search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கும்மிடிப்பூண்டி பேரூராட்சி"

    தரமான முறையில் தரைபாலத்தை கட்டி தர வலியுறுத்தி அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் சுமார் 100 பேர் கும்மிடிப்பூண்டி பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு திடீர் போராட்டம் நடத்தினர்.
    கும்மிடிப்பூண்டி:

    கும்மிடிப்பூண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பாவேந்தர் பாரதிதாசன் சாலையில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை மற்றும் ஈசா பெரிய ஏரியின் உபரி நீர் செல்லும் ஓடை கால் வாயின் மேல் ஒரு சிறிய பாலம் அமைக்கும் கட்டு மானப்பணி நடைபெற்று வருகிறது.

    தரைப்பாலத்தின் கட்டு மானப்பணியில் இரும்பு கம்பிகளை பயன்படுத்தாமல் வெறும் சிமெண்ட், மணல் ஆகிவற்றை மட்டுமே ஒப்பந்ததாரர்கள் பயன்படுத்தி வருவதாகவும், பாலத்தின் பக்கவாட்டு சுவரை தரமற்ற முறையில் கட்டுவதாகவும் புகார் எழுந்து உள்ளது.

    இந்த நிலையில், பாலத்தில் தற்போது நடைபெற்று வரும் பணிகளை உடனடியாக நிறுத்தி விட்டு, இரும்பு கம்பிகளை கொண்டு தரமான முறையில் பாலத்தை கட்டிட வேண்டும். என்ற கோரிக்கையை வலியுறுத்தி அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் சுமார் 100 பேர் கும்மிடிப்பூண்டி பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு திடீர் போராட்டம் நடத்தினர்.

    ஆனால் கோரிக்கை மனுவை பெற்றுக்கொள்ள அலுவலகத்தில் யாரும் இல்லாததால் சுமார் 1 மணி நேரம் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் காத்திருந்தனர்.

    இந்த நிலையில் அங்கு வந்து சேர்ந்த வரிதண்டலர் ரங்கநாதனிடம் தங்களது மனுவை கொடுத்து விட்டு பெண்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். #tamilnews
    ×