search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கேரள தங்க கடத்தல்"

    • ஒரு நாட்டின் தூதரக பார்சலில் தங்கம் கடத்தப்பட்ட சம்பவம் நடந்ததால் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    • சுங்கத்துறை, அமலாக்கத்துறை, தேசிய புலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏ.வும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தின.

    திருவனந்தபுரம்:

    துபாயில் இருந்து விமானம் மூலம் கடந்த 2020-ம் ஆண்டு ஜூலை மாதம் 5-ந்தேதி திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்துக்கு ஒரு பார்சல் வந்தது. அதில் ரூ.14.82 கோடி மதிப்புள்ள சுமார் 30.245 கிலோ தங்கம் கடத்தி வரப்பட்டது தெரிய வந்தது. ஒரு நாட்டின் தூதரக பார்சலில் தங்கம் கடத்தப்பட்ட சம்பவம் நடந்ததால் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதுதொடர்பாக அப்போதைய அமீரக தூதரக துணைத்தூதரின் நிர்வாக செயலாளராக பணிபுரிந்து வந்த திருவனந்தபுரத்தை சேர்ந்த ஸ்வப்னா சுரேஷ், தூதரக முன்னாள் மக்கள் தொடர்பு அதிகாரி சரித்குமார், ஸ்வப்னா சுரேசுக்கு ஆதரவாக செயல்பட்ட முதல்-மந்திரியின் முன்னாள் முதன்மைச் செயலாளர் சிவசங்கர் உள்பட 44 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது 5-1-2021 அன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

    இதுதொடர்பாக சுங்கத்துறை, அமலாக்கத்துறை, தேசிய புலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏ.வும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தின.

    இது தொடர்பான வழக்கு தற்போது எர்ணாகுளம் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் தங்க கடத்தலில் நேரடியாக ஈடுபட்டதாக ஸ்வப்னா சுரேஷ், எஸ் சரித், சந்தீப் நாயர், ரமீஸ் ஆகியோருக்கு தலா ரூ.6 கோடி வீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவசங்கருக்கு ரூ.50 லட்சம் என தங்கம் கடத்தலில் தொடர்புடைய 44 பேருக்கும் மொத்தம் ரூ.66.65 கோடி அபராதம் செலுத்த மத்திய சுங்கத்துறை கடத்தல் தடுப்பு பிரிவு கமிஷனர் நோட்டீசு அனுப்பி உள்ளார். 

    • யாரோ தயாரித்து கொடுத்த உரையை ஸ்வப்னா படித்துள்ளார்.
    • விஜேஸ்பிள்ளையும், ஸ்வப்னாவின் குற்றச்சாட்டை மறுத்தார்.

    திருவனந்தபுரம்:

    வளைகுடா நாட்டில் இருந்து திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்திற்கு தங்கம் கடத்தி வரப்பட்டது.

    இந்த வழக்கில் கேரளாவில் தகவல் தொழில்நுட்ப துறையில் அதிகாரியாக இருந்த ஸ்வப்னா கைது செய்யப்பட்டார். தற்போது ஜாமீனில் இருக்கும் ஸ்வப்னா சமீபத்தில் தனது முகநூலில் பேட்டி அளித்தார்.

    அதில் தங்க கடத்தல் ஆதாரங்களை அளித்தால் தனக்கு ரூ.30 கோடி பணம் தருவதாக விஜேஸ் பிள்ளை என்பவர் தெரிவித்ததாக கூறியிருந்தார். விஜேஸ் பிள்ளையை மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கோவிந்தன் அனுப்பியதாகவும் கூறியிருந்தார்.

    ஸ்வப்னாவின் குற்றச்சாட்டை மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கோவிந்தன் மறுத்தார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

    யாரோ தயாரித்து கொடுத்த உரையை ஸ்வப்னா படித்துள்ளார். இதன் பின்னணியில் அரசியல் சதி உள்ளது என்பது எங்களுக்கு தெரியும். எனவே இந்த குற்றச்சாட்டை நாங்கள் சட்டரீதியாக சந்திப்போம்.

