search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிரெடிட் கார்டு"

    டெபிட் கார்டை ஒப்பிடுகையில் கிரெடிட் கார்டு பயன்பாடு என்பது முற்றிலும் மாறுபட்டது. கிரெடிட் கார்டு பெற்றுள்ளவர்களுக்கு வங்கி ஒரு குறிப்பிட்ட தொகையை உச்ச வரம்பாக அறிவித்திருக்கும்.
    இந்தியாவில் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு இவற்றை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை மற்ற நாடுகளை காட்டிலும் அதிகமாக உள்ளது. குறிப்பாக ஜன்தன் திட்டம் நடை முறைப் படுத்தப்பட்ட பிறகு டெபிட் கார்டு பயன்படுத்துவோரின் எண்ணிக்கை பெருமளவு அதிகரித்துள்ளது.

    கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் தற்போது வரை இந்த திட்டத்தின் கீழ் சுமார் 10 கோடிக்கும் மேற்பட்ட வங்கி கணக்குகள் துவங்கப்பட்டுள்ளன. கணக்குகள் தொடங்கிய அனைவருக்கும் டெபிட் கார்டு வழங்கப்பட்டுள்ளது. ஏ.டி.எம்-ஐ பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க இது முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

    டெபிட் கார்டுக்கும், கிரெடிட் கார்டுக்கும் இடையே சில வித்தியாசங்கள் உள்ளன. அவை குறித்து பார்ப்போம்:-

    வங்கியில் ஒருவர் சேமிப்பு கணக்கு ஒன்றை துவங்கும் போது, இக்கணக்குடன் இணைக்கப்பட்ட ஒரு டெபிட் கார்டை வங்கி அவருக்கு அளிக்கும். இந்த டெபிட் கார்டை பயன்படுத்தி செய்யப்படும் ஒவ்வொரு பரிமாற்றமும் கணக்கில் இருக்கும் நிலுவை பணத்தை கொண்டு மேற்கொள்ளப்படுகிறது.

    எனவே கணக்கில், பணம் இல்லையென்றால் டெபிட் கார்டு மூலம் பண பரிமாற்றம் செய்ய முடியாது. இதில் பண பரிமாற்றத்திற்கு வட்டி விகிதங்கள் முற்றிலும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. டெபிட் கார்டை ஒப்பிடுகையில் கிரெடிட் கார்டு பயன்பாடு என்பது முற்றிலும் மாறுபட்டது. கிரெடிட் கார்டு பெற்றுள்ளவர்களுக்கு வங்கி ஒரு குறிப்பிட்ட தொகையை உச்ச வரம்பாக அறிவித்திருக்கும்.

    உதாரணமாக வங்கி கணக்கில் ஒருவருக்கு உச்சவரம்பு ரூ.1 லட்சம் என்றால் அந்த தொகை வரை பணம் எதுவும் செலுத்தாமலேயே பணத்தை எடுக்க முடியும். எனினும் இத்தொகைக்கான குறிப்பிட்ட வட்டி தொகையை வங்கிக்கு செலுத்த வேண்டும். குறிப்பிட்ட காலத்திற்குள் வட்டி கட்டவில்லை எனில் அபராத தொகை செலுத்த நேரிடும்.

    எனவே பணம் கிடைக்கிறது என்பதற்காக தேவையற்ற செலவுகளை செய்ய வேண்டாம். அவ்வாறு செய்தால் கிடைக்கும் வருமானம் வட்டி கட்டவே போய்விடும். இயன்றவரை டெபிட் கார்டை மட்டுமே பயன்படுத்த முயலுங்கள். அவசரமான சூழ்நிலையில் மட்டும் கிரெடிட் கார்டை பயன்படுத்துவது புத்திசாலித்தனமாகும். மேலும் கிரெடிட் கார்டில் செலவு செய்த தொகையை குறிப்பிட்ட காலத்திற்குள் வங்கியில் செலுத்தி விட வேண்டும். அவ்வாறு செய்தால் வட்டி தொகையை சேமிக்கலாம்.
    நமது வருமானத்தை வழக்கம்போல திட்டமிட்டுக்கொண்டு, அதற்குள் கிரெடிட் கார்டு பயன்பாட்டையும் வைத்துக் கொண்டால் சிக்கல்கள் இல்லாமல் இருக்கலாம்.
    நவீன பொருளாதாரம் வழங்கும் எந்த வசதியையும் உடனடியாக புறக்கணிக்கவோ, அதைக் கொண்டாடவோ முடியாது. அப்படித்தான் கிரெடிட் கார்டு பயன்படுத்துவதையும் பார்க்க வேண்டும். நமது வருமானத்தை முன்கூட்டியே செலவு செய்கிறோம் என்கிற எண்ணம் இருக்க வேண்டும். கிரெடிட் கார்டு மூலம் அதிக கடன் வாங்கிவிட்டு கட்ட முடியவில்லை என்றால் அதற்கு வட்டி, அபராதம், தாமத கட்டணம் என இன்னபிற வகைகளில் கூடுதல் பணத்தையும் இழக்க வேண்டும்.

