பாபா அபராஜித் 2 விக்கெட்டும், சுனில்சாம், அவுசிக் சீனிவாஸ், திவாகர் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

    பின்னர் விளையாடிய காஞ்சி வீரன்ஸ் அணி 9 விக்கெட் இழப்புக்கு 167 ரன் எடுத்தது. இதனால் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 13 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணி பெற்ற முதல் வெற்றியாகும்.

    காஞ்சி வீரன்ஸ் அணியில் அதிக பட்சமாக அருண் 19 பந்தில் 27 ரன்னும் (3 பவுண்டரி, 1 சிக்சர்), விஷால் வைத்யா 18 பந்தில் 24 ரன்னும் (4 பவுண்டரி), திவாகர் 24 ரன்னும் (2 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர்.

    முருகன் அஸ்வின், சம்ருத்பட், சிவக்குமார் ஆகியோர் தலா 2 விக்கெட்டும், ஹரீஷ் குமார் 1 விக்கெட்டும் எடுத்தனர்

    இந்த வெற்றி குறித்து சேப்பாக் சூப்பர் கில்லீஸ் பந்து வீச்சாளர் சிவக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

    5 ஆட்டங்களில் ஏற்பட்ட தோல்விக்கு பிறகு முதல் வெற்றியை பெற்றது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இதுவரை ஏதாவது ஒரு பகுதியில் மட்டுமே சிறப்பாக செயல்பட்டு வந்தோம். இந்த ஆட்டத்தில் 3 பகுதிகளிலும் (பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங்) நன்றாக செயல்பட்டோம். இதனால் வெற்றியை பெற முடிந்தது.

    மிடில் ஓவர்களில் தடுமாறுவது கிரிக்கெட்டில் நடக்க கூடியதுதான். சில நேரங்களில் விக்கெட்டை நிலைநிறுத்த சில ஓவர்கள் எடுத்துக் கொள்ள வேண்டி இருக்கும். என்றாலும் இறுதியில் நல்ல ஸ்கோரை குவித்து விட்டோம்.

    ஆடுகளம் பேட்டிங்குக்கு ஏற்ற வகையில் இருந்ததால் காஞ்சி வீரன்ஸ் அணியினர் நன்றாக ஆடி நெருங்கி வந்தனர். எங்களது பந்து வீச்சு நேர்த்தியாக இருந்தது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    காஞ்சி வீரன்ஸ் சந்தித்த 5-வது தோல்வியாகும். தோல்வி குறித்து அந்த அணி வீரர் சுனில் சாம் கூறும்போது, “இந்த ஆடுகளத்தில் 181 ரன்னை சேஸ் செய்ய இயலும். ஆனால் தொடகத்தில் ரன் அவுட் முறையில் விக்கெட்டுகளை இழந்தோம். இது பாதிப்பை ஏற்படுத்தியது. மேலும் எங்களது பீல்டிங் தரத்தையும் மேம்படுத்த வேண்டும்” என்றார்.

    சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி கடைசி ‘லீக்’ ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்சை வருகிற 3-ந் தேதி எதிர்கொள்கிறது.

    காஞ்சி வீரன்ஸ் கடைசி ‘லீக்’ ஆட்டத்தில் திருச்சி வாரியர்சை 5-ந் தேதி சந்திக்கிறது.

    இன்று நடைபெறும் 23-வது ‘லீக்’ ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் டூட்டி பேட்ரியாட்ஸ்-திருச்சி வாரியர்ஸ் அணிகள் மோதுகின்றன.

