என் மலர்
நீங்கள் தேடியது "திருட்டு"
- மனோஜ் மீது சிவகிரி போலீஸ் நிலையத்தில் திருட்டு வழக்கு நிலுவையில் இருப்பது விசாரணையில் தெரிய வந்தது.
- சிறுவலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர்.
கோபி:
ஈரோடு மாவட்டம் கோபி அருகே கொளப்பலூர் யூனிட் நகரில் தனியார் ஸ்பின்னிங் மில் உள்ளது. இந்த மில் கடந்த 4 ஆண்டுகளாக செயல்படாமல் உள்ளது. இந்த மில்லில் காவலாளியாக ஜெயராமன் (வயது 55) என்பவர் இரவு நேர பாதுகாப்பு பணியில் இருந்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று நள்ளிரவில் மில்லின் பின்புறம் காம்பவுண்ட் சுவர் ஏறி குதித்த 4 பேர் மில் வளாகத்தில் இருந்த மின்சாதன பொருட்கள், பழைய இரும்பு பொருட்களை திருடி கொண்டிருந்தனர். சத்தம் கேட்டு மில் காவலாளி ஜெயராமன் மில்லின் பின்புறம் சென்று பார்த்தபோது 4 பேர் கொண்ட கும்பல் பொருட்களை திருடிக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதைத் தொடர்ந்து ஜெயராமன் சத்தமிட்டவாறே திருடர்களை பிடிக்க முயன்ற போது 4 பேரும் தப்பி ஓடினர். அதற்குள் ஜெயராமனின் சத்தம் கேட்ட அருகில் உள்ளவர்கள், மில் காம்பவுண்ட் சுவர் ஏரி குதித்து தப்பிய திருடர்களில் 3 பேரை விரட்டி பிடித்து சிறுவலூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதை தொடர்ந்து பிடிப்பட்டவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் 3 பேரும் திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் வெங்கமேட்டை சேர்ந்த கவிராஜ் (27), மனோஜ் (19) மற்றும் அதேப்பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் என்பது தெரிய வந்தது. இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பிடிப்பட்ட 3 பேரும் பகலில் குன்னத்தூரில் உள்ள பன்றி இறைச்சி கடையில் வேலை செய்து வந்ததும், இரவில் கொள்ளை அடிக்க சென்றதும் தெரிய வந்தது.
இதில் மனோஜ் மீது சிவகிரி போலீஸ் நிலையத்தில் திருட்டு வழக்கு நிலுவையில் இருப்பது விசாரணையில் தெரிய வந்தது. மேலும் நஞ்சை புளியம்பட்டியை சேர்ந்த பிரகாஷ் என்பவர் தப்பி ஓடியது தெரிய வந்தது. இது குறித்து சிறுவலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து 2 மோட்டார் சைக்கிள், ஒரு மொபட், திருடப்பட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் தப்பி ஓடிய பிரகாசை போலீசார் தேடி வருகின்றனர். நள்ளிரவில் மில்லில் திருடிய கும்பலை பொது மக்களே சுற்றி வளைத்து போலீசில் ஒப்படைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- கோவிலுக்குள் வந்த ஒரு நபர், சாமி சன்னதி முன்பு அமர்ந்து கண்களை மூடி பிரார்த்தனை செய்தார்.
- வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
பறவைகள் பல விதம் ஒவ்வொன்றும் ஒரு விதம் என்று கவிஞர் பாடல் எழுதினார். அதுபோல் திருடர்களும் பல விதமாக உள்ளனர். திருட வந்த வீட்டில் சமையல் செய்து சாப்பிட்டவர்கள், தூங்கியவர்கள், மது வகைகளை குடித்து விட்டு குத்தாட்டம் போட்டவர்கள் என்று பல வினோத செயல்களில் ஈடுபட்டவர்கள் உள்ளனர்.
அதுபோல் இங்கு ஒரு திருடன், கோவிலில் பிரார்த்தனை செய்து விட்டு சாமியிடம் வரம் பெற்று செல்வதுபோல், சாமி சிலையில் இருந்த வெள்ளி கிரீடத்தை திருடிச் சென்றுள்ளான்.
