என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » குமரி மாவட்டம்
நீங்கள் தேடியது "குமரி மாவட்டம்"
பிரதமர் நரேந்திர மோடி குமரி மாவட்டம் வருகை திடீரென்று தள்ளிவைக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 19-ந் தேதிக்கு பதில் மார்ச் 1-ந் தேதிக்கு பிரதமர் மோடியின் குமரி மாவட்ட சுற்றுப்பயணம் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது. #PMModi
நாகர்கோவில்:
பாராளுமன்றத்திற்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இதைத் தொடர்ந்து அனைத்து கட்சிகளும் தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகின்றன.
தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படாவிட்டாலும் பாரதிய ஜனதா, காங்கிரஸ் உள்பட அனைத்து கட்சிகளும் தேர்தல் வியூகங்களை இப்போதே வகுத்து செயல்பட தொடங்கிவிட்டன.
பிரதமர் நரேந்திர மோடி நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பொது மக்களை சந்தித்து வருகிறார். அதன்படி கடந்த 27-ந்தேதி நரேந்திர மோடி தமிழகம் வந்தார். மதுரையில் நடைபெற்ற பிரமாண்டமான விழாவில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு அவர் அடிக்கல் நாட்டி பேசினார்.
அதன்பிறகு 2-வது கட்டமாக கடந்த 10-ந்தேதி திருப்பூருக்கு பிரதமர் நரேந்திர மோடி வருகை தந்து நலத்திட்டங்களை தொடங்கி வைத்ததுடன் தேர்தல் பிரசாரமும் மேற்கொண்டார்.
3-வது கட்டமாக வருகிற 19-ந்தேதி பிரதமர் நரேந்திர மோடி குமரி மாவட்டத்திற்கு வருகை தர உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பிரதமர் பங்கேற்கும் விழா நடத்துவதற்கான இடம் தேர்வு உள்பட அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டன.
கன்னியாகுமரி அருகே உள்ள அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி மைதானத்தில் பிரதமர் பங்கேற்கும் விழாவை நடத்த தீர்மானிக்கப்பட்டு மைதானத்தை சீரமைக்கும் பணிகளும் தொடங்கியது.
இந்த மைதானத்தில் நடைபெறும் அரசு விழாவில் ரூ.40 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், முடிக்கப்பட்ட திட்டங்களை திறந்து வைத்தும் பிரதமர் நரேந்திர மோடி பேசுவார் என்று அறிவிக்கப்பட்டது.
மேலும் அதே மைதானத்தில் பாரதிய ஜனதா நிர்வாகிகள் மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி பேசவும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்ததால் அந்த மைதானத்தில் 2 விழாக்களுக்கும் தனித்தனியாக மேடை அமைக்க திட்டமிட்டு பணிகள் நடந்தது.
ஜே.சி.பி. எந்திரங்கள் மூலம் மைதானம் சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்றது. மத்திய மந்திரியும், கன்னியாகுமரி தொகுதி பாரதிய ஜனதா எம்.பி.யுமான பொன்.ராதாகிருஷ்ணன் அங்கு சென்று பணிகளை துரிதப்படுத்தினார். பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றியும் அவர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி குமரி மாவட்டம் வருகை திடீரென்று தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி 19-ந் தேதிக்கு பதில் மார்ச் 1-ந் தேதிக்கு பிரதமர் மோடியின் குமரி மாவட்ட சுற்றுப்பயணம் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது. அன்றைய தினம் அவர் குமரி மாவட்டத்தில் நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைத்து தேர்தல் பிரசாரம் மேற்கொள்வார் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனை இன்று தமிழக பாரதிய ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜனும் உறுதிப்படுத்தினார்.
