என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » திருச்சி கலெக்டர்
நீங்கள் தேடியது "திருச்சி கலெக்டர்"
திருச்சி மாவட்டத்தில் உள்ள கால்நடை வளர்க்கும் விவசாயிகள் கிஷான்அட்டைகள் பெற உரிய விண்ணப்பத்தினை, தகுந்த ஆதாரங்களுடன் இணைத்து அருகிலுள்ள கால்நடை மருந்தகங்களில் வருகின்ற 15.2.2022க்குள் அளித்திடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
திருச்சி:
கால்நடை வளர்க்கும் விவசாயிகளுக்கு மாவட்ட அளவில் கிஷான் கடன் அட்டைகள் வழங்கிட நிலையான இயக்க செயல்முறைகள் மத்திய அரசால் வழங்கப்பட்டுள்ளன. திருச்சி மாவட்டத்தில் கால்நடை வளர்க்கும் விவசாயிகளுக்கு அவர்களின் நிதி ஆதாரங்களைப் பெருக்கும் விதமாக கிஷான் கடன் அட்டைகள் வழங்கிட, கால்நடை வளர்க்கும் விவசாயிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வருகிற 15.2.22வரை பெறப்படவுள்ளது.
அதனடிப்படையில் திருச்சி மாவட்டத்தில் உள்ள கால்நடை வளர்க்கும் விவசாயிகள் கிஷான்அட்டைகள் பெற உரிய விண்ணப்பத்தினை, தகுந்த ஆதாரங்களுடன் இணைத்து அருகிலுள்ள கால்நடை மருந்தகங்களில் வருகின்ற 15.2.2022க்குள் அளித்திடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இத்தகவலை திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு தெரிவித்துள்ளார்.

மக்கள் அனைவரும் விபத்தில்லா மற்றும் மாசில்லா தீபாவளியை சிறப்பாகக் கொண்டாட வேண்டுமென கலெக்டர் வேண்டுகோள் கொடுத்துள்ளார்.
திருச்சி:
திருச்சி மாவட்ட கலெக்டர் ராசாமணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தீமையினை நன்மை வென்றதை நினைவுபடுத்தும் விதமாகவும், நமது கலாசாரத்தையும், மரபையும் வெளிப்படுத்தும் விதமாகவும், இந்தியா முழுவதும் பட்டாசுகளை வெடித்து தீபாவளி பண்டிகை மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், தமிழ்நாடு அரசு தீபாவளியன்று பட்டாசுகளை வெடிப்பதற்கு காலை 6 முதல் 7 மணி வரையும், இரவில் 7 முதல் 8 மணி வரையும் அனுமதி வழங்கி உள்ளது.
தமிழ்நாட்டின் அனைத்து மாநகராட்சிகளிலும், தீபாவளிக்கு முன்பு 7 நாட்களும் தீபாவளிக்கு பின்பு 7 நாட்களும் மொத்தம் 14 நாட்கள் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் காற்றின் தரத்தை அளவீடு செய்யும். மாசில்லா சுற்றுச்சூழலை பேணிக்காப்பது நம் ஒவ்வொருவரின் கடமையும், பொறுப்பும் ஆகும்.
இதனை கருத்தில் கொண்டு, பொதுமக்கள் குறைந்த ஒலியுடனும், குறைந்த அளவில் மாசுபடுத்தும் தன்மையும் கொண்ட பட்டாசுகளை வெடிக்க வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளின் முன் அனுமதியுடன், பொதுமக்கள் திறந்த வெளியில் ஒன்று கூடி கூட்டாக பட்டாசு வெடிப்பதற்கு, அந்த அந்த பகுதிகளில் உள்ள நல சங்கங்கள் மூலம் முயற்சிக்கலாம். அதிக ஒலி எழுப்பும் தொடர்ச்சியாக வெடிக்கக் கூடிய சரவெடிகளை தவிர்க்கலாம். மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும். குடிசை பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக் கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும். மக்கள் அனைவரும் விபத்தில்லா மற்றும் மாசில்லா தீபாவளியை சிறப்பாகக் கொண்டாடுவோம். இவ்வாறு அதில் கூறி உள்ளார். #tamilnews

திருச்சி மத்திய பஸ் நிலைய பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக ஆம்னி பஸ்களை நிறுத்தினால் கடும் நடவடிக்கை கலெக்டர் எச்சரிக்கை திருச்சியில் நாளை மூத்தோர் முற்றம் நிகழ்ச்சி திருச்சி- உடன்குடி பஸ்சி Note: See Original Indesign File
திருச்சி:
திருச்சி மத்திய பஸ் நிலையம் மற்றும் ஜங்ஷன் பகுதியில் ஆம்னி பஸ்களால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வந்தது. விடுமுறை நாட்களில் சென்னை, பெங்களூருவுக்கு செல்லும் ஆம்னி பஸ்கள் மத்திய பஸ் நிலையத்தை சுற்றி உள்ள அனைத்து சாலைகளிலும் நிறுத்தி வைக்கப்படும்போது இரு சக்கர வாகனத்தில் கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது. ஆம்னி பஸ் பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டும் என்பது திருச்சி மாநகர மக்களின் நீண்ட கால கோரிக்கையாக இருந்தது.
இந்த நிலையில் திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்திற்கும், மத்திய பஸ் நிலையத்திற்கும் இடையில் பழைய திருவள்ளுவர் பஸ் நிலையம் அருகில் உள்ள ரெயில்வே இடத்தில் புதிதாக ஆம்னி பஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. 50-க்கும் மேற்பட்ட கடைகள் மற்றும் கழிப்பறை வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த ஆம்னி பஸ் நிலையம் வருகிற 18-ந்தேதி முதல் செயல்பட இருக்கிறது. இந்தநிலையில் திருச்சி மாவட்ட கலெக்டர் ராசாமணி கூறும் போது, ‘திருச்சியில் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அமைக்கப்படும் வரை ஆம்னி பஸ் நிலையம் அதற்காக ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் செயல்படும். ஆம்னி பஸ் நிலையம் திறக்கப்பட்ட பின்னர் மத்திய பஸ் நிலையம் பகுதியில் வேறு எந்த இடத்திலும் ஆம்னி பஸ்களை நிறுத்தக்கூடாது. ஆம்னி பஸ் நிலையத்தில் மட்டுமே அவர்கள் பஸ்களை நிறுத்தி வைத்துக்கொள்ளவேண்டும். அங்கிருந்து மட்டுமே பயணிகளை ஏற்றி செல்லவேண்டும். மீறி கண்ட இடங்களில் நிறுத்தினால் போலீசார் மூலம் நடவடிக்கை எடுக்க மாநகர போலீஸ் கமிஷனருக்கு அறிவுரை வழங்கப்பட்டு இருக்கிறது’ என்றார். #OmniBus

×

X