உத்தரபிரதேச மாநிலத்தில் நடந்த இந்த வினோத சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
உத்தரபிரதேச மாநிலம் மிர்சாபூர் மாவட்டத்தில் உள்ள அனுமன் கோவில் ஒன்றில் வழக்கமான பூஜைகளுக்கு பின்னர் பக்தர்கள் நடமாட்டம் குறைந்த நேரத்தில் கோவிலுக்குள் வந்த ஒரு நபர், சாமி சன்னதி முன்பு அமர்ந்து கண்களை மூடி பிரார்த்தனை செய்தார்.
அதை பார்க்கும் மற்றவர்களுக்கு எப்படிப்பட்ட பக்திமான் இவர் என்றே நினைக்கத்தோன்றும். ஆனால் அதன் பின்னர் அவர் செய்த சம்பவம்தான், அட! இதுக்குத்தானா இந்த 'பில்டப்' என்று கேட்கும் வகையில் இருந்தது.
சுமார் 15 நிமிடம் பிரார்த்தனை செய்து கொண்டு இருந்த அந்த நபர், கண்களை மெல்ல திறந்து பார்த்தார். பின்னர் மெல்ல எழுந்து கருவறைக்குள் சென்ற அந்த நபர், அனுமன் சிலையில் இருந்த வெள்ளி கிரீடத்தை நைசாக எடுத்து தன்னிடம் இருந்த துணிப்பைக்குள் வைத்தார்.
அக்கம்பக்கத்தில் யாரும் இருக்கிறார்களா என்பதை பார்த்த அந்த நபர் மெதுவாக கோவிலில் இருந்து வெளியே சென்றார். இந்த சம்பவங்கள் அனைத்தும் கோவிலில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவானது.
சற்று நேரத்தில் சன்னதிக்கு வந்த பூசாரி, சாமி சிலையில் இருந்த கிரீடம் மாயமாகி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி போலீசிலும் புகார் செய்தார். கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த நபரை தேடிவருகிறார்கள்.
கோவிலில் சாமியிடம் வேண்டிக்கொண்டு, சாமி சிலையில் இருந்த கிரீடத்தையே திருடிச்சென்ற அந்த வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
Religious thief (first this guy performed the puja rituals properly, Then he stole the silver crown of Hanuman ji, Mirzapur UP)
— Ghar Ke Kalesh (@gharkekalesh) December 30, 2024
pic.twitter.com/imvpdDcdrM
- சுரேஷ் கோபியின் குடும்ப வீட்டில் திருட்டு நடந்துள்ளது.
- திருட்டு போன பொருட்கள் குறித்த விவரம் வெளியிடப்படவில்லை.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்த பிரபல திரைப்பட நடிகர் சுரேஷ் கோபி. இவர் கேரள மாநிலத்தில் கடந்த ஏப்ரல் மாதத்தில் நடந்த மக்களவை தேர்தலில் திருச்சூர் தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இதன் மூலம் கேரளாவின் முதல் பா.ஜ.க. எம்.பி. ஆனார். இதையடுத்து அவருக்கு மத்திய மந்திரி பதவியும் வழங்கப்பட்டது. அவர் மத்திய பெட்ரோலிய-இயற்கை எரிவாயு துறை மற்றும் சுற்றுலாத்துறை மந்திரியாக இருந்து வருகிறார்.
இந்தநிலையில் கொல் லத்தில் உள்ள மத்திய மந்திரி சுரேஷ் கோபியின் குடும்ப வீட்டில் திருட்டு நடந்துள்ளது. அவரது வீட்டில் இருந்து பொருட்களை யாரோ மர்மநபர்கள் திருடிச்சென்றுள்ளனர். இதுகுறித்து கொல்லம் இரவிபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாய்கள் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது. திருட்டு தொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மத்திய மந்திரி சுரேஷ் கோபி வீட்டில் திருட்டு போன பொருட்கள் குறித்த விவரம் வெளியிடப்படவில்லை.
- கடந்த மார்ச் மாதம் ஷேக் காஜா பீரா ஜெயிலில் இருந்து ஜாமீனில் வெளியே வந்தார்.
- கொள்ளை கும்பல் காரில் வந்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
திருப்பதி:
ஆந்திரா மாநிலம், தர்மாவரத்தை சேர்ந்தவர் ஷேக் காஜா பீரா. ஓவியரான இவருக்கும் 2 மனைவிகள், 7 குழந்தைகள் உள்ளனர்.
