search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காய்கறிகள் அனுப்பி வைப்பு"

    கேரள மாநில நிவாரணத்திற்காக ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் இருந்து 16 டன் காய்கறிகள் அனுப்பி வைக்கப்பட்டது.
    ஒட்டன்சத்திரம்:

    கேரள மாநிலத்தில் 100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கன மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் வீடு, உடமைகளை இழந்து தவித்து வருகின்றனர். மேலும் 300-க்கும் மேற்பட்வர்கள் உயிரிழந்தனர். அந்த மாநிலத்தில் அனைத்து அணைகளும் நிரம்பி உள்ளதால் உபரிநீர் திறக்கப்படுகிறது.

    இதன் காரணமாக கேரள மாநிலம் முழுவதும் வெள்ளத்தில் மிதக்கிறது. அவர்களுக்கு உதவ நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் தன்னார்வத் தொண்டர்கள் உதவி மற்றும் நிவாரண பொருட்கள் வழங்கி வருகின்றனர்.

    ஒட்டன்சத்திரம் காந்தி காய்கறி சந்தைக்கடை உரிமையாளர்கள் நலச்சங்கம் சார்பில் சின்ன வெங்காயம், மிளகாய், பூசணிக்காய், வெண்டைக்காய், தக்காளி உள்பட 16 டன் காய்கறிகள் மாவட்ட கலெக்டர் வினயிடம் ஒப்படைக்கப்பட்டு கேரளாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    ரூ.8 லட்சம் மதிப்பிலான காய்கறிகளை சந்தைக்கடை உரிமையாளர் நலச்சங்க தலைவர் தங்கவேல், செயலாளர் ராசியப்பன், பொருளாளர் சீனிவாசன் மற்றும் ஊழியர்கள் மாவட்ட கலெக்டரிடம் ஒப்படைத்தனர். இது கேரள மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×