    எனவே நமது வருமானத்தை வழக்கம்போல திட்டமிட்டுக்கொண்டு, அதற்குள் கிரெடிட் கார்டு பயன்பாட்டையும் வைத்துக் கொண்டால் சிக்கல்கள் இல்லாமல் இருக்கலாம். கிரெடிட் கார்டு கடனை திருப்பி செலுத்த ஒவ்வொரு நிறுவனமும் குறிப்பிட்ட கால அவகாசம் தருகிறது. இந்த காலத்துக்குள் வாங்கிய கடனை முழுமையாக செலுத்திவிட வேண்டும்.

    மொத்த நிலுவை தொகையில் குறைந்தபட்ச தொகையை செலுத்தவும் வாய்ப்பு உண்டு. மீதம் உள்ள தொகையை கடனாகக் கருதி அதற்கு வட்டி விதிக்கப்படும். ஆனால் கிரெடிட் கார்டு கடனுக்கு வட்டி வீதம் அதிகம். கிரெடிட் கார்டு மூலம் பணம் எடுத்துக் கொள்ளவும் முடியும். இதற்கு பரிமாற்ற கட்டணம் மற்றும் வட்டியும் அதிகம். ரூ.1,000 எடுத்தால் அதற்கு 250 ரூபாய் வரை பரிமாற்றக் கட்டணமாக இருக்கும்.



    மேலும் பணம் எடுத்த நாளிலிருந்து திரும்ப கட்டும் தேதிவரை வட்டி கணக்கிடப்படும். வட்டி 35 சதவீதம் முதல் 40 சதவீதம் என்கிற அளவில் இருக்கும். கிரெடிட் கார்டு மூலம் வாங்கிய கடனை மாத தவணையாக திருப்பிச் செலுத்தும் வசதியும் உள்ளது. ஆனால் இதற்கான வட்டியும் அதிகம். உங்கள் மாத வருமானத்தில் இருந்து தனிநபர் கடன் செலுத்துவதுபோல செலுத்த வேண்டும்.

    நமது மாத வருமானத்தைப் போல குறைந்த பட்சம் மூன்று மடங்கிலிருந்து கடன் கிடைக்கலாம். நபர்களின் மதிப்பிற்கு ஏற்ப நிறுவனங்கள் இதை முடிவு செய்யும். ஆனால் கார்டை அதிகமாக பயன்படுத்துகிறோம், வருமானத்தின் எல்லை தாண்டி செலவு செய்கிறோம் என்று யோசித்தால் கிரெடிட் அளவை குறைக்கும்படி செய்து கொள்ளலாம். அல்லது திரும்ப அளித்து விடலாம். கிரெடிட் கார்டை பயன்படுத்தும் போது விருது புள்ளிகள் கிடைக்கும்.

    இதற்கு சில சலுகைகள் உண்டு. 100 ரூபாய்க்கு பயன்படுத்தினால் ஒரு புள்ளி என்கிற வீதத்தில் இது இருக்கலாம். அதிகப் புள்ளிகள் சேர்ந்தால், திரும்ப பொருள் வாங்கும் போது விலை குறைப்பு அல்லது சலுகை கிடைக்கும். சரியாக கையாண்டால் இந்த புள்ளிகள் மூலமும் பலன் பெறலாம். முந்தைய கடன் தொகையில் நிலுவை இருந்தால் மீண்டும் பொருள் வாங்கும் போது சலுகை கிடைக்காது.

    எனவே ஒரு கடனை முழுமையாக அடைத்துவிட்டு சலுகை பெறவும். கிரெடிட் கார்டை இனி பயன்படுத்த வேண்டாம் என முடிவு செய்து விட்டால் முறையாக ஒப்படைத்து ‘நோ டியூ’ சான்றிதழ் வாங்க வேண்டும். கார்டை ஒப்படைக்காமல், நான் பயன்படுத்தவே இல்லையே என்று சொல்ல முடியாது. பராமரிப்பு கட்டணம், ஆண்டுக்கட்டணம் கணக்கிடுவார்கள். அதைக் கட்டவில்லை என்றால் அதற்கும் வட்டி கணக்கிடப்படும்.
    தற்போது நம்மில் பலரும் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு இரண்டையும் பயன்படுத்துகிறோம். ஆனால் இரண்டு கார்டில் எதை அதிகம் பயன்படுத்துவது சிறந்தது என்று அறிந்து கொள்ளலாம்.
    தற்போது நம்மில் பலரும் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு இரண்டையும் பயன்படுத்துகிறோம்.