ஓவியம் வரைவதில் போதிய வருமானம் கிடைக்காததால் மனைவிகள் மற்றும் குழந்தைகளை காப்பாற்ற முடியாமல் வறுமையில் வாடினார்.
ஓவியம் வரையும் தொழிலை விட்டுவிட்டு கடந்த 2021-ம் ஆண்டு அனந்த பூரில் திருட்டு தொழிலை தொடங்கினார்.
இரவு நேரங்களில் நோட்டமிட்ட வீடுகளில் சென்று நகை பணத்தை கொள்ளை அடித்தார். திருட்டு தொழிலில் ஷேக் காஜா பீராவுக்கு அதிக அளவில் பணம் கிடைத்தது. திருட்டுத் தொழிலில் கிடைத்தால் பணத்தின் மூலம் கார் ஒன்றை வாங்கினார்.
காரை எடுத்துச் சென்று அனந்தபூர் மாவட்டத்தில் 14 வீடுகளிலும், கர்நாடக மாநிலம், பாகே பள்ளிக்கு சென்ற ஷேக் காஜா பீரா 4 வீடுகளிலும், கோலாறில் 5 வீடுகளிலும் கொள்ளை அடித்தார். மொத்தம் 27 வீடுகளில் கொள்ளையடித்த வழக்கில் போலீசார் ஷேக் காஜா பீராவை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
கடந்த மார்ச் மாதம் ஷேக் காஜா பீரா ஜெயிலில் இருந்து ஜாமீனில் வெளியே வந்தார்.
பின்னர் தர்மாவரத்தை சேர்ந்த கூலி தொழிலாளர்களான மகேஷ், ஜமீர் ஆகியோரை தன்னுடன் கூட்டு சேர்ந்து கொண்டு கொள்ளை ஈடுபட்டார். பகல் நேரங்களில் மகேஷ், ஜபீர் ஆகியோர் பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு வருவார்கள். இரவு நேரத்தில் ஜபீர் காரில் சென்று குறிப்பிட்ட வீட்டின் அருகில் நிறுத்துவார்.
மகேஷும் ஜபீரும் வீட்டுக்கு வெளியே நின்று கொண்டு ஆட்கள் நடமாட்டத்தை கண்காணிப்பார்கள். ஷேக் காஜா பீரா மட்டும் வீட்டுக்குள் சென்று கொள்ளையடித்து வந்தனர்.
போலீசார் தனிப்படை அமைத்து கொள்ளை சம்பவம் நடந்த இடங்களில் அமைக்கப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். கொள்ளை கும்பல் காரில் வந்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
இந்த நிலையில் அனந்தபூர் சி.சி.எஸ் சாலையில் காரில் சென்ற ஷேக் காஜா மற்றும் அவரது கூட்டாளிகளை கைது செய்தனர்.
விசாரணை நடத்தியதில் மொத்தம் ஆந்திரா தெலுங்கானாவில் 41 வீடுகளில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. 310 கிராம் தங்க நகைகள் மற்றும் திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட காரை போலீசார் பறிமுதல் செய்தனர்.
- பீரோவில் இருந்த கத்தி, துப்பாக்கி மற்றும் 25 தோட்டாக்களை காணவில்லை.
- போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பணகுடி:
நெல்லை மாவட்டம் வள்ளியூரை அடுத்த சமூக ரெங்கபுரத்தை சேர்ந்தவர் நம்பி. இவரது மகன் அழகு(வயது 42). இவர் அமிர்தசரசில் இந்திய எல்லை பாதுகாப்பு படையில் போட் என்ற பிரிவில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார்.
அழகு கடந்த 2010-ம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் தன்னுடைய பாதுகாப்புக்காக துப்பாக்கி வாங்குவதற்கான உரிமம் பெற்றுள்ளார்.
அதன்பின் கடந்த 2019-ம் ஆண்டு மதுரையில் பெருமாள்சாமி என்பவரிடம் 32-பிஸ்டல் வகையை சார்ந்த துப்பாக்கியையும், அதற்குரிய 30 தோட்டாக்களையும் அவர் வாங்கி உள்ளார். இதில் அவர் சோதனை செய்வதற்காக 5 தோட்டாக்களை பயன்படுத்தி உள்ளார். எஞ்சிய 25 தோட்டாக்களையும் அவர் தன் வசம் வைத்திருந்தார்.