பாராளுமன்ற தேர்தல் தேதி மார்ச் முதல் வாரத்தில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் தேதி அறிவித்த பிறகு பிரதமர் குமரி மாவட்டம் வருகை தந்தால் இங்கு நடைபெறும் பாரதிய ஜனதா கட்சி பொதுக் கூட்டத்தை பாராளுமன்ற தேர்தல் பிரசார கூட்டமாக நடத்தலாம் என்று திட்டமிட்டு உள்ளதால் பிரதமரின் குமரி வருகை தள்ளிவைக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. #PMModi

தமிழகம் முழுவதும் இன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. குமரியில் மொத்த வாக்காளர்கள் மற்றும் புதிதாக சேர்க்கப்பட்ட வாக்காளர் விபரங்களை கலெக்டர் பிரசாந்த் வடநேரே வெளியிட்டார். #Finalvoterslist
நாகர்கோவில்:
தமிழ்நாடு முழுவதும் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் முடிவடைந்த நிலையில் இன்று புதிய வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
குமரி மாவட்டத்தில் நாகர்கோவில், கன்னியாகுமரி, பத்மநாபபுரம், குளச்சல், கிள்ளியூர், விளவங்கோடு ஆகிய 6 சட்டசபை தொகுதிகள் உள்ளன.
இத்தொகுதிகளில் உள்ள மொத்த வாக்காளர்கள் மற்றும் புதிதாக சேர்க்கப்பட்ட வாக்காளர் விபரங்களை கலெக்டர் பிரசாந்த் வடநேரே இன்று வெளியிட்டார்.
அதன்படி குமரி மாவட்டத்தில் மொத்தம் 14 லட்சத்து 77 ஆயிரத்து 161 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 7 லட்சத்து 45 ஆயிரத்து 626.
பெண் வாக்காளர்கள் 7 லட்சத்து 31 ஆயிரத்து 387. இதர வாக்காளர்கள் 148.
குமரி மாவட்டத்தின் 6 தொகுதிகளிலும் கன்னியாகுமரி தொகுதியிலேயே அதிக வாக்காளர்கள் உள்ளனர். இங்கு 2 லட்சத்து 75 ஆயிரத்து 508 பேர் உள்ளனர்.
பத்மநாபபுரம் தொகுதியில் குறைந்த பட்சமாக 2 லட்சத்து 23 ஆயிரத்து 964 வாக்காளர்கள் உள்ளனர்.
வாக்காளர் பட்டியிலில் 37 ஆயிரத்து 731 பேர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஆண்கள் 17 ஆயிரத்து 382 பேர். பெண்கள் 20 ஆயிரத்து 344.
நீக்கப்பட்ட வாக்காளர் எண்ணிக்கை 7,671 பேர். ஆண் வாக்காளர்கள் 3,903 பேரும், பெண் வாக்காளர்கள் 3,763 பேரும் இதர வாக்காளர்கள் 5 பேரும் நீக்கப்பட்டு உள்ளனர்.
புதிய வாக்காளர் பட்டியலை வெளியிட்டு கலெக்டர் பிரசாந்த் வடநேரே கூறியதாவது:-
1-1-2019-ம் தேதி 18 வயது பூர்த்தியானவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம். அதற்கு அவர்கள் 1950 என்ற இலவச தொலைபேசியில் தொடர்பு கொண்டு விபரங்களை கேட்டறியலாம்.
