search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சலுகை கட்டணம்"

    பண்டிகை காலத்தை முன்னிட்டு விமான கட்டணங்களில் 70 சதவீதம் வரை தள்ளுபடி சலுகையை ஏர் ஏசியா நிறுவனம் இன்று அறிவித்துள்ளது. #AirAsia #AirAsia70pcdiscount
    ஐதராபாத்:

    ஏர் ஏசியா நிறுவனம் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், அக்டோபர் 15 முதல் 28 வரை முன்பதிவு செய்து அக்டோபர் 15 முதல் 30-6-2019 வரை பயணம் செய்ய விரும்புவர்களுக்கு 70 சதவீதம் வரை தள்ளுபடி சலுகை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    உள்நாட்டு வழித்தடங்களான பெங்களூரு, புதுடெல்லி, கொல்கத்தா, கொச்சி, கோவா, ஜெய்ப்பூர், சண்டிகர், புனே, கவுகாத்தி, இம்பால், விசாகப்பட்டினம், ஐதராபாத், ஸ்ரீநகர், பக்டோக்ரா, ராஞ்சி, புவனேஸ்வர், நாக்பூர், இந்தூர், சூரத், அம்ரிஸ்டர் மற்றும் சென்னை ஆகிய 21 முக்கிய நகரங்களுக்கான பயணச்சீட்டுகளுக்கு இந்த சலுகை பொருந்தும்.

    மேலும், சர்வதேச வழித்தடங்களான கோலாலம்பூர், பாங்காக், கிராபி, சிட்னி, ஆக்லாந்து, சிங்கப்பூர், பாலி உள்ளிட்ட பிற நகரங்களுக்கான விமான பயணத்துக்கும் இந்த சலுகையை பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த சிறப்பு கட்டணச் சலுகையை பெறுவதற்கான முன்பதிவுகள் அனைத்தும் ஏர் ஏசியா டாட்காம் மற்றும் ஏர் ஏசியா மொபைல் ஆப் (airasia.com and the AirAsia mobile app) மூலமாக செய்யப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. #AirAsia #AirAsia70pcdiscount
    மாற்று திறனாளிகளுக்கு அரசு பஸ்களில் சலுகை கட்டண வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
    பழனி:

    தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் திண்டுக்கல் அரசு பேருந்து பணிமனை முன்பாக தமிழக அரசின் 2010-ம் ஆண்டு உத்தரவை நிறைவேற்ற கோரி முற்றுகை போராட்டம் நடத்தப்பட்டது.

    அதை தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தையின் பலனாக தற்போது அனைத்து அரசு பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களுக்கு, தமிழக அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் சுற்றறிக்கை அனுப்பட்டுள்ளது.

    தமிழக அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் அனுப்பபட்டுள்ள சுற்றறிக்கையில் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசால் வழங்கப்பட்டுள்ள 4-ல் 1 பங்கு கட்டணத்தில் போக்குவரத்து கழக பேருந்துகளில் பயணம் செய்ய ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள சலுகைகளுடன் பயணிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

    இச்சலுகை இடைநில்லா பேருந்துகளுக்கும் பொருந்தும். உள்ளூர் மற்றும் குளிர்சாதன பேருந்துகளில் இக்கட்டணத்தில் பயணம் செய்ய அனுமதி இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் உபகரணங்களுக்கு சுமை கட்டணம் வசூலிக்க கூடாது.

    குறிப்பிட்ட எண்ணிக்கையில் தான் மாற்றுத்திறனாளிகள் பேருந்தில் ஏற வேண்டும் என்று தெரிவிக்காமல் அனைத்து மாற்றுத் திறனாளிகளையும் பயணம் செய்ய ஓட்டுனர் மற்றும் நடத்துனர் அனுமதிக்க வேண்டும்.

    கட்டண சலுகையில் பயணம் செய்யும் மாற்றுத் திறனாளிகளிடம் கண்ணியாமாக நடந்து கொள்ளவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    ×