    டூட்டி பேட்ரியாட்ஸ் 3 வெற்றி, 2 தோல்வியுடன் 6 புள்ளியும், திருச்சி வாரியர்ஸ் 2 வெற்றி, 3 தோல்வியுடன் 4 புள்ளியும் பெற்றுள்ளன. ‘பிளேஆப்’ வாய்ப்பில் நீடிக்க இரு அணிகளும் வெற்றி பெற கடுமையாக போராடும். #PattaiyaKelappu #CSG #TNPL2018
    தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் இன்றைய ஆட்டத்தில் காஞ்சி வீரன்ஸ் அணியை 13 ரன்கள் வித்தியாசத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி வீழ்த்தியது. #TNPL
    திண்டுக்கல்:

    தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 22-வது லீக் ஆட்டம் திண்டுக்கல்லில் நடைபெற்றது. காஞ்சி வீரன்ஸ் அணிக்கெதிராக டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி எஸ் கார்த்திக், கங்கா ஸ்ரீதர் ராஜூ ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ஸ்ரீதர் ராஜூ 5 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து கோபிநாத் களம் இறங்கினார்.  எஸ் கார்த்திக் - கோபிநாத் ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

    சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் ஸ்கோர் 11.1 ஓவரில் 110 ரன்னாக இருக்கும்போது இந்த ஜோடி பிரிந்தது. கோபிநாத் 22 பந்தில் 31 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் விளையாடிய எஸ் கார்த்தி 44 பந்தில் 11 பவுண்டரி, 2 சிக்சருடன் 76 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

    இவர் அவுட்டாகும்போது சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 14.3 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 128 ரன்கள் சேர்த்திருந்தது. அதன்பின் வந்த உதிரசாமி சசிதேவ் 11 ரன்னிலும், ஸ்ரீஹரிஸ்குமார் 3 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். முருகன் அஸ்வின் அதிரடியாக விளையாடி 17 பந்தில் 34 ரன்கள் விளாச சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் குவித்தது.

    181 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கிய காஞ்சி அணி முதலில் அதிரடியாக விளையாடியது. விஷால் வைத்யா 24 ரன்களிலும், அருண் 27 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதனை அடுத்து, சேப்பாக் பவுலர்களின் கை ஓங்கியது. விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் விழுந்து கொண்டே இருந்தன.

    20 ஓவர்கள் முடிவில் காஞ்சி அணி 167 ரன்களுக்கு 9 விக்கெட்டுகள் இழந்து ஆட்டமிழந்தது. 
    டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் இன்று நத்தத்தில் நடைபெறும் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், காஞ்சி வீரன்ஸ் அணிகள் மோதுகின்றன. #TNPL2018 #ChepaukSuperGillies #KanchiVeerans
    நத்தம்:

    3-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நத்தம் (திண்டுக்கல்), நெல்லை, சென்னை ஆகிய 3 ஊர்களில் நடக்கிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தலா ஒருமுறை மற்ற அணியுடன் மோத வேண்டும். லீக் சுற்றுகளின் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.

    இந்த தொடரின் 21-வது ஆட்டம் நத்தம் என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு நடக்கிறது. இன்றைய ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் மற்றும் வி.பி.காஞ்சி வீரன்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன. இந்த இரண்டு அணிகளும் அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை இழந்து விட்டன.



    இதில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, இதுவரை 5 ஆட்டங்களில் விளையாடி இருக்கிறது. எனினும், முதல் வெற்றியை பதிவு செய்யவில்லை. எனவே, அந்த அணியினர் முதல் வெற்றியை ருசிக்க வேண்டும் என்ற முனைப்பில் தீவிரமாக உள்ளனர். அந்த அணியின் கேப்டன் கோபிநாத், சசிதேவ், கார்த்திக், எம்.அஸ்வின் நன்றாக ஆடி வருவதால், மற்ற வீரர்களும் திறமையை நிரூபித்தால் வெற்றி பெறலாம்.