அந்த துப்பாக்கியை அவர் பணியாற்றும் இடங்களில் வைத்திருந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதம் 9-ந்தேதி விடுமுறைக்காக சொந்த ஊருக்கு அழகு வந்தார். பின்னர் கடந்த மாதம் 9-ந்தேதி விடுமுறை முடிந்து பணிக்காக மீண்டும் அமிர்தசரஸ் புறப்பட்டுள்ளார்.
அப்போது சமூகரெங்கபுரத்தில் குடியிருந்து வரும் அவரது பெற்றோரிடம் இது முக்கியமான பொருள் என கூறி ஒரு பெட்டியில் தன்னுடைய துப்பாக்கி, 25 தோட்டாக்கள் மற்றும் ஒரு கத்தியை உறையில் வைத்து ஒப்படைத்து விட்டு சென்றுள்ளார்.
இந்தநிலையில் சம்பவத்தன்று அழகுவின் பெற்றோர் வீட்டை பூட்டிவிட்டு தங்களது உறவினர் வீட்டிற்கு சென்று விட்டனர். தொடர்ந்து அக்கம்பக்கத்தில் வசிப்பவர்கள் அந்த வழியாக சென்றபோது அழகுவின் வீடு திறந்து கிடப்பதை பார்த்து அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக அழகுவின் பெற்றோர் வீட்டுக்கு வந்து பார்த்தனர். அப்போது கதவுகளை உடைத்து பீரோவில் வைக்கப்பட்டிருந்த ஒரு கத்தி, துப்பாக்கி மற்றும் 25 தோட்டாக்களை காணவில்லை.
வீட்டில் யாரும் இல்லாததை அறிந்து மர்ம நபர்கள் அவற்றை திருடி சென்றுள்ளது தெரியவந்தது.
இதுபற்றி அழகுக்கு அவரது பெற்றோர் தகவல் கொடுத்தனர். அவர் உடனடியாக அமிர்தசரசில் இருந்து புறப்பட்டு இன்று காலை ராதாபுரம் வந்து சேர்ந்தார். அவர் ராதாபுரம் போலீசில் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து துப்பாக்கி, தோட்டாக்களை திருடிச்சென்ற மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் நேற்று அதிகாலை 2 மணியில் இருந்து 4 மணிக்குள் நடந்திருக்க வேண்டும் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். நேற்று அதிகாலையில் அதே பகுதியில் 95 வயது மூதாட்டியிடம் கம்மலை பறித்துச்சென்ற அதே கும்பல் தான் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- 37 வயதுடைய நபரை காவல்துறை கடந்த திங்கள்கிழமை அன்று காவலில் எடுத்ததாக விசாரித்துள்ளனர்.
- யோசிக்கும்போது என் உள்ளங்கைகள் வியர்த்துவிடும்.
ஜப்பானில் சுமார் 1000 வீடுகள் வரை அத்துமீறி நுழைந்த குற்றவாளி ஒருவர் அதற்காகக் கூறியுள்ள காரணம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜப்பான் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள Dazaifu என்ற நகரில் மற்றவர் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்ததாகச் சந்தேகத்தின் பேரில் 37 வயதுடைய நபரை காவல்துறை கடந்த திங்கள்கிழமை அன்று காவலில் எடுத்ததாக விசாரித்துள்ளனர்.
விசாரணையில் தான் 1000 வீடுகளுக்குக்கள் இதுவரை அத்துமீறிப் புகுந்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். அவ்வாறு மற்றவர் வீடுகளுக்குள் அத்துமீறி நுழைவது தனது மன அழுத்தத்தைக் குறைப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
"மற்றவர்களின் வீடுகளுக்குள் அத்துமீறி நுழைவது என்னுடைய ஒரு பொழுதுபோக்காகும், நான் அதை 1,000 தடவைகளுக்கு மேல் செய்துள்ளேன், யாராவது என்னைக் கண்டுபிடிப்பார்களா இல்லையா என்று யோசிக்கும்போது என் உள்ளங்கைகள் வியர்த்துவிடும்.
அந்த உணர்வினால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன், இது என் மன அழுத்தத்தைக் குறைக்கிறது" என்று அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
அந்நாட்டின் மைனிச்சி ஷிம்பன் [Mainichi Shimbun] செய்தித்தாள் இந்த செய்தியை வெளியிட்டது. இதைத்தொடர்ந்து இணையத்திலும் இது பேசுபொருளாகி வருகிறது.