மேலும் இந்த தொலைபேசியில் தொடர்பு கொண்டு பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் செய்து கொள்ளலாம். வாக்காளர் பட்டியலில் எந்த ஒரு நபரும் விடுபடக்கூடாது என்ற தேர்தல் ஆணையத்தின் முடிவை அனைவரும் பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய வாக்காளர் பட்டியல் வெளியீட்டு நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அதிகாரி ரேவதி, சப்- கலெக்டர்கள் பவன்குமார் கிரியப்பனார், சந்தியா அரி மற்றும் தேர்தல் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இவர்களுடன் அ.தி.மு.க. சார்பில் நகர செயலாளர் சந்துரு, தி.மு.க. சார்பில் வக்கீல் லீனஸ், காங்கிரஸ் சார்பில் கிழக்கு மாவட்ட தலைவர் வக்கீல் ராதாகிருஷ்ணன், தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் அமுதன் உள்பட பல்வேறு கட்சிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
குமரி மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளிலும் ஆண், பெண் மற்றும் இதரர் குறித்த வாக்காளர்கள் விவரம் வருமாறு:-
தொகுதி ஆண் பெண் இதர மொத்தம்
கன்னியாகுமரி 138236 137206 66 275508
நாகர்கோவில் 124264 125651 13 249928
குளச்சல் 129265 122131 14 251410
பத்மநாபபுரம் 114687 109257 20 223964
விளவங்கோடு 118003 121164 20 239187
கிள்ளியூர் 121171 115978 15 237164
மொத்தம் 745626 731387 148 1477161

குமரி மாவட்டத்தில் வெவ்வேறு பகுதிகளில் ஒரே நாளில் 3 பேர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தக்கலை:
நாகர்கோவில் இடலாக்குடி பகுதியை சேர்ந்தவர் குமரேசன். இவரது மகன் தனபால் (வயது 25). இவர் வேலை தேடி வந்தார். ஆனால் அவருக்கு வேலை கிடைக்கவில்லை.
இதனால் மன வேதனையுடன் காணப்பட்டு வந்தார். இந்த நிலையில் தனபால் விஷம் குடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் வீட்டின் அருகே மயங்கி கிடந்தார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து கோட்டார் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் அன்பு பிரகாஷ், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தக்கலை கீழகுளம் பகுதியை சேர்ந்தவர் புஷ்பகரன் (43). ரப்பர் பால்வெட்டும் தொழிலாளி. இவர் குடித்து விட்டு சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.
சம்பவத்தன்று கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. இதில் மனவேதனை அடைந்த புஷ்பகரன் விஷம் குடித்து வீட்டின் அருகே உள்ள தோட்டத்தில் உயிருக்கு ஆபத்தான நிலையில் மயங்கி கிடந்தார்.
அவரை மீட்டு ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தக்கலை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் விஷ்ணுகுமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
சீதப்பாலை அடுத்த பூலாங்குழி பகுதியை சேர்ந்தவர் டென்னிசன் (29). தொழிலாளி. இவர் கடந்த 25-ந் தேதி பூலாங்குழி பகுதியில் விஷம் குடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மயங்கி கிடந்தார். அந்த வழியாக சென்றவர்கள் டென்னிசனை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து ஆரல்வாய் மொழி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து அவர் எதற்காக தற்கொலை செய்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குமரி மாவட்டத்தில் கடந்த ஆண்டில் ரூ.934 கோடியே 1 லட்சத்து 8 ஆயிரத்து 104-க்கு மதுபானங்கள் விற்பனை ஆகி உள்ளது.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் 92 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன.
நாள் ஒன்றுக்கு 2½ கோடி முதல் 2¾ கோடி வரை மதுபானங்கள் விற்பனை ஆகி வருகின்றன. பண்டிகை காலங்களில் மதுபானங்களின் விற்பனை அளவு அதிகமாக இருக்கும். புத்தாண்டையொட்டி கடந்த 3 நாட்களில் ரூ.9 கோடியே 89 லட்சத்து 645-க்கு மதுபானங்கள் விற்பனை ஆகி உள்ளன.
2018-ம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரை ஓராண்டில் ரூ.934 கோடியே 1 லட்சத்து 8 ஆயிரத்து 104-க்கு மதுபானங்கள் விற்பனை ஆகி உள்ளது. டிசம்பர் மாதத்தில் அதிகபட்சமாக ரூ.83 கோடியே 24 லட்சத்து 73 ஆயிரத்து 885-க்கு மதுபானங்கள் விற்று தீர்ந்துள்ளன.