    மேலும், நத்தம் என்.பி.ஆர். கல்லூரி மைதானம் சேப்பாக் சூப்பர் கில்லீசுக்கு ராசியான மைதானம் என்ற கருத்து டி.என்.பி.எல். கிரிக்கெட் ரசிகர்களிடையே உள்ளது. அந்த நம்பிக்கையோடும், முதல் வெற்றியை பதிவு செய்யும் உத்வேகத்தோடும் அவர்கள் களம் இறங்குவார்கள். அதேநேரம் தொடர்ந்து 4 தோல்விகளை சந்தித்தாலும், 5-வது ஆட்டத்தில் கோவை கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெற்ற வெற்றியுடன் காஞ்சி வீரன்ஸ் அணியினர் உற்சாகத்தில் உள்ளனர். அந்த உற்சாகத்தோடு 6-வது ஆட்டத்தில் களம் இறங்குகிறது.

    இது அந்த அணிக்கு பலமாகும். மேலும் கேப்டன் அபராஜித், விஷால்வைத்யா, மோகித் போன்றோர் சவால் அளிக்க கூடியவர்கள். எனவே, 2 அணியினரும் திறமையை நிரூபித்து காண்பிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இதற்காக 2 அணியின் வீரர்களும் நத்தத்தில் நேற்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர். இன்றைய ஆட்டம் இரவு 7.15 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ்1 தமிழ் சேனலில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.   #TNPL2018 #ChepaukSuperGillies #KanchiVeerans 
    தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் நேற்று நடைபெற்ற போட்டியில் கோவை கிங்ஸ் அணியை 14 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது காஞ்சி வீரன்ஸ். #TNPL2018 #VKVvLKK
    தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 20-வது லீக் ஆட்டம் திருநெல்வேலியில் நடைபெற்றது. இதில் கோவை கிங்ஸ் அணியும், காஞ்சி வீரன்ஸ் அணியும் மோதின.

    டாஸ் வென்ற காஞ்சி வீரன்ஸ் அணியினர் பேட்டிங் தேர்வு செய்தனர். அந்த அணியின் பாபா அபராஜித் 41 ரன்களும், அருண் 29 ரன்களும், தீபன் லிங்கேஷ் 16 ரன்களும் எடுத்தனர். மற்றவர்கள் ஒற்றை இலக்க எண்ணில் அவுட்டாகினர்.

    இறுதியில், காஞ்சி வீரன்ஸ் அணியினர் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 116 ரன்கள் எடுத்துள்ளனர்.

    கோவை கிங்ஸ் சார்பில் அஜித் ராம் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    இதையடுத்து 117 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் கோவை கிங்ஸ் களமிறங்கியது. காஞ்சி வீரன்ஸ் அணியினரின் பந்து வீச்சில் சிக்கி திணறினர்.

    கோவை கிங்ஸ் சார்பில் அஷ்வின் வெங்கட்ராமன் 35 ரன்களும், பிரசாந்த் ராஜேஷ் 21 ரன்களும் ரவிகுமார் ரோஹித் 18 ரன்களும் எடுத்தனர். மற்றவர்கள் விரைவில் அவுட்டாகினர்.

    இறுதியில், கோவை கிங்ஸ் அணியினர் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 102 ரன்கள் மட்டுமே எடுத்தனர். இதனால் காஞ்சி வீரன்ஸ் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

    காஞ்சி வீரன்ஸ் சார்பில் ஆஷிக் ஸ்ரீனிவாஸ் 3 விக்கெட்டுகளும், திவாகர் 2 விக்கெட்டுகளும் எடுத்தனர். சிறப்பாக பந்து வீசிய ஆஷிக் ஸ்ரீனிவாஸ் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். #TNPL2018 #VKVvLKK
    தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் காஞ்சி வீரன்ஸ் அணியை 11 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்து மதுரை பாந்தர்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது. #TNPL2018 #KVvMP
    தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 15-வது லீக் ஆட்டம் திண்டுக்கல்லில் நடைபெற்றது. இதில் காஞ்சி வீரன்ஸ் - மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதின.