    ஆனால் இரண்டு கார்டில் எதை அதிகம் பயன்படுத்துவது சிறந்தது? இந்தக் கேள்வி அவ்வப்போது நமக்குள் எழும்.

    டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு ஆகிய இரண்டுமே 16 இலக்க எண், காலாவதி தேதி மற்றும் பின் எண் கொண்டவைதான்.

    நமது வங்கிக் கணக்கில் பணம் இருந்தால்தான், டெபிட் கார்டில் செலவு செய்ய முடியும். ஆனால் வங்கிக் கணக்கில் பணம் இல்லை என்றாலும் கிரெடிட் கார்டை பயன்படுத்திச் செலவு செய்ய முடியும்.

    பொதுவாக டெபிட் கார்டுகளை விட கிரெடிட் கார்டுகள் ஏன் சிறந்தவை என்பது குறித்துப் பார்க்கலாம்...

    கிரெடிட் கார்டுகள் மூலம் ஷாப்பிங் செய்யும்போது ‘கேஷ் பேக்’, தள்ளுபடி போன்ற பலவிதமான சலுகைகள் கிடைக்கும். மேலும் கிரெடிட் கார்டு மூலம் செலவு செய்யும் தொகையை சரியாகத் திருப்பிச் செலுத்தும்போது வெகுமதி புள்ளிகளும் கிட்டும். அதனைப் பயன்படுத்திப் பரிசுகள், சேவை முன்னேற்றம், புதுப்பித்தல் போன்றவற்றைப் பெற முடியும். டெபிட் கார்டில் எப்போதாவதுதான் இது போன்ற பலன்கள் கிடைக்கும்.

    கிரெடிட் கார்டில் தவணை முறையில் பொருட்களை வாங்க முடியும், டெபிட் கார்டில் அப்படிச் செய்ய முடியாது. ஆனால் தவணை முறையில் கிரெடிட் கார்டை பயன்படுத்திப் பொருட்கள் வாங்கும்போது அதற்கு வட்டி செலுத்த வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

    டெபிட் கார்டு பரிவர்த்தனையில் மோசடி நடைபெற்றால், நம் வங்கிக் கணக்கில் உள்ள மொத்தப் பணத்தையும் இழக்க நேரிடும். ஆனால் கிரெடிட் கார்டில் அப்படிப்பட்ட அபாயம் இல்லை. நமக்குரிய வரம்பை மீறி பரிவர்த்தனை செய்ய முடியாது.

    நாம் ஏதேனும் கடன் பெற விண்ணப்பிக்கும்போது வங்கிகள் நமது கிரெடிட் ஸ்கோர் எனப்படும் கடன் மதிப்பெண்ணை சோதிக்கும். கிரெடிட் கார்டு மூலம் செலவு செய்து அவற்றைச் சரியான நேரத்தில் திருப்பிச் செலுத்தி இருந்தால் கிரெடிட் ஸ்கோர் உயர்ந்து இருக்கும். எனவே எளிதாகக் கடன் பெற முடியும். டெபிட் கார்டு மட்டும் வைத்து இருக்கும்போது கிரெடிட் ஸ்கோரை உயர்த்த முடியாது.

    இதெல்லாம் ஒப்பீட்டு அளவில், டெபிட் கார்டை விட கிரெடிட் கார்டை முன்னே நிறுத்தும் விஷயங்கள்.

    அதேநேரம், கிரெடிட் கார்டு தவணைத் தொகையை சரியான நேரத்தில் திருப்பிச் செலுத்த முடியும் என்றால் மட்டும் கிரெடிட் கார்டு வாங்குவது நல்லது. சரியான நேரத்தில் கடனை திருப்பிச் செலுத்தவில்லை என்றால் தாமதமாகக் கட்டணத்தைச் செலுத்தியதற்கு அபராதமும் வட்டியும் சேர்த்து செலுத்த வேண்டும்.