    விஜேஸ் பிள்ளை யார் என்றே தெரியாது. இங்கு பிள்ளை என்று யாரும் இல்லை, எனக் கூறினார். இதுபோல விஜேஸ்பிள்ளையும், ஸ்வப்னாவின் குற்றச்சாட்டை மறுத்தார். மேலும் கோவிந்தனை தனக்கு தெரியாது எனவும் கூறினார்.

    கோவிந்தன் மற்றும் விஜேஸ் பிள்ளை இருவரும் ஸ்வப்னாவின் குற்றச்சாட்டை மறுத்து இருப்பது குறித்து ஸ்வப்னா கூறியதாவது:-

    நான் கூறிய தகவல்கள் அனைத்தும் உண்மை. இது தொடர்பான அனைத்து ஆதாரங்களையும் விசாரணை அமைப்புகளுக்கும், கோர்ட்டுக்கும் அனுப்பி விட்டேன். அவர்களின் விசாரணையில் உண்மை தெரியவரும் என்றார்.

    • வேலை கேட்டு இவர்களிடம் செல்லும் ஏழை பெண்களை தங்களது பாலியல் பசிக்காக படுக்கை அறைக்கு அழைப்பார்கள்.
    • போலீசாரும், குற்றபுலனாய்வு துறை அதிகாரிகளும் முன்னாள் மந்திரி, முன்னாள் சபாநாயகரிடம் தீவிர விசாரணை நடந்த வேண்டும்.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் தங்கம் கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டவர் சுவப்னா சுரேஷ். கேரள முன்னாள் முதன்மை செயலாளர் சிவசங்கருடன் நெருக்கமாக இருந்து இதுபோன்ற கடத்தலை சர்வ சாதாரணமாக அரங்கேற்றியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    சமீபத்தில் அவர் ஜாமீனில் வந்த பிறகு முதல்-மந்திரி பினராயி விஜயன் உள்ளிட்ட பலர் மீதும் பல புகார்களை தெரிவித்தார்.

    மேலும் தனது சுயசரிதை புத்தகத்தில் முதல்-மந்திரி பினராயி விஜயன், அவரது குடும்பத்தினர், முன்னாள் முதன்மை செயலாளர் சிவசங்கர் மற்றும் முன்னாள் மந்திரிகள் குறித்தும், தங்கம் கடத்தல் உள்பட சட்ட விரோத செயல்களில் அவர்களுடைய தொடர்பு குறித்தும் பல தகவல்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

    இந்த புத்தகம் வெளியான முதல் நாளிலேயே அனைத்து பிரதிகளும் விற்று தீர்ந்த நிலையில், புத்தகத்தின் 2-ம் பதிப்பை வெளியிட தயாராகி வருவதாக சுவப்னா சுரேஷ் தெரிவித்து இருக்கிறார்.

    இந்த நிலையில் மலையாள செய்தி சேனல் ஒன்றுக்கு சுவப்னா சுரேஷ் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    முன்னாள் மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரன் மற்றும் முன்னாள் சபாநாயகர் ஸ்ரீராம கிருஷ்ணன் ஆகிய இருவரும் பெண்பித்தர்கள்.

    வேலை கேட்டு இவர்களிடம் செல்லும் ஏழை பெண்களை தங்களது பாலியல் பசிக்காக படுக்கை அறைக்கு அழைப்பார்கள். நான் ஒரு உயர்ந்த பதவியில் இருப்பது தெரிந்தும், என்னையும் படுக்கை அறைக்கு அழைத்தனர். அப்படியென்றால் சாதாரண பெண்களின் நிலையை சிந்தித்து பார்க்க வேண்டும்.

    உயர் பதவியில் இருந்து கொண்டு இதுபோன்ற இழிவான செயல்களில் இவர்களால் எப்படி ஈடுபட முடிகிறது. போலீசாரும், குற்றபுலனாய்வு துறை அதிகாரிகளும் முன்னாள் மந்திரி, முன்னாள் சபாநாயகரிடம் தீவிர விசாரணை நடந்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தங்கம் கடத்தல் வழக்கில் ரகசிய வாக்குமூலத்தின் நகலை பெற சரிதா நாயருக்கு என்ன தேவை, அவசியம் உள்ளது என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.
    • ஸ்வப்னா சுரேசுக்கும், சரிதா நாயருக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறி மனுவை கோர்ட்டு தள்ளுபடி செய்தது.