    டாஸ் வென்ற காஞ்சி வீரன்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது. மதுரை பாந்தர்ஸ் அணியின் அருண் கார்த்திக், டி ரோகித் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

    அருண் கார்த்திக் 4 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து இறங்கிய சற்குணம் 40 பந்தில் 7 சிக்ஸ், ஒரு பவுண்டரியுடன் 62 ரன்கள் குவித்தார். டி ரோகித் 30 பந்தில் 32 ரன்கள் சேர்த்தார்.

    அதன்பின் வந்த வீரர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ஜெகதீசன் கவுசிக் 20 பந்தில் 27 ரன்களும், அபிஷேக் தன்வார் 10 பந்தில் 22 ரன்கள் அடிக்க 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் அடித்துள்ளது.

    காஞ்சி வீரன்ஸ் சார்பில் தீபன் லிங்கேஷ், திவாகர் ஆகியோர் 3 விக்கெட்டும், ஆஷிக் ஸ்ரீனிவாஸ் 2விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் காஞ்சி வீரன்ஸ் களமிறங்கியது. ஆனால் மதுரை பாந்தர்ஸ் அணியின் துல்லிய பந்துவீச்சில் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது.

    காஞ்சி அணியில் விஷால் வைத்யா 31 ரன்களும், பாபா அபராஜித் 29 ரன்களும், மோகித் ஹரிஹரன் மற்றும் சஞ்சய் யாதவ் ஆகியோர் 34 ரன்களும் எடுத்தனர்.

    இறுதியில், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 156 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதைத்தொடர்ந்து மதுரை பாந்தர்ஸ் 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகன் விருது தலைவன் சற்குணத்துக்கு வழங்கப்பட்டது.
    #TNPL2018 #KVvMP
    தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் காஞ்சி வீரன்ஸ்க்கு 168 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது மதுரை பாந்தர்ஸ். #TNPL2018 #KVvMP
    தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 15-வது லீக் ஆட்டம் திண்டுக்கல்லில் நடைபெற்று வருகிறது. இதில் காஞ்சி வீரன்ஸ் - மதுரை பாந்தர்ஸ் அணிகள் விளையாடு வருகின்றன. டாஸ் வென்ற காஞ்சி வீரன்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி மதுரை பாந்தர்ஸ் அணியின் அருண் கார்த்திக், டி ரோகித் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். அருண் கார்த்திக் 4 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து டி ரோகித் உடன் தலைவன் சற்குணம் ஜோடி சேர்ந்தார். சற்குணம் 40 பந்தில் 7 சிக்ஸ், ஒரு பவுண்டரியுடன் 62 ரன்கள் குவித்தார். டி ரோகித் 30 பந்தில் 32 ரன்கள் சேர்த்தார்.



    அதன்பின் வந்த வீரர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ஜெகதீசன் கவுசிக் 20 பந்தில் 27 ரன்களும், அபிஷேக் தன்வார் 10 பந்தில் 22 ரன்கள் அடிக்க 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் அடித்துள்ளது.
    டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியின் இன்று நடக்கவிருக்கும் ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ் அணியும் காஞ்சி வீரன்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றனர். #TNPL2018 #NammaOoruNammaGethu
    திண்டுக்கல்:

    3-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை, நெல்லை, திண்டுக்கல் ஆகிய 3 இடங்களில் நடைபெற்று வருகிறது.

    8 அணிகள் பங்கேற்றுள்ள இந்தப் போட்டியில் ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா 1 முறை மோத வேண்டும். ‘லீக்’ முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளே ஆப்’ சுற்றுக்கு தகுதி பெறும்.

    நேற்றுடன் 14 ஆட்டங்கள் முடிந்து விட்டன. அதன்படி திண்டுக்கல் டிராகன்ஸ் 4 வெற்றி, 1 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று முன்னிலையில் உள்ளது. காரைக்குடி காளை, டூட்டி பேட்ரியாட்ஸ், கோவை கிங்ஸ், மதுரை பாந்தர்ஸ், திருச்சி வாரியர்ஸ் ஆகிய 5 அணிகள் தலா 4 புள்ளிகளுடன் உள்ளன. காஞ்சி வீரன்ஸ், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் ஆகியவை புள்ளிகள் எதுவும் பெறவில்லை.

