search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டிராக்டர் மணல் கடத்தல்"

    சேத்துப்பட்டு-ஆரணியில் மணல் கடத்திய மாட்டு வண்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    சேத்துப்பட்டு:

    சேத்துப்பட்டை அடுத்த ஓதலவாடி கிராமம் அருகே உள்ள செய்யாறு ஆற்றுப்படுகையிலிருந்து குப்பம் கிராமத்தை சேர்ந்த ராமஜெயம் (வயது 38), ஆறுமுகம் (68), சந்தோஷ் (21) ஆகியோர் 3 மாட்டு வண்டிகளில் தனித்தனியாக மணல் கடத்தி வந்து கொண்டிருந்தனர்.

    அப்போது அந்த பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த சேத்துப்பட்டு இன்ஸ்பெக்டர் நரசிம்மன், சப்-இன்ஸ்பெக்டர் சசிகுமார் மற்றும் போலீசார் 3 மாட்டுவண்டிகளையும் மடக்கிப்பிடித்து மணலுடன் பறிமுதல் செய்தனர்.

    இது தொடர்பாக ராமஜெயம் உள்ளிட்ட 3 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆரணி அடுத்த பையூர் கூட்ரோட்டில் ஆரணி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாரதி தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

    அப்போது மனுக்கம்பட்டு ஆற்றில் அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த 5 மாட்டு வண்டிகளை போலீசார் பறிமுதல் செய்து ஆரணி தாலுகா போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

    தேனி அருகே பெரியாற்றில் மணல் கடத்திய கும்பல் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    தேனி:

    தேனி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மணல் கடத்தல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. போலீசார் மணல் கடத்தும் கும்பலை கைது செய்து அபராதம் விதித்தபோதும் இது தொடர்ந்து வருகிறது. அரசு அனுமதியின்றி நீர் நிலைகள் மற்றும் பெரியாற்றில் அதிக அளவு மணல் அள்ளப்படுகிறது.

    இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தேனி அருகே ஜங்கால்பட்டி, லெட்சுமிபுரம் பகுதியில் வீரபாண்டி சப்-இன்ஸ்பெக்டர் மலரம்மாள் தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர்.

    அப்போது பெரியாற்று படுகையில் மணல் அள்ளிக் கொண்டு 4 மாட்டு வண்டிகள் வந்தது. அரசு அனுமதியின்றி மணல் எடுத்து வந்தது தெரிய வந்தது. எனவே இது தொடர்பாக லெட்சுமிபுரததைச் சேர்ந்த பரமன், இந்திரஜித், கிருஷ்ணசாமி, கிருஷ்ணன் ஆகிய 4 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ஆண்டிப்பட்டி அருகே மணல் கடத்த பயன்படுத்திய மாட்டு வண்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    ஆண்டிப்பட்டி:

    ஆண்டிப்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மணல் கடத்தல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் நிலத்தடி நீர் மட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டு விவசாயம் மற்றும் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

    மயிலாடும்பாறை சப்-இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையிலான போலீசார் சிறார் பாலம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு 2 பேர் மாட்டு வண்டியில் மணல் கடத்திக் கொண்டு இருந்தனர்.

    போலீசார் 2 பேரையும் பிடித்து விசாரித்ததில் அவர்கள் குமணன் தொழுவைச் சேர்ந்த ராஜ் (வயது 35), செல்வக்குமார் (34) என தெரிய வந்தது. 2 பேரையும் கைது செய்து மாட்டு வண்டியையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    கூடலூர் அருகே 18-ம் கால்வாயில் மணல் கடத்த பயன்படுத்திய டிராக்டரை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    கூடலூர்:

    கூடலூர் பகுதியில் மணல் கடத்தல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக முல்லைப் பெரியாறு 18-ம் கால்வாய் பகுதியில் அதிக அளவு மணல் கொள்ளை நடைபெற்று வருகிறது.

    இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்பட்டதால் பொது மக்கள் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் காலிக் குடங்களுடன் அலையும் சூழல் ஏற்பட்டுள்ளது. மணல் கொள்ளையர்களை போலீசார் பிடித்து நடவடிக்கை எடுத்த போதும் மணல் கடத்தலை தடுக்க முடியவில்லை. கூடலூர் தெற்கு சப்-இன்ஸ்பெக்டர் ஜெயபாண்டி தலைமையிலான போலீசார் கூடலூர் - லோயர் கேம்ப் தேசிய நெடுஞ் சாலையில் ரோந்து சென்றனர். அரசு ஆஸ்பத்திரி அருகே வேகமாக வந்த டிராக்டரை நிறுத்தி சோதனையிட்ட போது அதில் 18-ம் கால்வாய் ஓடைப்பகுதியில் இருந்து மணல் கடத்தி வந்தது தெரிய வந்தது. டிராக்டரை பறிமுதல் செய்து உத்தமபாளையம் ஆர்.டி.ஓ.விடம் போலீசார் ஒப்படைத்தனர்.

    மேலும் இது குறித்து கூடலூர் கருணாநிதி காலனியைச் சேர்ந்த ஈஸ்வரன், டிரைவர் பாண்டியன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆண்டிப்பட்டி அருகே மணல் கடத்த பயன்படுத்திய டிராக்டரை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    ஆண்டிப்பட்டி:

    ஆண்டிப்பட்டி மற்றும் அதன்சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்தபோதும் குடிநீர் தட்டுப்பாடு தொடர்ந்து கொண்டே வருகிறது. இதற்கு மணல் கடத்தலே காரணம் என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். வைகைஆறு மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள நீர்நிலைகளில் அதிகளவு மணல் கொள்ளை நடந்து வருகிறது.

    போலீசார் அவர்களை பிடித்து நடவடிக்கை எடுத்த போதும் மணல் திருட்டை தடுக்கமுடியவில்லை.

    ராஜதானி சப்-இன்ஸ்பெக்டர் ராமபாண்டி தலைமையிலான போலீசார் கணேசபுரம் ஓடைப் பகுதியில் ரோந்து சென்றனர்.

    அப்போது வேகமாக வந்த டிராக்டரை நிறுத்தி சோதனையிட்டபோது அதில் மணல் கடத்தியது தெரியவந்தது. இதனைதொடர்ந்து டிராக்டரை பறிமுதல் செய்த போலீசார் இதுதொடர்பாக செல்லப்பாண்டி என்பவர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×