search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிங்கப்பூர் விமானம்"

    மும்பையில் இருந்து சிங்கப்பூர் வந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தொடர்பாக பெண் பயணியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். #BombThreat #SingaporeAirlines
    சிங்கப்பூர்:

    சிங்கப்பூர் ஏர்லைன்சுக்கு சொந்தமான போயிங் ரக பயணிகள் விமானம் நேற்று மதியம் மும்பை சத்ரபதி சிவாஜி விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர் நோக்கி புறப்பட்டு வந்தது. அதில் 263 பயணிகள் பயணம் செய்தனர். புறப்பட்ட சிறிது நேரத்தில் விமான நிறுவனத்திற்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய நபர், மும்பையில் இருந்து சிங்கப்பூர் நோக்கி வரும் விமானத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறியுள்ளார். இதனால் அதிகாரிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

    உடனடியாக, விமானத்தின் பைலட்டுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உஷார்படுத்தப்பட்டது. இன்று காலை சிங்கப்பூர் வான் பகுதிக்குள் விமானம் நுழைந்ததும், விமானப்படையின் உதவியுடன் அந்த விமானம் சாங்கி விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது.

    பயணிகள் அனைவரையும் உடனடியாக கீழே இறக்கி சோதனையிட்டனர். விமானத்தையும் முழுமையாக சோதனையிட்டனர்.  இந்த சோதனையில் விமானத்தில் எந்த வெடிபொருளும் சிக்கவில்லை. எனவே, வெடிகுண்டு மிரட்டல் போலி என்பது தெரியவந்தது.


    வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தொடர்பாக, குழந்தையுடன் வந்த ஒரு பெண் பயணியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். #BombThreat #SingaporeAirlines
    சிங்கப்பூர் விமானத்தில் நடுவானில் விமான பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த இந்திய வம்சாவளிக்கு 3 வாரம் சிறைத்தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார். #singaporeplane #womanharassment #indiandescent
    சிங்கப்பூர்:

    ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர் பரஞ்சபி நிரஞ்சன் ஜெயந்த் (வயது 34). இவர் இந்திய வம்சாவளி ஆவார். கடந்த ஆகஸ்டு மாதம் இவர் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் இருந்து சிங்கப்பூருக்கு ‘ஸ்கூட்’ நிறுவன விமானத்தில் முதல் வகுப்பில் பயணம் செய்தார். விமானம் நடுவானில் பறந்து வந்துகொண்டிருந்தது.

    அந்த விமானத்தில் பயணிகளை கவனிக்கும் பணியில், 25 வயதான விமான பெண் ஊழியர் ஒருவர் ஈடுபட்டிருந்தார். அவரை ஜெயந்த் சில முறை அணுகி “நீங்கள் ரொம்ப அழகாக இருக்கிறீர்கள்” என்று கூறி, அவரது செல்போன் எண்ணை தருமாறு கேட்டு தொல்லை செய்தார். ஆனால் அந்தப் பெண் ஊழியர் அதை கண்டுகொள்ளவில்லை. அந்த விமானம் சிங்கப்பூரில் தரை இறங்குவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பாக, ஜெயந்த் அந்தப் பெண் ஊழியரை அணுகி அவரது இடதுபுற இடுப்பை வருடி சில்மிஷம் செய்தார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அந்தப் பெண் ஊழியர், தனது அதிகாரியிடம் கூறி உஷார்படுத்தினார். மேலும், சிங்கப்பூர் சாங்கி விமான நிலைய முனைய போலீசில் புகார் செய்தார்.

    சிங்கப்பூரில் விமானம் தரை இறங்கியபோது ஜெயந்த் கைது செய்யப்பட்டார். அவர் மீது சிங்கப்பூர் மாவட்ட கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது அவர் நீதிபதியிடம் தான் குடிபோதையில் அந்தப் பெண் ஊழியரிடம் தவறாக நடந்து கொண்டதாக ஒப்புக்கொண்டார். தவறுக்காக மனம் வருந்துவதாகவும் கூறினார். தனக்கு கருணை காட்டுமாறு வேண்டிக்கொண்டார். அதையடுத்து அவருக்கு 3 வாரம் சிறைத்தண்டனை விதித்து நீதிபதி லிம் சி ஹாவ் தீர்ப்பு வழங்கினார். #singaporeplane #womanharassment #indiandescent
    திருச்சி விமான நிலையத்தில் சிங்கப்பூரில் இருந்து கடத்தி வந்த ரூ.8 லட்சம் மதிப்பிலான நகைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக பெண் ஒருவரிடம் விசாரணை நடத்தப்படுகிறது. #TrichyAirport
    திருச்சி:

    திருச்சி சர்வதே விமான நிலையத்தில் இருந்து மலேசியா, சிங்கப்பூர், இலங்கை உள்ளிட்ட வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு விமான சேவை அளிக்கப்பட்டு வருகிறது.

    அதேபோல் வெளிநாடுகளில் இருந்து அடிக்கடி தங்கம் கடத்தலும் தொடர் கதையாகி வருகிறது. இந்த நிலையில் நேற்று இரவு சிங்கப்பூரில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு ஸ்கூட் என்ற தனியார் விமானம் வந்திறங்கியது.

    அதில் வந்த பயணிகளின் உடைமைகளை மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது புதுக்கோட்டையை சேர்ந்த நஸ்ரின் பானு என்பவரின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் தனி அறையில் வைத்து சோதனை போட்டனர்.

    இதில் அவர் தனது உடலில் மறைத்து எடுத்து வந்த 244 கிராம் தங்க நகைகள் கடத்தி வந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். பின்னர் அந்த நகைகளை பறிமுதல் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு ரூ.7 லட்சத்து 83 ஆயிரம் ஆகும்.

    இதைத்தொடர்ந்து நகை கடத்தி வந்த நஸ்ரின் பானுவிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர் தனக்காக நகைகளை கடத்தி வந்தாரா? அல்லது வேறு யாருக்காவது நகை கடத்தலில் ஈடுபட்டாரா? என விசாரணை நடக்கிறது.  #TrichyAirport
    ×