    டி.என்.பி.எல். போட்டியின் 15-வது ‘லீக்’ ஆட்டம் திண்டுக்கலை அடுத்த நத்தம் என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் இன்று இரவு 7.15 மணிக்கு நடக்கிறது. இதில் மதுரை பாந்தர்ஸ்- காஞ்சி வீரன்ஸ் அணிகள் மோதுகின்றன.

    மதுரை அணி தொடக்க ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்சிடம் 9 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. அதை தொடர்ந்து சேப்பாக் சூப்பர் கில்லீஸ் (26 ரன்), டூட்டி பேட்ரியாட்ஸ் (7 விக்கெட்) அணிகளை வீழ்த்தியது.

    பலவீனமாக காணப்படும் காஞ்சி வீரன்சை வீழ்த்தி ‘ஹாட்ரிக்’ வெற்றி பெறும் ஆர்வத்தில் மதுரை அணி இருக்கிறது.

    பாபா அபராஜித் தலைமையிலான வி.பி.காஞ்சி வீரன்ஸ் அணி தான் மோதிய 3 ஆட்டத்திலும் தோற்று இருந்தது.

    அந்த அணி தொடக்க ஆட்டத்தில் 48 ரன் வித்தியாசத்தில் டூட்டி பேட்ரியாட்சிடமும், 8 விக்கெட் வித்தியாசத்தில் கோவை கிங்சிடமும், 7 விக்கெட்டில் திண்டுக்கல் டிராகன்சிடமும் தோற்றது.

    தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்து முதல் வெற்றியை பெறும் ஆர்வத்தில் காஞ்சி வீரன்ஸ் இருக்கிறது. #TNPL2018 #NammaOoruNammaGethu
    டிஎன்பிஎல் கிரிக்கெட்டில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு 167 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது காஞ்சி வீரன்ஸ் அணி. #TNPL #DindigulDragons #KanchiVeerans
    திண்டுக்கல்:

    டிஎன்பிஎல் கிரிக்கெட்டில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெறுகின்றன. திண்டுக்கல்லில் நடந்த முதல் போட்டியில்
    டூட்டி பாட்ரியாட்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி மதுரை பாந்தர்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.

    இரண்டாவதாக நடைபெற்று வரும் போட்டியில் மதுரை வீரன்ஸ் மற்றும் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதுகின்றன.

    டாஸ் வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, காஞ்சி வீரன்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக விஷால் வைத்யா, சுரேஷ் லோகேஷ்வர் ஆகியோர் இறங்கினர்.

    முதலில் திண்டுக்கல் அணியினரின் துல்லிய பந்துவீச்சில் காஞ்சி வீரன்ஸ் அணியினர் திணறினர். இதனால் 4 விக்கெட் இழப்புக்கு 27 ரன்கள் எடுத்து தத்தளித்தது.

    அடுத்து இறங்கிய மோகித் ஹரிஹரனும், பிரான்சிஸ் ரோகின்சும் பொறுப்புடன் விளையாடி மேற்கொண்டு விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டனர்.

    இறுதியில் காஞ்சி வீரன்ஸ் அணியினர் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்தனர். மோகித் 77 ரன்களுடனும், ரோகின்ஸ் 64 ரன்களுடனும் அவுட்டாகாமல் உள்ளனர்.

    இதைத்தொடர்ந்து 167 ரன்களை இலக்காக கொண்டு திண்டுக்கல் டிராகன்ஸ் அணியினர் விளையாடி வருகின்றனர்.
    #TNPL #DindigulDragons #KanchiVeerans
    டிஎன்பிஎல் கிரிக்கெட்டில் காஞ்சி வீரன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. #TNPL #DindigulDragons #KanchiVeerans
    திண்டுக்கல்:

    டிஎன்பிஎல் கிரிக்கெட்டில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெறுகின்றன. திண்டுக்கல்லில் நடந்த முதல் போட்டியில்
    டூட்டி பாட்ரியாட்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி மதுரை பாந்தர்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.

