search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திமுக பொதுக்குழு"

    தமிழக அரசுக்கு எதிராக வழக்குகளை தொடுக்க தி.மு.க. வக்கீல்கள் செலவு மற்றும் கோர்ட்டு வகைக்காக ரூ.11 கோடிவரை செலவழித்துள்ளதாக பொதுக்குழுவில் தாக்கல் செய்யப்பட்ட கணக்கு தணிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #DMK #DMKGeneralMeeting
    சென்னை:

    தமிழக அரசுக்கு எதிராக தி.மு.க. பல்வேறு வழக்குகளை கோர்ட்டில் தொடர்ந்து இருந்தது.

    அமைச்சர், போலீஸ் உயர் அதிகாரிகள் தொடர்புடைய குட்கா ஊழல் வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க கோரி வழக்கு தொடர்ந்தது.

    எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக வாக்களித்த துணை முதல்-மந்திரி ஓ.பன்னீர்செல்வம் மற்றும் 10 எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி வழக்கு தொடர்ந்தது. இது தவிர தமிழக அரசுக்கு எதிராக தி.மு.க. பல்வேறு வழக்குகளை கோர்ட்டில் தொடுத்தது.

    இந்த நிலையில் தமிழக அரசுக்கு எதிராக வழக்குகளை தொடுக்க தி.மு.க. வக்கீல்கள் செலவு மற்றும் கோர்ட்டு வகைக்காக ரூ.11 கோடிவரை செலவழித்துள்ளது. தி.மு.க. பொதுக்குழுவில் தாக்கல் செய்யப்பட்ட கணக்கு தணிக்கையில் இதுபற்றி தெரிவிக்கப்பட்டுள்ளதாக தி.மு.க. கணக்கு தணிக்கை குழு உறுப்பினர் தெரிவித்தார்.


    ஆர்.கே. நகர் தேர்தல் பிரசாரத்துக்கு ரூ.10 லட்சம் செலவழிக்கப்பட்டது பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேபோல தி.மு.க.வுக்கு வந்த பணம் விவரம், செலவழித்த மற்ற விவரம் ஆகியவை பற்றியும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    ஆண்டு தோறும் கணக்கு தணிக்கை தி.மு.க. பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டு தேர்தல் கமி‌ஷனிடம் அனுப்பப்படும். பின்னர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யப்படும். #DMK #DMKGeneralMeeting
    திமுகவில் இன்று புதிய அத்தியாயம் தொடங்கியிருப்பதாக பொதுக்குழுவில் பொருளாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட துரைமுருகன் பேசினார். #DMK #DuraiMurugan #DMKThalaivarStalin
    சென்னை:

    சென்னையில் இன்று நடைபெற்ற தி.மு.க. பொதுக்குழுவில், பொருளாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட துரைமுருகன் பேசியதாவது:-

    உலக தமிழர்களின் உரிமைக்காக போராடியவர் கருணாநிதி. சிவப்பு கம்பளத்தில் நடந்து அவர் பதவியில் அமரவில்லை. சிலுவைகளை சுமந்தே பதவிகளை அடைந்தார்.

    தி.மு.கவின் பேச்சாளர் என்பதிலே தான் எனக்கு பெருமை. சிறுவனாக பார்த்து என் கண்முன் வளர்ந்தவர் இன்று தலைவராகி இருக்கிறார். தம்பி என அழைத்துக் கொண்டிருந்த ஸ்டாலின் இன்று என் மரியாதைக்குரிய தலைவர்.



    தி.மு.கவில் புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது. கட்சியை காப்பாற்ற சரியான ஆள் ஸ்டாலின்  தான். கருணாநிதியே கொடுத்த பதவியாக கருதி ஏற்கிறேன். பொருளாளர் வேலை நிதி சேகரிப்பது தான், நிதி கொடுங்கள்... இல்லாதவர்கள் ஆதரவு கொடுங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.  #DMK #DuraiMurugan #DMKThalaivarStalin
    திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக இன்று பொறுப்பேற்ற மு.க. ஸ்டாலின் சென்னையில் பெரியார், அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். #DMKThalaivarStalin #DMKGeneralCouncilMeet #MKStalin
    சென்னை:

    சென்னையில் இன்று நடைபெற்ற தி.மு.க. பொதுக்குழுவில் கட்சியின் தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் முறைப்படி அறிவித்தார்.

