search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜிம்பாப்வே ஆப்கானிஸ்தான் தொடர்"

    • ஜிம்பாப்வேக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஆப்கானிஸ்தானின் ஷஷாய், ரஹ்மதுல்லா குர்பாஸ் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 83 ரன் எடுத்தது.
    • ஆப்கானிஸ்தானின் நஜிபுல்லா சட்ரன் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

    ஹராரே:

    ஆப்கானிஸ்தான் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடி வருகிறது.

    முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் ஆப்கானிஸ்தான் அணி 3-0 என முழுமையாகக் கைப்பற்றியது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி 20 போட்டி நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்தது. சிக்கந்தர் ராசா அதிகபட்சமாக 45 ரன்கள் எடுத்தார்.

    ஆப்கானிஸ்தான் சார்பில் நிஜத் மசூத் 3 விக்கெட் வீழ்த்தினார்.

    இதையடுத்து, 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஷஷாய் 45 ரன்கள் எடுத்தார். ரஹமதுல்லா குர்பாஸ் 33 ரன்கள் எடுத்தார்.

    கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடிய நஜிபுல்லா சட்ரன் 25 பந்தில் 3 சிக்சர், 2 பவுண்டரி உள்பட 44 ரன்கள் அடித்து அணியை வெற்றி பெறச் செய்தார்.

    இறுதியில், ஆப்கானிஸ்தான் 19.2 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 160 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என ஆப்கானிஸ்தான் முன்னிலை பெற்றுள்ளது.

    ×