search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கூண்டு ஏற்றம்"

    வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால் பாம்பன் துறைமுகத்தில் 1-ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. #StormWarningCage
    ராமேசுவரம்:

    வடக்கு கர்நாடகா மற்றும் ராயலசீமா பகுதியில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இந்த நிலையில் வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இது தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    இதனால் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக பாம்பன் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மேலும் மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.  #StormWarningCage


    வங்க தேசத்துக்கும் வங்கக்கடலுக்கும் இடையே குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகி உள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாம்பன் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
    ராமேசுவரம்:

    கடந்த 4 நாட்களாக ராமேசுவரம், தனுஷ்கோடி, பாம்பன் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த சூறாவளி காற்று வீசி வருகிறது.

    இதனிடையே வங்க தேசத்துக்கும் வங்கக்கடலுக்கும் இடையே குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகி உள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    இதனிடையே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாம்பன் துறைமுகத்தில் இன்று காலை 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

    இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலையால் ராமேசுவரம், பாம்பன், தனுஷ்கோடியில் கடல் கொந்தளிப்பாக காணப்படுகிறது. 60 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசப்படும் என்பதால் மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

    பாம்பனில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

    ×