    கையில்தான் கார்டு இருக்கிறதே என்று, பார்த்த பொருட்களை எல்லாம் வாங்க விரும்புவோருக்கும் கிரெடிட் கார்டு சரி வராது. பாக்கெட்டில் பணம் இல்லாமலே செலவழிக்க முடிவது இன்று இனித்தால், நாளை நீளமான ‘ஸ்டேட்மெண்ட்’ வரும்போது கசக்கும்.

    ஓர் ஆசையில் நம்மை மீறிச் செலவழித்துவிடுவோம் என்று எண்ணுபவர்களும், நிதி நிர்வாகத்தில் ஒழுங்கில்லாதவர்களும் கிரெடிட் கார்டை நாடாமல் இருப்பதே நல்லது.
    பலரும் ஒன்றுக்கு மேற்பட்ட கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துகிறார்கள். அது ஒன்றும் பிரச்சினையில்லை. அவற்றை எப்படி உபயோகிக்கிறோம் என்பதுதான் முக்கியம்.
    இன்றைய நிதி நிர்வாகத்தில் பலருக்கும் தவிர்க்கமுடியாத விஷயமாகிவிட்டது, கிரெடிட் கார்டு. அதை சரியாகப் பயன்படுத்தி, உரிய நேரத்தில் தவணைகளைச் செலுத்துவதன் மூலம் நல்ல கடன் வரலாற்றைப் பராமரிக்க முடியும்.

    பலரும் ஒன்றுக்கு மேற்பட்ட கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துகிறார்கள். அது ஒன்றும் பிரச்சினையில்லை. அவற்றை எப்படி உபயோகிக்கிறோம் என்பதுதான் முக்கியம்.

    சிலர், தமது செலவுகளைக் கட்டுப்படுத்தும் விதத்தில், கிரெடிட் கார்டை திருப்பி அளித்துவிடலாம் என்று எண்ணலாம்.

    உண்மையாகவே அவற்றை ரத்துச் செய்ய விரும்புகிறீர்களா? அல்லது அப்படியே பயன்படுத்தாமல் வைத்திருக்கப் போகிறீர்களா? கிரெடிட் கார்டை ரத்துச் செய்வது சரியான வழியா? அது நம்மைப் பாதிக்குமா?

    இந்தக் கேள்விகளுக்கான விடைகளை இங்கே காண்போம்...

    கிரெடிட் கார்டை ரத்துச் செய்வது, ‘சிபில்’ எனப்படும் உங்களின் கடன் மதிப்பெண்ணைப் பாதிக்கும் என்றாலும், அது, கிரெடிட் உச்ச மதிப்பு, கார்டை பயன்படுத்திய காலம், உங்கள் மொத்த கிரெடிட் கார்டு தொகுப்பில் குறிப்பிட்ட கார்டின் விகிதம் போன்ற முக்கியக் காரணிகளைப் பொறுத்தது.

    உங்கள் கிரெடிட் கார்டு கணக்கை மூடும்போது, உங்களின் மொத்த கடன் வரம்பும் குறையும் என்பதால், கடன் மதிப்பெண்ணும் குறையும். குறையக்கூடிய மதிப்பெண்ணின் அளவு, உங்களின் மற்ற கிரெடிட் கார்டுகளில் உள்ள கடனின் அளவைப் பொறுத்தது. அதாவது, அதிகக் கடன் வரம்புள்ள கார்டை ரத்து செய்யும்போது, குறைந்த வரம்புள்ள கார்டை ரத்து செய்வதைக் காட்டிலும் அதிகப் பாதிப்பு ஏற்படும்.

    உங்கள் கிரெடிட் கார்டின் பயன்பாடுகள் தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்பதால், கார்டில் எப்போதும் பாக்கி வைக்காமல் பார்த்துக்கொள்வது, கடன் மதிப்பெண்ணுக்கு உதவியாக இருக்கும்.

    குறைந்த அளவு கடனுள்ள கிரெடிட் கார்டை ரத்து செய்யலாம் என்ற தவறான கருத்து நிலவுகிறது. நீங்கள் கிரெடிட் கார்டை ரத்து செய்ய விரும்புகிறீர்களோ இல்லையோ, பாக்கியுள்ள கடனை கட்டியே ஆக வேண்டும்.

    அதன் கணக்கை மூடாமல், பாக்கி கடனை கட்டி முடித்துவிட்டு அட்டையைப் பயன்படுத்தாமல் அப்படியே வைத்திருந்தாலும் கடன் வரம்பு அப்படியே இருக்கும்.

    நீங்கள் கிரெடிட் கார்டை ரத்துச் செய்தே ஆகவேண்டும் என்றால், அதே அளவு அல்லது அதைவிட அதிக வரம்புள்ள கார்டை வாங்காதவரை உங்களின் ஒட்டுமொத்தக் கடன் வரம்பு குறைந்துவிடும்.

