search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தஞ்சாவூர் மாவட்டம்"

    தஞ்சை மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. அதில் 20844 பேர் வாக்காளர் பட்டியல் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். #FinalVotersList
    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

    இதுகுறித்து தஞ்சை கலெக்டர் அண்ணாதுரை கூறியதாவது:-

    தஞ்சை மாவட்டத்தில் 1-9-2018 அன்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் ஆண் வாக்காளர்கள் 9,39,707, பெண் வாக்காளர்கள் 972522 , மூன்றாம் பாலினத்தவர் 93 என மொத்த வாக்காளர்கள் 19,12,322 பேர் இடம் பெற்றிருந்தனர்.

    கடந்த 1-1-2019-ஐ தகுதி நாளாக கொண்டு 18 வயது நிரம்பிய வாக்காளர்களிடம் இருந்து வாக்காளர் பட்டியலில் சேர்க்க படிவங்கள் பெறப்பட்டு உரிய விசாரணைக்கு பின்பு தகுதி அடிப்படையில் ஆண் வாக்காளர்கள் 19170, பெண் வாக்காளர்கள் 24372, மூன்றாம் பாலினத்தவர் 27 என மொத்தம் 43,569 வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டு உள்ளனர்.

    வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்த பணிகளின் போது உரிய கள விசாரணை அடிப்படையில் இறந்த மற்றும் இடம்பெயர்ந்த வாக்காளர்களில் ஆண்-9582, பெண்-11260, மூன்றாம் பாலினத்தவர் 2 ஆக மொத்தம் 20844 பேர் வாக்காளர் பட்டியல் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

    இறுதி வாக்காளர் பட்டியல் தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர்களின் பார்வைக்காக நாளை (1-ந் தேதி) முதல் வைக்கப்பட்டிருக்கும். வாக்காளர்கள் தங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் தவறின்றி இடம் பெற்றுள்ளதா? என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

    மேலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்கம் மற்றும் திருத்தம் செய்ய அதற்குரிய விண்ணப்பதை பூர்த்தி செய்து தகுந்த முகவரி சான்றிதழுடன் தொடர்புடைய தாசில்தார் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். நேரடியாக உரிய படிவத்தில் பூர்த்தி செய்து வழங்க இயலாத பொதுமக்கள் ஆன்லைன் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.

    தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாக்காளர் தொடர்பு மையம் செயல்பட்டு வருகிறது. மேலும் கட்டணமில்லா தொலைபேசி எண்.1950-ல் அலுவலக வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் கூறினார். #FinalVotersList
    ×