search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கூட்டுறவு சங்கங்கள்"

    தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவு சங்கங்கள் சார்பாக 100 சிறு சூப்பர் மார்க்கெட் திறக்கப்பட உள்ளதாக அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். #TNMinister #SellurRaju #MiniSuperMarket
    சென்னை:

    சென்னை தியாகராயநகரில் சதாசிவம் சாலையில் உள்ள ரே‌ஷன் கடை அருகில் சிறு கூட்டுறவு சிறப்பங்காடியை அமைச்சர் செல்லூர் ராஜூ திறந்து வைத்தார்.

    இதுபோல தமிழகம் முழுவதும் முக்கிய நகரங்களில் 100 மினி சூப்பர் மார்க்கெட் படிப்படியாக திறக்கப்பட உள்ளது.

    இதுகுறித்து அமைச்சர் செல்லூர் கே.ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவு சங்கங்கள் சார்பாக 100 சிறு சூப்பர் மார்க்கெட் திறக்கப்பட உள்ளன. சென்னையில் திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கத்தின் சார்பில் 5 மினி சூப்பர் மார்க்கெட் தொடங்கப்படுகிறது.

    சிறு சூப்பர் மார்க்கெட்டில் ரூ.3 லட்சம் மதிப்புள்ள 300 வகையான பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. பொருட்களின் அதிகபட்ச சில்லறை விலையில் இருந்து 5 சதவீதம் வரை குறைவாக விற்பனை செய்யப்படும்.

    குடியிருப்பு பகுதிகளில் இந்த மினி சூப்பர் மார்க்கெட் அமைக்கப்படுதால் பொது மக்கள் தரமான பொருட்களை குறைந்த விலையில் பெற வசதியாக இருக்கும். மற்ற மார்க்கெட் மற்றும் மளிகை கடைகளை விட விலை குறைவாக பொருள் தரமாக இருக்கும்.

    கோப்புப்படம்

    லாபம் நோக்கமில்லாமல் மக்களுக்கு குறைந்த விலையில் பொருட்கள் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் திறக்கப்பட உள்ளது.

    தரமணி, ஐ.ஐ.டி., சூளைமேடு, காமராஜர் நகர், ராயப்பேட்டை, லட்சுமிபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள ரே‌ஷன் கடைகளையொட்டி 4 மினி சூப்பர் மார்க்கெட் கடைகள் திறக்கப்படும்.

    ஏற்கனவே திருச்சியில் மினி சூப்பர் மார்க்கெட் திறக்கப்பட்டுள்ளது. மதுரையில் 3 இடங்களிலும் பிற மாவட்டங்களிலும் விரைவில் திறக்கப்பட உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் பழனிசாமி, கூடுதல் பதிவாளர்கள் கோவிந்தராஜ், செந்தில்குமார், டி.யு.சி.எஸ். மேலாண்மை இயக்குனர் சந்திரசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். #TNMinister #SellurRaju
    கூட்டுறவு சங்கங்களில் முறைகேடுகளில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ எச்சரிக்கை விடுத்துள்ளார். #TNMminister#SellurRaju
    திருச்சி:

    திருச்சி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சார்பில் 63-வது கிளை கே.கே.நகர் தென்றல் நகரில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது.

    விழாவில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்து கொண்டு, புதிய கிளையை தொடங்கி வைத்து குத்துவிளக்கேற்றினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    அ.தி.மு.க. ஆட்சியில் இதுவரை 104 கூட்டுறவு வங்கி கிளைகள் தொடங்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 23 மாவட்ட வங்கிகள் மற்றும் 848 கிளைகள் உள்ளது. வரலாறு காணாத அளவுக்கு ரூ.27ஆயிரத்து 750 கோடி கூட்டுறவு வங்கிகளில் பொதுமக்கள் டெபாசிட் செய்துள்ளனர். இதன் மூலம் நகைக்கடன், பயிர்க்கடன், வாகனக்கடன், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் என பல்வேறு கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதனைபெற்று பொதுமக்கள் பயனடைந்து வருகின்றனர்.


    நடப்பாண்டில் விவசாய கடனுக்கு ரூ.8ஆயிரம் கோடியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒதுக்கியுள்ளார். கடன் வழங்குவது தொடர்பாக 8 டெல்டா மாவட்டங்களில் இன்று ஆய்வு செய்ய உள்ளேன். 8ஆயிரம் கோடியில் இதுவரை ரூ.500 கோடிக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது. தங்கு தடையின்றி பாரபட்சமில்லாமல் கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதிதாக சேர்ந்த உறுப்பினருக்கு 30 சதவீதமும், ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கும் கடன் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    கூட்டுறவு சங்கங்களில் முறைகேடு செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். முறைகேடுகளை தடுக்க விஜிலென்ஸ் அமைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. தி.மு.க. ஆட்சியில் நடந்தது போல் அல்லாமல் தற்போது முறைகேடுகள் முற்றிலும் தடுக்கப்பட்டுள்ளது. முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் மீது கிரிமினல் வழக்கு தொடரப்பட்டுள்ளதோடு பதவியும் பறிக்கப்பட்டுள்ளது.

    சென்னை-சேலம் 8 வழி பசுமை சாலை திட்டம் பற்றிய உண்மை நிலை மக்களுக்கு தெரியும். முதல்வரின் விளக்கத்தை கேட்டு எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினே ஆதரவு தெரிவித்து விட்டார். சில சுயநலவாதிகள் தங்களை பிரபலபடுத்துவதற்காக அத்திட்டத்திற்கு எதிராக போராட்டத்தை தூண்டி விடுகின்றனர். தமிழகத்தின் வளர்ச்சி, தொழில் வளர்ச்சிக்கு 8 வழி பசுமை சாலை உறுதுணையாக இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார். #TNMminister#SellurRaju
    ×