    அதிகபட்ச கடன் வரம்பை வைத்திருப்பது எப்போதும் உதவும் என்றாலும், சில நேரங்களில் கிரெடிட் கார்டுகளை திருப்பிக் கொடுக்கலாம்.

    அதாவது, உங்களால் செலவு செய்வதை முற்றிலும் கட்டுப்படுத்த முடியாமல் இருந்து, கார்டை பயன்படுத்தும் தூண்டுதலைத் தவிர்க்க.

    நீங்கள் பயன்படுத்தாத கிரெடிட் கார்டுக்கு ஆண்டுக் கட்டணம் வசூலிக்கும்போது அல்லது உங்களின் கார்டில் அதீத வட்டி விகிதம் விதிக்கும்போதும், தேவையற்ற கட்டணங்கள் வசூலிக்கும் போதும்.

    உங்களின் தேவைக்கு ஏற்றவாறு, அதிகச் சலுகைகள் தரும் கிரெடிட் கார்டு கிடைத்தால், நீங்கள் தற்போதைய இதே அளவு வரம்புள்ள கார்டாக அதை மாற்றிக்கொள்ளலாம்.

    நீங்கள் செலவு செய்த அல்லது கடந்தகால வட்டி பாக்கி இருந்தால், அவற்றைச் செலுத்த வேண்டும். உங்களுக்குத் தவறாகக் கட்டணங்கள் விதிக்கப்பட்டுள்ளது எனக் கருதினால், அதற்கு உரிய இடத்தில் முறையிட்டு, கார்டு நிறுவனத்திடம் இருந்து பணத்தைத் திரும்பப் பெற வேண்டும்.

    சில வங்கிகள் கிரெடிட் கார்டை பயன்படுத்தும்போது வழங் கும் சலுகைப்புள்ளிகள் பாக்கியிருந்தால், கார்டை ரத்துச் செய்ய விண்ணப்பித்த பின்பு அவற்றைப் பயன்படுத்த முடியாது என்பதால் முன்னரே பயன்படுத்திவிடுங்கள். அரிதாகச் சில நிறுவனங்கள், கார்டை ரத்துச் செய்ய விண்ணப்பித்த பின் குறிப்பிட்ட காலத்துக்கு அந்தச் சலுகை புள்ளிகளைப் பயன்படுத்த அனுமதிக்கின்றன அல்லது அதே வங்கியில் வேறு கிரெடிட் கார்டு பெற்றால், சலுகைப்புள்ளிகளை அதற்கு மாற்றவும் வழிவகை செய்கின்றன.

    ஏதேனும் பயன்பாட்டுக் கட்டணங்களைச் செலுத்தும் வகையில் தானாகப் பணம் கழிக்கும் வசதியை கார்டில் தேர்வு செய்திருந்தால், அதை ரத்து செய்தபின் பிரச்சினை ஏற்படும் என்பதால் மறக்காமல் இவ்வசதியை நீக்க வேண்டும்.

    சரி, கிரெடிட் கார்டை ரத்துச் செய்தே ஆக வேண்டும் என்றால், அதைச் செய்வது எப்படி?

    கிரெடிட் கார்டை ரத்துச் செய்யப் பல வழிகள் உள்ளன. அவை...

    வாடிக்கையாளர் சேவை மையத்தை அழைத்து, கார்டை ரத்துச் செய்வது பற்றித் தெரிவிக்கலாம்.

    மின்னஞ்சல் வாயிலாக ரத்துச் செய்யக் கோரலாம்.

    இணையதளம் வாயிலாகச் சமர்ப்பிக்கலாம்.

    வங்கிக் கிளைக்கு நேரடியாகச் சென்று விண்ணப்பம் அளிக்கலாம்.

    கிரெடிட் கார்டை தொடர்ந்து பயன்படுத்துவதும், ரத்துச் செய்வதும் நமது முடிவு. நம் சூழ்நிலைக்கு ஏற்ப இவ்விஷயத்தில் விவேகமாக முடிவெடுக்கலாம்.
    கிரெடிட் கார்டை பயன்படுத்தி ஓய்வு பெற்ற ஆசிரியரிடம் ரூ.24 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் வாங்கி மோசடி செய்யப்பட்டுள்ளது.
    வேலூர்:

    மேல்பாடி அருகேயுள்ள கொக்கேரி கிராமத்தை சேர்ந்தவர் குருநாதன் (வயது 67), ஓய்வு பெற்ற ஆசிரியர். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் இருந்து கிரெடிட் கார்டு பெற்றுள்ளார். அதனை பயன்படுத்தி பல்வேறு பொருட்கள் வாங்கி வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பாக குருநாதனின் செல்போனுக்கு குறுந்தகவல் ஒன்று வந்தது.