    பெரும்பாவூர்:

    தங்கம் கடத்தல் வழக்கில் முதல்-மந்திரி பினராயி விஜயன் மற்றும் அவரது குடும்பத்தினர், முன்னாள் மந்திரி கே.டி.ஜலீல், அதிகாரிகள் மீது ஸ்வப்னா சுரேஷ் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். மேலும் அவர் எர்ணாகுளம் கோர்ட்டில் தங்கம் கடத்தல் வழக்கு தொடர்பாக ரகசிய வாக்குமூலம் அளித்தார். வழக்கில் முதல்-மந்திரிக்கு தொடர்பு இருப்பதாக கூறி பதவி விலக வலியுறுத்தி எதிர்க்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கேரள அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது.

    இந்தநிலையில் சூரிய மின்தகடு ஊழல் வழக்கில் சிக்கிய சரிதா நாயர், தங்கம் கடத்தல் வழக்கில் ஸ்வப்னா சுரேஷ் அளித்த ரகசிய வாக்குமூலத்தின் நகல்களை தர வேண்டும் என்று எர்ணாகுளம் கோர்ட்டில் தாக்கல் செய்தார். அந்த வழக்கில் ஸ்வப்னா சுரேசுக்கும், சரிதா நாயருக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறி மனுவை கோர்ட்டு தள்ளுபடி செய்தது.

    இதையடுத்து ரகசிய வாக்குமூலத்தில் தன்னை குறித்தும் சில கருத்துகளை ஸ்வப்னா சுரேஷ் வெளியிட்டு இருக்கக்கூடும் என்று கருதிய சரிதா நாயர் மீண்டும் கேரள ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை ஐகோர்ட்டு தனி அமர்வு நீதிபதி ஷாஜி பி.சாலி விசாரித்தார். தங்கம் கடத்தல் வழக்கில் ரகசிய வாக்குமூலத்தின் நகலை பெற சரிதா நாயருக்கு என்ன தேவை, அவசியம் உள்ளது என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.

    மேலும் வழக்கில் எந்த தொடர்பும் இல்லாத அவர் எப்படி, இந்த வாக்குமூலத்தை கோர முடியும் என்று கேட்டார். பின்னர் அந்த மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

    • இலங்கைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் இந்தியா செய்யும்.
    • நுபுர் சர்மா விவகாரத்தில் வளைகுடா நாடுகளுடன் எந்த முரண்பாடும், அதிருப்தியும் இல்லை.

    பெரும்பாவூர் :

    திருவனந்தபுரத்தில் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

    இலங்கையில் அதிபரை பதவி விலகக்கோரி மக்கள் வீதியில் இறங்கி போராடி வருகின்றனர். இது தீவிரம் அடைந்து உள்ளது. இதை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது. இலங்கைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் இந்தியா செய்யும். விரைவில் அங்கு நிலையான அரசு அமையும் என்ற நம்பிக்கை உள்ளது.

    கேரள தங்க கடத்தல் வழக்கு விசாரணையின் முடிவில், உண்மை நிச்சயம் வெளிவரும். திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரசு அமீரக தூதரத்துடன் நடந்த இந்த வழக்கு தொடர்பான விவரங்கள் அனைத்தும், மத்திய வெளியுறவுத்துறைக்கு கிடைத்துள்ளது. இதில் நடக்கக்கூடாது சில சம்பவங்களும் நடந்து உள்ளது. கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளதால், அதுபற்றி கூடுதலாக பேச விரும்பவில்லை.