- 11 நகை திருட்டு வழக்குகளில் குற்றவாளிகளைக் கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டு புலன் விசாரணை நடைபெற்று வந்தது.
- 2 கைப்பேசிகள், இரண்டு இரு சக்கர வாகனங்கள், இரு நான்கு சக்கர வாகனங்கள் ஆகியவையும் கைப்பற்றப்பட்டன.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம், நமண சமுத்திரம் மற்றும் அரிமளம் பகுதிகளில் நடைபெற்ற 11 திருட்டு வழக்குகளில் தொடா்புடைய 5 பேரை தனிப்படையினா் கைது செய்து, அவா்களிடமிருந்து தங்கம் மற்றும் வெளளிக் கட்டிகளைப் பறிமுதல் செய்துள்ளனா்.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி உட்கோட்டம் திருமயம், நமணசமுத்திரம் மற்றும் அரிமளம் பகுதிகளில் நடைபெற்ற 11 நகை திருட்டு வழக்குகளில் குற்றவாளிகளைக் கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டு புலன் விசாரணை நடைபெற்று வந்தது.
விசாரணையில், அறந்தாங்கி எல்என்புரத்தைச் சோ்ந்த கோவிந்தராஜ் மகன் தேவா (வயது58), சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் கீழத்தெரு மீனாட்சி சுந்தரம் மகன் ஹரிஹரன் (44), ஆவுடையார்கோவில் முண்டகவயல் சமத்துவபுரத்தைச் சோ்ந்த சுப்பையா மகன் வெங்கடேஷ் (26), அறந்தாங்கி பூவைமாநகா் அலஞ்சரக்காடு கணபதி மகன் சொக்கலிங்கம் (54), கீரமங்கலம் வேப்பங்குடி மேற்கு செட்டித் தெருவைச் சோ்ந்த துரைராஜ் மகன் தங்கபாண்டியன் (46) ஆகிய 5 பேரையும் தனிப்படையினா் கைது செய்தனா்.
இவா்களிடமிருந்து 100 கிராம் எடை கொண்ட தங்கக் கட்டி, 5.750 கிலோ எடை கொண்ட வெள்ளிக் கட்டிகள், ரொக்கம் ரூ.1,500, 2 கைப்பேசிகள், இரண்டு இரு சக்கர வாகனங்கள், இரு நான்கு சக்கர வாகனங்கள் ஆகியவையும் கைப்பற்றப்பட்டன.
கைது செய்யப்பட்ட 5 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனா். குற்றவாளிகளைக் கைது செய்த தனிப்படையினரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வந்திதா பாண்டே நேரில் அழைத்துப் பாராட்டினார்.
- நகராட்சி கமிஷனர் மற்றும் போலீசார் இதனை உறுதி செய்ய வேண்டும் என கூறினார்.
- நீதிபதி அளித்த நூதன தண்டனை ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆந்திர மாநிலம் கனிகிரி பகுதியை சேர்ந்தவர் அங்கய்யா (வயது 28) கடந்த 13-ந்தேதி அங்குள்ள கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.
அப்போது கோவிலுக்குள் நுழைந்த அங்கய்யா அங்கிருந்து பித்தளை அண்டா உள்ளிட்ட 3 பாத்திரங்களை நைசாக திருடி சென்றார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
திருட்டு நடந்த சில மணி நேரத்தில் அங்கய்யாவை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து கோவில் அண்டா உள்ளிட்ட பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
அவரை கனிகிரி கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தினர். அப்போது அங்கய்யா தான் தற்போது தான் முதன் முதலில் திருட்டில் ஈடுபட்டேன். என்னை மன்னித்து விடுவிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பாரத் சந்திரா இந்தியாவில் புதிதாக அமல்படுத்தப்பட்ட குற்றவியல் சட்டங்களின் அடிப்படையில் அங்கய்யாவுக்கு தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.
அதில் நவம்பர் 2-ந் தேதி (இன்று) முதல் டிசம்பர் 31-ந் தேதி வரை கனிகிரி முக்கிய சந்திப்புகள் மற்றும் தெருக்களை காலை 6 மணி முதல் 9 மணி வரை அங்கய்யா சுத்தம் செய்ய வேண்டும். நகராட்சி கமிஷனர் மற்றும் போலீசார் இதனை உறுதி செய்ய வேண்டும் என கூறினார்.