பிப்ரவரி மாதத்தில் குறைந்தபட்சமாக ரூ.71 கோடியே 58 லட்சத்து 23 ஆயிரத்து 915-க்கு மதுபானங்கள் விற்பனை ஆகி உள்ளது. ஜனவரி மாதத்தில் ரூ.76 கோடியே 17 லட்சத்து 30 ஆயிரத்து 745-க்கு, மார்ச் மாதத்தில் ரூ.77 கோடியே 90 லட்சத்து 31 ஆயிரத்து 644-க்கும், ஏப்ரல் மாதத்தில் ரூ.81 கோடியே 52 லட்சத்து 67 ஆயிரத்து 355-க்கும் மதுபானங்கள் விற்கப்பட்டுள்ளது.
மே மாதத்தில் ரூ.79 கோடியே 31 லட்சத்து 70 ஆயிரத்து 825-க்கும், ஜூன் மாதத்தில் ரூ.78 கோடியே 17 லட்சத்து 51 ஆயிரத்து 590-க்கும், ஜூலை மாதத்தில் ரூ.79 கோடியே 30 லட்சத்து 55 ஆயிரத்து 625-க்கும், ஆகஸ்டு மாதத்தில் ரூ.76கோடியே 37 லட்சத்து 23 ஆயிரத்து 960-க்கும் மதுபானங்கள் விற்பனை ஆகி உள்ளது.
செப்டம்பர் மாதத்தில் ரூ.79 கோடியே 30 லட்சத்து 53 ஆயிரத்து 355-க்கும், அக்டோபர் மாதத்தில் ரூ.76 கோடியே 11 லட்சத்து 19 ஆயிரத்து 970-க்கும், நவம்பர் மாதத்தில் ரூ.74 கோடியே 99 லட்சத்து 5 ஆயிரத்து 205-க்கும் மது பானங்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளது.

குமரி மாவட்டத்தில் உள்ள கடை வியாபாரிகள் தாங்களாகவே முன்வந்து பிளாஸ்டிக் ஒழிப்பில் ஈடுபட்டுள்ளனர். #plasticban
குமரி மாவட்டத்தில் உள்ள கடை வியாபாரிகள் தாங்களாகவே முன்வந்து பிளாஸ்டிக் ஒழிப்பில் ஈடுபட்டுள்ளனர். பிளாஸ்டிக் பைகள், கப்புகள், பிளேட்டுகளை கடைகளில் இருந்து அகற்றி அவற்றுக்கு பதில் மாற்று பொருட்களை பயன்படுத்தி வருகிறார்கள்.
கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் கட்டாயம் துணிப்பை கொண்டு வரும்படி அறிவுறுத்துகிறார்கள். அவ்வாறு துணிப்பை கொண்டு வராத வாடிக்கையாளர்களுக்கு அட்டைப் பெட்டிகளில் பொருட்களை கொடுத்து வருகிறார்கள்.
இதேபோல துணிக்கடைகளிலும் பிளாஸ்டிக் பைகளுக்கு பதில் வாடிக்கையாளர்களுக்கு துணிப்பைகள் வினியோகிக்கப்பட்டன.
மீனாட்சிபுரம், கோட்டார், வடசேரி பகுதியில் உள்ள டீக்கடைகளில் பார்சல் டீ-க்கு வழங்கப்படும் பிளாஸ்டிக் பைகள் நிறுத்தப்பட்டன. பேப்பர் கப்புகளும் அப்புறப்படுத்தப்பட்டன. அவற்றுக்கு பதிலாக பார்சல் டீ, காபி வாங்குபவர்கள் கட்டாயம் பாத்திரம் கொண்டு வர அறிவுறுத்தப்பட்டனர். டாஸ்மாக்கடைகளில் உள்ள பார் உரிமையாளர்களுக்கு ஏற்கனவே அதிகாரிகள் பல்வேறு அறிவுரைகளை வழங்கி இருந்தனர். பார்களில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுவது கண்டுபிடிக்கப்பட்டால் அதற்கு பார் உரிமையாளர் தான் பொறுப்பேற்க வேண்டும் என உத்தர விடப்பட்டது.