    நுபுர் சர்மா விவகாரத்தில் வளைகுடா நாடுகளுடன் எந்த முரண்பாடும், அதிருப்தியும் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஸ்வப்னா சுரேசின் ரகசிய வாக்குமூலத்தால் அடுத்தடுத்து திருப்பம் ஏற்பட்டு வருகிறது.
    • ஸ்வப்னா சுரேஷ் ரகசிய வாக்குமூலத்தின் நகலை தரக்கோரி அமலாக்க பிரிவு அதிகாரிகள் கோர்ட்டில் கேட்டிருந்தனர்.

    பெரும்பாவூர்:

    தங்கம் கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஸ்வப்னா சுரேஷ் சமீபத்தில் கொச்சியில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, தங்கம் கடத்தல் வழக்கில் முதல்-மந்திரி பினராயி விஜயன், அவரது மனைவி, மகள் மற்றும் அமைச்சர், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் உள்பட பலருக்கு தொடர்பு உள்ளதாக பகீர் குற்றச்சாட்டுகளை தெரிவித்தார். இது கேரள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ஸ்வப்னா சுரேசின் ரகசிய வாக்குமூலத்தால் அடுத்தடுத்து திருப்பம் ஏற்பட்டு வருகிறது. இதற்கிடையே கொச்சியில் உள்ள அமலாக்கப்பிரிவு அலுவலகத்தில் ஸ்வப்னா சுரேசிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

    அவரிடம் பல்வேறு கேள்விகளை கேட்டு பதிவு செய்துகொண்டனர். மேலும் தங்கம் கடத்தல் வழக்கு, டாலர் கடத்தல், கூட்டு சதி ஆகிய 3 வழக்குகள் குறித்து ஸ்வப்னா சுரேசிடம் குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தொடர் விசாரணையில் தன்னை கைது செய்யக்கூடும் என்று கருதி ஸ்வப்னா சுரேஷ் கேரள ஐகோர்ட்டில் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நேற்று ஐகோர்ட்டு விசாரணைக்கு எடுக்கவில்லை. வருகிற 1-ந் தேதி முன் ஜாமீன் மனு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என்று ஐகோர்ட்டு தெரிவித்து உள்ளது.

    ஏற்கனவே ஸ்வப்னா சுரேஷ் ரகசிய வாக்குமூலத்தின் நகலை தரக்கோரி அமலாக்க பிரிவு அதிகாரிகள் கோர்ட்டில் கேட்டிருந்தனர். வாக்குமூல நகல் வழங்க இயலாது என கோர்ட்டு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. கூட்டு சதி வழக்கு குறித்த விசாரணைக்கு நேற்று ஆஜராகுமாறு குற்றத்தடுப்பு போலீசார் தெரிவித்து இருந்தனர். ஆனால், உடல்நிலை சரியில்லாததால் ஸ்வப்னா சுரேஷ் ஆஜராகவில்லை.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • முதல்-மந்திரி பினராயி விஜயன் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளன.
    • தங்கம் கடத்தல் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என ஸ்வப்னா கோரிக்கை விடுத்து வருகிறார்.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் தங்கம் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஸ்வப்னா, தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக எர்ணாகுளத்தில் உள்ள செசன்சு கோர்ட்டில் ரகசிய வாக்குமூலம் அளித்தார்.

    பின்னர் நிருபர்களிடம் பேசிய அவர், தங்கம் கடத்தல் சம்பவத்தில் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு தொடர்பு இருப்பதாக தெரிவித்தார். மேலும் முன்னாள் அமைச்சர் ஜலீல் மற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவசங்கர் ஆகியோர் மீதும் சில குற்றச்சாட்டுகளை கூறினார்.

    இதுதொடர்பாக ரகசிய வாக்குமூலத்தில் தெரிவித்து இருப்பதாகவும் கூறினார். இந்த சம்பவம் கேரள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. முதல்-மந்திரி பினராயி விஜயன் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளன.

    இந்த நிலையில் எதன் அடிப்படையில் முதல்-மந்திரி மீது ஸ்வப்னா புகார் கூறினார் என்பது தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை நடத்த திட்டமிட்டது. மேலும் அவர் கோர்ட்டில் கொடுத்த ரகசிய வாக்குமூலம் அறிக்கையை அமலாக்கத்துறை பெற்று உள்ளது.