கோர்ட்டு அளித்த இந்த சமூக சேவை நூதன தண்டனை ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- திருடியதை ஒப்புக்கொண்டதை தொடர்ந்து இருவரையும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
- திண்டிவனம் போலீசார் சி.சி.டி.வி காட்சிகளின் அடிப்படையில் அடையாளம் கண்டனர்.
திண்டிவனம்:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் பகுதியில் உள்ள பா.ம.க. நிறுவனர் டாக்டர். ராமதாஸ் மருத்துவமனையில் கல்லாப்பெட்டியில் இருந்த 3500 பணத்தை காணவில்லை என்று திண்டிவனம் நகரபோலீஸ் நிலையத்திற்கு புகார் வந்தது. புகாரின் அடிப்படையில் திண்டிவனம் போலீசார் சி.சி.டி.வி காட்சிகளின் அடிப்படையில் அடையாளம் கண்டனர்.
இதில் திருடிய நபர்கள் அதே பகுதியில் சுற்றி திரியும் திண்டிவனம் கிடங்கல்-1 பகுதியைச் சேர்ந்த சின்னையன் (58) மற்றும் குமார் (45) ஆகியோர் என்பது தெரிய வந்தது. அவர்கள் 2 பேரையும் போலீசர் கைது செய்தனர். இதில் அவர்கள் திருடியதை ஒப்புக்கொண்டதை தொடர்ந்து இருவரையும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
இதில் தொடர்புடைய கீழ்சிவிரி கிராமத்தைச் சேர்ந்த விஷ்வகுமாரை (45) போலீசார் தேடி வருகின்றனர் பா.ம.க., நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மருத்துவமனையிலேயே கல்லாப்பெட்டியில் திருடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
- சி.சி.டி.வி. காமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.
- அலட்சியமாக இருந்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்கமுடிவு.
திருவனந்தபுரம்:
திருவனந்தபுரம் ஸ்ரீபத்ம நாபசுவாமி கோவிலுக்கு தினமும் ஏராளமானோர் வந்து தரிசனம் செய்து செல்கின்றனர். சம்பவத் தன்றும் வெளிநாட்டினர் உள்பட ஏராளமானோர் கோவிலுக்கு வந்திருந்தனர். தரிசன நேரம் முடிந்ததும் கோவில் பணியாளர்கள் நடை சாத்தும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது கோவிலின் கருவறையில் இருந்த நைவேத்ய உருளி (வெண்கல பாத்திரம்) மாயமாகி இருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள், பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள், சி.சி.டி.வி. காமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.
அதில் 3 பெண்கள் உள்பட 4 பேர் உருளியை எடுத்துச் செல்வது தெரிய வந்தது. கோவிலை சுற்றி வந்த போது அவர்கள் அதனை எடுத்து உடைக்குள் மறைத்து கொண்டு சென்ற தும் உறுதியானது.இது குறித்து கோட்டை போலீசில் புகார் கொடுத்தனர்.
போலீசார் அதிரடியாக விசாரணை நடத்தியபோது, அந்தக் கும்பல், திருவனந்த புரத்தில் இருந்து உடுப்பி சென்றதும், அங்கிருந்து விமானம் மூலம் ஹரியானா சென்றதும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து அரி யானா போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
அதன்பேரில் விசாரணை நடத்திய போலீசார், 3 பெண்கள் உள்பட 4 பேரையும் கைது செய்தனர். கைதானவர்களில் ஒருவர், ஆஸ்திரேலிய குடியுரிமை பெற்ற டாக்டர் ஜெகனேஷ் என்பது குறிப்பிடத்தக்கது.
கைதானவர்கள் கூறுகையில், கோவிலில் இருந்து கப்பலை (வெண்கல பாத்திரம்) திருடியது பண ஆதாயத்திற்காக அல்ல. பூஜை அறையில் வைத்தால் அதிர்ஷ்டம் கிடைக்கும் என நம்பியதால் தான் எடுத்து வந்ததாக கூறினர். தொடர்ந்து கைது செய்யப்பட்ட 4 பேரையும் திருவனந்தபுரம் அழைத்து வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பத்மநாபசுவாமி கோவிலில் குறிப்பிடத்தக்க பொக்கிஷங்கள் உள்ளதால், 2011-ம் ஆண்டு முதல் அங்கு 5 அடுக்கு பாதுகாப்பு முறை அமலில் உள்ளது. இந்த நிலையில் கோவிலில் திருட்டு நடைபெற்றுள்ளது பக்தர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எனவே பாதுகாப்பில் அலட்சியமாக இருந்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்கமுடிவு செய்யப்பட்டுள்ளது.
