search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிவ சேனா"

    பணமதிப்பிழப்பீடு நடவடிக்கைக்காக பிரதமர் நரேந்திர மோடியை தண்டிப்பதற்காக மக்கள் காத்து கொண்டு இருப்பதாக பாஜகவின் கூட்டணி கட்சியான சிவசேனாவின் செய்தி தொடர்பாளர் மனிஷா கயாண்டே கடுமையாக விமர்சித்துள்ளார். #BJP #PMModi #ShivSena
    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலத்தின் முக்கிய கட்சிகளில் ஒன்றான சிவசேனா, பாஜக கட்சியுடன் மத்தியில் கூட்டணியில் உள்ளது. இருப்பினும் பாஜக அரசினை மிகவும் கடுமையாக சாடியும், விமர்சித்தும் வருகிறது.

    இந்நிலையில், பணமதிப்பிழப்பீடு அறிவிக்கப்பட்டு 2 ஆண்டுகள் நிறைவு பெற்ற நிலையில், அதுகுறித்து சிவசேனா கட்சியின் செய்தித்தொடர்பாளர் மனிஷா கயாண்டே செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், பணமதிப்பிழப்பீடு நடவடிக்கை முழுமையான தோல்வியடைந்த ஒரு திட்டம் என தெரிவித்துள்ளார்.



    மேலும், பணமதிப்பிழப்பீடு மூலம், கள்ள நோட்டுகளையும், பயங்கரவாதிகளுக்கான நிதியுதவியை தடுக்க இருப்பதாகவும் மத்திய அரசு அறிவித்து இருந்தது ஆனால் ஒன்று கூட நடக்கவில்லை என அவர் கூறியுள்ளார். பணமதிப்பிழப்பீடு மூலம் வருமான வரி கட்டுவோர் வீதம் அதிகரித்து இருப்பதாக கூறும் மத்திய நிதி மந்திரி, இந்த பணமதிப்பிழப்பீடு மூலம் எத்தனை பேர் வேலை இழந்தார்கள் என்பதை சொல்ல மறுக்கிறார் என குற்றம்சாட்டியுள்ளார்.

    பணமதிப்பிழப்பீடு அறிவிக்கப்பட்டு 2 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், அதனால் ஏற்பட்ட பாதிப்புகளுக்காக பிரதமர் மோடியை தண்டிக்க மக்கள் காத்துக்கொண்டு இருப்பதாக சிவசேனாவின் செய்தி தொடர்பாளர் மனிஷா கயாண்டே அறிவித்துள்ளார். #BJP #PMModi #ShivSena
    நாடு முழுவதும் நடத்தப்படும் முழு அடைப்பு போராட்டத்தை சிவசேனா கட்சி விமர்சித்துள்ளது. #BharathBandh #PetrolDieselPriceHike #ShivSena
    மும்பை:

    வரலாறு காணாத விலை உயர்வை சந்தித்துள்ள பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலையை குறைக்கவும், விலை உயர்வை கண்டித்தும் காங்கிரஸ் தலைமையில் நாடு முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பெரும்பாலான எதிர்க்கட்சிகள் பங்கேற்றன.

    இந்த ஆர்ப்பாட்டம் குறித்து பா.ஜ.க.வின் ஆதரவு கட்சியான சிவசேனா தனது பத்திரிகையில் விமர்சனம் செய்துள்ளது. அதில், பல ஆண்டுகளாக எதிர்க்கட்சிக்கான பொறுப்புகளை தாம் சுமந்து வந்ததாகவும், தற்போது விழித்துக் கொண்டுள்ள எதிர்க்கட்சிகள் பொதுமக்களின் நலனில் எவ்வாறு பங்காற்றும் என் பார்க்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.

    மேலும், எதிர்க்கட்சிகள் அதன் பணியை முறையாக செய்யும்போது, மக்களின் விருப்பம் பாதுகாக்கப்படுவதாகவும் சாமனா பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு கட்சிகளும் போராட்டம் நடத்தி வரும் நிலையில், சிவசேனா கலந்து கொள்ளாதது ஏன்? என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள அதன் தலைவர் உத்தவ் தாக்ரே, எதிர்க்கட்சிகளின் பலம் அறியவே வேண்டி பங்கேற்காமல் இருந்ததாக தெரிவித்துள்ளார் என சாமனாவில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.  #BharathBandh #PetrolDieselPriceHike #ShivSena
    பா.ஜ.க. கூட்டணியில் இருந்து சிவ சேனா வெளியேறினால் அந்த கட்சிக்கு ஆதரவு அளிப்பதாக விவசாய சங்கம் அறிவித்துள்ளது. #ShivSena
    மும்பை:

    பா.ஜனதா தலைமையிலான மத்திய அரசு மற்றும் மகாராஷ்டிர அரசுகளில் சிவசேனா முக்கிய பங்கு வகிக்கிறது. இருப்பினும் பா.ஜனதாவை பல்வேறு நிலைகளில்  கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது. ஜனவரி மாதம் சிவ சேனா தலைவர் உத்தவ் தாக்கரே பேசுகையில், 2019 பாராளுமன்றத் தேர்தலிலும்,  மகாராஷ்டிர சட்டசபைத் தேர்தலிலும் தனியாக போட்டியிடுவோம் என அறிவித்தார். மராட்டியத்தில் விவசாயிகளுக்கு எதிரான திட்டங்களுக்கு சிவசேனா எதிர்ப்பு தெரிவிக்கிறது.

    இந்நிலையில் சிவசேனா, பா.ஜனதா கூட்டணியில் இருந்து விலகினால் நாங்கள் ஆதரவளிப்போம் என மராட்டிய மாநில விவசாய சங்க தலைவரும், எம்.பி.யுமான ராஜூ செட்டி கூறியுள்ளார்.  

    இதுபற்றி ராஜூ செட்டி கூறுகையில், “மத்தியிலும், மாநிலத்திலும் உள்ள பா.ஜனதா கூட்டணி அரசில் இருந்து சிவசேனா விலகினால், நாங்கள் அவர்களுடன் கைகோர்ப்போம்.

    இந்தியாவின் மக்கள் தொகையில் 50 சதவிதத்திற்கும் அதிகமானோர் கிராமப்புறங்களில்தான் வசிக்கிறார்கள். அவர்கள் பா.ஜனதா அரசின் கொள்கையினால் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளார்கள். நான் மிகவும் வேதனை மற்றும் ஏமாற்றம் அடைந்ததால்தான் அக்கூட்டணி ஆட்சியில் இருந்து வெளியேறினேன். சிவசேனா கிராமபுறங்களிலும், நகர்புறங்களில் ஸ்திரமாக காலூன்ற எங்களுடைய இயக்கம் மிகவும் ஆதரவாக இருக்கும்” என்றார்.

    மத்திய அரசு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறிவிட்டது என்று கூறி கடந்த வருடம் செட்டி தலைமையிலான விவசாய சங்கம், பா.ஜனதா கூட்டணி அரசுக்கான ஆதரவை வாபஸ் பெற்றது குறிப்பிடத்தக்கது. #ShivSena
    தனித்து போட்டியிடுவதாக கூறும் சிவ சேனாவுக்கு தைரியம் இருந்தால், மகாராஷ்டிராவில் பா.ஜ.க. கூட்டணி அரசில் இருந்து விலக வேண்டும் என நாராயண் ரானே சவால் விடுத்துள்ளார். #ShivSena #RaneAttackSena
    மும்பை:

    தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பா.ஜனதா-சிவசேனா இடையே சமீப காலங்களாக கருத்து மோதல்கள் ஏற்பட்டது. மத்திய பா.ஜனதா அரசின் கொள்கைகளையும், பிரதமர் மோடியையும் சிவசேனா கட்சி கடுமையாக விமர்சித்தது. இதனால் இரு கட்சிகளிடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது.

    இந்த நிலையில் மகாராஷ்டிராவில் பா.ஜனதாவுடன் கூட்டணி சேர மாட்டோம் என்று கூறி சிவசேனா கட்சி உள்ளாட்சி தேர்தலிலும், இடைத்தேர்தல்களிலும் தனித்து போட்டியிட்டது. மேலும் வருகிற 2019 பாராளுமன்ற தேர்தலிலும் சிவசேனா தனித்து போட்டியிடும் என்று அக்கட்சி அறிவித்துள்ளது. சிவ சேனாவை சமாதானப்படுத்தி கூட்டணியை தக்க வைக்க பா.ஜ.க. முயற்சி மேற்கொண்டு வருகிறது.



    இதற்காக நேற்று பா.ஜ.க. தலைவர் அமித் ஷா சிவசேனா தலைவர் உத்தவ் தாக்ரேவை நேரில் சந்தித்து பேசினார். அப்போது காங்கிரஸ் கூட்டணியை வீழ்த்த பா.ஜனதா- சிவசேனா இணைந்து செயல்படுவது பற்றியும், இரு கட்சிகளிடையேயான பிரச்சினைகள் பற்றியும் அமிர் ஷா விரிவாக பேசியதாக தெரிகிறது. ஆனாலும் சிவ சேனா தனது நிலையில் உறுதியாக உள்ளதாக கூறப்படுகிறது.