    பேரறிஞர் அண்ணாவால் உருவாக்கப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் முதல் தலைவராக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி கடந்த 1969-ம் ஆண்டு பதவியேற்றார். கடந்த 7-8-2018 அன்று அவரது உயிர் பிரியும் வரை அக்கட்சியின் தலைவராக நீடித்தார்.

    கருணாநிதியின் மறைவுக்கு பின்னர் தி.மு.க.வின் இரண்டாவது தலைவராக பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் அக்கட்சியின் தலைவராக தொண்டர்களிடையே இன்று முதன்முறையாக எழுச்சி உரையாற்றினார்.



    பின்னர், பிற்பகலில் சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் நினைவிடத்துக்கு வந்த ஸ்டாலின் தந்தை பெரியாரின் சமாதியில் மலர் வளையம் வைத்து மரியாதை செய்தார். அங்கிருந்து மெரினா கடற்கரைக்கு சென்ற அவர் முன்னாள் முதல்வர்கள் அண்ணா மற்றும் கருணாநிதி சமாதிகளில்  மலர் வளையம் வைத்து மரியாதை செய்தார்.

    தி.மு.க. தலைவர் ஸ்டாலின் இன்று சென்ற இடங்களில் எல்லாம் ஏராளமான கட்சி பிரமுகர்களும், தொண்டர்களும் உற்சாக மிகுதியால் மகிழ்ச்சி ஆரவாரத்துடன் வரவேற்பு அளித்தனர்.  #DMKThalaivarStalin #DMKGeneralCouncilMeet #MKStalin
    திமுக பொதுக்குழு கூட்டத்தில் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட மு.க.ஸ்டாலின் பேசும்போது, திமுகவின் கனவை நிறைவேற்றுவதற்காக இன்று புதிதாய் பிறந்திருப்பதாக தெரிவித்தார். #DMKThalaivarStalin #DMKGeneralCouncilMeet #MKStalin
    சென்னை:

    திமுக தொடங்கப்பட்டபோது பொதுச்செயலாளராக அண்ணா பதவி வகித்தார். அண்ணாவின் மறைவிற்கு பிறகு கருணாநிதி கட்சியின் தலைவர் ஆனார். தொடர்ந்து 50 ஆண்டுகள் தலைவராக அவர் பொறுப்பு வகித்து வந்த நிலையில், அவரது மறைவிற்கு பிறகு, கட்சியின் 2-வது தலைவராக மு.க.ஸ்டாலின் இன்று தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.  கட்சியின் பொதுக்குழுவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை கட்சியின் பொதுச்செயலாளர் அன்பழகன் வெளியிட்டார்.



    பின்னர் பொதுக்குழுவில் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அவர் பேசியதாவது:-

    திமுக தலைவராக நான் பொறுப்பேற்றதை பார்க்க கருணாநிதி இல்லையே என்பதே எனது ஒரே குறை. கருணாநிதி போல் மொழி ஆளுமை தனக்கு கிடையாது. நான் கருணாநிதியில்லை... அவரை போல் எனக்குப் பேச தெரியாது.

    திமுகவின் கனவை நிறைவேற்ற இன்று புதிதாய் பிறந்திருக்கிறேன். நீங்கள் பார்க்கும்... கேட்கும் ஸ்டாலின் வேறொருவன். சொந்த நலன்களை மறந்து தமிழக மக்களின் நலனுக்காக ஒன்று சேர்ந்து உழைப்போம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ஸ்டாலின் தலைவர் ஆனது தொடர்பான அறிவிப்பு வெளியானதும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்ற அண்ணா அறிவாலயத்திற்கு வெளியே கூடியிருந்த தொண்டர்கள் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் உற்சாகமாக கொண்டாடினர். #DMKThalaivarStalin #DMKGeneralCouncilMeet #MKStalin
    திமுக தலைவர் கருணாநிதி, முன்னாள் பிரதமர் வாஜ்பாய், சோம்நாத் சாட்டர்ஜி ஆகியோர் மறைவுக்கு திமுக பொதுக்குழுவில் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. #DMK #DMKGeneralCouncilMeeting
    சென்னை:

    சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக பொதுக்குழு கூட்டம் இன்று காலை தொடங்கியது. மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள், கட்சியின் மூத்த நிர்வாகிகள், பல்வேறு அணிகளை சேர்ந்த நிர்வாகிகள் என 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.

