என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » காட்டெருமை வேட்டை
நீங்கள் தேடியது "காட்டெருமை வேட்டை"
அரூர் அருகே வனப்பகுதியில் கள்ளத்துப்பாக்கியால் காட்டெருமையை கொன்று கறியை பங்கு போட்டு எடுத்து 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
அரூர்:
தருமபுரி மாவட்டம், அரூர் அடுத்த தீர்த்தமலை வனச்சரசம் மாம்பாடி பகுதியில் தீர்த்தமலை வனச்சரகர் தண்டபாணி தலைமையில் வனவர் வேலு, வனக்காப்பாளர்கள் முகமது வக்கீல், மணி, ஜான்அந்தோணி ஆகியோர் அடங்கிய குழுவினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது மல்லூத்து பகுதியில் சத்தம் கேட்டு சென்று கொண்டிருந்த போது கும்பலாக வந்த சிலர் வனத்துறையினரை பார்த்தவுடன் ஓடி விட்டனர். அதில் 2 பேரை மட்டும் வனத்துறையினர் சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர். விசாரணையில் மாம்பாடி நரிமேட்டை பகுதியை சேர்ந்த 12 பேர் அடங்கிய கும்பல் கள்ளத்துப்பாக்கியால் காட்டெருமையை கொன்று கறியை பங்கு போட்டு எடுத்து வந்தது தெரியவந்தது.
பிடிப்பட்ட ரத்தினம் (வயது 47), கோவிந்தன் (60) 2 பேரையும் தருமபுரி மாவட்ட வன அலுவலர் ராஜ்குமார் முன்னிலையில் ஆஜர்படுத்தி, அரூர் நீதிமன்ற நடுவர் இருவரையும் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். தப்பியோடிய 10 பேரையும் வனத்துறையினர் தேடி வருகின்றனர்.
×

X