search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டொனால்ட் ட்ரம்ப்"

    • மீண்டும் அதிபராக விரும்பி தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார் டிரம்ப்
    • மன்னிப்பதுதான் நாட்டு நலனுக்கு உகந்த முடிவு என்றார் நிக்கி ஹாலே

    அமெரிக்க அதிபர் தேர்தல் இவ்வருடம் நடைபெற உள்ளது.

    ஜனநாயக கட்சியை சேர்ந்த தற்போதைய அதிபர் ஜோ பைடன் மீண்டும் போட்டியிட உள்ள நிலையில், குடியரசு கட்சியை சேர்ந்த முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் அவரை எதிர்த்து தீவிரமாக களம் இறங்கி உள்ளார்.

    ஆனால், டொனால்ட் டிரம்ப் மீது அமெரிக்காவின் புளோரிடா, நியூயார்க் மற்றும் ஜியார்ஜியா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பல வழக்குகள் பதிவாகியுள்ளன.

    2020ல் அமெரிக்காவில் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலின் முடிவுகள் வெளியான போது அவற்றை மாற்ற முயற்சித்தது, ரகசிய ஆவணங்களை தவறாக பயன்படுத்தியது, ஆபாச பட நடிகை ஒருவருக்கு சட்டவிரோதமாக பணம் வழங்கியது உள்ளிட்ட பல தீவிரமான குற்றச்சாட்டுகள் டிரம்ப் மீது பதிவு செய்யப்பட்டுள்ளன.

    குடியரசு கட்சி சார்பில் அதிபர் தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்களில் டிரம்பிற்கு அடுத்த நிலையில் இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமி மற்றும் ஐ.நா.விற்கான முன்னாள் அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே ஆகியோர் ஆதரவு தேடி பிரசாரம் செய்து வருகின்றனர்.

    இந்நிலையில், நியூ ஹாம்ப்ஷையர் (New Hampshire) மாநிலத்தில், ஒரு பேட்டியில் டிரம்ப் மீதான குற்றச்சாட்டு குறித்து பேசிய நிக்கி ஹாலே, "நான் அதிபரானால் டொனால்ட் டிரம்பிற்கு மன்னிப்பு வழங்கி விடுவேன். அதுதான் நாட்டு நலனுக்கு உகந்த செயல். 80 வயது மனிதரை சிறையில் வைத்து அதன் மூலம் நாட்டை பிளவடைய விட மாட்டேன். அவரை மன்னிப்பதன் மூலம் அவரை குறித்த பேச்சுக்களையே தொடராமல் செய்து விடுவேன்" என கருத்து தெரிவித்தார்.

    நிக்கியின் இந்த கருத்திற்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.

    சில தினங்களுக்கு முன் இதே கருத்தை மற்றொரு போட்டியாளரான விவேக் ராமசாமியும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    15 ஆண்டுகளாக அமெரிக்க வெள்ளைமாளிகையில் நடைபெற்று வந்த தீபாவளிக் கொண்டாட்டங்கள் இந்த ஆண்டு நிராகரிக்கப்பட்டுள்ளது. #Diwali #America #WhiteHouse #Trump
    வாஷிங்டன்:

    அமெரிக்க வாழ் இந்திய மக்களின் கோரிக்கையை ஏற்று கடந்த 2003-ம் ஆண்டு அப்போதைய அதிபர் ஜார்ஜ் புஷ் வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடும் வழக்கத்தை அறிமுகப்படுத்தினார். பின்னர் பதவிக்கு வந்த அதிபர் ஒபாமாவும் அந்த வழக்கத்தை தொடர்ந்து கடைபிடித்தார்.

    இந்நிலையில் கடந்த 15 ஆண்டுகளாக வெள்ளை மாளிகையில் நடைபெற்ற தீபாவளிக் கொண்டாட்டங்கள் இந்த ஆண்டு நடைபெறவில்லை. கடந்த ஆண்டு வெள்ளை மாளிகையில் தீபாவளிக் கொண்டாட்டங்கள் நடைபெற்ற நிலையில் அதில் அதிபர் ட்ரம்ப் பங்கேற்றார்.