    இதனைத் தொடர்ந்து விசாரணைக்கு ஆஜராக ஸ்வப்னாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அதன்படி அவர் இன்று ஆஜராக உள்ளார். அவரிடம் ஏதேனும் புதிய ஆதாரம் உள்ளதா என்பது குறித்தும் சிவசங்கர் சிறையில் இருந்து வெளிவந்த பிறகு எழுதிய சுயசரிதை புத்தகத்தில் கூறியுள்ள கருத்துகள் குறித்தும் விளக்கம் கேட்கப்படும் என தெரிகிறது.

    இதற்கிடையில் தங்கம் கடத்தல் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என ஸ்வப்னா கோரிக்கை விடுத்து வருகிறார்.

    • எதிர்கட்சியினர் பினராயி விஜயன் பதவி விலக வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
    • கருப்பு முககவசம் அணிந்து சென்ற பத்திரிக்கையாளர்களின் முககவசங்கள் அகற்றப்பட்டன.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் தங்கம் கடத்தலில் முக்கிய குற்றவாளியான சுவப்னா சுரேஷ், முதல்-மந்திரி பினராயி விஜயன் மற்றும் அவரது மனைவி, மகளுக்கு தங்கம் கடத்தலில் தொடர்பு இருப்பதாக பரபரப்பு தகவலை வெளியிட்டார். இதனை தொடர்ந்து, மாநிலம் முழுவதும் எதிர்கட்சியினர் கடந்த 5 நாட்களாக பினராயி விஜயன் பதவி விலக வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    ஆங்காங்கே முதல்-மந்திரி செல்லும் இடங்களில் சாலை மறியல், கருப்பு கொடி காட்டுதல் ஆகியவற்றில் ஈடுபட்டு வருகிறார்கள். இதையடுத்து முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகப்படுத்தப்பட்டு உள்ளது. நேற்று கொச்சியில் முதல்-மந்திரி பினராயி விஜயன் கலந்து கொண்ட நிகழ்ச்சிக்கு கருப்பு உடை அணிந்து வந்த திருநங்கைகள் கூட்ட அரங்கில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

    அதேபோல் கருப்பு முககவசம் அணிந்து சென்ற பத்திரிக்கையாளர்களின் முககவசங்கள் அகற்றப்பட்டன. முதல்-மந்திரி கலந்து கொள்ளும் விழாக்களில் கருப்பு முக கவசம் அணிந்து வர தடை விதிக்கப்பட்டு உள்ளது. பினராயி விஜயன் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்களில் வழக்கத்தைவிட கூடுதல் போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    மேலும் வழிநெடுக பாதுகாப்பிற்கு போலீசார் நிறுத்தப்பட்டு வருகிறார்கள். போக்குவரத்து நிறுத்தம் போன்ற நடவடிக்கைகளிலும் போலீசார் ஈடுபட்டு வருகிறார்கள்.

    • ஸ்வப்னா வெளியிட்ட ஆடியோ பதிவுக்கு ஷாஜி கிரன் உடனடியாக மறுப்பு தெரிவித்தார்.
    • பெண் ஒருவர் தனக்கு ஏற்படும் பிரச்சினையை எதிர்த்து போரிட்டால், அவரது தனிப்பட்ட விசயத்தை வெளியில் கூறி மிரட்டுவது வாடிக்கை.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் நடந்த தங்க கடத்தல் விவகாரத்தில் முதல் மந்திரி பினராயி விஜயன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு தொடர்பு இருந்ததாக இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான ஸ்வப்னா கோர்ட்டில் வாக்குமூலம் அளித்தார்.

    இதையடுத்து தனக்கு மிரட்டல் வருவதாக ஸ்வப்னா புகார் கூறினார். மேலும் வாக்குமூலத்தை வாபஸ் பெற வேண்டும் என ஷாஜி கிரன் என்பவர் மிரட்டுவதாகவும் கூறியிருந்தார்.

