என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » கிராம நிர்வாக அலுவலகம்
நீங்கள் தேடியது "கிராம நிர்வாக அலுவலகம்"
ஊத்தங்கரை அருகே கிராம நிர்வாக அலுவலகத்தை பூட்டு போட்டு போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 50 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ஊத்தங்கரை:
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்துள்ள கே.எட்டிப்பட்டி கூட்டுரோடு பகுதியில் செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடையை கூரம்பட்டி கிராமத்திற்கு மாற்றப்படு வதாக பொதுமக்களிடையே தகவல் பரவியது.
இதனால் ஆத்திரமடைந்த அந்த பகுதி பொதுமக்கள் மண்எண்ணை கேனுடன் நேற்று கிராம நிர்வாக அலுவ லகத்திற்கு திரண்டு வந்து கிராம நிர்வாக அலுவலர் காளிராஜ், உதவியாளர் சிவக்குமார் ஆகியோரை உள்ளே அடைத்து வைத்து அலுவலகத்தை பூட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த சாமல்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன், ஊத்தங்கரை தாசில்தார் மாரிமுத்து ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதைதொடர்ந்து அலுவலகத்தை திறந்து கிராம நிர்வாக அலுவலர் காளிராஜ், உதவியாளர் சிவக்குமார் ஆகிய 2 பேரையும் போலீசார் மீட்டனர்.
இது தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் காளிராஜ் சாமல்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் அரசு அலுவலரை பணி செய்யவிடாமல் தடுத்து அலு வலகத்தில் வைத்து பூட்டியதாக இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் இளவரசன், இந்திய வாலிபர் சங்க மாவட்ட தலைவர் ஸ்ரீதர் (வயது23), கூனப்பட்டியை சேர்ந்த புருஷோத்தமன், மங்காவரத்தை சேர்ந்த பூபாலன், கே.எட்டிப்பட்டியை சேர்ந்த பாபு என்கிற பெருமாள், கூனப்பட்டியை சேர்ந்த பவானி, முரும்மாள், வெண்ணிலா, மீரா, அமுதா உள்பட 50 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews

×

X