search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காய்கறி தேக்கம்"

    ஓணம் பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் இன்று காய்கறிகள் அனுப்பாததால் 60 சதவீத காய்கறிகள் தேக்கம் அடைந்தது.

    ஒட்டன்சத்திரம்:

    கேரளாவில் பிரசித்தி பெற்ற ஓணம் பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. இந்த வருடம் மழை வெள்ளம் காரணமாக அரசு சார்பில் ஓணம் கொண்டாட்டங்கள் இருக்காது என அம்மாநில அரசு அறிவித்தது.

    வழக்கமாக ஓணம் திருநாளுக்கு 10 நாட்களுக்கு முன்பாகவே நிகழ்ச்சி களை கட்டும். ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் இருந்து அதிக அளவு காய்கறிகள் கேரளாவிற்கு அனுப்பி வைக்கப்படும். ஓணம் பண்டிகை சமயங்களில் கூடுதலாக காய்கறிகள் அனுப்பி வைக்கப்படும்.

    கடந்த 3 நாட்களாக ஓணம் பண்டிகைக்காக ஏராளமான காய்கறிகள் அனுப்பி வைக்கப்பட்டன. இதனால் காய்கறிகளின் விலையும் அதிகரித்தது. நாளை ஓணம் கொண்டாட உள்ள நிலையில் இன்று கேரள வியாபாரிகள் யாரும் வரவில்லை. காய்கறிகளும் ஆர்டர் கொடுக்க வில்லை.

    இதனால் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் 60 சதவீத காய்கறிகள் தேக்கம் அடைந்தது. கோவை, பொள்ளாச்சி, அறந்தாங்கி, திருச்சி போன்ற மாவட்டங்களுக்கு மட்டும் அனுப்பி வைக்கப்பட்டன.

    நாளை (25-ந் தேதி) மார்க்கெட்டுக்கு வார விடுமுறை என்பதால் 2 நாட்கள் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

    ×