    இக்கூட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதி, வாஜ்பாய், சோம்நாத் சாட்டர்ஜி, சுர்ஜித் சிங் பர்னாலா, கோபி அன்னான் ஆகியோரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் வாசிக்கப்பட்டது. தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் கேரளாவில் மழை வெள்ளத்தினால் உயிரிழந்தவர்களுக்கும் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.



    இக்கூட்டத்தில் கட்சியின் தலைவராக ஸ்டாலின் மற்றும் பொருளாளராக துரைமுருகன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்து பொதுச்செயலாளர் க.அன்பழகன் முறைப்படி அறிவிக்க உள்ளார்.  #DMK #DMKGeneralCouncilMeeting
    தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவையடுத்து விரைவில் கட்சியின் பொதுக்குழு கூட உள்ளதாகவும், அந்த கூட்டத்தில் தி.மு.க. செயல் தலைவராக இருக்கும் மு.க.ஸ்டாலின் தி.மு.க. தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #DMK #Karunanidhi #MKStalin
    சென்னை:

    கருணாநிதியின் மரணத்தால் தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டு இருப்பது போல தி.மு.க. தலைவர் பதவியும் காலியாக உள்ளது.

    தி.மு.க.வின் அடுத்த புதிய தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பு ஏற்க உள்ளார்.

    தமிழக அரசியலோடு பின்னி பிணைந்த தி.மு.க.வின் நீண்ட நெடிய வரலாற்றில் கருணாநிதிக்கு எந்த அளவுக்கு பங்களிப்பு இருக்கிறதோ அதே போன்ற சிறப்பு மு.க.ஸ்டாலினுக்கும் இருக்கிறது. தற்போது 65 வயதாகும் மு.க.ஸ்டாலின் 1967-ம் ஆண்டே அரசியலில் காலடி எடுத்து வைத்து விட்டார்.

    1975-ல் மிசா சட்டம் காரணமாக சிறையில் அடைக்கப்பட்ட மு.க.ஸ்டாலின் மீது அப்போதே அகில இந்திய அளவில் அனைவரது பார்வையும் திரும்பியது. 1980-ல் இளைஞரணி தலைவர் பதவியுடன் தீவிர அரசியலில் ஸ்டாலின் செயல்பட தொடங்கினார்.

    2003-ல் துணை பொதுச்செயலாளர், 2008-ல் தி.மு.க. பொருளாளர் என்று அடுத்தடுத்து கட்சியில் முன்னேற்றம் கண்ட மு.க.ஸ்டாலின் 2015-ம் ஆண்டு தமிழகம் முழுவதும் நமக்கு நாமே என்ற பெயரில் நடைபயணம் சென்றதன் மூலம் அனைத்து தரப்பு மக்களின் மனதில் இடம் பிடித்தார்.

    2016-ம் ஆண்டு தேர்தலில் தி.மு.க. வெற்றிவாய்ப்பை இழந்தாலும் எதிர்க்கட்சி தலைவர் என்ற மிகப்பெரிய பொறுப்பை மு.க.ஸ்டாலின் ஏற்றார். அந்த காலகட்டத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டதால் 2017-ம் ஆண்டு ஜனவரி மாதம் மு.க.ஸ்டாலினுக்கு தி.மு.க.வின் செயல் தலைவர் பதவி வழங்கப்பட்டது.

    அதன் பிறகு தமிழகம் முழுவதும் கட்சிப் பணிகளை மு.க.ஸ்டாலின் முன்னேடுத்து செயல்பட்டு வருகிறார். 6 தடவை எம்.எல்.ஏ.வாக இருந்து அனுபவம் பெற்றுள்ள மு.க.ஸ்டாலினுக்கு தற்போது திராவிட முன்னேற்ற கழகத்துக்கு தலைமை ஏற்கும் மிகப்பெரிய பொறுப்பும் சவாலும் வந்துள்ளது.

    இதற்காக தி.மு.க. பொதுக்குழு விரைவில் கூடுகிறது. வருகிற 19-ந்தேதி தி.மு.க. பொதுக்குழு கூடுவதாக இருந்தது. கருணாநிதிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அது தள்ளி வைக்கப்பட்டது.

