என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தாயார் மரணம்"
புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமியின் தாயார் ஈஸ்வரி அம்மாள். 96 வயதான ஈஸ்வரி அம்மாள் தனது சொந்த கிராமமான பூரணாங்குப்பத்தில் வசித்து வந்தார். வயது முதிர்வு காரணமாக நேற்று முன்தினம் இரவு ஈஸ்வரி அம்மாள் மரணமடைந்தார்.
அவரது உடலுக்கு இறுதிச்சடங்கு நடத்தப்பட்டு நேற்று மாலை நல்லடக்கம் செய்யப்பட்டது. அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், அரசியல் கட்சி தலைவர்கள் இறுதிச்சடங்கில் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் இன்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் புதுவை லாஸ்பேட்டை விமான நிலையத்திற்கு வந்தார்.
பின்னர் அங்கிருந்து கார் மூலம் எல்லையம்மன் கோவில் வீதியில் உள்ள முதல்-அமைச்சர் நாராயணசாமி வீட்டிற்கு வந்தார். அங்கு ஈஸ்வரி அம்மாள் உருவப்படத்திற்கு மு.க.ஸ்டாலின் மலர் அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் முதல்-அமைச்சர் நாராயணசாமிக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல் கூறினார். அவருடன் தமிழக முன்னாள் அமைச்சர் பொன்முடி, புதுவை தி.மு.க. அமைப்பாளர்கள் சிவா, எஸ்.பி.சிவக்குமார், முன்னாள் முதல்-அமைச்சர் ஜானகிராமன் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் உடனிருந்தனர்.
பின்னர் மீண்டும் மு.க.ஸ்டாலின் லாஸ்பேட்டை விமான நிலையம் சென்று அங்கிருந்து தனி விமானம் மூலம் சேலத்திற்கு சென்றார்.
அஞ்சலி செலுத்த வந்த தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது:-
முதல்-அமைச்சர் நாராயணசாமி தாயாரின் இறப்பு ஈடுசெய்ய முடியாதது. நேற்றைய தினமே நேரில் வந்து அஞ்சலி செலுத்த நினைத்தேன். ஆனால், சூழ்நிலை காரணமாக என்னால் வர இயலவில்லை.
எனவே, இன்று வந்து முதல்-அமைச்சர் நாராயணசாமியை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளேன் என்றார்.
முன்னதாக இன்று காலை முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், தமிழக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு ஆகியோர் முதல்-அமைச்சர் நாராயணசாமியின் வீட்டுக்கு வந்து ஈஸ்வரி அம்மாள் படத்துக்கு மலர் அஞ்சலி செலுத்தி ஆறுதல் தெரிவித்தனர். #Narayanasamy #MKstalin
புதுச்சேரி:
வில்லியனூரை அடுத்த அரியூர்பேட் பகுதியை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி பெயிண்டர். இவரது மனைவி சத்யா (வயது 29). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
சுந்தரமூர்த்தியின் தாயார் சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இந்த சோகம் தாங்க முடியாமல் சுந்தரமூர்த்தி குடிப்பழக்கத்துக்கு அடிமையானார்.
இந்த நிலையில் நேற்று சுந்தரமூர்த்தியின் தாயார் நினைவு தினம். இதனால் மன வருத்தத்தில் இருந்து வந்த சுந்தரமூர்த்தி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து வீட்டில் உள்ள மின் விசிறி கொக்கியில் சேலையால் தூக்குபோட்டு தொங்கினார்.
இதை பார்த்த சத்யா அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மீட்டு வில்லியனூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பிறகு மேல் சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே சுந்தரமூர்த்தி இறந்து போனார்.
இதுகுறித்து சத்யா வில்லியனூர் போலீசில் புகார் செய்தார்.
அதன் பேரில் உதவி சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
இதேபோல் மங்கலம் கோர்க்காடு அம்மன்நகர் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன் (42 லாரி டிரைவர். இவரது மனைவி வேம்பு (41). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.
குடிப்பழக்கம் உள்ள பார்த்திபன் வேலைக்கு செல்லாமல் குடித்து விட்டு வந்து மனைவியுடன் தகராறு செய்து வந்தார்.
இதேபோல் நேற்றும் கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் மனவருத்தத்தில் இருந்து வந்த பார்த்திபன் வீட்டில் ஆஸ்பெட்டாஸ் சீட் பைப்பில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து வேம்பு கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பெரியசாமி, உதவி சப்- இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர், மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் செல்லூர் ராஜூ. அவரது தாயார் ஒச்சம்மாள் (வயது 90).
கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் ஒச்சம்மாள் சிகிச்சை பெற்று வந்தார்.
சில நாட்களாக அவரது உடல் நிலையில் தொடர்ந்து பின்னடைவு ஏற்பட்டது. ஆனாலும் டாக்டர் குழுவினர் 24 மணி நேரமும் தீவிரமாக கண்காணித்து சிகிச்சை அளித்தனர்.
இந்த நிலையில் இன்று காலை 9 மணியளவில் ஒச்சம்மாள் உடல்நிலை கவலைக்கிடமான நிலையில் ஆஸ்பத்திரியில் இருந்து மதுரை செல்லூரில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு சிறிது நேரத்தில் அவர் மரணம் அடைந்தார்.
தாயார் மரணம் அடைந்ததை அறிந்து அமைச்சர் செல்லூர் ராஜூ, அவரது மனைவி ஜெயந்தி ராஜூ மற்றும் குடும்பத்தினர் கதறி அழுதனர்.
ஒச்சம்மாளின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு அ.தி.மு.க. நிர்வாகிகள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
ஒச்சம்மாளின் உடல் தகனம் நாளை (வெள்ளிக்கிழமை) மதியம் 1 மணிக்கு நடக்கிறது. செல்லூரில் உள்ள இல்லத்தில் இருந்து ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு தத்தனேரியில் தகனம் செய்யப்படுகிறது.
அமைச்சர் செல்லூர் ராஜூவின் தாயார் மறைவையொட்டி அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் செல்லூர் ராஜூவுக்கு ஆறுதல் தெரிவித்தனர்.
நாளை நடைபெறும் இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்கள். #MinisterSellurRaju
கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜுவின் தாயார் கே.ஓச்சம்மாள் (90). இன்று காலை உடல் நலக்குறைவால் மதுரையில் காலமானார்.
அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது உடல் நாளை (வெள்ளிக்கிழமை) மதியம் 1 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படுகிறது. #MinisterSellurRaju
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்