    அதில், அவரது கிரெடிட் கார்டை பயன்படுத்தி ரூ.24 ஆயிரத்துக்கு பொருட்கள் வாங்கியிருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அதனால் அவர் அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து குருநாதன் சம்பந்தப்பட்ட வங்கிக்கு சென்று விசாரித்தார். அப்போது மர்மநபர்கள் குருநாதனின் கிரெடிட் கார்டை பயன்படுத்தி ரூ.24 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் வாங்கி மோசடி செய்தது தெரிய வந்தது.

    இது குறித்து குருநாதன் நேற்று போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
    பலருக்கும் தங்கள் கிரெடிட் கார்டின் அதிகபட்ச கடன் வரம்பு வரை செலவழிப்பதைத் தவிர்க்க வேண்டிய பிரச்சினை ஏற்படுகிறது. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    கிரெடிட் கார்டு எனப்படும் கடன் அட்டை உள்ளவர்களிடமும் இல்லாதவர்களிடமும் உள்ள பொதுவான கருத்து, அது செலவழிக்கத் தூண்டக்கூடியது என்பது. அது ஒருவகையில் உண்மைதான். பலருக்கும் தங்கள் கிரெடிட் கார்டின் அதிகபட்ச கடன் வரம்பு வரை செலவழிப்பதைத் தவிர்க்க வேண்டிய பிரச்சினை ஏற்படுகிறது.

    சரி, கிரெடிட் கார்டு கடன் வரம்பு என்றால் என்ன?

    ஒவ்வொரு மாதமும் கிரெடிட் கார்டை பயன்படுத்தி கூடுதல் வட்டிக் கட்டணங்கள் ஏதும் இல்லாமல், வங்கி எவ்வளவு பணத்தை எடுக்க அனுமதிக்கிறது என்பதே அந்த கார்டுக்கான கடன் வரம்பு.

    இந்த அதிகபட்ச வரம்பு, உங்களின் சம்பளம், கடன் வரலாறு, திருப்பிச் செலுத்தும் திறன், பணியின் வகை, இடம் மற்றும் மற்ற காரணிகளை அடிப்படையாகக் கொண்டு நிர்ணயிக்கப்படும். பொதுவாக அதிகச் சம்பளம் பெற்றால் அதிகக் கடன் வரம்பும், குறைந்த சம்பளம் பெற்றால் குறைந்த கடன் வரம்பும் இருக்கும்.

    உங்கள் கிரெடிட் கார்டின் கடன் வரம்பு ரூ. 2 லட்சமாக இருந்தால், அதைக் கண்டிப்பாகக் குறைக்க வேண்டும் என விரும்பி, ரூ. ஒரு லட்சமாகக் குறைப்பதன் மூலம் குறைவாகச் செலவழிக்கலாம், அந்த வரம்பைத் தாண்டி செலவுகள் போகாது என நீங்கள் நினைக்கலாம்.

    ஆனால் அது சரியல்ல. அதற்கான காரணங்களை இங்கே பார்க்கலாம்...

    முதலாவதாக, அதிகக் கடன் வரம்பு என்பது நல்ல கடன் மதிப்பெண்ணுக்கான குறியீடு. இந்தக் கடன் மதிப்பெண் என்பது முக்கியமாக, உங்களின் செலவழிக்கும் திறன் மற்றும் அதற்காகக் கடன் பெற்ற பணத்தை வட்டியில்லா காலத்துக்குள் திருப்பிச் செலுத்தும் திறன் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது. மேலும் இது நல்ல நிதி நிர்வாகத்துக்கான குறியீடும் ஆகும்.



    உங்களின் கடன் வரம்பை ரூ. 2 லட்சத்தில் இருந்து ரூ. ஒரு லட்சமாகக் குறைத்த பின்னர், அதை முழுவதுமாகப் பயன்படுத்திவிட்டீர்கள் என வைத்துக்கொள்வோம். அதையும் உங்களின் சம்பளத்தைக் கொண்டு செலுத்துவது அவ்வளவு எளிதானது அல்ல. எனவே உங்களின் செலவழிக்கும் பழக்கத்தை மாற்ற வேண்டும், விலையுயர்ந்த பொருட்களுக்காக செலவு செய்வதைக் குறைக்க வேண்டும்.