இதனால் டாஸ்மாக் கடைகளில் பிளாஸ்டிக் பொருட்கள் தவிர்க்கப்பட்டன. பிளாஸ்டிக் கப்புகளுக்கு பதிலாக கண்ணாடி டம்ளர்கள், தண்ணீர் பாக்கெட்டுகளுக்கு பதிலாக வாட்டர் பாட்டில்கள் பயன்படுத்தப்பட்டன. தின்பண்டங்களுக்கு வழங்கப்படும் பேப்பர் தட்டுகளுக்கு பதில் சில்வர் தட்டுகள் வினியோகிக்கப்பட்டது. #plasticban

குமரி மாவட்டத்தில் அனுமதியின்றி மது விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மது விற்பவர்களை போலீசார் கண்காணித்து வந்தனர்.

இரணியல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஞானசிகாமணி மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே வரும்போது அங்கு சந்தேகப்படும்படியாக மூதாட்டி ஒருவர் நின்று கொண்டிருந்தார்.
போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர் அதே பகுதியைச் சேர்ந்த கஸ்தூரி (வயது 63) என்பதும், அந்த பகுதியில் அனுமதியின்றி மது விற்றதும், அவரிடமிருந்து 5 மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதேபோல் ஈத்தாமொழி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர். அவர்கள் சம்பக்குளம் அருகே வரும்போது அங்கு அனுமதியின்றி மதுவிற்றதாக சுரேந்திரன் (39) என்பவரை கைது செய்து அவரிடமிருந்த 3 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். புதுக்கடை பகுதியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுரேந்திரன் மற்றும் போலீசார் ரோந்து வந்தனர். அவர்கள் காப்பிக்காடு சந்திப்பில் வரும்போது வாலிபர் ஒருவர் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்தார். போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர், அதே பகுதியைச் சேர்ந்த ஜோஸ் (40) என்பதும், அவர் அனுமதியின்றி மது விற்றதும் தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து அவரிடமிருந்து 5 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். #tamilnews

டாக்டர்கள் போராட்டம் காரணமாக குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் புற நோயாளிகள் பிரிவு இன்று செயல்படாததால் சிகிச்சைக்கு வந்த நோயாளிகள் அவதிக்கு ஆளானார்கள். #DoctorsProtest
நாகர்கோவில்:
தமிழகத்தில் அரசு ஆஸ்பத்திரிகளில் பணிபுரியும் டாக்டர்களுக்கு மத்திய அரசில் பணிபுரியும் டாக்டர்களுக்கு இணையான சம்பளம் வழங்க வேண்டும் என்று அரசு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பு கோரிக்கை விடுத்தது.
மத்திய அரசு டாக்டர்களுக்கு இணையான ஊதியம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அரசு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பு இன்று ஒரு நாள் பணி புறக்கணிப்பு போராட்டம் நடத்தினர்.
குமரி மாவட்டத்திலும் அரசு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பை சேர்ந்த டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
டாக்டர்கள் போராட்டம் காரணமாக குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் புற நோயாளிகள் பிரிவு இன்று செயல்படவில்லை.
இதனால் சிகிச்சைக்கு வந்த நோயாளிகள் அவதிக்கு ஆளானார்கள்.
குமரி மாவட்டத்தில் 400-க்கும் மேற்பட்ட டாக்டர்கள் போராட்டத்தில் பங்கேற்றதால் மாவட்டம் முழுவதும் உள்ள சுகாதார மையங்களிலும் பணிகள் பாதிக்கப்பட்டது.
9 அரசு ஆஸ்பத்திரிகள், இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரிகளும் இன்று முழுமையாக செயல்படவில்லை. ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியிலும் இன்று புற நோயாளிகள் பிரிவுக்கு டாக்டர்கள் செல்லவில்லை.
