என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கோர்ட்டில் சரண்"
உத்தரபிரதேசத்தின் ஹமிர்பூர் மாவட்டத்துக்கு உட்பட்ட சதர் சட்டமன்ற தொகுதியில் பா.ஜனதா சார்பில் எம்.எல்.ஏ.வாக இருப்பவர் அசோக் சிங் சந்தல். இவருக்கும், உள்ளூர் பா.ஜனதா தலைவர் சுக்லா என்பவருக்கும் கடந்த 1997-ம் ஆண்டு ஜனவரி 26-ந் தேதி தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த அசோக் சிங் சந்தல் உள்ளிட்டோர் சுக்லா குடும்பத்தினர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் சுக்லாவின் சகோதரர்கள், மருமகன்கள் என ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் கொல்லப்பட்டனர். இந்த கொடூர சம்பவம் தொடர்பாக அசோக் சிங் சந்தல் உள்ளிட்டோர் மீது உள்ளூர் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் இந்த வழக்கில் இருந்து அவர்கள் அனைவரும் கடந்த 2002-ம் ஆண்டு விடுவிக்கப்பட்டனர்.இதை எதிர்த்து சுக்லா, அலாகாபாத் ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு அசோக் சிங் சந்தல் உள்பட 10 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்தது. பின்னர் தண்டனைக்காக கோர்ட்டில் சரணடையாமல் இருந்ததால் அவர்களுக்கு எதிராக கைது வாரண்டும் பிறப்பிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து நேற்று அசோக் சிங் சந்தல் உள்ளூர் கோர்ட்டில் சரணடைந்தார். அவருடன் மேலும் 5 பேரும் சரணடைந்தனர். அவர்கள் அனைவரும் பின்னர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே உள்ள கே.செட்டிகுளத்தைச் சேர்ந்தவர் வீரப்பதேவர் (வயது 56). விவசாயியான இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த உறவினர்களுக்கும் தோட்ட பிரச்சினை தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்தது. இதனால் இவர்களுக்குள் அடிக்கடி மோதல் இருந்து வந்தது.
சம்பவத்தன்று வீரப்ப தேவர் தனது தோட்டத்தில் இருந்தபோது அங்கு வந்த உறவினர்கள் முத்துக்குமார் (35), வெள்ளைச்சாமி (37), பாலு (30), சின்னராஜ் (33), முத்து கனகம்மாள் (50) ஆகியோர் பிரச்சினை செய்து தகராறில் ஈடுபட்டனர்.
வாக்குவாதம் முற்றவே, ஆத்திரம் அடைந்த 5 பேரும் வீரப்பதேவரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பினர். படுகாயம் அடைந்த அவர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி வீரப்பதேவர் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து பரளச்சி போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து தலைமறைவான 5 பேரை தேடி வந்தனர்.
இந்த நிலையில் கொலை வழக்கு தொடர்பாக முத்துக்குமார், வெள்ளைச்சாமி ஆகிய 2 பேரும் அருப்புக்கோட்டை கோர்ட்டில் சரண் அடைந்தனர்.
பீகார் மாநிலம் முசாபர்பூர் நகரில் அரசு நிதி உதவியுடன் நடத்தப்பட்டு வரும் சிறுமிகள் இல்லம் ஒன்றில் 30-க்கும் மேற்பட்ட சிறுமிகள் கற்பழிக்கப்பட்ட சம்பவம் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியும், சிறுமிகள் இல்லத்தின் நிர்வாகியுமான பிரஜேஷ் தாக்குர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு விட்டார். இவர், அண்மையில் மந்திரி பதவியை இழந்த மஞ்சு வர்மாவின் கணவரான சந்திரசேகர் வர்மாவின் நெருங்கிய கூட்டாளி ஆவார்.
இதனால், சிறுமிகள் பாலியல் பலாத்கார விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. போலீசார் மஞ்சு வர்மாவின் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கிருந்து ஏராளமான வெடி பொருட்கள் கைப்பற்றப்பட்டது. இதனால் கணவன்-மனைவி இருவர் மீதும் ஆயுத தடுப்பு சட்டத்தின் கீழ் சி.பி.ஐ. தனியாக வழக்குப்பதிவு செய்தது.
சுப்ரீம் கோர்ட்டின் கண்காணிப்பின் கீழ் நடந்து வரும் இந்த வழக்கில் சந்திரசேகர் வர்மா கடந்த மாதம் 29-ந்தேதி கோர்ட்டில் சரண் அடைந்தார்.
இந்தநிலையில் அவருடைய மனைவி மஞ்சு வர்மா சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவானார். இதனால் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தவேண்டும் என்று பீகார் மாநில போலீசாருக்கு கடந்த வாரம் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. மேலும் பெகுசராய் நகர கோர்ட்டு மஞ்சு வர்மாவின் சொத்துகளை முடக்கியது.
இதனால் வேறு வழியின்றி அவர் நேற்று பெகுசராய் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் சரண் அடைந்தார். வருகிற 1-ந்தேதி மஞ்சுவர்மாவை காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.
இந்தநிலையில் முசாபர்பூர் இல்லத்தில் தங்கியிருந்த சிறுமிகளுக்கு செக்ஸ் உறவு கொள்வது எப்படி என்றும் ஆபாச பாடல்களுக்கு கவர்ச்சி நடனம் ஆடுவது எப்படி எனவும் சொல்லிக் கொடுத்த சைஸ்தா பிரவீன் (எ) மது என்ற பெண்ணை சி.பி.ஐ. போலீசார் நேற்று கைது செய்தனர்.
இந்த வழக்கில் இவரையும் சேர்த்து இதுவரை 17 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
தலைமறைவானதாக கூறப்பட்ட நிலையில் மது நேற்று காலை சி.பி.ஐ.யிடம் விசாரணைக்காக ஆஜராகி இருந்தார். தீவிர விசாரணைக்கு பிறகு சி.பி.ஐ. போலீசார் அவரை கைது செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்