    ஷாஜி கிரன், முதல் மந்திரி பினராயி விஜயனுக்கு நெருக்கமானவர் என தெரிவித்த ஸ்வப்னா, தன்னுடன் ஷாஜி கிரன், டெலிபோனில் பேசி மிரட்டிய ஆடியோ இருப்பதாக கூறியிருந்தார்.

    இந்த ஆடியோவை நேற்று மாலை ஸ்வப்னா வெளியிட்டார். அதில் ஸ்வப்னாவிடம் பேசும் நபர், தங்க கடத்தல் விவகாரத்தில் முதல் மந்திரியின் குடும்பத்தினருக்கு தொடர்பு இருப்பதாக கூறியதை சகித்து கொள்ள முடியாது.

    இந்த பிரச்சினைக்கு உடனே முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இதற்காக கோர்ட்டில் அளித்த வாக்குமூலத்தை திரும்ப பெற வேண்டும் எனக்கூறியிருந்தார். இதுபோல மேலும் பல தகவல்கள் ஆடியோவில் கூறப்பட்டிருந்தது. ஸ்வப்னா வெளியிட்ட ஆடியோ பதிவுக்கு ஷாஜி கிரன் உடனடியாக மறுப்பு தெரிவித்தார். இது தொடர்பாக அவர் கூறும்போது, ஆடியோ பதிவில் மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளது. இதில் ஸ்பவ்னா பேசும் பல தகவல்கள் மறைக்கப்பட்டுள்ளன, என்றார்.

    இதற்கும் ஸ்பவ்னா பதில் அளித்தார். அவர் கூறும்போது, ஆடியோ பதிவை வெளியிட்டதால் என்னை பற்றிய ஆபாச வீடியோவை வெளியிட போவதாக மிரட்டுகிறார்கள். ஆபாச வீடியோ பற்றி எனக்கு எதுவும் தெரியாது. என் வீட்டின் படுக்கை அறையில் அல்லது குளியல் அறையில் ரகசிய கேமராவை பதுக்கி வைத்து எடுத்தார்களா? என தெரியவில்லை.

    பெண் ஒருவர் தனக்கு ஏற்படும் பிரச்சினையை எதிர்த்து போரிட்டால், அவரது தனிப்பட்ட விசயத்தை வெளியில் கூறி மிரட்டுவது வாடிக்கை. அந்த வகையில் எனக்கும் இதுபோன்ற மிரட்டல் வந்துள்ளது. என்னை பற்றிய ஆபாச வீடியோக்களை வெளியிட்டால், அதனை அனைவரும் பார்த்து அதில் உண்மை இருக்கிறதா? என்பதை கண்டுபிடிக்க வேண்டும். 100 சதவீதம் உண்மைதானா? என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

    மேலும் இந்த பிரச்சினையை நான் சும்மா விடப்போவதில்லை. இதுபற்றியும் வழக்கு தொடர்ந்து சட்டபூர்வமாக சந்திப்பேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதற்கிடையே பினராயி விஜயன் பதவி விலக கோரி காங்கிரசார் தொடர் போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள். போராட்டக்காரர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.

    பல இடங்களில் போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே கைகலப்பும் மூண்டது. கல்வீச்சும் நடந்தது. இதனால் பதட்டம் ஏற்பட்டது. 4-வது நாளாக இன்றும் மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்தது.

    • ஸ்வப்னா சுரேஷ் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி உள்ளதால், அவருக்கு பலத்த பாதுகாப்பு அளிக்க உத்தரவு பிறப்பித்தது.
    • ஸ்வப்னா சுரேஷ் குடியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பு, அவர் பணியாற்றும் நிறுவனத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் வெளிநாட்டில் இருந்து தங்கம் கடத்தி வந்ததில் முக்கிய குற்றவாளியான ஸ்வப்னா சுரேஷ் எர்ணாகுளம் மாவட்ட நீதிமன்றத்தில் ரகசிய வாக்குமூலம் அளித்தார். அதில் தங்கம் கடத்தலில் முதல்-மந்திரி பினராயி விஜயன் மற்றும் அவருடைய குடும்பத்தினருக்கு தொடர்பு இருப்பதாக கூறினார். அதைத்தொடர்ந்து மாநிலம் முழுவதும் காங்கிரஸ், பா.ஜனதா கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

