search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குழந்தைகள் உயிரிழப்பு"

    • தீ விபத்தில் சிக்கி 10 குழந்தைகள் உடல் கருகி உயிரிழந்தன.
    • தீக்காயம் ஏற்பட்ட சில குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றன.

    உத்தர பிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டம் ஜான்சி லட்சுமிபாய் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் குழந்தைகள் வார்டில் கடந்த 15ம் தேதி அன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ மளமளவென மற்ற பகுதிகளுக்கும் பரவியது.

    சம்பவத்தன்று தீ விபத்தில் சிக்கி 10 குழந்தைகள் உடல் கருகி உயிரிழந்தன. 39 குழந்தைகள் பத்திரமாக மீட்கப்பட்டன.

    மேலும், தீக்காயம் ஏற்பட்ட சில குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றன.

    சிகிச்சைப் பிரிவில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டது.

    தீ விபத்தில் சிக்கிய மேலும் சில குழந்தைகள் கவலைக்கிடமான நிலையில் இருப்பதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்பட்டது. மேலும் சில குழந்தைகள் இறந்தன.

    இந்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மேலும் இரண்டு குழந்தைகள் சிகிச்சை பலனின்று இன்று உயிரிழந்தன. இதனால், உயிரிழப்பு எண்ணிக்கை இதுவரை 17ஆக உயர்ந்துள்ளது.

    • புதுக்கோட்டையில் ராணியார் அரசு மகப்பேறு ஆஸ்பத்திரி உள்ளது.
    • குழந்தைகள் சிகிச்சை பலன் இல்லாமல், சிகிச்சை சரியில்லாமல் இறக்கவில்லை.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டையில் ராணியார் அரசு மகப்பேறு ஆஸ்பத்திரி உள்ளது. இங்கு சிகிச்சையின்போது கடந்த 21 மாதங்களில் 247 பச்சிளம் குழந்தைகள் இறந்ததாக தகவல் வெளியானது.

    இதுகுறித்து புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியின் டீன் கூறுகையில், ''தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ஒருவர் கேட்டிருந்ததற்கு பதில் அளிக்கப்பட்டதில் கடந்த 21 மாதங்களில் 247 குழந்தைகள் இறந்ததாக கூறப்பட்டிருந்தது.

    இந்த குழந்தைகள் சிகிச்சை பலன் இல்லாமல், சிகிச்சை சரியில்லாமல் இறக்கவில்லை. குறை பிரசவத்தில் பிறந்த குழந்தைகள், எடைக்குறைவு, மூச்சுத்திணறல், பிறவி குறைபாடு, நோய் பாதிப்பு உள்ளிட்ட காரணங்கள் தான் இறந்துள்ளன.

    ராணியார் அரசு மகப்பேறு ஆஸ்பத்திரியில் பிரசவ சிகிச்சை நல்ல முறையில் அளிக்கப்படுவதால் ஏழை, எளிய மக்கள் பயன்பெற்று வருகின்றனர்'' என்றார்.

    புதுடெல்லியில் தீபாவளி கொண்டாட்டத்தின்போது தீ விபத்து தொடர்பாக தீயணைப்பு துறைக்கு 300-க்கும் மேற்பட்ட அழைப்புகள் வந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #Diwali #DelhiFireCalls
    புதுடெல்லி:

    வடமாநிலங்களில் நேற்று தீபாவளி பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி காவல்துறை பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியிருந்தது. பட்டாசு வெடிக்கும்போது முன்னெச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என்றும், தீ விபத்து ஏதேனும் ஏற்பட்டால் உடனுக்குடன் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

    அதன்படி தீபாவளி கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட பட்டாசு விபத்து, வீடுகளில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக தீயணைப்புத்துறைக்கு ஏராளமான அழைப்புகள் சென்றுள்ளன. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தீயை கட்டுப்படுத்தினர்.



    இந்நிலையில் தலைநகர் டெல்லியில் நேற்று நள்ளிரவு வரை தீ விபத்து தொடர்பாக 271 அழைப்புகளும், அதன்பின்னர் இன்று காலை 8 மணி வரை 74 அழைப்புகளும் வந்ததாக டெல்லி தீயணைப்புத்துறை தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு தீ விபத்து குறைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சதார் பஜார் குடிசைப்பகுதியில் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் 2 குழந்தைகள் உயிரிழந்ததாகவும், 2 பேர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தீயணைப்புத்துறை அதிகாரி கூறினார். #Diwali #DelhiFireCalls
    மகாராஷ்டிர மாநிலத்தில் விருந்து நிகழ்ச்சியில் உணவு சாப்பிட்டவர்களில் மூன்று குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. #FoodPoisoningDeath
    நவி மும்பை:

    மகாராஷ்டிர மாநிலம் ராய்காட் மாவட்டம் காலாப்பூர் அருகே உள்ள மகத் கிராமத்தைச் சேர்ந்த சுபாஷ் மானே என்பவரின்  வீட்டு கிரகப்பிரவேசம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி அப்பகுதியில் உள்ள கோவில் வளாகத்தில் நேற்று இரவு விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அவர்களின் உறவினர்கள், நண்பர்கள், தெரிந்தவர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர். விருந்தில் பங்கேற்றவர்களுக்கு பல்வேறு உணவு வகைகள் பரிமாறப்பட்டன.

    முதல் சுற்று உணவு பரிமாறி முடிந்ததும், உணவு சாப்பிட்ட சில குழந்தைகளுக்கு தலைசுற்றல், வாந்தி, வயிற்று வலி ஏற்பட்டது. பெரியவர்களுக்கும் வயிற்று உபாதை ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட அனைவரையும் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். நேரம் செல்லச் செல்ல மருத்துவமனைக்கு வந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இந்நிலையில், 3 குழந்தைகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும் 5 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும், 30-க்கும் மேற்பட்டோருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கெட்டுப்போன உணவை சாப்பிட்டதால் பாதிப்பு ஏற்பட்டதா? அல்லது வீட்டு உரிமையாளர் மீது பொறாமை கொண்ட நபர்கள், உணவில் விஷம் கலந்தார்களா? என்ற கோணத்தில் விசாரணை நடைபெறுகிறது. விருந்து நிகழ்ச்சியில் உணவு சாப்பிட்ட குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. #FoodPoisoningDeath
    ×