    ரூ. 2 லட்சம் வரம்புள்ள கிரெடிட் கார்டில் ரூ. 50 ஆயிரம் செலவு செய்தால், அது மொத்த வரம்பில் 25 சதவீதமாக இருக்கும். அதுவே ரூ. ஒரு லட்சம் வரம்புள்ள அட்டை எனில் செலவு 50 சதவீதமாக இருக்கும். கடன் வரம்பில் எப்போதும் 30 சதவீதம் வரை செலவழிப்பது என்பது ஆரோக்கியமானது என்பது வல்லுநர் கருத்து. அதிக வரம்புள்ள அட்டையில், 30 சதவீதம் என்பதே நல்ல தொகையாக இருக்கும் என்பதால் பெரிய செலவுகளை இந்த வரம்புக்கு உட்பட்டுச் செய்யலாம்.

    கிரெடிட் கார்டின் முக்கியப் பயன்பாடே, அவசரகாலச் செலவுகளில் உதவுவதும், விலையுயர்ந்த பொருட்களைத் தவணைமுறையில் வாங்க உதவுவதும்தான். அதிகபட்ச கடன் வரம்புடன், உங்களுக்குத் தேவைப்படும் புதிதாக வெளிவந்த ஸ்மார்ட்போனை வாங்கலாம் அல்லது திடீரெனப் பழுதான துணி துவைக்கும் எந்திரத்தின் பாகங்களை வாங்கமுடியும். இம்முறையில் அவசரகால மற்றும் திட்டமிட்ட செலவுகளின்போது பணத்தை நிர்வாகம் செய்யலாம்.

    கைக்கு வராத சம்பளத்தை மனதில் வைத்து திரும்பி செலுத்திக்கொள்ளலாம் என்ற தைரியத்தில் தேவையில்லாத பொருட்களை வாங்கி, அதிக கிரெடிட் கார்டு தொகையை திரும்பச் செலுத்துதல் என்னும் முடிவில்லா சுழற்சியில் சிக்கிக்கொள்ளாதீர்கள். அதற்குப் பதிலாக, திட்டமிட்ட பொருட்களை வாங்குவதற்குப் பயன்படுத்துங்கள்.

    பொதுவாக, உங்களின் நோக்கம் கிரெடிட் கார்டு வரம்பை உயர்த்துவதாகத்தான் இருக்க வேண்டுமே தவிர, குறைப்பதாக அல்ல. அதிக கடன் வரம்பு, எதிர்காலத்தில் உங்களின் பெரிய செலவுகளைச் சமாளிக்க உதவியாக இருக்கும்.
    தற்போது கிரெடிட், டெபிட் கார்டுகளில் மோசடிக்காரர்கள் செய்யும் மோசடிகளும் அதிகரித்து வருகின்றன. இப்படிப்பட்ட மோசடிகளில் சிக்காமல் தப்பிப்பது எப்படி என்று பார்க்கலாம்.
    தற்போது கிரெடிட் கார்டு, டெபிட் கார்டுகளை பயன்படுத்துவோர் எண்ணிக்கையும், அவர்கள் அதைப் பயன்படுத்தும் அளவும் அதிகரித்து வருகின்றன. அதற்கேற்ப, கிரெடிட், டெபிட் கார்டுகளில் மோசடிக்காரர்கள் செய்யும் மோசடிகளும் அதிகரித்து வருகின்றன. அவை குறித்த செய்திகளையும் நம்மால் அடிக்கடி அறிய முடிகிறது. சரி, நாங்கள் எப்படி இப்படிப்பட்ட மோசடிகளில் சிக்காமல் தப்பிப்பது என்று கேட்கிறீர்களா?

    அதற்கான ஆலோசனைகள் இதோ...

    சுய வரையறையை நிர்ணயித்துக் கொள்வது

    ஒவ்வொரு கிரெடிட் கார்டிலும் எவ்வளவு செலவழிக்கலாம் என்று ஒரு வரையறை (கிரெடிட் லிமிட்) இருக்கும். அது தவிர, நாமாக ஒரு வரையறையை நிர்ணயித்துக் கொள்ளலாம். இவ்வாறு நிர்ணயித்துக்கொள்வதால் இரு நன்மைகள்.

    முதலாவதாக, அதிகம் செலவு செய்யும் எண்ணத்தைக் கட்டுப்படுத்திக்கொள்ளலாம். இரண்டாவதாக, கிரெடிட் கார்டு மோசடிகளின்போது நீங்கள் ஓரளவு தப்பித்துக்கொள்ளலாம்.