- டெல்லியில் இருந்து சுமார் 450 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பிக்கானர் [ Bikaner ] பகுதியில் கார் நின்றுகொண்டிருந்தது.
- இந்த கார் டெல்லியின் பாலாம் காலனியில் திருடப்பட்டது, மன்னிக்கவும்.
காரை திருடிவிட்டு பிறகு மனம் கேட்காமல் அதில் மன்னிப்பு கடிதம் எழுதிவைத்து ரோட்டிலேயே திருடன் விட்டுச் சென்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது. டெல்லியில் பாலாம் காலனியை [Palam colony] சேர்ந்த வினய் குமார் என்பவரின் ஸ்கார்பியோ கார் சமீபத்தில் திருடுபோயுள்ளது. இதுகுறித்து கடந்த அக்டோபர் 10 ஆம் தேதி காரின் உரிமையாளர் வினய் குமார் போலீசில் புகார் அளித்திருக்கிறார்.
அதன்படி எப்ஐஆர் பதித்து டெல்லி போலீஸ் காரை தேடிவந்தது. இந்நிலையில் டெல்லியில் இருந்து சுமார் 450 கிலோமீட்டர் தொலைவில் ராஜஸ்தானில் உள்ள பிக்கானர் [Bikaner] பகுதியில் திருடுபோன அந்த ஸ்கார்பியோ கார் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அந்த காரின் பின்புற கண்டாடியில் காகிதங்கள் ஒட்டப்பட்ட நிலையில் இருந்தன. அதில், இந்த கார் டெல்லியின் பாலாம் காலனியில் திருடப்பட்டது, மன்னிக்கவும் என்ற வாசகத்துடன் அந்த காரின் நம்பர் எழுதப்பட்டிருந்தது. இது காரை மீண்டும் உரிமையாளரிடம் சிரமமின்றி ஒப்படைக்க திருடன் எழுதி வைத்த தகவல். மற்றொரு காகிதத்தில் நான் இந்தியாவை நேசிக்கிறேன் [I LOVE INDIA] என்று எழுதப்பட்டு மற்றொன்றில் இந்த கார் டெல்லியில் திருடப்பட்டது, உடனே போலீசுக்குச் சொல்லுங்கள், அவசரம் என்று எழுதப்பட்டுள்ளது.
ஜெய்ப்பூர் பிக்கானர் நெடுஞ்சாலையில் உள்ள ஒரு சாலையோர உணவகத்தின் அருகில் நிறுத்தப்பட்டிருந்த இந்த காரை பார்த்த அப்பகுதியை சேர்ந்தவர் போலீசுக்கு புகார் அளித்ததன் மூலம் கார் மீட்கப்பட்டுள்ளது. இந்த கார் வேறு ஏதேனும் குற்றச்செயல்களுக்காக திருடப்பட்டதா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- போலீசார் அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.
- திருப்பதியில் பதுங்கி இருந்த கணேஷ் நாயக்கை போலீசார் கைது செய்தனர்.
தெலுங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் ஜல் பல்லி மஞ்சு டவுன்ஷிப் பகுதியில் நடிகர் மோகன்பாபு வசித்து வருகிறார். கடந்த 22-ம் தேதி ரூ.10 லட்சத்தை லாக்கரில் வைத்திருந்தார். மறுநாள் பார்த்தபோது பணம் திருடு போனது.
இது குறித்து போலீசில் புகார் செய்தார். போலீசார் அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது மோகன் பாபுவிடம் பணிபுரியும் உதவியாளர் கணேஷ் நாயக் என்பவர் பணத்தை திருடியது தெரியவந்தது.
திருப்பதியில் பதுங்கி இருந்த கணேஷ் நாயக்கை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.7.36 லட்சம் பறிமுதல் செய்தனர். மேலும் அவர் ரூ.2 லட்சத்திற்கு நவீன செல்போன் வாங்கியது தெரியவந்தது. அந்த செல்போனை பறிமுதல் செய்தனர்.