காலை 6 மணிக்கே வந்த நோயாளிகள் டாக்டர்கள் இல்லாததால் சிரமத்திற்கு ஆளானார்கள். இதையடுத்து பயிற்சி டாக்டர்கள் மூலம் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. சுமார் 100 பயிற்சி டாக்டர்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். #DoctorsProtest

குமரி மாவட்டத்தில் பன்றி காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் 14 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். #SwineFlu
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் கடந்த இரு மாதங்களாக பன்றி காய்ச்சல் நோய் பாதிப்பு அதிகமாக காணப்பட்டது.
பன்றி காய்ச்சல் நோயை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகமும், சுகாதார துறை அதிகாரிகளும் கடும் நடவடிக்கை எடுத்தனர். நோய் பாதித்த பகுதிகளில் தடுப்பு மாத்திரைகளும் வினியோகிக்கப்பட்டது.
என்றாலும் நாகர்கோவிலைச் சேர்ந்த கல்லூரி பேராசிரியை தெரசா மற்றும் கர்ப்பிணி பெண் என 6 பேர் பலியானார்கள். இது மாவட்ட மக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியது.
பன்றி காய்ச்சல் நோய் பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டது. அங்கு நோய் அறிகுறி உள்ளவர்கள் அனுமதிக்கப்பட்டனர். அவர் களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் பலர் குணமடைந்து வீடு திரும்பினர்.
தற்போது ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள பன்றி காய்ச்சல் வார்டில் 14 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்களில் 2 பேர் ஆண்கள், 9 பெண்கள் மற்றும் 2 ஆண் குழந்தைகள் சிகிச்சையில் உள்ளனர்.
இந்த நிலையில் நாகர்கோவில், ராணித்தோட்டம், தடி டெப்போ பகுதியை சேர்ந்த மூதாட்டி கமலம் (வயது70) என்பவர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பன்றி காய்ச்சல் நோய் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
நோய் முற்றிய நிலையில் சிகிச்சை பலனின்றி கமலம் நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார். இவரையும் சேர்த்து குமரி மாவட்டத்தில் பன்றி காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.
குமரி மாவட்டத்தில் பன்றி காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதை தொடர்ந்து சுகாதாரத்துறை நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளது. மாவட்டத்தின் அனைத்து நகராட்சி, ஊராட்சி, பேரூராட்சி பகுதிகளிலும் சுகாதார பணியாளர்கள் நோய் கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நோய் அறிகுறி உள்ளவர் களை உடனடியாக ஆஸ்பத்திரியில் சேர்ந்து சிகிச்சை பெறவும் அறிவுரை வழங்கி வருகிறார்கள். இது தவிர துப்புரவு பணிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளது. #SwineFlu

குமரி மாவட்டத்தில் போலீசார் நடத்திய சோதனையில் ஹெல்மெட், ஆவணங்கள் இன்றி வாகனம் ஓட்டிவந்ததாக 118 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் குற்றச்செயல்களை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். மேலும் மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணியாமல் செல்பவர்கள் மீது பாரபட்சம் இன்றி நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டு இருந்தார்.
அதன்படி நேற்று நாகர்கோவில், தக்கலை, குளச்சல், கன்னியாகுமரி ஆகிய சப் டிவிஷன்களில் போலீசார் விடிய, விடிய வாகன சோதனையில் ஈடுபட்டனர். நாகர்கோவிலில் நடந்த சோதனையில் ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிளில் வந்ததாக 118 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
மேலும் ஆவணங்கள் மற்றும் லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டியதாக 10 பேர் மீதும் வழக்குபதிவு செய்து அபராத தொகை விதித்தனர்.