    இந்தநிலையில் கூட்டு சதித்திட்டம் தீட்டியது மற்றும் கலவரத்தை தூண்டும் வகையில் செயல்பட்டதாக ஸ்வப்னா சுரேஷ் மீது முன்னாள் மந்திரி ஜலீல் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அந்த வழக்கில் முன்ஜாமீன் வழங்கக்கோரி கேரள ஐகோர்ட்டில் ஸ்வப்னா சுரேஷ் மனு தாக்கல் செய்தார்.

    அந்த மனுவை கேரள ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. அதே நேரத்தில் ஸ்வப்னா சுரேஷ் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி உள்ளதால், அவருக்கு பலத்த பாதுகாப்பு அளிக்க உத்தரவு பிறப்பித்தது.

    அதை தொடர்ந்து, பாலக்காட்டில் ஸ்வப்னா சுரேஷ் குடியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் அவர் பணியாற்றும் நிறுவனத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. மேலும் வீட்டை சுற்றி கண்காணிப்பு கேமரா அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.

    பினராயி விஜயன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக கூறிய குற்றச்சாட்டை வாபஸ் பெறுமாறு ஷாஜி கிரண் மிரட்டியதாக ஸ்வப்னா சுரேஷ் கூறியிருந்தார். ஷாஜி கிரண் முதல்-மந்திரி பினராயி விஜயன் மற்றும் கோடியேரி பாலகிருஷ்ணனுக்கு நெருக்கமானவர் என்றும் அவர் குறிப்பிட்டு இருந்தார்.

    இந்த நிலையில், இருவரும் பேசிய உரையாடல்களை ஸ்வப்னா சுரேஷ் நேற்று வெளியிட்டார். அதை மறுத்த ஷாஜி கிரண் உரையாடல்களில் மாறுதல் செய்து வெளியிடப்பட்டு உள்ளதாக கூறி உள்ளார்.

    அதே சமயம் ஸ்வப்னா சுரேஷின் ஆபாச வீடியோக்களை வெளியிடப் போவதாக ஷாஜி கிரண் கூறியதாக வெளியான தகவலால் கேரளாவில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • முதல் மந்திரி பினராயி விஜயன் பதவி விலக கோரி எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தினர்.
    • ஸ்வப்னாவின் புதிய குற்றச்சாட்டு கேரளாவில் மீண்டும் பரபரப்பை கிளப்பி உள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த தங்க கடத்தல் வழக்கில் ஐக்கிய அரபு அமீரக தூதரக முன்னாள் பெண் அதிகாரி ஸ்வப்னா கைது செய்யப்பட்டார்.

    பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட ஸ்வப்னா கடந்த சில நாட்களுக்கு முன்பு கோர்ட்டில் ரகசிய வாக்குமூலம் அளித்தார். அதில் கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு இந்த வழக்கில் நேரடி தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டினார்.

    ஸ்வப்னாவின் குற்றச்சாட்டை தொடர்ந்து கேரள அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. முதல் மந்திரி பினராயி விஜயன் பதவி விலக கோரி எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தினர்.

    இதற்கிடையே ஸ்வப்னா மீது கேரள முன்னாள் மந்திரி ஜலீல் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இதில் தன்னை கைது செய்யாமல் இருக்க முன்ஜாமீன் கேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

    இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த கோர்ட்டு, ஸ்வப்னா மீது ஜாமீனில் வரத்தக்க வழக்கே பதிவு செய்யப்பட்டிருப்பதாக கூறி முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது.