    நீங்கள் சொந்தமாக ஒரு கிரெடிட் லிமிட்டை நிர்ணயித்து, அது குறித்து கார்டு நிறுவனத்திடம் தெரிவித்துவிட்டால், கார்டு மூலம் மேற்கொள்ளப்படும் செலவுகள் குறிப்பிட்ட வரையறையை நெருங்கும்போது அல்லது தாண்டும்போது கார்டு நிறுவனம் உங்களை எச்சரிக்கும்.

    உங்கள் கார்டு திருடப்பட்டு பயன் படுத்தப்பட்டாலும், அந்த வரையறையைத் தாண்டி செலவு செய்ய முடியாது.

    உங்களின் தனிப்பட்ட கிரெடிட் லிமிட்டை பல்வேறு சூழல்களுக்கு ஏற்ப வெவ்வேறு விதமாக அமைத்துக்கொள்ளலாம். உதாரணத்துக்கு, வெளிநாட்டில் பயன்படுத்துவது, ஆன்லைனில் ஷாப்பிங் செய்ய பயன்படுத்துவது, உணவகங்களில் உணவு உண்ண உபயோகிப்பது இப்படி. ‘ஆட்-ஆன்’ கார்டுகள் எனப்படும் கூடுதல் கார்டுகளிலும் இதுபோல ‘சப் லிமிட்’டை பிரதான கார்டுதாரர் ஏற்படுத்திக்கொள்ளலாம்.



    வலுவான ‘பாஸ்வேர்டு’

    புதிய ‘டிஜிட்டல் இந்தியா’ உந்துதலால், தற்போது ஆன்லைன் பணப் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை எகிறியிருக்கிறது. ரிசர்வ் வங்கி தெரிவிக்கும் ஒரு புள்ளிவிவரத்தின்படி இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் மட்டும் நம் நாட்டில் நூறு கோடிக்கும் மேற்பட்ட ஆன்லைன் பரிவர்த்தனைகள் நடைபெற்றிருக்கின்றன. இந்தக் கணக்கில், நாம் செய்திருக்கும் பரிவர்த்தனைகளும் அடங்கும் என்பதால், நாம் எப்போதும் வலுவான பாஸ்வேர்டை பயன்படுத்துவது நல்லது. நமது பாஸ்வேர்டு, எழுத்துகள், எண்கள் மற்றும் சிறப்புக் குறியீடுகள் கொண்டதாய், எளிதில் ஊகிக்க முடியாததாய் இருக்க வேண்டும்.

    வெவ்வேறு கணக்குகளுக்கு வெவ்வேறு பாஸ்வேர்டுகளை உபயோகிப்பதும், குறிப்பிட்ட கால இடைவெளியில் அவற்றை மாற்றுவதும் அவசியம். ஆன்லைன் என்றாலும், ஆப்லைன் என்றாலும், பரிவர்த்தனையின்போது நாம் பாதுகாப்பான சூழலில் இருக்கிறோமா என உறுதி செய்துகொள்ள வேண்டும். எவ்வளவு நெருக்கமானவராக இருந்தாலும், பிறரிடம் நமது பாஸ்வேர்டை பகிர்ந்துகொள்ளக் கூடாது.

    பொது இடங்களில்...

    பொது இடங்களில் கிரெடிட், டெபிட் கார்டை பயன்படுத்தும்போது கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். நமது கார்டு எண், ஏமாற்றுப் பேர்வழிகளால் திருடப்படவோ, படம் எடுக்கப்படவோ வாய்ப்பு அதிகம்.

    உங்களின் கிரெடிட் கார்டு குறித்த எந்தத் தகவலையும் சமூக வலைதளங்களில் வெளியிடக்கூடாது. காரணம், இணைய வழியிலான தகவல் திருட்டு இன்று மிக அதிகம்.

    ‘வருமுன் காக்க வேண்டும்’ என்பது பழமொழி. மோசடிக்கு உள்ளானபின் வருந்துவதை விட, அது நடக்காமல் தற்காத்துக்கொள்வதே சிறப்பு.

    பணம் செலுத்துவதற்கு கிரெடிட் கார்டு வசதியான வழியாக இருக்கலாம், நாம் கார்டை பயன்படுத்தும் அளவுக்கு ஏற்ப ஊக்கப்பரிசுகளும் தள்ளுபடிகளும் கிடைக்கலாம். அதேநேரம், கிரெடிட் கார்டில் மோசடிக்கான வாய்ப்புகளும் அதிகம்.

    எனவே, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள், எப்போதும்போல் வசதியாக கார்டுகளை பயன்படுத்துங்கள். 
    ×