    இந்த ஆண்டு தீபாவளி கொண்டாட்டங்கள் நடத்தப்படாததற்கு, நாடாளுமன்ற இடைக்கால தேர்தல், பிரச்சாரம், வாக்கு எண்ணிக்கை போன்றவை காரணமாக கூறப்படுகிறது. #Diwali #America #WhiteHouse #Trump
    முன்னாள் ப்ளே பாய் மாடல் ஒருவரும் அமெரிக்க அதிபர் ட்ரம்பும் பேசிக்கொண்டதாக கைப்பற்றப்பட்ட டேப் குறித்து கருத்து தெரிவித்த ட்ரம்ப், நான் எந்த தவறான செயல்களிலும் ஈடுபடவில்லை என தெரிவித்துள்ளார். #DonaldTrump
    வாஷிங்டன் :

    நியூயார்க்கில் உள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் முன்னாள் வழக்கறிஞர் மைக்கெல் கொஹெனின் அலுவலகத்தில் இந்த ஆண்டு தொடக்கத்தில் எப்.பி.ஐ சோதனை நடைபெற்றது. இந்த சோதனையின் போது கைப்பற்றப்பட்ட டேப் ஒன்றில் அமெரிக்க அதிபர் டிரம்பும், முன்னாள் ப்ளே பாய் மாடல் ஒருவரும் பேசிக் கொண்ட பதிவு உள்ளது என தகவல் வெளியாகியது. 

    அந்த டேப் பதிவில், டிரம்புடன் உறவு வைத்துக் கொண்டதாக கூறும் கரென் மெக் டொகல் எனும் முன்னாள் ப்ளே பாய் மாடலுக்கு பணம் அளிப்பது தொடர்பாக, டிரம்ப் மற்றும் கொஹென் பேசிக் கொண்டது பதிவாகியுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. 

    இந்நிலையில், ஊடகங்கள் தெரிவிக்கும் கொஹெனின் ஆடியோ டேப் போலியானது என இந்த விவகாரத்தில் டொனால்ட் ட்ரம்ப் கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ளதாவது :- 

    ஒரு வழக்கறிஞரின் அலுவலகத்தை அரசாங்கமே உடைக்கும் என்பது வியப்பாக உள்ளது, அந்த வழக்கறிஞர் அவருடைய வாடிக்கையாளரை பற்றி முற்றிலும் கேள்விப்படாத & ஒருவேளை சட்டவிரோதமான ஒரு விஷயத்தை டேப் செய்தார் என்பது அதைவிட வியப்பாக உள்ளது. இதில், நல்ல செய்தி என்பது உங்களின் மனம் கவர்ந்த அதிபர் எந்த தவறான செயல்களிலும் ஈடுபடவில்லை என்பது தான்.

    இவ்வாறு ட்ரம்ப் தன் மீதான ஊடகங்களின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்துள்ளார். #DonaldTrump
    சமீபத்தில் நடைபெற்ற வெனிசுலா அதிபர் தேர்தலில் மீண்டும் நிக்கோலஸ் மதுரோ வென்ற நிலையில், வெனிசுலா நாட்டின் மீது புதிய பொருளாதார தடைகளை அமெரிக்கா அறிவித்துள்ளது.#trumph #sanctionsagainstVenezuela
    வாஷிங்டன்:

    சமீபத்தில் வெனிசுலாவில் நடைபெற்ற அதிபர் பதவிக்கான தேர்தலில் தில்லு முல்லு நடைபெற்றதாக கூறி முக்கிய எதிர்க்கட்சி தேர்தலை புறக்கணித்த நிலையில், அதிபர் நிக்கோலஸ் மதுரோ மீண்டும் வெற்றி பெற்றார்.

    இந்த தேர்தல் தொடர்பாக அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் கூறுகையில், ‘வெனிசுலா அதிபர் தேர்தல் போலியான ஒன்று. சுதந்திரமாகவும், நேர்மையாகவும் நடைபெறவில்லை. முறைகேடாக நடைபெற்ற இந்த தேர்தல், வெனிசுலாவின் புனிதமிக்க ஜனநாயக கலாச்சாரத்தை தகர்த்துள்ளது’ என தெரிவித்துள்ளார்.

    முறைகேடான இந்த தேர்தலுக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவிப்பதாகவும், இந்த தேர்தல் அரசியலமைப்பின் ஒழுங்கை குலைப்பதாகவும் அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார்.

    இதையடுத்து, அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அமெரிக்காவிலிருந்து வெனிசுலாவுக்கான பொருளாதார பரிவர்த்தனைகள் மற்றும் இதர ஒப்பந்தங்களுக்கும் தடை விதித்து வெனிசுலா நாட்டின் மீது புதிய பொருளாதார தடையை விதித்துள்ளார்.

    மேலும், அமெரிக்க நிறுவனங்களில் 50 சதவிகிதத்துக்கும் மேலான வெனிசுலா அரசின் பங்குகள், விற்பனை, பரிமாற்றங்கள், போன்றவற்றிற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். #trumph #sanctionsagainstVenezuela
    ×