    வேறொரு நாளில் பொதுக்குழுவை கூட்ட முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதுபற்றிய தகவல் தேர்தல் கமி‌ஷனுக்கும் தி.மு.க. சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த மாத இறுதியில் அல்லது அடுத்த மாத தொடக்கத்தில் தி.மு.க. பொதுக்குழு கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கருணாநிதி மறைவு காரணமாக தி.மு.க.வில் 7 நாள் துக்கம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இன்று 4-வது நாள் ஆகும். இன்னும் 3 நாள் கழித்து துக்கம் நிறைவு பெறுகிறது.

    எனவே 15-ந்தேதிக்குப் பிறகு மு.க.ஸ்டாலின் கட்சிப் பணிகளில் தீவிர கவனம் செலுத்த உள்ளார். முதல் கட்டமாக நிர்வாக அமைப்பு மாற்றப்பட உள்ளது. அதற்கு வசதியாக பொதுக்குழு கூட்டப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்படும்.

    பொதுக்குழு கூட்டத்தில் பல புதிய முடிவுகளை எடுக்க தி.மு.க. மூத்த தலைவர்கள் திட்டமிட்டுள்ளனர். குறிப்பாக மூத்த நிர்வாகிகள் முதல் முக்கிய நிர்வாகிகள் வரை அனைவருக்கும் புதிய பொறுப்புகள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


    தி.மு.க. செயல் தலைவராக இருக்கும் மு.க.ஸ்டாலின் தி.மு.க. தலைவராகிறார். பொதுச்செயலாளராக இருக்கும் க.அன்பழகன் வயது முதிர்வு காரணமாக அந்தப் பொறுப்பில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ள விருப்பம் தெரிவிப்பதாக கூறப்படுகிறது.

    அவருக்கு பதில் முதன்மை செயலாளராக இருக்கும் துரைமுருகன் பொதுச்செயலாளராக பொறுப்பு ஏற்பார் என்று கூறப்படுகிறது.

    க.அன்பழகனுக்கு தி.மு.க.வில் ஆலோசகர் அல்லது வழிகாட்டும் வகையில் ஏதாவது கவுரவ பதவி வழங்கப்படலாம் என்று தெரிகிறது.

    தி.மு.க.வின் முக்கிய பொறுப்பான பொருளாளர் பதவியை தற்போது மு.க.ஸ்டாலினே வகித்து வருகிறார். அந்த பொருளாளர் பதவியில் டி.ஆர்.பாலு நியமிக்கப்படுவார் என தெரிகிறது.

    ஆ.ராசா, ஐ.பெரியசாமி, பொன்முடி உள்ளிட்டோர் துணை பொதுச்செயலாளராக நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளது. எ.வ.வேலு தி.மு.க. முதன்மை செயலாளராக நியமிக்கப்படுவார் என்று கூறப்படுகிறது.


    தி.மு.க. மகளிர் அணி செயலாளராக இருக்கும் கனிமொழிக்கு கட்சியின் முக்கியப் பொறுப்புகள் வழங்கப்படலாம். இது தவிர தி.மு.க. இளைஞர் அணி உள்பட மற்ற அணி நிர்வாகிகளும் மாற்றி அமைக்கப்படுவார்கள், அவர்களுக்கு புதிய பொறுப்புகள் வழங்கப்படக்கூடும்.

    மாவட்ட அளவிலும் மாற்றங்கள் வரக்கூடும் என்று பேசப்படுகிறது. இந்த மாத இறுதியில் இதுபற்றி விவரங்கள் தெரிந்து விடும்.

    தி.மு.க. தலைவராக பொறுப்பு ஏற்க இருக்கும் மு.க.ஸ்டாலினின் செயல்பாடுகளில் இனி புதிய வேகத்தை எதிர்பார்க்கலாம் என்று கட்சிக்காரர்கள் சொல்கிறார்கள். அவரது கட்சி பணிகள் முற்றிலும் மாறுபட்ட பாணியில் அமையும் என்று கூறப்படுகிறது.