    மனு தள்ளுபடியானதும், ஸ்வப்னா, இன்னொரு பரபரப்பு தகவலை வெளியிட்டார். அதில் முதல் மந்திரி பினராயி விஜயனுக்கு நெருக்கமான ஷாஜ் கிரண் என்பவர் தன்னை சந்தித்து பேசியதாகவும், அப்போது கோர்ட்டில் அளித்த ரகசிய வாக்குமூலத்தை வாபஸ் பெறும்படி வலியுறுத்தியதாகவும் தெரிவித்தார்.

    வாக்குமூலத்தை வாபஸ் பெற்றால் தன்மீதான வழக்குகள் அனைத்தையும் இல்லாமல் செய்துவிட ஏற்பாடு செய்வதாகவும் கூறினார்.

    இது தொடர்பான ஆடியோ பதிவு தன்னிடம் இருப்பதாகவும், அதனை இன்று வெளியிடுவேன் எனவும் கூறியுள்ளார். ஸ்வப்னாவின் இந்த புதிய குற்றச்சாட்டு கேரளாவில் மீண்டும் பரபரப்பை கிளப்பி உள்ளது.

    • தங்கம் கடத்தல் வழக்கில் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு தொடர்பு இருப்பதாக ஸ்வப்னா சுரேஷ் தெரிவித்தார்.
    • தன் மீதான குற்றச்சாட்டை முன்னாள் மந்திரி கே.டி. ஜலீல் மறுத்துள்ளார்.

    திருவனந்தபுரம்:

    ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள அதன் தூதரகத்துக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வந்த பார்சலில் தங்கம் கடத்தி வருவது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதுகுறித்து சுங்க இலாகா அதிகாரிகள் விசாரணை நடத்தி தூதரக முன்னாள் அதிகாரி ஸ்வப்னா சுரேஷ் உள்பட 20-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். தங்கம் கடத்தல் விவகாரத்தில் கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் அலுவலக ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவசங்கருக்கும் தொடர்பு இருப்பதாக புகார் எழுந்தது.

    அதன் அடிப்படையில் கைது செய்யப்பட்ட அவர் பின்னர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். இந்த வழக்கு விசாரணை கொச்சி கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இதன் விசாரணைக்கு கடந்த 2 நாட்களாக கோர்ட்டில் ஸ்வப்னா சுரேஷ் ஆஜரானார்.

    அப்போது நிருபர்களிடம் பேசிய அவர், தங்கம் கடத்தல் வழக்கில் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு தொடர்பு இருப்பதாக தெரிவித்தார்.

    மேலும் முன்னாள் மந்திரி கே.டி. ஜலீல் மீதும், ஸ்வப்னா சுரேஷ் குற்றம் சுமத்தினார். வெளிநாடுகளில் இருந்து கரன்சி கடத்தப்படுவது அவருக்கு தெரியும் என ஸ்வப்னா சுரேஷ் கூறினார்.

    இந்தநிலையில் அவரது குற்றச்சாட்டை முன்னாள் மந்திரி கே.டி. ஜலீல் மறுத்துள்ளார். தன் மீதான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்றும், பா.ஜ.க. மற்றும் யு.டி.எப். சதி என்றும் அவர் கூறினார். மேலும் தற்போதைய அரசின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க சதி நடக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.

    இந்த சதி குறித்து போலீசார் விசாரிக்க வேண்டும் என்று கூறிய அவர், இது தொடர்பாக திருவனந்தபுரம் கண்டோன்மென்ட் போலீசில் புகாரும் அளித்துள்ளார். சிலரின் தூண்டுதலின் பேரிலேயே இதுபோன்ற பொய்யான செய்திகளை ஸ்வப்னா சுரேஷ் பரப்பி வருகிறார்.

    அரசியல் நோக்கத்துடன் அவதூறு செய்திகளை பரப்பி வரும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் குறிப்பிட்டு இருந்தார்.

    இது தொடர்பாக துணை இயக்குனரின் சட்ட ஆலோசனையின் பேரில் கன்டோன்மென்ட் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். ஸ்வப்னா சுரேஷ் மீது இந்திய தண்டனைச் சட்டம் 153 மற்றும் 120 (பி) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    புகாரை விசாரிக்க ஏ.டி.ஜி.பி. தலைமையில் போலீஸ் குழு அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×