தக்கலையில் நடந்த சோதனையில் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியதாக 128 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். முறையான ஆவணம் இன்றி வாகனம் ஓட்டி வந்ததாக 31 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
குளச்சல் பகுதியில் நடந்த வாகன சோதனையில் ஹெல்மெட், ஆவணங்கள் இன்றி வாகனம் ஓட்டிவந்ததாக 179 பேர் மீதும், கன்னியாகுமரியில் நடந்த சோதனையில் குடிபோதையில் வாகனம் ஓட்டியதாகவும், ஹெல்மெட் அணியாமல் வந்ததாக 301 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
மேலும் அவர்களுக்கு அபராத தொகையும் விதித்தனர். நேற்று மாவட்டம் முழுவதும் நடந்த இந்த தொடர் சோதனையில் மொத்தம் 767 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த சோதனை இன்றும் தொடர்ந்து நடந்து வருகிறது. மாவட்டத்தில் முக்கிய சந்திப்பு பகுதிகளில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். #tamilnews

கஜா புயல் எதிரொலியாக குமரி மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்தது. முக்கடல் அணை பகுதியில் பலத்த மழை பெய்தது. #CycloneGaja #TNRains
நாகர்கோவில்:
வங்கக்கடலில் உருவான கஜா புயல் இன்று மாலை கடலூர்-பாம்பனுக்கு இடையே கரையை கடக்கும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது. கஜா புயல் காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
குமரி மாவட்டத்திலும் பரவலாக மழை கொட்டி தீர்த்தது. நாகர்கோவிலில் நேற்று மாலை சுமார் 1 மணி நேரமாக கனமழை பெய்தது. இதனால் கோட்டார், செம்மாங்குடி ரோடு, கே.பி. ரோடு, மகளிர் கிறிஸ்தவக் கல்லூரி சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இரவும் விட்டு விட்டு மழை பெய்தது.
முக்கடல் அணை பகுதியில் பலத்த மழை பெய்தது. சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக மழை கொட்டி தீர்த்தது. அங்கு அதிகபட்சமாக 64.7 மி.மீ. மழை பதிவானது. பூதப்பாண்டி, சுருளோடு, ஆணைக்கிடங்கு, அடையாமடை, புத்தன் அணை மற்றும் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது.
பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதியிலும், மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் மழை பெய்து வருகிறது. அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து அதிகரித்துள்ளது.
பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 27.15 அடியாக இருந்தது. அணைக்கு 546 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 507 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 72.30 அடியாக உள்ளது. அணைக்கு 199 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 245 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் அணையின் நீர்மட்டம் 3 மாதங்களுக்கு பிறகு மீண்டும் இன்று காலை நிரம்பி வழிந்தது. 25 அடி கொள்ளளவு கொண்ட அணையின் நீர்மட்டம் நேற்று 24.90 அடியாக இருந்தது. இன்று காலை அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியது. அணை நிரம்பியதையடுத்து மறுகாலில் தண்ணீர் சீறிப் பாய்ந்து செல்கிறது.
மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மி.மீ. வருமாறு:-
பேச்சிப்பாறை-12, பெருஞ்சாணி-22.8, சிற்றாறு-1-2.6, சிற்றாறு-2-3.6, மாம்பழத்துறையாறு-27, முக்கடல்-64.7, நாகர்கோவில்-27.8, பூதப்பாண்டி- 2.8, சுருளோடு-13.4, கன்னிமார்-2.6, பாலமோர்-15.2, ஆணைக்கிடங்கு-18, அடையாமடை-23, புத்தன்அணை-23.4, திற்பரப்பு-4.8. #CycloneGaja #TNRains

குமரி மாவட்டத்தில் பன்றி காய்ச்சலுக்கு நேற்று 2 பேர் பலியாகி உள்ள நிலையில் இதுவரை 6 பேர் பலியாகி உள்ளதாகவும் 22 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் சுகாதார அதிகாரி தெரிவித்துள்ளார். #swineflu
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் பன்றி காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதை தடுக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.
