search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தறி தொழிலாளி தர்ணா போராட்டம்"

    சேலம் கலெக்டர் அலுவலகத்தில் மின் இணைப்பு கேட்டு தறி தொழிலாளி தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    சேலம்:

    சேலம் கருப்பூர் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். தறித்தொழிலாளி. இவர் இன்று காலை கலெக்டர் அலுவலகம் மனு கொடுக்க வந்த அவர் தடீரென அவர் கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டார்.

    இது குறித்து தகவல் அறிந்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் எனக்கு உடல் நிலை சரியில்லை. இதனால் சொந்த தொழில் செய்ய வேண்டும் என நினைத்து கயிறு திரிக்கும் தொழில் நடத்துவதற்காக கருப்பூர் மின்சார அலுவலகத்தில் மின் இணைப்பு கேட்டு மனு வழங்கினேன்.

    கடந்த 6 மாதம் ஆகியும் மின் இணைப்பு கோரிய மனுவிற்கு எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது குறித்து மின்சாரத்துறை அதிகாரியிடம் மின் இணைப்பு கேட்டு புகார் தெரிவித்தேன்.

    இதையடுத்து மின் ஊழியர்கள் மின் இணைப்புக்காக அளவீடு செய்தனர். அளவீடு செய்து 3 மாதம் ஆகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது குறித்து அதிகாரிகள் மற்றும் மின் வாரிய ஊழியர்கள் மின் இணைப்பு வழங்க லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் நான் அதிர்ச்சி அடைந்தேன்.

     இவ்வாறு அவர் கூறினார்.

    இதனால் மனம் உடைந்த ஆறுமுகம் இன்று கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். இன்று விடுமுறை என்பதால் கலெக்டர் இல்லை. ஆகவே அங்கு தர்ணாவில் ஈடுபட்டார். போலீசார் ஆறுமுகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி இது குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் கூறி நடவடிக்கை எடுப்பதாக கூறி உறுதியளித்தனர்.

    இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். விடுமுறை நாளில் கலெக்டர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    ×