என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கோவை வாலிபர் பலி"
கோவை புலியகுளம் அம்மன்குளம் பகுதியில் உள்ளது ஏரிமேடு. இந்த பகுதியை சேர்ந்தவர் சந்திரன். இவரது மகன் கிருஷ்ணகுமார் (வயது 21). இவர் தனது நண்பர்கள் 4 பேருடன் பாலக்கட்டில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்தார். உறவினர்களை பார்த்து விட்டு மாலை மீண்டும் கோவைக்கு புறப்பட்டனர்.
வரும் வழியில் வாளையார் அணையை சுற்றிப்பார்த்தனர். பின்னர் அணையில் இறங்கி 5 பேரும் குளித்தனர். சிறிது நேரம் குளித்த பின்னர் மற்றவர்கள் கரையேறினர். கிருஷ்ணகுமாரை காணவில்லை.
அதிர்ச்சியடைந்த நண்பர்கள் இது குறித்து அங்கிருந்து பொதுமக்களிடம் கூறினர். பொதுமக்கள் வாளையார் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் கஞ்சிக்கோடு தீயணைப்பு வீரர்களுடன் அணையில் இறங்கி கிருஷ்ணகுமாரை தேடினர். ஆனால் தீயணைப்பு வீரர்களால் முடியவில்லை.
இதனையடுத்து பாலக்காடு நீர் மூழ்கி தேடும் வீரர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வந்து தீவிர தேடுதலுக்கு பின்னர் அணையில் இருந்து கிருஷ்ணகுமாரின் உடலை மீட்டனர். மீட்கப்பட்ட உடல் பிரேத பரிசோதனைக்காக பாலக்காடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதுகுறித்து வாளையார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேட்டுப்பாளையம்:
கோவை கணபதி மணியகாரன் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மகன் கோபிநாத்(17) ஐ.டி.ஐ.படிப்பை பாதியில் நிறுத்தி விட்டார்.
இந்த நிலையில் கோபிநாத் மற்றும் அவரது நண்பர்கள் 6 பேர் மேட்டுப்பாளையத்தில் உள்ள கோவிலுக்கு சாமி கும்பிட வந்தனர். சுவாமி தரிசனம் செய்து விட்டு மேட்டுப்பாளையம் அடுத்துள்ள ஆலாங்கொம்பு பழையூர் பவானி ஆற்றுக்கு குளிக்கச்சென்றனர். அப்போது திடீரென கோபிநாத் ஆழமான பகுதிக்கு சென்று விட்டார். நீரில் மூழ்கி தத்தளித்த அவர் சிறிது நேரத்தில் மூச்சுத்திணறி பரிதாபமாக இறந்தார். உடனே அக்கம் பக்கம் இருந்தவர்கள் உதவியுடன் அவரது உடல் மீட்கப்பட்டது.
இது குறித்து தகவல் கிடைக்கப் பெற்றதும் சிறுமுகை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திலக், ஏட்டு கிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
வாலிபர் கோபிநாத் பிணத்தை கைப்பற்றி பிரேத பரி சோதனைக்கு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்