என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » டிரைவரிடம் விசாரணை
நீங்கள் தேடியது "டிரைவரிடம் விசாரணை"
புளியரை வழியாக கேரளாவிற்கு கடத்த முயன்ற 163 ரேசன் அரிசி மூடையை போலீசார் பறிமுதல் செய்து டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
செங்கோட்டை:
தமிழகத்திலிருந்து அண்டை மாநிலமான கேரளாவிற்கு கனிம பொருட்கள், ரேஷன் அரிசி உள்ளிட்ட பொருட்கள் மற்றும் தமிழக அரசால் தடை செய்யபட்ட புகையிலை பொருட்கள் அதிகளவு கடத்தப்பட்டு வருவதை தடுக்கும் நடவடிக்கையில் புளியரை சோதனை சாவடியில் 24 நேரமும் தீவிர கண்காணிப்பில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கடத்தல் பொருட்கள் தடுக்கப்படுவதுடன், கடத்தலில் ஈடுபடுபவர் மீது நடவடிக்கை தொடர்ந்து நடந்து வருகிறது.
இந்நிலையில் புளியரை சோதனை சாவடியில் போலீசார் ஒரு லாரியை இன்று சோதனை நடத்தினர். சோதனையில் பாவூர்சத்திரம் பகுதியிலிருந்து 163 மூடை ரேசன் அரிசியை திருவனந்தபுரம் பகுதிகளுக்கு எடுத்து செல்ல கொண்டு சென்றது தெரியவந்தது.
இதையடுத்து 163 மூடை ரேசன் அரிசியுடன் லாரியை பறிமுதல் செய்து உணவு கடத்தல் குற்ற புலனாய்வு துறையிடம் போலீசார் ஒப்படைத்தனர். இதையடுத்து அவர்கள் லாரியை ஓட்டி வந்த கோவை மாவட்டம் பிள்ளையார்புரம் பகுதியை சேர்ந்த சுகைபு (வயது 35) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
×

X