search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தனி மாவட்டம்"

    கள்ளக்குறிச்சி தனி மாவட்டமாக அறிவித்திருப்பது பாமகவுக்கு கிடைத்த வெற்றி என்று டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளார். #Ramadoss #PMK
    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மக்கள் தொகையும், நிலப்பரப்பும் அதிகம் உள்ள மாவட்டங்களை நிர்வாக வசதிக்காக பிரிக்கவேண்டும் என்று பா.ம.க. தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. விழுப்புரம் மாவட்டத்தை மூன்றாக பிரித்து விழுப்புரம், திண்டிவனம், கள்ளக்குறிச்சி ஆகியவற்றை தலைநகரங்களாக கொண்ட புதிய மாவட்டங்களை உருவாக்க வலியுறுத்தி பா.ம.க. பல போராட்டங்களை நடத்தியுள்ளது. அதை ஏற்கும் வகையில் கள்ளக்குறிச்சியை தலைநகரமாக கொண்ட புதிய மாவட்டம் அமைக்கப்படும் என்று சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இது பா.ம.க.வுக்கு கிடைத்த வெற்றியாகும்.

    நிர்வாக வசதியை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கதாகும். அதேபோல் விழுப்புரம் மாவட்டத்தின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளை தனியாக பிரித்து திண்டிவனத்தை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் அமைக்கவேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக எழுப்பப்பட்டு வருகிறது. அந்த கோரிக்கையையும் அரசு நிறைவேற்றவேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இதேபோன்று, இந்திய ஜனநாயக கட்சி நிறுவனத்தலைவர் பாரிவேந்தர், கள்ளக்குறிச்சியை தனி மாவட்டமாக அறிவித்ததற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு தெரிவித்து அறிக்கை வெளியிட்டு உள்ளார். #Ramadoss #PMK
    பெரிய மாவட்டமாக இருக்கும் விழுப்புரம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து கள்ளக்குறிச்சி என்னும் புதிய மாவட்டம் அமைக்கப்படும் என்று சட்டசபையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அறிவித்தார். #Kallakurichi #EdappadiPalaniswami
    சென்னை:

    விழுப்புரம் மாவட்டத்தை 2 ஆக பிரித்து கள்ளக்குறிச்சியை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று அமைச்சர் சி.வி.சண்முகம், குமரகுரு எம்.எல்.ஏ. மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இந்த நிலையில் சட்டசபையில் குமரகுரு எம்.எல்.ஏ பேசும்போது, கள்ளக்குறிச்சியை தனி மாவட்டமாக ஆக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.



    இன்று தமிழக சட்டசபையில் கவர்னர் உரை மீது நடந்த விவாதத்துக்கு பதில் அளித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

    விழுப்புரம் மாவட்டம் பெரிய மாவட்டமாக இருப்பதால் அது 2 ஆக பிரிக்கப்படுகிறது.

    கள்ளக்குறிச்சியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படுகிறது என்று கூறினார்.

    இதன் மூலம் தமிழகத்தின் 33-வது மாவட்டமாக கள்ளக்குறிச்சி உருவாகியுள்ளது. #Kallakurichi #EdappadiPalaniswami
    திருவண்ணாமலை தனி மாவட்டமாக உதயமாகி 30-ம் ஆண்டு தொடக்க விழா கலெக்டர் கந்தசாமி தலைமையில் நடந்தது. மேலும் சிறப்பு தபால் தலை வெளியிடப்பட்டது.
    திருவண்ணாமலை:

    வட ஆற்காடு மாவட்டம் 1989-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30-ந் தேதி திருவண்ணாமலை சம்புவராயர் மாவட்டமாகவும், வட ஆற்காடு அம்பேத்கர் மாவட்டமாகவும் பிரிக்கப்பட்டது. பின்னர் 1997-ம் ஆண்டு மாவட்ட பெயர் மாற்றங்களுக்கு பின் திருவண்ணாமலை மாவட்டமானது.

    திருவண்ணாமலை மாவட்டம் கிழக்கே காஞ்சீபுரம் மாவட்டத்தினாலும், வடக்கே வேலூர் மாவட்டத்தினாலும், தெற்கே விழுப்புரம் மாவட்டத்தினாலும், மேற்கே தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களாலும் சூழ்ந்து உள்ளது.

    இந்த மாவட்டம் இந்தியாவின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக உள்ளது. இங்கு அருணாசலேஸ்வரர் கோவில், ரமண மகரிஷி ஆசிரமம், சாத்தனூர் அணை போன்றவை உள்ளது. இந்த மாவட்டம் தனி மாவட்டமாக உதயமாகி 29-ம் ஆண்டுகள் நிறைவடைந்து, 30-ம் ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு நேற்று திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விழா நடைபெற்றது. மேலும் கலெக்டர் அலுவலகம், தாலுகா அலுவலகங்கள் மின்னொளி அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.



    தொடக்க விழாவை முன்னிட்டு கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற விழாவை கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டு இருந்த புகைப்பட கண்காட்சியை நேரில் சென்று பார்வையிட்டார். இதில் திருவண்ணாமலை மாவட்ட முக்கிய பகுதிகளின் படங்கள், வரலாற்று சின்னங்களின் படங்கள் போன்றவை இடம் பெற்று இருந்தன.

    இதையடுத்து கேழ்வரகு, வெல்லம், நிலக்கடலை ஆகியவற்றினால் செய்யப்பட்ட பாரம்பரிய உணவால் செய்யப்பட்ட கேக்கை பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களுடன் இணைந்து கலெக்டர் வெட்டினார்.

    பின்னர் 30-ம் ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு அருணாசலேஸ்வரர் உண்ணாமலை அம்மன் படம் அச்சிடப்பட்ட சிறப்பு தபால் தலையை கலெக்டர் வெளியிட்டார். அதனை மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமி மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் பெற்று கொண்டனர்.

    இதையடுத்து பள்ளி மாணவ, மாணவிகளின் பாரம்பரிய இசை நிகழ்ச்சி, சிலம்பாட்டம், மலைவாழ் மக்கள் நடனம் போன்றவை நடைபெற்றது.

    முன்னதாக திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று சிறப்பு பாடல் நிகழ்ச்சி நடந்தது. மேலும் குழந்தைகள் வளர்ச்சி துறை சார்பில் பெண் குழந்தைகளை காப்போம் என்ற தலைப்பில் நாடகம் நடைபெற்றது. பின்னர் அரசு அலுவலர்களுக்கு நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கலெக்டர் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார். தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் நடைபெற்ற கவிதை, கட்டுரை, பேச்சு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கலெக்டர் சான்றிதழ்களை வழங்கினார். விழாவை முன்னிட்டு கலெக்டர், மாவட்ட வருவாய் அலுவலர் உள்பட உயர் அதிகாரிகள் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டையில் வந்து இருந்தனர்.

    இதில் உதவி கலெக்டர் (பயிற்சி) பிரதாப், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ஜானகி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் உமாமகேஸ்வரி, முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார் மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். 
    ×