search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செம்பியன்மாதேவி சிலை"

    நாகை கைலாசநாதர் கோவிலில் மாயமான செம்பியன்மாதேவி சிலையை அமெரிக்கா சென்று மீட்பேன் என்று வக்கீல் யானை ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். #StatueSmuggling

    கும்பகோணம்:

    சிலை கடத்தல் வழக்குகளில் ஆஜராகி வரும் வக்கீல் யானை ராஜேந்திரன் கும்பகோணத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நாகை மாவட்டம் கீழ்வேளூரை அடுத்த செம்பியன்மாதேவி கிராமத்தில் ராஜேந்திர சோழன், தனது பாட்டியின் நினைவாக கைலாசநாதர் கோவிலை கட்டி அதில் செம்பியன்மாதேவியின் ஐம்பொன் சிலையை மூன்றரை அடி உயரத்தில் நிர்மானம் செய்துள்ளார்.

    பல ஆண்டுகளுக்கு முன் அந்த சிலை மாயமாகி விட்டது. அதன் பிறகு 1959-ம் ஆண்டு இந்த கோவில் திருப்பணியின்போது புதிய செம்பியன்மாதேவி சிலை அமைக்கப்பட்டது. கைலாசநாதர் கோவிலில் காணாமல் போன ஐம்பொன் செம்பியன்மாதேவி சிலை அமெரிக்காவில் வாஷிங்டன் நகரில் உள்ள பிரியர் ஆர்ட் கேலரியில் உள்ளது.

    இந்த சிலையை மீட்க வேண்டும் என வேளாங்கண்ணி போலீஸ் நிலையத்தில் நான் புகார் செய்துள்ளேன். இதுதொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளேன். உயர்நீதிமன்றத்தில் அனுமதி பெற்று அமெரிக்காவுக்கு சென்று அங்குள்ள விசாரணை நீதிமன்றத்தில் செம்பியன்மாதேவியின் சிலை தொடர்பான ஆவணங்களை சமர்ப்பித்து விரைவில் அதை இந்தியாவுக்கு மீட்டு கொண்டு வருவேன்.

    இதேபோல் தஞ்சாவூர் பெரிய கோவில் எப்படி கட்டப்பட்டுள்ளது என்பதனை வெளிப்படுத்தும் வகையில் தஞ்சாவூர் தாமிர பட்டயங்கள் ராஜராஜ சோழன் காலத்தில் வெளியிடப்பட்டது. மேலும் சோழர்களின் ராஜமுத்திரையும் தஞ்சாவூரில் இருந்தது. இந்த தஞ்சாவூர் தாமிர பட்டயங்களும், முத்திரையும் தற்போது நெதர்லாந்து நாட்டில் உள்ள மியூசியத்தில் உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

    இதனை மீட்டு இந்தியாவுக்கு கொண்டு வந்தால், தஞ்சாவூர் பெரிய கோவில் கட்டுமானங்களின் ரகசியத்தை நாம் தெரிந்து கொள்ள முடியும். இந்தியா மற்றும் நெதர்லாந்து அரசுகளின் ஒத்துழைப்போடு இந்த தாமிர பட்டயங்கள் விரைவில் மீட்டு கொண்டு வரப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #StatueSmuggling

    ×