search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருச்சி பணிமனை"

    மலை ரெயில் எஞ்சின்கள் மற்றும் பெட்டிகள் பழுது பார்க்கும் பணிக்காக திருச்சி பொன்மலை ரெயில்வே பணிமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
    மேட்டுப்பாளையம்:

    மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு அழகிய மலைரெயில் இயக்கப்பட்டு வருகின்றது. மலை ரெயில் எஞ்சின்கள் மற்றும் பெட்டிகள் பழுது பார்க்கும் பணிக்காக 2 1/2 ஆண்டுக்கு ஒருமுறை திருச்சி பொன்மலை ரெயில்வே பணிமனைக்கு அனுப்பி வைக்கப்படுவது வழக்கம். இரண்டு மலைரெயில் பெட்டிகள் அனுப்பி வைக்கப்பட்டன. இதற்காக ஈரோட்டில் இருந்து காலை 6.30 மணிக்கு 140 டன் எடைகொண்ட ராஜாளி கிரேன் புறப்பட்டு மேட்டுப்பாளையத்திற்கு பகல் 12 மணிக்கு வந்து சேர்ந்தது. அதனைத் தொடர்ந்து பிற்பகல் 3.30 மணிக்கு ரெயில் பெட்டிகளை பி.ஆர்.என்.வேகனில் ஏற்றி வைக்கும் பணி தொடங்கியது.  

    சேலம் கோட்ட கூடுதல் மெக்கானிக்கல் பொறியாளர் தீக்ஷாசவுத்ரி. மேட்டுப்பாளையம் கோச் பொறியாளர் முகமதுஅஸ்ரப். கிரேன் பொறுப்பாளர் விஜயகுமார் ஆகியோர் மேற்பார்வையில் கிரேன் ஆப்ரேட்டர் கிரேனை இயக்க ரெயில்வே தொழிலாளர்கள் உதவியுடன் மலைரெயில் பெட்டிகள் ஒன்றன்பின் ஒன்றாக ராஜாளி கிரேன் மூலம் பி.ஆர். வேகனில் ஏற்றப்பட்டன. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய பணி மாலை 5 மணிக்கு முடிவடைந்தது. பெட்டிகள் ஏற்றப்படுவதை அறிந்ததும் அப்பகுதிக்கு பொதுமக்கள் திரண்டு வேடிக்கை பார்த்தனர்.

    ×