    அதற்கேற்ப சில புதிய அதிரடி திட்டங்களை தி.மு.க.வில் ஸ்டாலின் அறிமுகம் செய்ய இருப்பதாக கட்சி வட்டாரங்களில் பேசப்படுகிறது. விரைவில் பாராளுமன்றத்துக்கு தேர்தல் நடைபெற உள்ளதால் ஸ்டாலினின் புதிய அதிரடி திட்டங்கள் கட்சிக்கு புத்துயிர் அளித்து வலிமைப்படுத்தும் வகையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ஸ்டாலின் செய்ய இருக்கும் மாற்றங்கள் தமிழக அரசியல் பாதையில் புதிய மாற்றங்களை உருவாக்கக் கூடும். அதன் தொடர்ச்சியாக தேசிய அரசியலிலும் தி.மு.க.வின் பங்களிப்புக்கு முக்கிய இடம் இருக்கும். குறிப்பாக மத்தியில் ஏற்படும் மாற்றங்களுக்கு தி.மு.க. அச்சாணியாக மாறும் என்று வடமாநிலங்களில் இப்போதே பல்வேறு கட்சி தலைவர்களும் கருதுகிறார்கள்.

    அவர்களது எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப ஸ்டாலின் எந்த வகையில் பணியாற்ற போகிறார் என்பது தி.மு.க. பொதுக்குழு முடிந்ததும் தெரிந்து விடும். #DMK #Karunanidhi #MKStalin
    தி.மு.க. செயல் தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வான பிறகு முதல் முறையாக பொதுக்குழு ஆகஸ்டு 19-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கூடுகிறது. #DMK #MKStalin
    சென்னை:

    தேசிய மற்றும் மாநில அளவில் அங்கீகரிக்கப்பட்ட எந்தவொரு அரசியல் கட்சியாக இருந்தாலும் ஆண்டுக்கு ஒருமுறை பொதுக்குழுவையும், 2 முறை செயற்குழுவையும் கூட்ட வேண்டும் என்பது தேர்தல் ஆணைய விதியாகும். அந்த வகையில், கடந்த ஆண்டு (2017) ஜனவரி மாதம் தி.மு.க. பொதுக்குழு கூட்டப்பட்டது. தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல் நலிவுற்றிருந்ததால், இந்தக் கூட்டத்தில் கட்சியின் செயல் தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டார்.



    அதன்பிறகு, இந்த ஆண்டு ஜனவரி மாதம் தி.மு.க. பொதுக்குழு கூட்டப்பட்டிருக்க வேண்டும். ஆனால், தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல்நிலையை காரணம்காட்டி தேர்தல் ஆணையத்தில் அவகாசம் கேட்கப்பட்டது. இதனால், கடந்த 6 மாத காலமாக தி.மு.க. பொதுக்குழு கூட்டப்படவில்லை.

    இந்த நிலையில், அடுத்த மாதம் (ஆகஸ்டு) 19-ந் தேதி தி.மு.க. பொதுக்குழு கூட இருக்கிறது. இதுவரை நடைபெற்ற தி.மு.க. பொதுக்குழு, செயற்குழு கூட்டங்கள் சென்னை அண்ணா அறிவாலயத்தில்தான் நடைபெற்று வந்திருக்கிறது. ஆனால், இந்த முறை அ.தி.மு.க.வுக்கு ராசியான சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் நடைபெற இருக்கிறது.

    முதலில், ஆகஸ்டு மாதம் 28-ந் தேதி தி.மு.க. பொதுக்குழுவை கூட்ட திட்டமிட்டு, இந்த மண்டபத்திற்கு அட்வான்ஸ் கொடுக்கப்பட்டிருந்தது. அதன்பிறகு, 19-ந் தேதிக்கு அது மாற்றப்பட்டது. இந்த பொதுக்குழு கூட்டத்தில், தி.மு.க. மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என சுமார் 4 ஆயிரம் பேர் கலந்துகொள்ள இருக்கின்றனர்.

    எனவே, ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. வருகை தரும் தி.மு.க. நிர்வாகிகள் அனைவருக்கும் மதிய உணவு உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட உள்ளன. பொதுக்குழு கூட்டத்தில் என்னென்ன தீர்மானங்களை நிறைவேற்றுவது? என்பது குறித்து மூத்த நிர்வாகிகளுடன் கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.

    இந்தக் கூட்டத்தில், தி.மு.க. தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. ஆனால், அதுபோன்ற எந்த முடிவும் இந்த பொதுக்குழுவில் எடுக்கப்படாது என்று தி.மு.க. வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது. #DMK #MKStalin
    ×