    இரண்டாவதாக நடைபெற்று வரும் போட்டியில் மதுரை வீரன்ஸ் மற்றும் திண்டுக்கால் டிராகன்ஸ் அணிகள் மோதுகின்றன.

    டாஸ் சுண்டியதில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி டாஸ் வென்றது. இதையடுத்து, தனது அணி முதலில் பந்து வீசும் என திண்டுக்கல் டிராகன்ஸ் அணி தெரிவித்தது. இதைத்தொடர்ந்து, காஞ்சி வீரன்ஸ் அணியினர் விளையாடி வருகின்றனர்.
    #TNPL #DindigulDragons #KanchiVeerans
    காஞ்சி வீரன்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதற்கு பந்துவீச்சாளர்களே காரணம் என காரைக்குடி அணியின் கேப்டன் ஸ்ரீநிவாசன் கூறியுள்ளார். #TNPL2018 #KKvVKV #Srinivasan
    தமிழ்நாடு பிரிமீயர் லீக் கிரிக்கெட் போட்டியில் நேற்று 8-வது லீக் ஆட்டத்தில் காஞ்சி அணி நிர்ணயித்த 146 ரன் இலக்கை எடுத்து காரைக்குடி அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வெற்றி குறித்து அந்த அணி வீரர் ஸ்ரீநிவாசன் கூறியதாவது:-

    இந்த வெற்றிக்கு அனைத்து பெருமைகளும் பந்து வீச்சாளர்களையே சாரும். அணி வீரர்கள் விவாதத்தின் போது என்று திட்டமிட்டோமோ அதை அப்படியே செயல்படுத்தினோம். இது போன்ற ஆடுகளத்தில் எதிரணியை 145 ரன்னுக்குள் கட்டுபடுத்துவது என்பது பெரிய வி‌ஷயம் தான். எங்களது பந்து வீச்சு அற்புதமாக இருந்தது.

    திண்டுக்கல் மைதானத்தில் அனிருதா தொடர்ச்சியாக 4-வது அரைசதம் அடித்து உள்ளார். அவர் நல்ல பார்மில் இருக்கிறார்.

    இவ்வாறு அவர் கூறினார். #TNPL2018 #NammaOoruNammaGethu #KK #Srinivasan
    தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரில் காரைக்குடி காளைக்கு 146 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது காஞ்சி வீரன்ஸ். #TNPL2018 #KKvVKV
    தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 8-வது லீக் ஆட்டம் திண்டுக்கல்லில் நடைபெற்று வருகிறது. இதில் காரைக்குடி காளை- காஞ்சி வீரன்ஸ் அணிகள் மோதி வருகின்றன.

    டாஸ் வென்ற காரைக்குடி காளை பந்துவீச்சு தேர்வு செய்தது. அதன்படி காஞ்சி வீரன்ஸ் அணியின் விஷால் வைத்யா, சித்தார்த் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். சித்தார் ரன்ஏதும் எடுக்காமல் டக்அவுட்டில் வெளியேறினார். விஷால் 34 பந்தில் 40 ரன்கள் சேர்த்தார்.



    சுப்ரமணிய சிவா 18 ரன்னும், சஞ்சய் யாதவ் 13 பந்தில் 27 ரன்களும், எஸ். அஷ்வத் 14 பந்தில் 17 ரன்ளும், சுனில் சாம் 8 பந்தில் 19 ரன்களும் அடிக்க காஞ்சி வீரன்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் அடித்துள்ளது.

    பின்னர் 146 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் காரைக்குடி காளை பேட்டிங் செய்து வருகிறது.
    ×