    இனி வரும் அனைத்து தேர்தல்களிலும் சிவசேனா தனித்து போட்டியிடும் என முன்னதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் எவ்வித மாற்றமும் இல்லை என சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத், தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில், மகாராஷ்டிரா முன்னாள் முதல்வரும்  மகாராஷ்டிரா சுவாபிமான் பக்க்ஷா கட்சியின் தலைவருமான நாராயண் ரானே பொதுக்கூட்டத்தில் பேசியபோது சிவ சேனாவின் நிலைப்பாட்டை கடுமையாக விமர்சித்தார்.

    அவர் பேசும்போது, ‘பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்காமல் தனித்து போட்டியிடுவதாக நீங்கள் பேசுகிறீர்கள். ஆனால் ஆட்சி அதிகாரத்தை மட்டும் ஏன் விடவில்லை? வெளியேற வேண்டியதுதானே? ஆட்சியில் ஒரு அங்கமாக இருந்துகொண்டு உங்கள் கூட்டணியை விமர்சிக்கிறீர்கள். ஆனால் தேர்தல் என்று வந்துவிட்டால் மட்டும் தனித்து போட்டியிடுவது சிவ சேனாவுக்கு உகந்தது அல்ல.  

    மராட்டிய மக்கள் சிவ சேனாவுக்கு அனைத்து வகையிலும் ஆதரவு அளித்தனர். ஆனால், அவர்களுக்கு சிவ சேனா என்ன செய்தது? ஆட்சி அதிகாரத்தில் எல்லா பொறுப்பையும் பா.ஜ.க.விடம் இருந்தால், நீங்கள் வெறுமனே உட்கார்ந்து சாப்பிட மட்டும்தான் செய்கிறீர்களா?’ என்று கேள்வி எழுப்பினார்.

    மேலும், காங்கிரஸ் கட்சியையும், முன்னாள் முதல்வர் பிருத்விராஜ் சவானையும் கடுமையாக சாடினார் நாராயண் ரானே. #ShivSena #RaneAttackSena
    பாராளுமன்றத் தேர்தலில் எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லாது சிவசேனா தனித்து போட்டியிடும் என்ற தீர்மானத்தில் எவ்வித மாற்றமும் இல்லை என சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத் கூறியுள்ளார். #shivsena #BJP
    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலத்தில் பா.ஜ.க.-சிவசேனா கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. சமீபத்தில் பா.ஜ.க - சிவசேனா இடையே பல்வேறு கருத்து வேறுபாடுகள் காரணமாக விரிசல் ஏற்பட துவங்கியது. இதையடுத்து, சிவசேனா கட்சித்தலைவர் உத்தவ் தாக்ரே பா.ஜ.க.வுடனான கூட்டணியை முறித்துக் கொள்வதாகவும், இனி வரப்போகும் அனைத்து தேர்தல்களிலும் தனித்து போட்டியிடப்போவதாகவும் அறிவித்தார்.

    இந்த அறிவிப்பினால் பா.ஜ.க தலைமை சற்றே நிலைகுலைந்தது. 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், சிவசேனாவின் இந்த அறிவிப்பு பா.ஜ.க.வுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    இதையடுத்து, சிவசேனாவுடன் மீண்டும் கூட்டணியை அமைக்க பா.ஜ.க தலைவர்கள் முயற்சித்து வருகின்றனர். நேற்று பா.ஜ.க.வின் தலைவர் அமித் ஷா சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்ரேவை நேரில் சந்தித்து பேசினார்.



    இந்த சந்திப்பு சமாதானத்துக்கான தூதாகவும், கூட்டணியை உறுதி படுத்துவதற்காகவும் நடைபெற்றதாக அரசியல் விமர்சகர்கள் மத்தியில் பார்க்கப்பட்டது.

    இந்நிலையில், அமித் ஷாவுடனான சந்திப்பு குறித்து பேசிய சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத், இனி வரும் அனைத்து தேர்தல்களிலும் சிவசேனா தனித்து போட்டியிடும் என முன்னதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் எவ்வித மாற்றமும் இல்லை என தெரிவித்துள்ளார்.

    சஞ்சய் ராவத்தின் இந்த கருத்தால் பா.ஜ.க தலைமை மேலும் கலக்கம் அடைந்திருப்பதாக கூறப்படுகிறது. #shivsena #BJP
    ×