பன்றி காய்ச்சலுக்கு 4 பேர் பலியாகி இருந்தனர். இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் திங்கள் சந்தை கண்டன்விளையைச் சேர்ந்த எஸ்தர் கிங் (வயது 46), அஞ்சுகிராமம் சுப்பிரமணிபுரத்தைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் சண்முகவேல் (68) ஆகிய இருவரும் பலியானார்கள். இதையடுத்து பலியானோர் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் பன்றி காய்ச்சல் வார்டில் நேற்று 12 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். இதில், 6 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதையடுத்து பன்றி காய்ச்சல் வார்டில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 6 ஆக குறைந்தது.
இந்த நிலையில் நேற்றிரவு மேலும் 4 பேர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இதையடுத்து 10 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்கள். தனியார் ஆஸ்பத்திரி களில் 12 பேர் பன்றி காய்ச்சல் அறிகுறியுடன் சிகிச்சையில் உள்ளனர்.
இது குறித்து சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் மதுசூதனன் கூறியதாவது:-
குமரி மாவட்டத்தில் பன்றி காய்ச்சல் பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. சுகாதாரத்துறை அதிகாரிகள் தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். பன்றி காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு தடுப்பு மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளது.
இதுவரை பன்றி காய்ச்சலுக்கு 6 பேர் பலியாகி உள்ளனர். அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் 22 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார். #swineflu

குமரி மாவட்டத்தில் தடையை மீறி பட்டாசு வெடித்த 23 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர்களில் 7 பேர் கைதாகி பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். #Diwali
நாகர்கோவில்:
தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
இந்த ஆண்டு முதல் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்கலாம் என சுப்ரீம் கோர்ட்டு கட்டுப்பாடு விதித்திருந்தது. இதையடுத்து குமரி மாவட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் உத்தரவின்பேரில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
குமரி மாவட்டத்தில் தடையை மீறி பட்டாசு வெடித்த 23 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர்களில் 7 பேர் கைதாகி பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
நாகர்கோவில் வடிவீஸ்வரத்தைச் சேர்ந்த குமாரசாமி (வயது 24), இடலாக்குடியைச் சேர்ந்த முபாரக் (26), ஆரல்வாய்மொழி அனந்தபத்மநாபபுரத்தைச் சேர்ந்த முருகன் (42), ராஜாக்கமங்கலத்தைச் சேர்ந்த தினகரன் (40), சுசீந்திரத்தைச் சேர்ந்த பன்னீர்செல்வம் (55), பிச்சைமணி (50), ராஜாக் கமங்கலத்தைச் சேர்ந்த லிங்கராஜ் (61) ஆகியோர் கைதானார்கள்.
நாகர்கோவில் நேசமணி நகர் பகுதியில் தடையை மீறி பட்டாசு வெடித்ததாக அரவிந்த் (21), கன்னியாகுமரியில் பாலபிரசாத் (35), வடசேரியில் சிவா (28), செல்வம் (48), ரமேஷ் (27), சுகிஷ் (24), முகிலன் குடியிருப்பில் ஏசுமணி (63) என்பவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தக்கலை கேரளபுரத்தில் தங்கராஜ் (62), பிரசாத் (28), சிவசதா (37), அஞ்சுகிராமத்தில் செல்வம் (45), பிரபு (35), ஆனந்த் (24), மணிகண்டன் (25), ஈத்தாமொழியில் விஜய் (22), மார்த்தாண்டம் திக்குறிச்சியில் அனிஷ் (23), சந்திரசேகர் (36), ராஜாக்கமங் கலத்தில் நாகலிங்ம் (23) உள்பட 23 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தக்கலை சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் கோழிப் போர்விளை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அனுமதியின்றி பட்டாசு விற்பனை செய்த ராஜகுமார் (45) என்பவரை கைது செய்தனர். இதேபோல் இரணியல் சப்-இன்ஸ்பெக்டர் ராபர்ட் ஜெகன் தலைமையிலான போலீசார் மயிலோடு பகுதியில் அனுமதியின்றி பட்டாசு விற்பனை செய்த ராஜு என்பவரை கைது செய்தனர். #tamilnews

×

X